🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏
🇮🇳🇮🇳✍️✒️✒️✒️✒️✒️✒️✍️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🇮🇳🇮🇳✍️🌹🌹✒️✒️🌹🌹✍️🇮🇳🇮🇳
தேதி: 24/10/2025
*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520
பேனாமுள் பத்திரிகை youtube சேனலை பார்க்க https://youtube.com/@penamull1025?si=fi4rB_TuwafKf6NF இந்த ஐ டி யை பார்த்து Subscriber செய்து கொள்ளவும்
🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏
🌷*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*🌷
குறள் : 170
அழுக்கற் றகன்றாரும் இல்லையஃ தில்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரு மில்.
பொறாமைப்பட்டுப் பெருமையுற்றவரும் உலகத்தில் இல்லை; பொறாமை இல்லாதவராய் மேம்பாட்டிலிருந்து நீங்கியவரும் இல்லை.
✍️ அக்டோபர் 24
*பெட்ரோல்விலை*-100.75
*டீசல் விலை*-92.34
✍️ *பங்கு சந்தை நிலவரம்*
நிப்டி : 24435.50
பேங்க் நிப்டி : 51239.00
சென்செக்ஸ் : 80081.98
✍️ *சென்னை - ரீடைல் சந்தையில் தங்கம் விலை இன்று*
18 K தங்கம்/ g : ₹ 6055
22 K தங்கம்/ g. : ₹ 7340
வெள்ளி /g : ₹ 112.00
✍️ வங்க கடலில் 'டானா புயல்' தீவிர புயலாக மாறியது.தமிழகத்தில் மழை நீடிக்கும், இன்று இரவு கரையை கடக்கும்
✍️ ரஷ்யாவில் பிரிக்ஸ் மாநாடு; சீன அதிபர் ஜின்பிங்குடன் மோடி சந்திப்பு: எல்லை பிரச்னை குறித்து பேச்சு
ரஷ்யாவில் பிரிக்ஸ் மாநாட்டின் இடையே பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேசினார். 5 ஆண்டுக்குப் பிறகு இரு தலைவர்கள் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடந்திருப்பது பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
✍️ தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் விஜிலென்ஸ் அதிரடி சார் பதிவாளர் ஆபீஸ்கள் உட்பட 37அரசு அலுவலகங்களில் ரெய்டு: கணக்கில் வராத ரூ.33.50 லட்சம், பரிசு பொருட்கள் பறிமுதல்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு சோதனையாக தமிழ்நாடு முழுவதும் சார் பதிவாளர் அலுவலகங்கள் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உள்பட 37 அரசு அலுவலங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ. 33.50 லட்சம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
✍️ எங்கள் கூட்டணிக்குள் விவாதம் உண்டு, ஆனால் விரிசல் இல்லை…: எடப்பாடி கனவு காண வேண்டாம்; 2026 தேர்தலிலும் திமுகதான் வெற்றி பெறும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
எங்கள் கூட்டணிக்குள் விவாதம் உண்டு, ஆனால் விரிசல் இல்லை. எடப்பாடி கனவு காண வேண்டாம். 2026 தேர்தலிலும் திமுகதான் வெற்றி பெறும் என்று கும்மிடிப்பூண்டி கி.வேணு இல்ல திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் உறுதியாக கூறினார்.
✍️ தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான ஏல அறிவிப்பை டியுசிஎஸ் வெளியிட்டது: நாளை முதல் பட்டாசு விற்பனை தொடங்க திட்டம்
சென்னை: தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான ஏல அறிவிப்பை டியுசிஎஸ் நேற்று வெளியிட்டது. அதன்படி, கடைகள் ஒதுக்கப்பட்டு நாளை முதல் பட்டாசு விற்பனை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
✍️ ரூ.28 கோடி லஞ்சம் பெற்ற விவகாரத்தில் அதிமுக மாஜி அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் ஈடி ரெய்டு
அமைச்சராக இருந்த போது கட்டுமான நிறுவனத்திடம் ரூ.28 கோடி லஞ்சம் பெற்றது தொடர்பாக, அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு சொந்தமான 13க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று அமலாக்கத்துறை (ஈடி) அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர்.
✍️ ராமேஸ்வரம் மீனவர் 16 பேர் சிறைபிடிப்பு
ராமேஸ்வரம் மீனவர்களின் 2 விசைப்படகுகளை இலங்கை கடற்படை திடீரென சுற்றிவளைத்து சிறை பிடித்தது.இரண்டு படகை பறிமுதல் செய்து, அதிலிருந்து 16 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்து, காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர்.
✍️ தமிழ்நாட்டின் 11 நகரங்களில் 33 தனியார் பண்பலை அலைவரிசை அமைக்க விண்ணப்ப நடைமுறைகள் தொடக்கம்
புதிதாக தனியார் பண்பலை அலைவரிசை தொடங்குவதற்கான அனுமதியின் மூலம் நாட்டில் மொத்தம் 234 தனியார் பண்பலை வானொலி அலைவரிசைகளுக்கான ஏலம் அக்டோபர் 14ம் தேதி தொடங்கியுள்ளது. இதில் தமிழ்நாட்டில் 11 நகரங்களில், தலா 3 அலைவரிசைகளுக்கான ஏலமும் தொடங்கியுள்ளது.
✍️ வாக்காளர் பட்டியல் வெளியாகும்நிலையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 12 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என்று தமிழக தலைமை செயலாளர் சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார்.
✍️ ரெயின்போ மருத்துவமனை 10 நாள் சிகிச்சை தர தடை
யூடிபர் இர்ஃபான் விவகாரத்தில் ரெயின்போ மருத்துவமனை 10 நாள் மருத்துவம் செய்ய தடை விதித்து மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது.
✍️ கடலூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் செந்தில் குமார் கைது
லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனைக்கு வராமல் இருக்க ரூ.25,000 லஞ்சம் கொடுக்க முயன்றதாக, கடலூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் செந்தில் குமார் மற்றும் உதவியாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தீபாவளி நேரத்தில் சோதனை செய்யாமல் இருப்பதற்காக உதவியாளர் ராதாகிருஷ்ணன் மூலம் லஞ்சம் கொடுக்க முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
✍️ சிவகங்கை மாவட்டம் முழுவதும் 31 ஆம் தேதி வரை 163 தடை உத்தரவு
சிவகங்கை மாவட்டம் முழுவதும் 31 ஆம் தேதி வரை 163 தடை உத்தரவு பிறப்பித்து ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார். மருது பாண்டியர்கள், தேவர் குருபூஜையை முன்னிட்டு 163 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
✍️ ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயிலின் சோதனை 26ம் தேதி தொடங்கும்
சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்தில் இயக்கப்படும், ஓட்டுநர் இல்லா ரயிலின் சோதனை, வரும் 26ம் தேதி பூவிருந்தவல்லி பணிமனையில் தொடங்குகிறது.
✍️ மதுரை மாவட்டத்தில் 3 நாட்களுக்கு மதுக்கடைகள் அடைப்பு
மதுரை மாவட்டத்தில் அக். 27,28,29 ஆகிய தேதிகளில் மதுக்கடைகள் அடைக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மருதுபாண்டியர் நினைவு தினம் மற்றும் தேவர் குருபூஜையை ஒட்டி 3 நாட்கள் மதுக்கடைகள் அடைக்கப்படும்.
✍️ தீபாவளியை ஒட்டி கட்டட தொழிலாளர்களுக்கு தீபாவளி ஊக்கத்தொகையாக ரூ.5,000 வழங்கப்படும்: புதுச்சேரி அரசு
தீபாவளியை முன்னிட்டு, புதுச்சேரியில் கட்டடத் தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகையாக ₹5,000 மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ₹1,500 வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
✍️ ரூ.120 கோடி முதலீட்டில் தொழிற்சாலையை நவீனமயமாக்குகிறது டிவிஎஸ் மோட்டார் நிறுவனம்
கிருஷ்ணகிரி: ரூ.120 கோடி முதலீட்டில் தொழிற்சாலையை நவீனமயமாக்குகிறது டிவிஎஸ் மோட்டார் நிறுவனம். ஒசூரில் உள்ள 2 மற்றும் 3 சக்கர வாகன உற்பத்தி ஆலையை நவீனமயமாக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது.
✍️ நெல்லையில் இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவி மீது மாடு மோதி விபத்து: உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட திருமால் நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவி மீது, அங்கே சுற்றித் திரிந்த மாடு மோதியதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
✍️ லாரி மீது ஆட்டோ மோதி பாட்டி, பேத்தி பரிதாப பலி
உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வீடு திரும்பும்போது தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் சாலையில் போரூர் அருகே லாரி மீது ஆட்டோ மோதியதில் பாட்டி மற்றும் பேத்தி பரிதாபமாக பலியாகினர்.
✍️ சென்னையில் உள்ள 75% வீடுகளின் நீரில் ஈ.கோலி பாக்டீரியா: சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல்
சென்னையில் உள்ள 75 சதவீத வீடுகளின் தண்ணீரில் ‘’ஈ.கோலி’’ பாக்டீரியா மாசு கலந்திருப்பதாக சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
✍️ திடக்கழிவுகள் அகற்றுவதில் விதிமீறினால் ரூ.5,000 அபராதம்: சென்னை மாநகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை
திடக்கழிவு மேலாண்மையை சரியாக பின்பற்றாமல் விதிமீறல்களில் ஈடுபடும் பெருமளவு திடக்கழிவு உற்பத்தியாளர்கள் மீது திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019ன்படி ரூ.5000 அபராதம் விதிக்கப்படும்.
✍️ தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) மாணவர்கள் நேரடி சேர்க்கை 30.10.2024 வரை நீட்டிக்கப்படுகிறது
2024-2025-ம் கல்வியாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை செய்வதற்கான கால அளவு மாணவர்களின் நலன் கருதி 30.09.2024 வரை ஏற்கனவே வழங்கப்பட்டது. தற்பொழுது மாணவர்களின் நலன் கருதி 30.10.2024 வரை நீட்டிக்கப்படுகிறது.
✍️ வேதியியல் படிக்கும் மாணவரின் உதவியுடன் வீட்டிலேயே மெத்தபெட்டமைன் போதைப்பொருள் தயாரித்த 7 மாணவர்கள் கைது
பெரம்பூர்: குறுகிய காலத்தில் பெரிய பணக்காரர் ஆகவேண்டும் என்ற ஆசையில் வீட்டிலேயே ஆய்வகம் அமைத்து போதை பொருட்கள் தயாரித்த கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
✍️ குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதி
குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு குறைந்ததையடுத்து அனைத்து அருவிகளிலும் இன்று சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
✍️ பெங்களூருவில் கட்டிடம் இடிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு: தமிழ்நாட்டை சேர்ந்த 2 பேரும் பலியாகினர்
பெங்களூருவில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்த விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
✍️ வயநாட்டில் பிரம்மாண்ட ரோட் ஷோ பிரியங்கா காந்தி வேட்பு மனு தாக்கல்: ராகுல், சோனியா, மூத்த தலைவர்கள் பங்கேற்பு
ஆயிரக்கணக்கான தொண்டர்கள், சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, சித்தராமையா உள்பட காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்ட பிரம்மாண்ட ரோட் ஷோவுக்குப் பின்னர் பிரியங்கா காந்தி நேற்று வயநாடு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
✍️ தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி ஆந்திராவில் தீபாவளி முதல் ஆண்டுக்கு 3 இலவச காஸ் சிலிண்டர் வினியோகம்: முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தலின்போது கொடுத்த சூப்பர் சிக்ஸ் வாக்குறுதி நிறைவேற்றும் விதமாக தீபாவளி அன்று அக்டோபர் 31ம் தேதி முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆண்டுக்கு 3 காஸ் சிலிண்டர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக ஆண்டுக்கு ரூ.2684 கோடி அரசு செலவு செய்கிறது. சிலிண்டர் டெலிவரி செய்யப்பட்ட 48 மணி நேரத்தில் நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு அந்த பணம் செலுத்தப்படும்.
✍️ நீலகிரி, கோவை, சேலம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழை; வானிலை மையம் தகவல்
✍️ திருப்பூரில், அரசு பஸ்சை வழிமறித்து, டிரைவர் மடியில் அமர்ந்து அடாவடி செய்த போதை நபரை போலீசார் கைது செய்தனர்.
✍️ ஒரே நேரத்தில் நான்கு மனைவியருடன் வாழ முஸ்லிம் தனிநபர் சட்டம் உரிமை தருவதால், முஸ்லிம் ஆண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களை பதிவு செய்து கொள்ளலாம்' என, மும்பை உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
✍️ ஹைதராபாத் 'சரஸ்வதி பவர் அண்டு இண்டஸ்ட்ரீஸ்' நிறுவனத்தின் பங்குகளை, தன் சகோதரி ஷர்மிளா சட்டவிரோதமாக அவரது பெயருக்கு மாற்றி விட்டதாக, ஆந்திர முன்னாள் முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.காங்., தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி குற்றஞ்சாட்டி உள்ளார்.
✍️ பிரியங்காவுக்கு தனது மொத்த சொத்து மதிப்பு ரூ.12 கோடி எனவும், 2023 - 24ம் ஆண்டின் வருமானம் ரூ.46.39 லட்சம் எனவும் குறிப்பிட்டுள்ளார். அசையும் சொத்து ரூ.4.24 கோடியும், அசையா சொத்துக்கள் ரூ.7.74 கோடியும், ரூ.1.15 கோடி மதிப்புள்ள 4,400 கிராம் தங்கமும் இருப்பதாக பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.
✍️ ரஷ்ய பயணம் நிறைவு : நாடு திரும்பினார் மோடி
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி இன்று (அக். 24) நள்ளிரவு டில்லி திரும்பினார்
பேனாமுள் பத்திரிகை செய்திகளுக்காக உங்கள்
*பாடி பா.கார்த்திக்*