30/10/2024 ஆம் தேதி பேனாமுள் பத்திரிகை செய்திகள்

🌷*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*🌷

குறள் : 176
அருள்வெஃகி யாற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்.

அருளை விரும்பி அறநெறியில் நின்றவன், பிறனுடைய பொருளை விரும்பிப் பொல்லாத குற்றங்களை எண்ணினால் கெடுவான்.

✍️  அக்டோபர் 30
*பெட்ரோல்விலை*-100.75
  *டீசல் விலை*-92.34

✍️ *பங்கு சந்தை நிலவரம்*
நிப்டி : 24466.85
பேங்க் நிப்டி : 52320.70
சென்செக்ஸ் : 80369.03

✍️ *சென்னை - ரீடைல் சந்தையில் தங்கம் விலை இன்று*
18 K  தங்கம்/ g : ₹ 6075
22 K தங்கம்/ g. : ₹ 7375
வெள்ளி    /g   : ₹ 108.00


✍️ *ஆவடி மாநகராட்சி தெருவிளக்கு அதிகாரிகள் பார்வைக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டி மக்கள் கோரிக்கை*

ஆவடி பருத்திப்பட்டு 48 வது வார்ட் லட்சுமி கிரீன் சிட்டி பகுதியில் தெருவிளக்குகள் இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது இதனால் பல அசம்பாவிதங்கள் ஏற்படும் நிலையில் உள்ளது மாலை 6 மணிக்கு மேல் வீட்டில் உள்ள பெண்கள் முதியவர்கள் குழந்தைகள் யாரும் வெளியே வரமுடியாத நிலையில் உள்ளனர் ஏதாவது திருட்டோ வழிப்பறியோ ஏற்படுவதற்கு முன் சம்பந்தப்பட்ட ஆவடி மாநகராட்சி மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தெரு விளக்குகள் அமைத்து தர வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் பணிவான வேண்டுகோள்.

✍️ *நாளை தீபாவளி கொண்டாட்டம் கடைசிநேர விற்பனை படுஜோர்: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று அரை நாள் விடுமுறை*

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு நேற்று தமிழகம் முழுவதும் துணிகள் வாங்க கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு மக்கள் பஸ், ரயில்களில் படையெடுத்தனர். இதே போல ஜவுளி, பட்டாசு விற்பனையும் களைகட்டியது. இன்றும் விற்பனை இறுதிக்கட்டத்தை எட்டும் என்பதால் கூட்டம் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும், வெளியூர் செல்லும் பொதுமக்களின் வசதிக்காக பள்ளி, கல்லூரிகளுக்கு தமிழ்நாடு அரசு அரை நாள் விடுப்பு அறிவித்துள்ளது.

✍️ *வாக்காளர் பட்டியல் வெளியீடு சென்னை மாவட்டத்தில் 39.52 லட்சம் வாக்காளர்கள்*

சென்னை மாவட்டத்தில் மொத்தம் 39.52 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அதிகபட்சமாக வேளச்சேரியில் 3.12 லட்சம் வாக்காளர்களும், குறைந்தபட்சமாக எழும்பூரில் 1.76 லட்சம் வாக்காளர்களும் உள்ளனர்.

✍️ *தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் எதிரொலி காரணமாக விமான டிக்கெட் கட்டணம் 4 மடங்கு அதிகரிப்பு*

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர் செல்லும் பொதுமக்களால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலும் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. அதே நேரத்தில், சாதாரண நாட்களை விட 4 மடங்கு வரை விமான டிக்கெட் கட்டணம் அதிகரித்துள்ளது.

குறிப்பாக, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம் ஆகிய பெருநகரங்களுக்கு செல்லும் விமான கட்டணங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளன. மேலும், வடமாநிலங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் உள்ள திருவனந்தபுரம், கொச்சி, ஐதராபாத், டெல்லி, கொல்கத்தா மற்றும் அந்தமான் ஆகிய இடங்களுக்கு செல்லும் விமான கட்டணங்களும் அதிகரித்துள்ளன.

✍️ *முதல்வர் உலக சிக்கன நாள் வாழ்த்துச்செய்தி செலவினை சுருக்கிடுவோம் சேமிப்பை பெருக்கிடுவோம்*

உலக சிக்கன நாள் முன்னிட்டு செலவினை சுருக்கிடுவோம், சேமிப்பை பெருக்கிடுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

✍️ *தமிழக அரசின் வழிகாட்டுதல்படி அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டும் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்: போலீஸ் கமிஷனர் அருண் அறிவுறுத்தல்*

தமிழக அரசின் வழிகாட்டுதல்படி தீபாவளி அன்று அமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டும் பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என்று பெருநகர போலீஸ் கமிஷனர் அருண் 19 கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளார்.

✍️ *புதிய படங்களை நவம்பர் 1 முதல் தொடங்க வேண்டாம்: தயாரிப்பாளர்கள் சங்கம் உத்தரவு*

வரும் நவம்பர் 1ம் தேதி முதல் புதிய படங்களை தொடங்க வேண்டாம் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் உத்தரவிட்டுள்ளது.

✍️ *சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் 6 புதிய திட்டப்பணிகளுக்கு ரூ. 98.21 கோடியில் அடிக்கல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்*

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் ரூ. 98.21 கோடியில் 6 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

✍️ *சென்னையில் ரூ. 27 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்: 2 பேர் கைது : போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிரடி*

சென்னையில் 27 கோடி ரூபாய் மதிப்புள்ள 2.7 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்துள்ளனர். 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

✍️ *தேயிலை தோட்ட கழக தொழிலாளர்களுக்கு 20% போனஸ்*

தமிழ்நாடு தேயிலை தோட்ட கழக தொழிலாளர்களுக்கு 20% போனஸ் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

✍️ *விஜய் ரசிகர்கள் ஓட்டு எங்க கட்சிக்குதான்…சீமான் நம்பிக்கை*

வரும் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கே விஜய் ரசிகர்கள் வாக்களிப்பார்கள் என தேனியில் சீமான் தெரிவித்தார்.

✍️ *சூப்பர் பவர்’ இருப்பதாக கூறி 4வது மாடியில் இருந்து குதித்த கல்லூரி மாணவர்: கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை*

மதுக்கரை: கோவையில் சூப்பர் பவர் இருப்பதாக கூறி கல்லூரி விடுதியின் 4வது மாடியில் இருந்து குதித்த மாணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

✍️ *சொத்து குவிப்பு வழக்கிலிருந்து ஓ.பன்னீர்செல்வத்தை விடுவித்த உத்தரவு ரத்து*

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை திரும்பப்பெற அனுமதித்து சிவகங்கை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை நான்கு வாரங்களில் மதுரை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு சிவகங்கை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

✍️ *டிஐஜி மீது துறைரீதியான நடவடிக்கை அதிகாரிகள் வீட்டு வேலைக்கு கைதிகள் பயன்படுத்தப்படுகிறார்களா? சிறைத்துறை டிஜிபி ஆய்வு செய்ய ஐகோர்ட் உத்தரவு*

சிறை கைதிகள் இது போன்று வீட்டு வேலைகளுக்கு பயன்படுத்தப்படுகிறார்களா? என்பது குறித்து தொடர்ந்து சிறைத்துறை டிஜிபி ஆய்வு செய்ய வேண்டும். வீட்டுப்பணிகளுக்கு கைதிகளை மட்டுமல்ல ஆர்டர்லியாக காவல்துறையினரையும் பணியில் ஈடுபடுத்தக்கூடாது.அதிகாரிகளுக்கு ஏற்கனவே பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் இது போன்று அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினால் அது தீவிரமாக கவனிக்கப்படும் என்று உத்தரவிட்டனர்.

✍️ *திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்கும் விடுதி பயன்பாட்டிற்கு வந்தது*

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ரூ. 48.36 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பக்தர்கள் தங்கும் விடுதியை திறந்து வைத்தார்.

இந்த அறைகளுக்கான முன்பதிவு நேற்று முதல் தொடங்கி உள்ளது.

✍️ *த.வெ.க மாநாடு நடந்த நாளில் விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் ரூ. 10 கோடிக்கு மது விற்பனை*

த.வெ.க மாநாட்டையொட்டி 26 மற்றும் 27ம் தேதிகளில் மட்டும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரூ. 10 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.

✍️ *117வது ஜெயந்தி, 62வது குருபூஜை விழா தேவர் நினைவிடத்தில் முதல்வர்,தலைவர்கள் இன்று மரியாதை*

ராமநாதபுரம்: பசும்பொன்னில் இன்று நடக்கும் தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், அமைப்பினர், பொதுமக்கள் மரியாதை செலுத்த உள்ளனர்.

✍️ *இன்று முதல் நவம்பர் 4ம் தேதி வரை 32 விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டி இணைப்பு*

சென்னையில் இருந்து இயக்கப்படும் சதாப்தி, முத்துநகர், காரைக்கால், ஏற்காடு உள்ளிட்ட 32 ரயில்களில் தலா ஒரு பெட்டி கூடுதலாக இணைப்படுகிறது.

✍️ *தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு லேசான மழை பெய்யும்*

தென்னிந்திய கிழக்கு கடலோரப் பகுதிகளை ஒட்டி வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் 3 நாட்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

✍️ *காமன்வெல்த் மாநாடு நவ.5ல் ஆஸ்திரேலியா செல்கிறார் சபாநாயகர் அப்பாவு*

நவம்பர் 5ம் தேதி முதல் 8ம் தேதி வரை ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னியில் நடைபெற இருக்கும் 67வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் தமிழக கிளையின் பிரதிநிதியாக பேரவை தலைவர் அப்பாவு கலந்து கொள்கிறார்.

✍️ *தாம்பரத்தில் இருந்து மானாமதுரை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்*

தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்கள் வசதிக்காக இன்று தாம்பரத்தில் இருந்து மானாமதுரை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. மானாமதுரைக்கு செல்லும் சிறப்பு ரயில் மாலை 5 மணிக்கு புறப்படும். விழுப்புரம், கடலூர், சிதம்பரம், திருவாரூர், காரைக்குடி, சிவகங்கை வழியாக காலை 3.45க்கு மானாமதுரை சென்றடைகிறது.

✍️ *உயர்கல்வித்துறை சார்பில் ரூ. 156.05 கோடியில் கல்விசார் கட்டிடங்கள் திறப்பு*

உயர்கல்வித் துறை சார்பில் ரூ. 156.05 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

✍️ *பெரம்பூரில் ₹5 கோடி மதிப்பீட்டில் முரசொலி மாறன் அறிவியல் பூங்கா: இறுதிகட்ட பணிகள் மும்முரம்*

பெரம்பூரில் அமைக்கப்படும் முரசொலி மாறன் அறிவியல் பூங்கா விரைவில் திறக்கப்படவுள்ளது. விண்வெளியில் மிதப்பது போன்ற சுவாரஸ்ய அனுபவங்களை அளிக்கும் இந்த பூங்கா பயன்பாட்டுக்கு வந்தால் மாணவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் ஆச்சரியத்தில் ஆழ்ந்து விடுவார்கள், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

✍️ *50 ஆயிரம் கோடி ஐபோன் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி: தமிழ்நாட்டிலேயே அதிக தயாரிப்பு*

கடந்த செப்டம்பர் வரையிலான 6 மாதங்களில் இந்தியாவில் இருந்து ஆப்பிள் நிறுவனம் ரூ.50 ஆயிரம் கோடிக்கு ஐபோன்களை ஏற்றுமதி செய்துள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் மூன்றில் ஒரு பங்கு அதிகமாகும்.

✍️ *சவரன் ரூ. 59 ஆயிரத்தை தொட்டது தங்கம் விலை புதிய உச்சம்*

தங்கம் விலை நேற்று அதிரடியாக சவரனுக்கு ரூ. 480 உயர்ந்தது. இதனால், தங்கம் விலை ஒரு சவரன் ரூ. 59 ஆயிரம் என்ற புதிய உச்சத்தை தொட்டது.

✍️ *சூட்கேஸில் சிறுமி சடலம்; பெங்களூரு தம்பதி சுற்றிவளைப்பு*

சங்ககிரி : வீட்டு வேலைக்கு வைத்த சிறுமியை கொலை செய்து சூட்கேஸில் அடைத்து வைகுந்தத்தில் வீசிச்சென்ற விவகாரத்தில், பெங்களூருவில், ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரியும் தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

✍️ *கோவை-திண்டுக்கல் ரயில் அறிவிப்பு*

அக்.30(இன்று), நவ.1, 2, 4, 5, 6 ஆகிய நாட்களில் காலை 9:35க்கு புறப்படும், கோவை - திண்டுக்கல் முன்பதிவற்ற சிறப்பு ரயில் போத்தனுார், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழநி, ஒட்டன்சத்திரம் வழியே மதியம் 1:10க்கு திண்டுக்கல்லை அடையும்.

✍️ *சேமிப்பு கணக்கு துவக்க முதல்வர் வேண்டுகோள்*

'பள்ளி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை, அனைவரும் அஞ்சலகத்தில் சேமிப்பு கணக்கை துவக்க வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

✍️ *பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு*

பெட்ரோல் பங்க்குகளின் டீலர் கமிஷன் உயர்த்தப்பட்டுள்ளதால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ. 2 முதல் ரூ. 4 வரை விலை குறையும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

✍️ *தீபாவளி பண்டிகை: ஒரே நாளில் 4 லட்சம் பேர் பயணம்*

கிளாம்பாக்கம் பஸ் நிலையம், எழும்பூர், சென் ட்ரல் ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. சுங்கச்சாவடிகளிலும் வாகன நெரிசல் அதிகமாக உள்ளது. சென்னையில் இருந்து நேற்று முன்தினம் சுமார் 1 லட்சம் பேர் பயணித்ததாக சொல்லப்பட்ட நிலையில், நேற்று சுமார் 2½ லட்சம் முதல் 4 லட்சம் பேர் பஸ்கள், ரெயில்கள், கார்களில் புறப்பட்டு சென்றுள்ளனர்.

பேனாமுள் பத்திரிகை செய்திகளுக்காக உங்கள்

*பாடி பா.கார்த்திக்*
ஆசிரியர்- பேனாமுள் இதழ்

Comments