🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏
🇮🇳🇮🇳✍️✒️✒️✒️✒️✒️✒️✍️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🇮🇳🇮🇳✍️🌹🌹✒️✒️🌹🌹✍️🇮🇳🇮🇳
தேதி: 01/11/2024
*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520
பேனாமுள் பத்திரிகை youtube சேனலை பார்க்க https://youtube.com/@penamull1025?si=fi4rB_TuwafKf6NF இந்த ஐ டி யை பார்த்து Subscriber செய்து கொள்ளவும்
🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏
🌷*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*🌷
குறள் : 177
வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன்.
பிறர் பொருளைக் கவர விரும்புவதால் ஆகும் ஆக்கத்தை விரும்பாதிருக்க வேண்டும்; அது பயன் விளைவிக்கும்போது அப்பயன் நன்மையாவது அரிதாகும்.
✍️ நவம்பர்- 01
*பெட்ரோல்விலை*-100.75
*டீசல் விலை*-92.34
✍️ *சென்னை - ரீடைல் சந்தையில் தங்கம் விலை இன்று*
18 K தங்கம்/ g : ₹ 6140
22 K தங்கம்/ g. : ₹ 7455
வெள்ளி /g : ₹ 109.00
✍️ *சிவகாசியில் ரூ.6 ஆயிரம் கோடிக்கு பட்டாசு விற்பனை*
சிவகாசியில் தயாரான பட்டாசுகள் நாடு முழுவதும் ரூ.6 ஆயிரம் கோடிக்கு விற்பனையாகி உள்ளதாக பட்டாசு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
✍️ *தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு*
இன்று திண்டுக்கல், நாமக்கல், சேலம், ஈரோடு, தருமபுரி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை, குமரி ஆகிய 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
✍️ *சென்னையில் 4 இடங்களில் காற்றின் தரம் மிகவும் மோசம்*
சென்னையில் 4 இடங்களில் காற்று மாசு அதிகரித்துள்ளது. பெருங்குடி - 262, ஆலந்தூர் - 258, அரும்பாக்கம் - 248, வேளச்சேரியில் 224 என்ற அளவில் அளவில் காற்றின் தரக் குறியீடு மோசமடைந்துள்ளது.
✍️*நவம்பர் முதல் வார இறுதியில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகிறது: இந்திய வானிலை ஆய்வு மையம்*
நவம்பர் முதல் வார இறுதியில் தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தீவிரமடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
✍️*பட்டாசு தீப்பொறி விழுந்து, பனியன் நிறுவன குடோனில் தீ விபத்து*
சேலம் மாநகரின் களரம்பட்டி பகுதியில் பட்டாசு தீப்பொறி விழுந்து, பனியன் நிறுவன குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
✍️*பழனி கந்தசஷ்டி விழா நவ. 2ல் துவங்குகிறது : 7ம் தேதி சூரசம்ஹாரம்*
திண்டுக்கல் மாவட்டம், பழநி மலைக்கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று கந்த சஷ்டி. இவ்விழா நாளை (நவ. 2, சனி) மலைக்கோயிலில் காப்புக்கட்டுதலுடன் துவங்க உள்ளது.அன்றைய தினம் பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை செய்யப்பட்டு, காப்பு கட்டப்படும்.
முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 7ம் தேதி நடைபெறும். அன்றைய தினம் மாலை 6 மணிக்கு மேல் தாரகாசூரன், பானுகோபன், சிங்கமுகா சூரன் மற்றும் சூரபத்மன் ஆகிய சூரர்களை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும்.
✍️*சென்னை சென்ட்ரலில் இருந்து போடி சென்ற ரயில் மதுரை அருகே தடம் புரண்டது*
சென்னை சென்ட்ரலில் இருந்து போடி சென்ற ரயில் மதுரை அருகே தடம் புரண்டது. மதுரை அருகே தடம் புரண்ட ரயில் பெட்டியை சீரமைக்கும் பணியில் ரயில்வே பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
✍️*இந்திய சீன ராணுவ வீரர்கள் ஒருவருக்கொருவர் இனிப்புகளை பரிமாறி தீபாவளி வாழ்த்து*
கிழக்கு லடாக் எல்லையில் இந்திய சீன ராணுவ வீரர்கள் ஒருவருக்கொருவர் இனிப்புகளை பரிமாறி தீபாவளி வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர்
✍️ இங்கிலாந்து மன்னர் பெங்களூருவில் 3 நாள் ரகசிய சிகிச்சை
இங்கிலாந்து மன்னர் சார்லஸ் ஆயுர்வேத சிகிச்சை பெறுவதற்காக பெங்களூருவுக்கு தனது மனைவி கமிலாவுடன் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வந்தார். பெங்களூரு ஒயிட்பீல்ட் பகுதியில் இயங்கி வரும் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் தங்கி ரகசிய சிகிச்சை பெற்றுக்கொண்டார்.
✍️ *3 நாளில் அரசு பஸ்களில் 5.76 லட்சம் பேர் பயணம்*
தீபாவளியையொட்டி அரசு பஸ்களில் 3 நாளில், 5.76 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.
✍️ *1008 லட்டு அலங்காரத்தில் கோவை அன்னபூர்ணேஸ்வரி*
கோவையிலுள்ள மேற்கு திருவேங்கடசாமி சாலையில் அமைந்துள்ள அன்னபூர்ணேஸ்வரி கோவிலில் நேற்று தீபாவளியை ஒட்டி ஆயிரத்து எட்டு லட்டுகளால் அன்னபூர்ணேஸ்வரிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
✍️ *போலீசார் முறையாக விசாரிக்காவிட்டால் பாதிக்கப்பட்டோருக்கு தீர்வு கிடைக்காது: உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்*
உரிய முறையில் விசாரணை செய்யவில்லை எனில் பாதிக்கப்பட்டோருக்கு தீர்வு கிடைக்காமல் போகலாம்.
பொறுப்பை உணர்ந்து, குற்றவாளிகளை கண்டறிய போலீசார் அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என அறிவுறத்தப்பட்டது.
✍️ *கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் பிராண வாயு சிகிச்சை மையம்*
சென்னை, : ''கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், உயரழுத்த பிராண வாயு சிகிச்சை மையம் துவக்கப்பட்டுள்ளது,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.
✍️ *பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு*
பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு, பால் கொள்முதல் ஊக்கத்தொகை, 140 கோடியே, 98 லட்சம் ரூபாய் வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
✍️ *தங்கம் விலை தொடர் ஏற்றம்; சவரனுக்கு ரூ.120 உயர்வு*
சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்து, 59,640 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து, 109 ரூபாய்க்கு விற்பனையானது.
✍️ *திருமலையில் ஹிந்துக்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும்: புதிய தலைவர் அதிரடி*
'திருமலையில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் ஹிந்துக்களாக இருக்க வேண்டும்,'' என, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியத்தின் தலைவர் பி.ஆர்.நாயுடு தெரிவித்துள்ளார்.
✍️ *தங்கம் வாங்கி குவிப்பதில் சீனாவை விஞ்சியது இந்தியா*
தங்கம் வாங்குவதில் சீனாவை விஞ்சியது இந்தியா என உலக தங்க கவுன்சில் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
✍️ *ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய மோடி*
குஜராத் மாநிலம் கட்ச் எல்லைப்பகுதிக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுக்கு இனிப்பு வழங்கி, அவர்களுடன் தீபாவளியை கொண்டாடினார்.
✍️ *வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை அதிரடியாக உயர்வு: வணிகர்கள் அதிர்ச்சி*
சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 61 ரூபாய் 50 காசுகள் அதிகரித்து ரூ. 1,964.50 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பேனாமுள் பத்திரிகை செய்திகளுக்காக உங்கள்
*பாடி பா.கார்த்திக்*