🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏
🇮🇳🇮🇳✍️✒️✒️✒️✒️✒️✒️✍️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🇮🇳🇮🇳✍️🌹🌹✒️✒️🌹🌹✍️🇮🇳🇮🇳
தேதி: 02/11/2024
*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520
பேனாமுள் பத்திரிகை youtube சேனலை பார்க்க https://youtube.com/@penamull1025?si=fi4rB_TuwafKf6NF இந்த ஐ டி யை பார்த்து Subscriber செய்து கொள்ளவும்
🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏
🌷*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*🌷
குறள் : 178
அஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.
ஒருவனுடைய செல்வத்திற்குக் குறைவு நேராதிருக்க வழி எது என்றால், அவன் பிறனுடைய கைப்பொருளை விரும்பாதிருத்தலாகும்.
✍️ நவம்பர்- 02
*பெட்ரோல்விலை*-100.75
*டீசல் விலை*-92.34
✍️ *சென்னை - ரீடைல் சந்தையில் தங்கம் விலை இன்று*
18 K தங்கம்/ g : ₹ 6085
22 K தங்கம்/ g. : ₹ 7385
வெள்ளி /g : ₹ 106.00
✍️ *நாடு முழுவதும் கோலாகல கொண்டாட்டம் தீபாவளி விற்பனை ரூ.4 லட்சம் கோடி: துணி, பட்டாசு, எலக்ட்ரானிக் உள்ளிட்ட பொருட்களின் விற்பனை அமோகம், வியாபாரிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி*
பட்டாசு, துணி, இனிப்பு, எலக்ட்ரானிக் உள்ளிட்ட பொருட்கள் வியாபாரம் எதிர்பார்த்ததைவிட அதிகளவில் இருந்ததால் வியாபாரிகள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தனர். இந்த தீபாவளிக்கு நாடு முழுவதும் சுமார் ரூ.4 லட்சம் கோடிக்கு விற்பனை ஆனதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
✍️ *சென்னையில் தீபாவளியன்று காற்று மாசு கடந்த ஆண்டை விட குறைவு: மாசு கட்டுப்பாட்டு வாரியம்*
சென்னையில் தீபாவளியன்று காற்று மாசு கடந்த ஆண்டை விட வெகுவாக குறைந்துள்ளது என மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
✍️ *தேவர் ஜெயந்தி கொடிக்கம்பங்களை அகற்றும்போது மின்சாரம் பாய்ந்து எஸ்ஐ உயிரிழப்பு: 21 குண்டுகள் முழங்க உடல் அடக்கம்*
பரமக்குடியில் தேவர் ஜெயந்தி கொடிக்கம்பங்களை அகற்றியபோது மின்சாரம் பாய்ந்து எஸ்ஐ பலியானார். அவரது உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
✍️ *மின்வாரிய அலுவலக பணிகள் டிஜிட்டல் மயம்: தமிழகம் முழுவதும் நடைமுறைக்கு வந்தது*
தமிழகம் முழுவதும் மின்வாரிய பணிகள் அனைத்தும் நேற்று முதல் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
✍️ *60 நாட்களாக குறைக்கப்பட்ட ரயில் டிக்கெட் முன்பதிவு காலம் அமலானது: ரயில்வே நிர்வாகம் தகவல்*
120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைக்கப்பட்ட ரயில் டிக்கெட் முன்பதிவு காலம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
✍️ *தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் 2 நாட்களில் ரூ.439 கோடிக்கு மது விற்பனை: கடந்த ஆண்டைவிட ரூ.29 கோடி குறைவு*
கடந்த ஆண்டைவிட சுமார் ரூ.29 கோடி குறைவாக, அதாவது ரூ.439 கோடிக்கு மட்டுமே மது விற்பனையாகி உள்ளது.
✍️ *ரூ.6000 கோடிக்கு பட்டாசுகள் விற்பனை; ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தது சிவகாசி*
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவகாசி பட்டாசுகள் தொடர்ந்து மூன்றாவது முறையாக ரூ.6 ஆயிரம் கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
✍️ *சென்னையில் 2 நாளில் மட்டும் 213 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்: முழுமையாக அகற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள்*
சென்னையில் தீபாவளி நாளில் பட்டாசுகள் வெடிக்கப்பட்ட நிலையில், நேற்றும் மதியம் வரை 213.61 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
✍️ *எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: 6ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது*
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 6ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.
✍️ *தாய்லாந்தின் புகட் நகருக்கு சென்னையில் இருந்து வாரத்தில் 3 நாள் விமான சேவை தொடக்கம்*
தாய்லாந்து நாட்டின் கடற்கரை நகரான எழில் அழகு கொஞ்சும் புகட் நகருக்கு வாரத்தில் 3 நாட்கள் சென்னையில் இருந்து நேரடி விமான சேவை புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.
✍️ *சென்னைக்கு வரும் பயணிகளின் வசதிக்காக இன்று முதல் 4ம் தேதி வரை 12,846 பஸ்கள் இயக்கப்படும்*
தீபாவளி பண்டிகை முடிந்து சென்னைக்கு வரும் பயணிகளின் வசதிக்காக இன்று முதல் 4ம் தேதி வரையில், தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் 3,165 சிறப்புப் பேருந்துகளும், ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து 3,405 பேருந்துகளும் என ஆக மொத்தம் 12,846 பேருந்துகள் இயக்கப்படும்.
✍️ *தமிழர் பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க போராடிய தியாகிகளை வணங்குகிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்*
எல்லைப் போராட்டத் தியாகிகள் நாளில் தமிழர் வாழும், தமிழ் பேசப்படும் பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைப்பதற்காகப் போராடிய தியாகிகளை வணங்குகிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
✍️ *இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் திட்டம் துவக்கம்*
ஆந்திராவில் இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் 'தீபம் - 2' என்ற திட்டத்தை, மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று துவக்கி வைத்தார்.
✍️ *பிரதமரின் பொருளாதார ஆலோசகர் காலமானார்*
பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனை குழு தலைவரும், பொருளாதார நிபுணருமான விவேக் டெப்ராய், 69, உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார்.
✍️ *பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் வசூலித்தால் மதுக்கடை ஊழியர்கள் கூண்டோடு 'சஸ்பெண்ட்'*
மதுக் கடைகளில், பாட்டிலுக்கு கூடுதலாக, 10 ரூபாய் அல்லது அதற்கு மேல் விலை வைத்து விற்கும் பணியாளர் மீது நடவடிக்கை எடுப்பதுடன், மேற்பார்வையாளர் உட்பட அனைவரையும், 'சஸ்பெண்ட்' செய்யுமாறு மேலாளர்களுக்கு, 'டாஸ்மாக்' உத்தரவிட்டுள்ளது.
✍️ *சிறு தொழில் துவங்க ஊராட்சி அனுமதி கட்டாயம்*
தமிழகத்தில் புதிதாக குறுந்தொழில் துவங்க, ஊராட்சியில் அனுமதி பெறுவதை கட்டாயமாக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
✍️ *தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைவு*
தங்கம் விலை கிராமுக்கு, 70 ரூபாய் குறைந்து, 7,385 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 560 ரூபாய் சரிவடைந்து, 59,080 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
✍️ *திருச்செந்துார் சூரசம்ஹாரம் 70 சிறப்பு பஸ்கள் அறிவிப்பு*
திருச்செந்துாரில் நடக்கும் சூரசம்ஹார விழாவையொட்டி, சென்னை உட்பட பல்வேறு ஊர்களில் இருந்து, 70க்கும் மேற்பட்ட விரைவு சொகுசு பஸ்கள், திருச்செந்துாருக்கு இயக்கப்பட உள்ளன.
✍️ *பட்டாசு வெடித்ததில் 150 இடங்களில் தீ விபத்து இருவர் பலி; 544 பேர் காயம்*
சென்னைமாநிலம் முழுதும் தீபாவளிக்கு பட்டாசு வெடித்தபோது, 154 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டு, இருவர் இறந்துள்ளனர்; 544 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது.
✍️ *டிசம்பர் 6 விஜய் - திருமாவளவன் சந்திப்பு*
வரும் டிசம்பர் 6ம் தேதி சென்னையில் நடக்க இருக்கும் பிரமாண்ட விழாவில், அம்பேத்கர் பற்றிய புத்தகத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பெற்றுக் கொள்கிறார்.
✍️ *வரலாற்று நினைவுகளுடன் தமிழ்நாடு தினமாகப் போற்றி மகிழ்வோம்: விஜய்*
தமிழர்களுக்கு என்று ஒரு தனி மாநிலம் பிறந்த இந்த நாளை (நவம்பர் 1) வரலாற்று நினைவுகளுடன் தமிழ்நாடு தினமாகப் போற்றி மகிழ்வோம் என த.வெ. க., தலைவரும், நடிகருமான விஜய் தெரிவித்துள்ளார்.
✍️ *தண்டவாளத்தில் கற்கள்: பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்க்க மீண்டும் சதியா*
பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்க்க மீண்டும் சதி நடந்ததா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
✍️ *19 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடை*
ரஷிய போருக்கு தேவையான பொருட்கள் வினியோகித்த 19 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.
✍️ *ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இன்று மின்சார ரெயில்கள் இயக்கம்*
பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று மின்சார ரெயில்கள் சேவை ஞாயிற்றுக்கிழமை அட்டவனை படி இயக்கப்படும்.
✍️ *ரீல்ஸ் மோகம்: தண்டவாளத்தில் வீடியோ எடுத்த வாலிபர்கள் ரெயிலில் அடிபட்டு உயிரிழப்பு*
லக்னோ: ரீல்ஸ் மோகத்தில் தண்டவாளத்தில் நின்று வீடியோ எடுத்த வாலிபர்கள் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தனர்.
✍️ *தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் காங்கிரஸ் மோசமாக அம்பலப்பட்டு நிற்கிறது: பிரதமர் மோடி கருத்து*
ஒருபோதும் வழங்க முடியாத வாக்குறுதியை மக்களுக்கு அளித்து, அவர்கள் முன்பு காங்கிரஸ் மோசமாக அம்பலப்பட்டு நிற்கிறது என்று பிரதமர் தெரிவித்தார்.
பேனாமுள் பத்திரிகை செய்திகளுக்காக உங்கள்
*பாடி பா.கார்த்திக்*