🌷 *பேனாமுள் பத்திரிகை செய்திகள்* 🌷
🙏 *ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*🙏
9381157520
*குறள்* : *359*
சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்.
எல்லாப் பொருளுக்கும் சார்பான செம்பொருளை உணர்ந்து பற்றுக் கெடுமாறு ஒழுகினால், சார்வதற்க்கு உரிய துன்பங்கள் திரும்ப வந்து அடையா.
✍️ *மே 22*
*பெட்ரோல்விலை*-100.80
*டீசல் விலை*-92.39
*சி.என்.ஜி* - 91.50
✍️ *பங்கு சந்தை நிலவரம்*
*நிப்டி* : 24813.45
*பேங்க் நிப்டி* : 55075.10
*சென்செக்ஸ்* : 81596.63
✍️ *தங்கம் விலை இன்று*
22 Kதங்கம்/ g. : ₹ 8930
24 Kதங்கம்/ g. : ₹ 9739
வெள்ளி /g : ₹ 111.00
🗞️ *ஆகாஷ் தலைமறைவு; தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயனுக்கு சிக்கல்*
சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் சிக்கியுள்ள, ஆகாஷ் பாஸ்கரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், அவரிடம் பணம் பெற்ற நடிகர்கள் சிம்பு, தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோரிடம், அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
🗞️ *துணைவேந்தர் நியமனத்தில் அரசுக்கு அதிகாரம்: இடைக்காலத்தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவு*
பல்கலை. துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கும் சட்டப் பிரிவுகளுக்கு ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.
🗞️ *டெல்லியை வீழ்த்தி மும்பை அபார வெற்றி*
ஐபிஎல் தொடரில் டெல்லி அணியை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் அணி அரையிறுதிக்குள் நுழைந்தது.
🗞️ *ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு விளக்கம்*
ஆபரேஷன் சிந்தூர் குறித்து உலக நாடுகளுக்கு சென்று விளக்கம் அளிக்க ஒன்றிய அரசால் அமைக்கப்பட்ட 7 குழுக்களில் முதல் குழு ஜப்பான் புறப்பட்டுச் சென்றது.
🗞️ *சட்டீஸ்கரில் போலீசுடன் துப்பாக்கி சண்டை: நக்சல் முக்கிய தலைவர் உட்பட 27 பேர் சுட்டுக் கொலை*
சட்டீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் நக்சல்களின் முக்கிய தலைவர் பசவராஜூ உட்பட 27 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
🗞️ *கல்வி நிதியை விடுவிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு*
மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் சமக்ர சிக் ஷா திட்டத்தின் கீழ் கல்வி நிதியை வழங்க முடியும் என்று கூறி தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய ரூ.2,291 கோடி நிதியை மத்திய அரசு தர மறுக்கிறது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள தமிழ்நாடு அரசு, கல்வி நிதியை உடனடியாக விடுவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளது.
🗞️ *பிரதமர் மோடிக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு*
தொற்றுநோய்க்கு எதிராக உலகளாவிய ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், எதிர்கால தொற்றுநோய்களுக்கு வலுவான மற்றும் சமமான எதிர்வினையை உறுதி செய்யவும் இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த நிகழ்வில் பங்கேற்ற பிரதமர் மோடிக்கு, உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ரோஸ் அதானம் கேப்ரியேசஸ் பாராட்டு தெரிவித்து உள்ளார்.
🗞️ *பிரதமரின் கிசான் திட்டம்; போலியான செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டாம்-தமிழக அரசு*
பிரதமரின் கிசான் திட்டத்தில் இணைய pmkisan.gov.in என்ற இணையதளம் அல்லது தேசிய தகவல் மையம் கூகுள் பிளே ஸ்டோரில் வெளியிட்டுள்ள 'PMKISAN Gol' என்ற செயலியை கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து பதிவு செய்யலாம்.
வாட்ஸ் அப்பில் பகிரப்படும் 'APK' செயலி போலியானது என கூறப்பட்டுள்ளது.
🗞️ *தமிழக அரசு துறைகளில் 615 பணியிடங்கள்: டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட புதிய அறிவிப்பு*
காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி-ன் அதிகாரபூர்வ இணையதளத்தின் வாயிலாக விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே மாதம் 27 ஆம் தேதி முதல் விண்ணப்பத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சமர்ப்பிக்க ஜூலை 25 ஆம் தேதி கடைசி நாள் என்று கூறப்பட்டுள்ளது.
🗞️ *கலைஞர் மகளிர் உதவித்தொகை பெற 29-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்*
கலைஞர் மகளிர் உதவித்தொகை பெறாமல் இருக்கும் விடுபட்ட பெண்களுக்கு 29-ந்தேதி முதல் விண்ணப்பம் செய்வதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்கிறது.
🗞️ *திருச்செந்தூர் குடமுழுக்கு நேர வழக்கு*
திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு நடத்துவதற்கான நேரம் குறித்து ஆலோசித்து முடிவு செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது.
🗞️ *அடையாறு ஆற்றின் கரையோர ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டு இலவச வீடுகள் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிக்கை*
அடையாறு ஆற்றின் கரையோர ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டு இலவச வீடுகள் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
🗞️ *கலைமாமணி விருது பெற்ற கலைஞர்கள், அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றிப் பயணம்*
கலைமாமணி விருது பெற்ற கலைஞர்கள், தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றிப் பயணம் செய்திட அனுமதியளித்து, அரசால் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
🗞️ *14 புதிய தோழி விடுதிகள் கட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்*
176.93 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2000 பணிபுரியும் பெண்கள் பயன்பெறும் வகையில் 14 தோழி விடுதிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சரால் நேற்றையதினம் அடிக்கல் நாட்டப்பட்டது.
🗞️ *பிராட்வே பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தீவிரம்*
பிராட்வே பேருந்து நிலையத்தில் மல்டி மாடல் வளாகம் கட்டும் பணிக்காக, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடங்களை மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக அப்புறப்படுத்தி வருகின்றனர்.
பிராட்வே, பாரிமுனையின் பல்வேறு பகுதிகளை ஆக்கிரமித்துள்ள 200க்கும் மேற்பட்டவர்களுக்கு மாற்று இடங்கள் வழங்கப்பட்டுள்ளன.
🗞️ *விளம்பர பலகைகளுக்கு ஆன்லைனில் அனுமதி*
சென்னை மாநகராட்சியில் விளம்பர பலகைகள் நிறுவுவதற்கு மாநகராட்சியின் சார்பில் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு ஒப்புதல் வழங்குவதில் தேவையான ஆவணங்களை நேரடியாக அலுவலகம் வந்து சமர்ப்பிக்கும் முறை நடைமுறையில் இருந்தது. இந்த முறையை மாற்றி நிகழ்நிலையில் (ஆன்லைன் சிஸ்டம்) அனுமதி வழங்கும் நடவடிக்கை நேற்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது
விண்ணப்பதாரர்கள் தங்களுடைய விண்ணப்பங்களை உரிய ஆவணங்களோடு சென்னை மாநகராட்சியின் இணையதளமான www.chennaicorporation.gov.in எனும் பக்கத்தில் பதிவேற்றம் செய்து விண்ணப்பத்தின் நிலையை அறிந்து கொள்ளலாம்.
🗞️ *10, பிளஸ் 2 துணைத் தேர்வுகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்*
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இன்று முதல் இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.