தேதி: 23/5/2025
🌷 *பேனாமுள் பத்திரிகை செய்திகள்* 🌷
*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
*குறள்* : *360*
காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமங் கெடக்கெடு நோய்.
விருப்பு, வெறுப்பு, அறியாமை ஆகிய இக் குற்றங்கள் மூன்றனுடைய பெயரும் கெடுமாறு ஒழுகினால் துன்பங்கள் வராமற் கெடும்.
✍️ *மே 23*
*பெட்ரோல்விலை*-100.80
*டீசல் விலை*-92.39
*சி.என்.ஜி* - 91.50
✍️ *பங்கு சந்தை நிலவரம்*
*நிப்டி* : 24609.70
*பேங்க் நிப்டி* : 54941.30
*சென்செக்ஸ்* : 80951.99
✍️ *தங்கம் விலை இன்று*
22 Kதங்கம்/ g. : ₹ 8975
24 Kதங்கம்/ g. : ₹ 9788
வெள்ளி /g : ₹ 112.00
📰 *டாஸ்மாக்கில் ரெய்டு நடத்தியது வரம்பு மீறிய செயல் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை*
டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை சோதனைக்கு உச்ச நீதிமன்றம் நேற்று அதிரடியாக தடை விதித்து உத்தரவிட்டது. சென்னையில் டாஸ்மாக் அலுவலகத்தில் சோதனை நடத்தியது வரம்பு மீறிய செயல் என்றும், கூட்டாட்சித் தத்துவம் சிதைக்கப்பட்டுள்ளது என்றும் அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
📰 *ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணித்தால் ரூ.1000 அபராதம்*
ரயில் படிக்கட்டில் பயணித்தால் ரூ.1000 அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார்.
📰 *கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறப்பு*
கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தொடக்க கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
📰 *குரூப் 4 தேர்வுக்கு லட்சக்கணக்கானோர் போட்டிப் போட்டு விண்ணப்பம்: நாளையுடன் முடிகிறது காலக்கெடு*
குரூப் 4 பணியில் காலியாக உள்ள 3935 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுக்கு லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளனர்.
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி வழங்கிய ஒருமாத கால அவகாசம் நாளை (24ம் தேதியுடன்) முடிகிறது.
📰 *முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்*
பிரதமர் மோடி தலைமையில் நாளை டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை டெல்லி செல்கிறார். இந்த கூட்டத்தில், தமிழ்நாட்டிற்கான நிதியை வலியுறுத்தி பேச திட்டமிட்டுள்ளார்.
📰 *ஏற்காட்டில் இன்று மாலை கோடை விழா துவக்கம்*
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் 48வது கோடை விழா மற்றும் மலர்க்காட்சி இன்று (வெள்ளி) முதல் வரும் 29ம் தேதி வரை 7 நாட்கள் நடைபெறவுள்ளது.
📰 *ஜூன் 14ம் தேதி தடை காலம் நிறைவு*
தமிழகத்தில் மீன்பிடி தடைகாலம் ஜுன் 14ம் தேதி நிறைவடைவதையொட்டி மண்டபம் பகுதி மீனவர்கள் படகு மற்றும் வலைகளை பழுது பார்க்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் கடற்கரை பரபரப்பாக காணப்படுகிறது.
📰 *தமிழ்நாட்டுக்கான நிதியை மத்திய அரசு ஒதுக்காதது ஏன்?.. ஐகோர்ட் கேள்வி*
ஆர்.டி.இ சட்டத்தின் கீழ் 25% ஒதுக்கீட்டு இடங்களுக்கு தமிழ்நாட்டுக்கான நிதியை மத்திய அரசு ஒதுக்காதது ஏன்? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
📰 *குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் ஜூன் மாத இறுதியில் திறப்பு*
ரூ.414 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் ஜூன் மாத இறுதியில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
📰 *'பரிவாஹன்' செயலி போல் 'லிங்க்' அனுப்பி போக்குவரத்து விதிமீறியதாக புதுவித மோசடி*
போக்குவரத்து விதிமீறல்களுக்கு போலீசார் அனுப்பும், 'சலான்' போல், போலி செயலி வாயிலாக சலான் அல்லது 'லிங்க்' அனுப்பி, புதுவிதமாக மோசடி செய்யப்படுகிறது. இந்த வகையில் வங்கி கணக்கில் இருந்த பணத்தை இழந்தவர்கள், சைபர் கிரைம் போலீசாரின் உதவியை நாடியுள்ளனர்.
📰 *41 அரசு மருத்துவமனைக்கு ரூ.116.55 கோடி ஒதுக்கீடு*
தமிழகத்தில், 41 அரசு மருத்துவமனைகளில் உட்கட்டமைப்பை வலுப்படுத்த, 116.55 கோடி ரூபாய் நிதியை, மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
📰 *எழும்பூரில் ரயில் பயணியர் மூவரிடம் ஹவாலா பணம் 32.44 லட்சம் பறிமுதல்*
சென்னை, சர்க்கார் விரைவு ரயிலில் எழும்பூர் வந்தடைந்த மூன்று பயணியரிடம் இருந்து, 33.44 லட்சம் ரூபாயை ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். ஹவாலா பணம் என்பதால், வருமான வரித்துறையிடம் ஒப்படைத்தனர்.
📰 *எனது உடலில் பாய்வது ரத்தமல்ல, குங்குமம்: ஆபரேஷன் சிந்தூர் குறித்து பிரதமர் மோடி ஆவேச பேச்சு*
எனது நரம்புகளில் ரத்தம் ஓடவில்லை, குங்குமம் (சிந்தூர்) ஓடுகிறது’’ என பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி ஆவேசமாக பேசினார்.
📰 *கொடைக்கானலில் முதன்முறையாக ராட்சத காற்றாடி திருவிழா துவக்கம்*
கொடைக்கானலில் முதன்முறையாக ராட்சத காற்றாடி திருவிழா துவங்கியது. இதனை சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசித்தனர்.
📰 *இன்று முதல் தமிழகத்தில் ஆங்காங்கே கன மழைக்கு வாய்ப்பு*
அரபிக் கடல் மற்றும் வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்று சுழற்சி வடக்குப் பகுதியில் இணையும் வாய்ப்புள்ளதால் இன்று முதல் தமிழகத்தில் ஆங்காங்கே கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. மேலும், அந்தமான் பகுதியில் புதிய காற்று சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது.
📰 *வக்பு திருத்த சட்ட வழக்கில் இடைக்கால உத்தரவு ஒத்திவைப்பு*
வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான வழக்கில் 3 நாட்களாக விவாதம் நடந்த நிலையில், இடைக்கால உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்தது.
📰 *பாகிஸ்தானில் இருந்து இந்திய தூதரக அதிகாரி வெளியேற்றம்*
பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரியை வெளியேற்றுவதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.
📰 *பெங்களூர்-ஐதராபாத் இன்று மோதல்*
ஐபிஎல் போட்டியில் இன்று இரவு டெல்லியில் நடைபெறும் 65வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்-சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
பேனாமுள் செய்திகளுக்காக உங்கள்
*பாடி பா.கார்த்திக்*
ஆசிரியர்- பேனாமுள் இதழ்