தேதி: 26/5/2025
🌷 *பேனாமுள் பத்திரிகை செய்திகள்* 🌷
*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520
*குறள்* : *363*
வேண்டாமை யன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
ஆண்டும் அஃதொப்ப தில்.
அவா அற்ற நிலைமை போன்ற சிறந்த செல்வம் இவ்வுலகில் இல்லை, வேறு எங்கும் அதற்க்கு நிகரான ஒன்று இல்லை.
📚 *மே 26*
*பெட்ரோல்விலை*-100.80
*டீசல் விலை*-92.39
*சி.என்.ஜி* - 91.50
📚 *தமிழகத்தின் நலனுக்காகவே டெல்லி சென்றேன்-முதல்வர்*
மாநில உரிமைகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம். எந்த மிரட்டலுக்கும் திமுக அடிபணியாது.தமிழகத்தின் நலனுக்காகவே டெல்லி சென்றேன்.எதிர்க்கட்சிகளை போல அடிமை சாசனம் எழுதிக் கொடுத்ததில்லை.என விமர்சனங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
📚 *கேரளாவில் கனமழை ஐந்து மாவட்டங்களுக்கு 'ரெட் அலெர்ட்*
கேரளாவில் வழக்கமாக, ஜூன் 1ம் தேதி தென்மேற்கு பருவமழை துவங்கும். ஆனால் இம்முறை, ஒரு வாரத்துக்கு முன்பாகவே, நேற்று முன்தினம் பருவமழை துவங்கியது.
மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணுார், காசர்கோடு ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் 'ரெட் அலெர்ட்' விடுத்து உள்ளது.
📚 *உள்கட்டமைப்பு கட்டணம் சதுர அடிக்கு ரூ.70.83*
'ஊராட்சி பகுதிகளில் புதிய மனைப்பிரிவு திட்டங்களை செயல்படுத்துவோர், சாலை, வடிகால், மின்விளக்கு போன்ற உள்கட்டமைப்பு பணிகளுக்காக, சதுர அடிக்கு 70.83 ரூபாய் செலுத்த வேண்டும்' என, ஊரக வளர்ச்சி துறை அறிவித்து உள்ளது.
📚 *அண்ணா பல்கலை மாணவி: பலாத்கார வழக்கில் 28ல் தீர்ப்பு*
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்முறை தொடர்பான வழக்கில், இறுதி வாதங்கள் நிறைவடைந்த நிலையில், வரும் 28ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும்' என, 'போக்சோ' சிறப்பு நீதிமன்ற நீதிபதி அறிவித்துள்ளார்.
📚 *வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் 2 பேர் பலி; மலையேற வனத்துறை தடை*
வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர்களில் 2 பேர் பலியான நிலையில், மலையேற வனத்துறை தற்காலிகத் தடை விதித்துள்ளது.
📚 *தே.ஜ., கூட்டணி முதல்வர்கள் கூட்டம்: ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆலோசனை*
பிரதமர் மோடி தலைமையில், பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களின் முதல்வர்கள் கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது.
விளிம்புநிலை மக்களையும், பின்தங்கியவர்களையும் வளர்ச்சி பாதையில் கொண்டு வருவதற்கான ஒரு அங்கமாக ஜாதிவாரி கணக்கெடுப்பு இருக்கும்,'' என பிரதமர் மோடி நேற்று தெரிவித்தார்.
📚 *உலக பொருளாதார வலிமையில் இந்தியாவுக்கு நான்காவது இடம்*
உலகின் பெரும் பொருளாதார நாடுகள் பட்டியலில், 2014ல், 10வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது நான்காவது இடத்துக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது. நம் நாட்டின் பொருளாதாரம், 4 டிரில்லியன் டாலர், அதாவது, 356 லட்சம் கோடி ரூபாயை தாண்டியது.
அமெரிக்கா, சீனா, ஜெர்மனிக்கு அடுத்த நிலையில் இந்தியா உள்ளது. இதுவரை நான்காவது இடத்தில் இருந்த ஜப்பானை முந்தி இந்த நிலையை எட்டியுள்ளோம்.
📚 *வெற்றியுடன் விடைபெற்ற சென்னை: வீழ்ந்தது குஜராத்*
பிரிமியர் தொடரில் தனது கடைசி லீக் போட்டியில் அசத்திய சென்னை அணி, 83 ரன் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது.
📚 *பஸ் வருகை 'டிஜிட்டல்' பலகை 500 நிறுத்தங்களில் அமைகிறது*
நுண்ணறிவு போக்குவரத்து திட்டத்தின் கீழ், 'சிட்டி பஸ் சிஸ்டம்' என்ற புதிய முறையை செயல்படுத்தி வருகிறது.
பேருந்து வருகை, புறப்படும் நேரம் குறித்து பயணியர் தகவல் பெறும் வகையில், 500 நிறுத்தங்கள் மற்றும் 71 பேருந்து நிலையங்களில், எல்.இ.டி., டிஜிட்டல் பலகை அமைக்கப்பட உள்ளது.
பயணியர், தங்களது மொபைல்போன் செயலி வாயிலாக, பேருந்து வரும் நேரம் குறித்து உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
இந்த திட்டத்தின் சோதனை முயற்சியாக அண்ணாசாலையில், இரண்டு நிறுத்தங்களில் டிஜிட்டல் பலகை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, 500 நிறுத்தங்களிலும், இதற்கான பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன. செப்., மாதம் இறுதிக்குள் 500 நிறுத்தங்களிலும் டிஜிட்டல் பலகைகள் அமைக்கப்படும்.
📚 *நங்கநல்லுார், வேளச்சேரியில் இலவச யோகா வகுப்புகள்*
சத்தியானந்த யோகா மையத்தின் சன்யாசி கிருஷ்ண யோகம் சார்பில், இலவச யோகா வகுப்புகள் பல பகுதிகளில் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக வேளச்சேரி திருவீதி அம்மன் கோவில் தெருவில், மே 30ம் தேதியும், நங்கநல்லுார், லட்சுமி நகர் பிரதான சாலையில் உள்ள சுதர்ஷன் டேரஸ் ஹாலில், மே 31ம் தேதியும் இலவச யோகா வகுப்புகள் துவங்கி, நான்கு வாரங்கள் நடத்தப்படுகின்றன. இதற்கான முன்பதிவு நடக்கிறது.
இப்பயிற்சி வகுப்புகள், வார நாட்களில், தினமும் காலை 5:30 மணி முதல் 7:00 மணி வரை நடத்தப்படுகின்றன. விபரங்களுக்கு, 94450 51015 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
📚 *குழந்தைகள் பாதுகாப்பு மையம் அண்ணா நகரில் புதிதாக திறப்பு*
ஷெனாய் நகரில், சென்னை மாநகராட்சியின் அண்ணா நகர் மண்டல அலுவலகம் செயல்படுகிறது. அத்துடன், மேல் தளத்தில், மத்திய வட்டார துணை கமிஷனர் அலுவலகமும் செயல்படுகிறது.
இங்கு, பணியாளர்கள் மற்றும் அலுவலர்களின், பணி நேரத்தில் அவர்களின் குழந்தைகளை பராமரிக்கும் வகையில், மாடல் க்ரீச்' எனும் நவீன குழந்தை பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டது. இம்மையம் தற்போது திறக்கப்பட்டுள்ளது.
📚 *கால்நடை மருத்துவ படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்*
'பி.வி.எஸ்.சி., -- ஏ.எச்., உள்ளிட்ட கால்நடை மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு, இன்று முதல், ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
இப்படிப்புகளில் சேர விரும்புவோர், இன்று காலை 10:00 மணி முதல், ஜூன் 20 மாலை 5:00 மணி வரை, https://adm.tanuvas.ac.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
📚 *கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இன்றும் சிவப்பு எச்சரிக்கை*
கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இன்றும் (திங்கட்கிழமை) சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
📚 *உதகையில் இன்று சுற்றுலா தளங்கள் மூடல்*
அதி கனமழை காரணமாக நீலகிரியில் இன்றும் (திங்கட்கிழமை) வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்கள், ஊட்டி படகு இல்லம் மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
📚 *மாதவரம் தணிகாசலம் நகரில் மழை வெள்ள பாதிப்பை தடுக்க வடிகால் மறுசீரமைப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்*
மாதவரம் தணிகாசலம் நகரில் ரூ.91.36 கோடியில் மறுசீரமைக்கப்பட்ட மழைநீர் கால்வாயை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்க உள்ளார்.
📚 *ரெட் அலர்ட்’ பாதுகாப்பு நடவடிக்கை சென்னையில் 130 இடங்களில் அதிரடி வாகன சோதனை*
ரெட் அலர்ட் பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக சென்னை முழுவதும் கூடுதல் கமிஷனர்கள் தலைமையில் 130 இடங்களில் வாகன சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் குற்றப்பின்னணியில் உள்ள ரவுடிகள் உட்பட பலர் சிக்கினர்.
📚 *28ல் முடிகிறது அக்னி நட்சத்திரம்*
அக்னி நட்சத்திரம் 28ம் தேதியுடன் முடிவடைகிறது. படிப்படியாக வெப்பம் குறைய வாய்ப்புள்ளது.
📚 *சோதனை அடிப்படையில் ரேஷன் கடைகளில் அமல்*
ரேஷன் கடைகளில் எடை குறைவாக உணவு தானியங்கள் வழங்குவதை தடுப்பதற்காகவே மின்னணு எடை தராசானது, வைபை – புளூடூத் வாயிலாக பிஓஎஸ் கருவியுடன் இணைக்கும் அறிவிப்பை, மண்டல இணை பதிவாளர்களுக்கு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் வழங்கி இருந்தார். இதன் மூலம், ஊழியர் தராசில் வைக்கும் பொருளின் எடை தான், அந்த கருவியில் பதிவாகும்.
தற்போது, முதற்கட்டமாக சென்னையில் சில ரேஷன் கடைகளில் இந்த நடைமுறையை அமல்படுத்தி உள்ளனர்.
இனி பொருட்கள் எடை எந்தளவுக்கு வைக்கப்படுகிறதோ, அந்த அளவுக்கு தான் பில்லும் வரும். எனவே சரியான எடைக்கு பொருட்கள் வைக்க வேண்டிய கட்டாயம் ரேஷன் ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதில் எடை குறைவாகவோ, கூடவோ வைக்க முடியாது. இந்த நடைமுறையை விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ரேஷன் கடைகளில் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
📚 *கேரளாவில் கனமழை தொடர்வதால் 8 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை*
இடுக்கி, கண்ணூர், காசர்கோடு, திருச்சூர், கோழிக்கோடு, வயநாடு, எர்ணாகுளம், பத்தனம்திட்டா மாவட்டங்களில் கல்வி நிறுவனங்கள் விடுமுறை.
📚 *4 மாநிலங்களில் 5 பேரவை தொகுதிகளுக்கு ஜூன் 19 இடைத்தேர்தல்*
4 மாநிலங்களில் காலியாக உள்ள 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஜூன் 23ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
📚 *இன்று மும்பை-பஞ்சாப் மோதல்*
ஐபிஎல் போட்டியின் 69வது லீக் ஆட்டம் இன்று இரவு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடக்கிறது. இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
செய்தி
*பேனாமுள் இதழ்*