27/5/2025 பேனாமுள் பத்திரிகை செய்திகள்
தேதி : 27/5/2025

🌷 *பேனாமுள் பத்திரிகை செய்திகள்* 🌷
*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520

*குறள்* : *364*
தூஉய்மை யென்ப தவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்.

தூயநிலை என்றுக் கூறப்படுவது அவா இல்லா திருத்தலே யாகும், அவா அற்ற அத்தன்மை மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்.

📝  *மே 27*
*பெட்ரோல்விலை*-100.80
  *டீசல் விலை*-92.39
   *சி.என்.ஜி* - 91.50

📝  *பங்கு சந்தை நிலவரம்*
*நிப்டி* : 25001.15
*பேங்க் நிப்டி* : 55572.00
*சென்செக்ஸ்* : 82176.45

📝 *தங்கம் விலை இன்று*
22 Kதங்கம்/ g. : ₹ 8950
24 Kதங்கம்/ g. : ₹ 9760
 வெள்ளி    /g   : ₹ 111.00

📝 *வைகோ, அன்புமணி உள்பட 6 பேர் பதவிக்காலம் முடிகிறது தமிழகத்தில் ஜூன் 19ல் மாநிலங்களவை தேர்தல்*

தமிழத்திற்கான மொத்தம் உள்ள 18 மாநிலங்களவை உறுப்பினர்களில் 6 பேரின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, இந்த காலிப்பணியிடத்தை நிரப்புவதற்காக முன்கூட்டியே, அதாவது ஜூன் 19-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

📝 *பைக் ரேஸில் ஈடுபட்ட 10 பேர் அதிரடி கைது*

போலீசாரின் கட்டுப்பாட்டை மீறி கடந்த இரு தினங்களுக்கு முன்பு நள்ளிரவு கோயம்பேடு மேம்பாலத்தில் உள்ள இரும்பு தடுப்பை அகற்றிவிட்டு ஏராளமான இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டனர்.

அண்ணாநகர் வழியாக ரேஸ் பைக்கில் சென்ற கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த அகமது (24), மதுரைவாயல் சதாம் மெய்தீன் (22), பிராட்வே பகுதியை சேர்ந்த நபின் உஷேன் (24), அம்பத்தூர் பகுதியை சேர்ந்த மகேஷ்ராஜா (22), சென்னை அய்யப்பாக்கம் பகுதியை சேர்ந்த முகமது ஆஷிப் (20), மேலும் இதே பகுதியை சேர்ந்த முகமது (20) உட்பட மொத்தம் 10 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டு அவர்கள் பயன்படுத்திய ரேஸ் பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது.

பேனாமுள் செய்திகள்

📝 *சென்னை வந்த விமானம் மீது லேசர் லைட் அடித்ததால் பரபரப்பு*

துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க வந்த விமானத்தின் மீது லேசர் லைட் அடிக்கப்பட்டது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற சம்பவங்கள் தொடர்சியாக நடந்த நிலையில், தற்போது மீண்டும் விமானத்தின் மீது லேசர் லைட் அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

📝 *பெருநகர சென்னை மாநகராட்சியின் நகர்ப்புற நிதி பத்திரங்கள் தேசிய பங்குச்சந்தையில் பட்டியல்*

பெருநகர சென்னை மாநகராட்சியின் ரூ.200 கோடி மதிப்புள்ள நகர்ப்புற நிதிப் பத்திரங்களை தேசிய பங்குச்சந்தையில் பட்டியலிடும் நிகழ்வினை மணி ஒலித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

📝 *2026 தேர்தலில் திமுக முன்னிலை: ஆங்கில வாரஇதழ் கணிப்பு*

2026 தேர்தலில் தமிழ்நாடு தேர்தல் களத்தில் திமுகவும் அதன் தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலினும் முன்னிலையில் உள்ளனர் என ஆங்கில வார இதழ் தெரிவித்துள்ளது.

📝 *போக்குவரத்து தொழிலாளர்களுடன் வரும் 29ம் தேதி மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை*

ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக 3ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த போக்குவரத்து துறை தரப்பில் சிஐடியு, தொமுச உள்ளிட்ட 80 தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வரும் மே 29ம் தேதி காலை 11 மணியளவில் குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழகத்தின் பயிற்சி மைய வளாகத்தில் இந்த பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

📝 *தரம் குறைந்த உணவால் மூச்சுத்திணறல் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.30,000 இழப்பீடு*

வாடிக்கையாளருக்கு தரம் குறைந்த உணவு விநியோகம் செய்த விவகாரத்தில் சுமோட்டோ மற்றும் உணவகம் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்குமாறு சென்னை நுகர்வோர் குறை தீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பேனாமுள் செய்திகள்

📝 *கலை, அறிவியல் படிப்புக்கு விண்ணப்ப பதிவு இன்றுடன் நிறைவு*

கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு இன்றுடன் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தகவல்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை நிலவரப்படி 2 லட்சத்து 15 ஆயிரத்து 809 பேர் விண்ணப்பபதிவும், அவர்களில் 1 லட்சத்து 74 ஆயிரத்து 289 பேர் விண்ணப்பக் கட்டணத்தையும் செலுத்தியுள்ளனர்.

📝 *கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 5 புதிய தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்*

கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 5 புதிய தொழிற்பிரிவுகளில் பயிற்சிபெறுவதற்கு தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

கல்வித் தகுதி 8-ம் மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி. ஆண்களுக்கு வயது உச்சவரம்பு 40.
பெண்களுக்கு வயது உச்சவரம்பு இல்லை.

விண்ணப்பிப்பதற்கான இணையதள முகவரி www.skilltraining.tn.gov.in. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 13.06.2025. தொடர்புக்கு: 044-22501350

📝 *முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார்*

மேட்டூர் அணை திறப்பு மற்றும் ஒரு லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க, முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் ஜூன் 11ம் தேதி சேலம் வருகிறார்.  சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வரும் ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படுகிறது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தண்ணீரை திறந்து வைக்கிறார்.

📝 *தமிழகத்தில் பல இடங்களில் கடும் மழை நீடிக்கும்*

மகாராஷ்ட்ரா, கர்நாடகா, ஒடிசா பகுதிகளில் நிலை கொண்டுள்ள 3 காற்று சுழற்சிகள் ஒன்றிணைவதால் தமிழகத்தில் 30ம் தேதி வரை அனேக இடங்களில் கடும் மழை பெய்யும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இதில் அந்தமான் கடல் பகுதியில் இன்று உருவாகும் புதிய காற்று சுழற்சியும் இணைவதால் தமிழகத்தில் அனேக இடங்களில் கடும் மழைப்பொழிவு நீடிக்கும்.

பேனாமுள் செய்திகள்

📝 *11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்*

தமிழகத்தில் இந்த கல்வியாண்டு முதல் செயல்படும் வகையில், 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த கல்லூரிகள் மூலம் 9150 மாணவர்கள் பயன்பெறுவார்கள்.

📝 *கோவை, நீலகிரியில் கன மழை நீடிப்பு*

கோவை, நீலகிரி மாவட்டத்தில் கன மழை நீடிக்கிறது. ஊட்டி, குந்தா, குன்னூர் பகுதிகளில் 20 இடங்களில் மண் சரிவு, 43 மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அணைகள் நிரம்புவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.

📝 *சென்னை வியாசர்பாடியில் ஏற்பட்ட தீ விபத்தால், 10க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சேதம்*

வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தால், 10க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சேதமாகியுள்ளது. நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த விதமான காயமும் ஏற்படவில்லை.

📝 *தமிழ்நாட்டில் விரைவில் கூடுதல் முதல்வர் படைப்பகங்கள் திறக்க நடவடிக்கை*

தமிழ்நாட்டில் விரைவில் கூடுதல் முதல்வர் படைப்பகங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஏற்கனவே உள்ளதுபோல வை-பை, லேப்டாப் வசதியுடன் கூடுதல் படைப்பகங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

📝 *குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருளுக்கான தடையை ஓராண்டு நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு*

குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருளுக்கான தடையை ஓராண்டு நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

பேனாமுள் செய்திகள்

📝 *பொதுத்தேர்வு மாணவர்களுக்கு மே 30-ல் விஜய் பாராட்டு விழா*

2025-ம் ஆண்டில் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பில் முதல் 3 மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மே 30-ல் விஜய் பரிசளிக்கிறார். மாமல்லபுரத்தில் உள்ள ஹோட்டலில், மாணவ-மாணவியருக்கு விஜய் பரிசளிக்கிறார்.முதல்கட்டமாக 88 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

📝 *மும்பையை முடக்கிய மழை: ரயில், விமான சேவை முடங்கியது*

தலைநகர் மும்பையில் நேற்று முன்தினம் நள்ளிரவு துவங்கிய கனமழை, விடிய விடிய கொட்டி தீர்த்தது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியது.

சாலையோரங்களில் இருந்த மரங்கள் வேரோடு முறிந்து விழுந்த நிலையில், மின்கம்பங்களும் ஆங்காங்கே சாய்ந்தன.

முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியதால், வாகன போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. மும்பையில் உள்ள குர்லா, சியோன், தாதர், பரேல் ஆகிய பகுதிகள், மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டன.

பேனாமுள் செய்திகள்

📝 *ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைக்காமல் நுாதன திருட்டு திருவான்மியூரில் கைவரிசை காட்டிய 3 பேர் கைது*

திருவான்மியூரில், எஸ்.பி.ஐ., - ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைக்காமல் நுாதன திருட்டில் ஈடுபட்ட மூன்று வடமாநில வாலிபர்களை, போலீசார் கைது செய்தனர்.

📝 *பேரிடர்களை சமாளிக்க வசதியாக சென்னைக்கு பிரத்யேக ஆணையம்*

சென்னையில், வெள்ள பாதிப்பு உள்ளிட்ட பேரிடர்களை திறம்பட எதிர்கொள்ள வசதியாக, சென்னை நகர்ப்புற பேரிடர் மேலாண்மை ஆணையத்தை, தமிழக அரசு உருவாக்கியுள்ளது.

📝 *அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவர்கள் தேர்வு முகாம்*

சென்னை மத்திய கோட்டம், முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில், அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனைக்காக, புதிதாக முகவர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

கல்வி தகுதியாக, குறைந்தது 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயதிற்கு மேல் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிப்போர் விண்ணப்பிக்கலாம்.

பேனாமுள் செய்திகள்

தகுதியுடையோர், முன்று பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன், அசல் மற்றும் இரண்டு நகல், வயதுச் சான்று, முகவரிச் சான்று மற்றும் கல்விச் சான்று ஆகியவற்றை நேர்காணலின் போது கொண்டு வர வேண்டும்.

எண்: 2, சிவஞானம் சாலை, தியாகராய நகர், சென்னை - -17 என்ற முகவரியில் உள்ள சென்னை மத்திய கோட்டம், முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில், வரும் 29ம் தேதி, காலை 10:00 மணிக்கு நடக்கும் நேர்காணலில் பங்கேற்கலாம் என, அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.

📝 *கோயம்பேடு ரவுண்டானாவில் பசுமை பூங்கா பணி இறுதிகட்டம்*

கோயம்பேடு உள்வட்ட சாலை மற்றும் சென்னை - பூந்தமல்லி சாலை சந்திப்பு பகுதியில், 5 ஏக்கர் பரப்பளவில், 8.63 கோடி ரூபாயில், இயற்கை அழகுடன் கூடிய பசுமை பூங்கா அமைக்கும் பணியில், சி.எம்.டி.ஏ., ஈடுபட்டுள்ளது.

இப்பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் பூங்கா பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

📝 *பிரான்ஸ் அதிபர் கன்னத்தில் பளார் விட்ட மனைவி*

ஹனோய்: விமானத்தில் இருந்து இறங்கும் போது பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோனை, அவரது மனைவி தாக்கியதாக வெளியான வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

📝 *கடைசி லீக் போட்டியில் இன்று பெங்களூரு-லக்னோ  மோதல்*

பிளே ஆப் வாய்ப்பை இழந்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், பிளே ஆப் சுற்றில் நுழைந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

செய்தி
*பேனாமுள் இதழ்*
Comments