23/8/2025 அன்று பேனாமுள் செய்திகள்
தேதி
23/8/2025

🌷 *பேனாமுள் பத்திரிகை செய்திகள்* 🌷

*குறள்* : *450*
பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.

நல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் தேடிக்கொள்வதைவிடப் பத்து மடங்கு தீமை உடையதாகும்.

பேனாமுள் Karthick(1): ✍️  *ஆகஸ்ட் 23*
*பெட்ரோல்விலை*-100.80
  *டீசல் விலை*-92.39
   *சி.என்.ஜி* - 91.50

பேனாமுள் Karthick(1): ✍️ *பங்கு சந்தை நிலவரம்*
*நிப்டி* :  24870.10
*பேங்க் நிப்டி* : 55149.40
*சென்செக்ஸ்*: 81306.85
[8/23, 7:36 AM] பேனாமுள் Karthick(1): ✍️ *தங்கம் விலை*
22 Kதங்கம்/ g. : ₹ 9215
24 Kதங்கம்/ g. : ₹ 10049
 வெள்ளி    /g   : ₹ 128.00

பேனாமுள் Karthick(1): ✍️ *தி.மு.க.வை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும்’ - அமித்ஷா*

அமித்ஷா நேற்று நெல்லை வந்தார்.அவர் பா.ஜ.க. பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார்.

தி.மு.க.வை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும்.உதயநிதியை முதல்-அமைச்சராக்குவது தான் தி.மு.க. கூட்டணியின் ஒரே லட்சியம். நான் சொல்கிறேன் ஒருநாளும் உதயநிதி ஸ்டாலின் முதல்-அமைச்சராக முடியாது என அமத்ஷா கூறினார்.

பேனாமுள் Karthick(1): ✍️ *தெருநாய்களை காப்பகங்களில் அடைக்க தடை*

தெரு நாய்களைப் பிடித்து கருத்தடை ஊசி மற்றும் உரிய தடுப்பூசிகள் செலுத்தி மீண்டும் தெருவிலேயே விட வேண்டும். ஆக்ரோஷமான ரேபிஸ் போன்ற நோய்த்தொற்று பாதிக்கப்பட்ட நாய்களை மீண்டும் தெருவில் விடாமல் காப்பகத்தில் தனியாக அடைத்து வைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பேனாமுள் Karthick(1): ✍️ *ரோல் மாடலை இன்ஸ்டாகிராமில் தேடாதீர்கள் : முதல்வர்*

உங்களின் ரோல் மாடலை இன்ஸ்டாகிராமில் தேட வேண்டாம். பொழுதுபோக்கு வாழ்க்கையின் அங்கம் தான்.அதுவே வாழ்க்கை இல்லை. ரீல்ஸ் பார்ப்பது அனைத்தும் உண்மை என நம்ப வேண்டாம் என மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

பேனாமுள் Karthick(1): ✍️ *வாட்ஸ்அப் வழியாக முன்பதிவு செய்து பெறலாம்*

ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி சார்பில் 2025-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (தாள்-1 மற்றும் தாள்-2) இலவச பாடநூல் தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பாடநூல் தொகுப்புகளை வாட்ஸ்அப் வழியாக முன்பதிவு செய்து இலவசமாக பெறலாம் என ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி அறிவித்துள்ளது.

2025-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் (தாள்-1 மற்றும் தாள்-2) தேர்வுகள் 15.11.2025 அன்று தாள்-1 மற்றும் 16.11.2025 அன்று தாள்-2 ம் நடைபெற உள்ளது.

TNTET PAPER-I,II FREE TEXT BOOKS’ என்று டைப் செய்து தங்களது முழு முகவரியுடன் 9176055542 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் அனுப்பி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான நேரடி மற்றும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளில் சேர விரும்புபவர்கள் 9176055576, 9176055578 ஆகிய கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

பேனாமுள் Karthick(1): ✍️ *இயற்கை சந்தை*

சென்னை, நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் இயற்கை சந்தை இன்று 23.08.2025 (சனிக்கிழமை) மற்றும் 24.08.2025 (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்படுகிறது.

இயற்கை சார்ந்த பொருட்களான பாரம்பரிய அரிசிகள், சிறுதானியங்கள் மற்றும் சிறுதானிய மதிப்புக் கூட்டுப் பொருட்கள், காய்கறிகள், கீரைகள், பழ வகைகள், பனை ஓலைப் பொருட்கள் போன்ற இயற்கையுடன் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் பல்சுவை உணவுப் பொருட்களும் கிடைக்கும்.

பேனாமுள் Karthick(1): ✍️ *மூத்த குடிமக்கள் அழைப்பு : போலீசார் உடனுக்குடன் நடவடிக்கை*

சென்னை பெருநகர காவல்துறையின் முதியோர் உதவி மையத்தை(1253) தொடர்பு கொண்டு, உதவிகளுக்காக அழைத்தில்  கடந்த 7 மாதங்களில் 2,242 மூத்த குடிமக்களுக்கு போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி போலீசார் நேரில் சென்று உடனுக்குடன் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பேனாமுள் Karthick(1): ✍️ *இலவச தொழிற் பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்*

சென்னை மாநகராட்சி தொழிற் பயிற்சி நிலையத்தில் 2025-26ம் கல்வியாண்டில் இலவச தொழிற் பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் வரும் 31க்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இந்தப் பயிற்சியில் சேர வயது வரம்பு 14 முதல் 40 வயது ஆகும். பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது.

படிக்கும் போது தகுதியுடைய மாணவர்களுக்கு ஒரு மாதத்திற்கு ரூ.5000/- முதல் ரூ.10,500/- வரை சம்பளத்துடன் கூடிய பயிற்சி (Internship Training) தொழிற்சாலைகள் மூலம் அளிக்கப்படுகிறது.

www.chennaicorporation.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பப் படிவத்தினை இலவசமாக பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை கீழ்காணும் முகவரியில் நேரடியாக சமர்ப்பித்து சேர்க்கையினை பெறலாம்.

பேனாமுள் Karthick(1): ✍️ *ரயில் பயணிகளிடம் திருநங்கைகள் பணம் வசூலிக்க கூடாது: போலீசார் விழிப்புணர்வு*

கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து செங்கல்பட்டு மற்றும் அரக்கோணம் செல்லும் மின்சார ரயில்களில் பயணிகளிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்யும் திருநங்கைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நிகழ்ச்சி ஒன்றை இன்று ஏற்பாடு செய்து போலீசார் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள்.

பேனாமுள் Karthick(1): ✍️ *திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் உற்சவ விழா*

 திருவள்ளூர் வைத்திய வீரராகவ பெருமாள் கோவிலில் பவித்ர உற்சவ விழா வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி தொடங்கி 13ஆம் தேதி வரை 9 நாட்கள் நடைபெறுகிறது.

பேனாமுள் Karthick(1): ✍️ *பிரேமலதா நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்*

 தே மு தி க தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாள் விழா வருகிற 25-ம் தேதி (திங்கட்கிழமை₹ கொண்டாடப்படுகிறது.இதையொட்டி தேமுதிக தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.இதில் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விழாவில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

பேனாமுள் Karthick(1): ✍️ *ஆவடியில் அதிமுக ஆர்ப்பாட்டம்*

ஆவடி மாநகராட்சியை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.

பேனாமுள் Karthick(1): ✍️ *வெளிநாட்டு தொழில்நுட்பத்தில் வடிவமைப்பு*

தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை இடையில் கட்டப்படும் புதிய மேம்பாலம் தொழில்நுட்பம் குறித்த விபரங்களை மாநில நெடுஞ்சாலைத் துறை வெளியிட்டுள்ளது.

பேனாமுள் Karthick(1): ✍️ *ஆவடியில் தாழ்வாக தொங்கிய மின் கம்பியால் விபத்து*

ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் 60 அடி சாலையில் நேற்று பிற்பகலில் குடிநீர் லாரி ஒன்று சென்றது. அங்கு தாழ்வாக தொங்கி கொண்டிருந்த மின் கம்பி குடிநீர் லாரியின் மேல்பக்க மூடியில் சிக்கியது. இதில் சாலையோரத்தில் இருந்த, மூன்று மின் கம்பங்கள் சரிந்து சாலையின் குறுக்கே விழுந்தன.இதனால் அப்பகுதியில் உள்ள 500க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மூன்று மணி நேரத்திற்கும் மேல் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

பேனாமுள் Karthick(1): ✍️ *சென்னையில் விடிய விடிய பெய்த மழை*

நேற்று இரவு சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. எண்ணூர், கோடம்பாக்கம், வடபழநி, வள்ளுவர் கோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியது.

எண்ணூரில் அதிக பட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 14 செ.மீ., மழை பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

பேனாமுள் Karthick(1): ✍️ *செவ்வாப்பேட்டை ரயில்வே மேம்பால பணி துவக்கம்*

செவ்வாப்பேட்டையில் 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த ரயில்வே மேம்பால பணிகள் 8.11 கோடி ரூபாயில் நேற்று துவங்கியது. வரும் ஜூன் மாதம் முதல் பயன்பாட்டிற்கு வரும் என நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பேனாமுள் Karthick(1): ✍️ *ஆதிதிராவிட இளைஞர்களுக்கு 'போர்க் லிப்ட் ஆப்பரேட்டர்' பயிற்சி*

திருவள்ளூர் : ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு தாட்கோ வாயிலாக 'போர்க் லிப்ட் ஆப்பரேட்டர்' பயிற்சி வழங்கப்பட உள்ளது.

பயிற்சியில் சேர, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சேர்ந்தவர்களாகவும் குடும்ப ஆண்டு வருமானம் மூன்று லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.

வயது வரம்பு 18 - 35 வரை இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். வேலைவாய்ப்பிற்கும் வழிவகை செய்யப்படும்.

இப்பயிற்சியை பெற www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஒரு மாதம் பயிற்சி அளிக்கப்படும்.

பேனாமுள் Karthick(1): ✍️ *வீரராகவர் கோவிலில் இன்று காணிக்கை வஸ்திரம் ஏலம்*

காலை 10:30 - 12:30 மணி வரை மற்றும் மாலை 4:30 - 6:00 மணி வரை ஏலம் நடைபெறும். பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த ஏலத்தில் பங்கேற்கலாம் என கோவில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

பேனாமுள் Karthick(1): ✍️ *புதிய டி.ஜி.பி.யார்? 8 பேர் பட்டியல் தயாரிப்பு*

புதிய டி.ஜி.பி.,யை தேர்வு செய்வதற்கான பட்டியல் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

பேனாமுள் Karthick(1): ✍️ *இந்தியாவுக்கான 50 சதவீத வரி: ஆகஸ்ட் 27ல் அமல்*

இந்திய இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் வரி ஆகஸ்ட் 27ல் நிச்சயம் அமலுக்கு வரும் என அமெரிக்க அதிபர் டிரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ தெரிவித்துள்ளார்.

பேனாமுள் Karthick(1): ✍️ *பீகாரில் நடைபெறும் ராகுல் யாத்திரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்*

26, 27-ந்தேதிகளில் பிரியங்காவும், 27-ந்தேதியும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 29-ந்தேதி கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

பேனாமுள் Karthick(1): ✍️ *சென்னையில் இன்று 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட முகாம்*

இன்று (சனிக்கிழமை) ஆலந்தூர் மண்டலம் ஏ.ஜெ.எஸ். நிதி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.

பேனாமுள் Karthick(1): ✍️ *மாங்காடு காவல் எல்லையை பிரித்து மவுலிவாக்கத்தில் காவல்நிலையம் திறப்பு*

ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட மாங்காடு காவல் நிலையத்தின் எல்லைகள் பெரிதாக இருந்ததால் அதை இரண்டாக பிரித்து தற்போது, மவுலிவாக்கம் பகுதியில் உள்ள அரசு கட்டிடத்தில் தற்காலிகமாக புதிய காவல் நிலையம் தொடங்கப்பட்டு பணிகள் யாவும் முடிவடைந்த நிலையில் அதன் திறப்பு விழா நேற்று ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் தலைமையில் நடந்தது.

பேனாமுள் Karthick(1): ✍️ *தூய்மை பணியாளர்களுக்கு சுழற்சி முறையில் வாரத்திற்கு ஒருநாள் விடுப்பு*

தூய்மை பணியாளர்கள் சுழற்சி முறையில் வாரத்திற்கு ஒரு நாள் விடுப்பு எடுக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
[8/23, 7:36 AM] பேனாமுள் Karthick(1): ✍️ *30ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்*

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் எடப்பாடி தலைமையில் 30ம் தேதி சென்னையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி
*பேனாமுள் இதழ்*
Comments