25/8/2025 இன்றைய பேனாமுள் பத்திரிகை செய்திகள்
தேதி
25/8/2025

🌷 *பேனாமுள் பத்திரிகை செய்திகள்* 🌷

*குறள்* : *451*
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்.

பெரியோரின் இயல்பு சிற்றினத்தை அஞ்சி ஒதுக்கும், சிறியோரின் இயல்பு அதையே சுற்றமாக எண்ணித் தழுவிக் கொள்ளும்.

பேனாமுள் Karthick(1): ✍️  *ஆகஸ்ட் 25*
*பெட்ரோல்விலை*-100.80
  *டீசல் விலை*-92.39
   *சி.என்.ஜி* - 91.50

பேனாமுள் Karthick(1): ✍️ *வங்கிகளில் முதல் முறை கடன் பெறுவதற்கு ‘சிபில் ஸ்கோர்’ கட்டாயம் இல்லை - மத்திய அரசு*

முதல் முறை வங்கிக்கடன் பெறுவதற்கு சிபில் ஸ்கோர் கட்டாயம் இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்து உள்ளது.

பேனாமுள் Karthick(1): ✍️ *ராணுவ ஆட்சேர்ப்பு முகாம்*

ஈரோடு இந்திய ராணுவத்தின் அக்னிவீர் ஆட்கள் சேர்ப்பு முகாம் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந் தேதி வரை ஈரோடு வ.உ.சி. பூங்கா விளையாட்டு வளாகத்தில் நடைபெற உள்ளது.

பேனாமுள் Karthick(1): ✍️ *சரவணா ஸ்டோர்ஸில் திருடிய தாய், மகள் சிக்கினர்*

போரூர் சரவணா ஸ்டோர்ஸில், கவரிங் நகைகளை திருடிய தாய் மற்றும் மகளை போலீசார் கைது செய்தனர்.

பேனாமுள் Karthick(1): ✍️ *7வது மாடியில் இருந்து குதித்து காதலி தற்கொலை*

வேப்பேரி : திருமணம் செய்ய காதலன் மறுத்ததால் ஏழாவது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

பேனாமுள் Karthick(1): ✍️ *க்யூ.ஆர்., குறியீடு அறிமுகம் செய்தார் திருவள்ளூர் எம்.பி*

க்யூ.ஆர்., குறியீட்டை ஸ்கேன் செய்து தங்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை தொகுதி மக்கள் தெரிவிக்கும் முறையை திருவள்ளூர் எம்.பி. அறிமுகம் செய்துள்ளார்.

பேனாமுள் Karthick(1): ✍️ *பாட புத்தகத்தில் இஸ்ரோ வரலாறு*

என்.சி.இ.ஆர்.டி. பாடப்புத்தகத்தில் இஸ்ரோ நிறுவனத்தின் வரலாறு சேர்க்கப்பட்டுள்ளது.

பேனாமுள் Karthick(1): ✍️ *ஹைட்ரோ கார்பன் ஆய்வுக்கான அனுமதி வாபஸ்*

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் இருப்பு குறித்து ஆய்வு செய்ய ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு தமிழக அரசு அனுமதி அளித்த நிலையில் அனுமதியை திரும்ப பெற உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பேனாமுள் Karthick(1): ✍️ *பாம்பன் பழைய ரயில் பாலம் அகற்ற டெண்டர்: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு*

பாம்பன் பழைய ரயில் பாலத்தை அகற்ற, இந்திய ரயில்வே நிர்வாகம் டெண்டர் விட்டுள்ளது.

பேனாமுள் Karthick(1): ✍️ *தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக அனிஷ் தயாள் சிங் நியமனம்*

மத்திய ரிசர்வ் போலீஸ் படையின்(சிஆர்பிஎப்) முன்னாள் இயக்குநர் ஜெனரல் அனிஷ் தயாள் சிங் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பேனாமுள் Karthick(1): ✍️ *வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக சோதனை*

உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்பின் முதல் ஏவுதல் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) தெரிவித்துள்ளது.

பேனாமுள் Karthick(1): ✍️ *ககன்யான் விண்கலத்தின் பாராசூட் அமைப்பு சோதனை வெற்றி*

விண்வெளி பயணத்தின்போது விண்வெளி வீரர்களுடைய பாதுகாப்புக்கு மிகவும் முக்கியமான பாராசூட் அமைப்பின் செயல்பாட்டு திறனை சோதனை செய்ய நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த ஏர் டிராப் டெஸ்ட் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

பேனாமுள் Karthick(1): ✍️ *திருவேற்காட்டில் வியாபாரியை நாய் கடித்து குதறியது*

 இறைச்சி கடை வைத்து நடத்தும் திருவேற்காடு ஈஸ்வர் நகர் பகுதியை சேர்ந்த வடிவேலு என்பவரை தெரு நாய் ஒன்று விரட்டி சென்று காலில் கடித்து குதறியது.

பேனாமுள் Karthick(1): ✍️ *தெரு நாய்களுக்கு தடுப்பூசி மாநகராட்சி நடவடிக்கை*

 முதல் கட்டமாக மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை மற்றும் ஆலந்தூர் மண்டலங்களில் கடந்த 16 நாட்களில் மொத்தம் 17134 தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

பேனாமுள் Karthick(1): ✍️ *5ஆம் தேதி மிலாது நபி விழா அரசு காஜி அறிவிப்பு* 

 இஸ்லாமிய மாதமான ரபி உல் அவ்வல் மாத பிறை நேற்று தமிழகத்தில் தெரிந்தது. எனவே மிலாது நபி விழா வருகிற 5ஆம்  தேதி வெள்ளிக்கிழமை கொண்டாடப்படும் என்று தமிழக அரசு தலைமை காஜி முகமது அக்பர் தெரிவித்துள்ளார்.

பேனாமுள் Karthick(1): ✍️ *செப்டம்பர் 4 ல் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நீச்சல் போட்டி*

 திருவள்ளூர் மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை காண விளையாட்டு போட்டியில் செப்டம்பர் 4ஆம் தேதி பள்ளி மாணவ மாணவிகளுக்கான நீச்சல் போட்டி நடைபெற உள்ளதாக  ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.

பேனாமுள் Karthick(1): ✍️ *கட்டி வளர்ந்தால் பரிசோதனை தேவை மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் :மருத்துவர்கள்*

கொழுப்பு கட்டி வடிவில் புற்றுநோய் ஆபத்து உடலில் கட்டி வளர்ந்தால் பரிசோதனை தேவை மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

செய்தி
*பாடி பா.கார்த்திக்*
ஆசிரியர்- பேனாமுள் இதழ்
Comments