26/8/2025 இன்றைய பேனாமுள் பத்திரிகை செய்திகள்
பதிவு
26/8/2025

🌷 *பேனாமுள் பத்திரிகை செய்திகள்* 🌷

*குறள்* : *452*
நிலத்தியல்பான் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்
கினத்தியல்ப தாகும் அறிவு.

சேர்ந்த நிலத்தின் இயல்பால் அந்த நீர் வேறுபட்டு அந் நிலத்தின் தன்மையுடையதாகும், அதுபோல் மக்களுடைய அறிவு இனத்தின் இயல்பினை உடையதாகும்.

பேனாமுள் Karthick(1): 
✍️  *ஆகஸ்ட் 26*
*பெட்ரோல்விலை*-100.80
  *டீசல் விலை*-92.39
   *சி.என்.ஜி* - 91.50

பேனாமுள் Karthick(1): 
✍️ *பங்கு சந்தை நிலவரம்*
*நிப்டி* :  24967.75
*பேங்க் நிப்டி* : 55139.30
*சென்செக்ஸ்*: 81635.91

பேனாமுள் Karthick(1): 
✍️ *தங்கம் விலை*
22 Kதங்கம்/ g. : ₹ 9305
24 Kதங்கம்/ g. : ₹ 10148
 வெள்ளி    /g   : ₹ 131.00

பேனாமுள் Karthick(1): ✍️ *சென்னை திரு.வி.க. நகர் புதிய பேருந்து நிலையம் திறப்பு*

நேற்று சென்னை திரு.வி.க. நகர் புதிய பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

பேனாமுள் Karthick(1): 
✍️ *கொளத்தூரில் சிறு விளையாட்டு அரங்கம் திறப்பு*

நேற்று ரூ.7.5 கோடியில் கட்டப்பட்ட சிறு விளையாட்டு அரங்கத்தை திறந்து வைத்தார்.
பெண்களுக்கான நவீன உடற்பயிற்சி கூடத்தையும் திறந்து வைத்தார். ரூ.12 லட்சத்தில் கட்டப்பட்ட ஸ்மார்ட் வாட்டர் ஏடிஎம்-ஐ முதல்வர் திறந்து வைத்தார்.

பேனாமுள் Karthick(1): 
✍️ *படப்பிடிப்புத்தளத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்*

நேற்று சென்னை தரமணியில் உள்ள தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன வளாகத்தில் 5.10 கோடி ரூபாய் செலவில் முழு அளவில் புனரமைக்கப்பட்ட குளிர்சாதன வசதியுடன் கூடிய படப்பிடிப்புத்தளத்தை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

பேனாமுள் Karthick(1): 
✍️ *புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் திறப்பு*

ரூ.173.86 கோடி செலவில் 19 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் 3 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையக் கட்டடங்கள் தொழிலாளர் ஆணையரகம் ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலகக் கட்டடம் மற்றும் சிங்காரவேலர் ஓய்வு இல்லத்தை நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

பேனாமுள் Karthick(1): 
✍️ *கல்விசார் கட்டடங்கள் திறப்பு*

ரூ.51.04 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடங்களை நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

பேனாமுள் Karthick(1): 
✍️ *இதழியல் கல்வி நிறுவனத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்*

சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ் இணையக் கல்விக்கழகம் எதிரில் அமைந்துள்ள சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தைத் நேற்று தொடங்கி வைத்தார்.

பேனாமுள் Karthick(1):
 ✍️ *சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புகள் திறப்பு*

ராஜா தோட்டம் திட்டப்பகுதியில் 27.71 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 162 அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்வர் நேற்று திறந்து வைத்தார்.

பேனாமுள் Karthick(1): 
✍️ *சென்னை உயிரியல் பல்வகை குறியீட்டை வெளியிட்டார் முதலமைச்சர்*

நேற்று (25.8.2025) தலைமைச் செயலகத்தில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் தமிழ்நாட்டின் உயிரியல் பல்வகை பாதுகாப்பு முயற்சிகளை வலுப்படுத்தும் வகையில் சென்னை மாநகரின் உயிரியல் பல்வகை குறியீட்டை வெளியிட்டார்.

பேனாமுள் Karthick(1): 
✍️ *சிறப்பு பேருந்துகள் இயக்கம்*

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு (இன்று)ஆக. 26 முதல் ஆக. 31ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பேனாமுள் Karthick(1): 
✍️ *ஞாயிறு அட்டவணைப்படி புறநகர் ரயில்கள் இயங்கும்*

விநாயகர் சதுர்த்தி அன்று ஞாயிறு அட்டவணைப்படி புறநகர் ரயில்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பேனாமுள் Karthick(1): 
✍️ *ஆக.27, 28ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு*

தமிழ்நாட்டில் ஆகஸ்ட்.27, 28ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

பேனாமுள் Karthick(1): 
✍️ *10 ஆண்டு சிறை*

108 ஆம்புலன்ஸ் மற்றும் பணியாளர்களை தாக்கினால் வன்முறை தடுப்பு மற்றும் உடைமைகள் சேதார தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.  தாக்கும் நபர்கள் மீது மருத்துவ பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

பேனாமுள் Karthick(1): 
✍️ *தேசிய ஆசிரியர் விருதுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 ஆசிரியர்கள் தேர்வு*

சென்னை மயிலாப்பூர் தனியார் பள்ளி ஆசிரியை ரேவதி, திருப்பூர் அரசு பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் மொத்தமாக 45 ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பேனாமுள் Karthick(1): 
✍️ *மந்தைவெளியில் புறப்படும் பேருந்துகள் - இடமாற்றம்*

சென்னை மந்தைவெளி பேருந்து நிலையத்தில் புறப்படும் பேருந்துகள் ஆக.27 முதல் தற்காலிகமாக இடமாற்றம் செய்யபப்ட்டுள்ளது.

பேனாமுள் Karthick(1): 
✍️ *மின்சாரத்துறை ஆணை*

சென்னையில் மின்கம்பி செல்லும் வழித்தடங்களை ஆய்வு செய்ய மின்சாரத்துறை ஆணையிட்டுள்ளது. மின் கம்பி பூமிக்கு வெளியே தெரியாமல் இருக்குமாறு பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பூமிக்கு வெளியே மின்கம்பிகள் இருந்தால் அவற்றை 4 நாளில் சரி செய்து அறிக்கை தர ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பேனாமுள் Karthick(1): 
✍️ *வண்டை உயிருடன் விழுங்கிய குழந்தை உயிரிழப்பு*

திருவள்ளூர் தாமரைப்பக்கத்தில் வண்டை பிடித்து உயிருடன் விழுங்கிய குழந்தை உயிரிழந்தது.

பேனாமுள் Karthick(1):
 ✍️ *வாழை இலை விலை 4 மடங்கு உயர்வு*

விநாயகர் சதுர்த்தி தொடர் முகூர்த்தத்தால் வாழை இலை விலை 4 மடங்கு வரை உயர்ந்துள்ளது. 200 இலைகள் கொண்ட கட்டு ரூ.1,500க்கு விற்கப்படுகிறது.

பேனாமுள் Karthick(1): 
✍️ *மாநாட்டுக்கு வர சீமான் அழைப்பு*

ஆகஸ்ட் 30ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே அருங்குளம் கூட்டுச்சாலை மனிதநேய பூங்கா வெற்றி தோட்டத்தில் மாநாடு நடக்கிறது.

மானத்தமிழர்கள் எல்லாம் மறக்காமல் கூடுவோம் என சீமான் கூறியுள்ளார்.

பேனாமுள் Karthick(1):
 ✍️ *காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர்*

2,430 நகர்ப்புற அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கப்படுகிறது. இதற்கான விழா சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பர் தொடக்கப்பள்ளியில் காலை 8.30 மணியளவில் நடக்கிறது.

பேனாமுள் Karthick(1):
 ✍️ *ஜெர்மனி செல்கிறார் முதல்வர்*

தமிழகத்திற்கு முதலீட்டை ஈர்க்கும் நோக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 30-ந் தேதி சென்னை விமான நிலையத்தில் இருந்து ஜெர்மனி புறப்படுகிறார்

செப்டம்பர் 8-ந் தேதி அதிகாலை சென்னை விமான நிலையத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிறார்.

பேனாமுள் Karthick(1): 
✍️ *கணபதி தர்ஷன் கண்காட்சி*

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கணபதி தர்ஷன் எனும் விற்பனை கண்காட்சி இன்று காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை பூம்புகார் விற்பனை நிலையம் அண்ணாசாலையில் நடைபெறுகிறது.

பேனாமுள் Karthick(1): 
✍️ *சென்னையில் புதிய 5 நட்சத்திர ஹோட்டல்*

சென்னையில் உள்ள பழைய மகாபலிபுரம் சாலையில் 7 ஏக்கர் பரப்பளவில் 5 நட்சத்திர ஹோட்டல் மற்றும் உயர்தர அலுவலக வளாகத்தை பிரிகேட் குழுமம் கட்டுகிறது.

பேனாமுள் Karthick(1):
 ✍️ *செல்லப்பிராணிகள் விற்பனை செய்யும் நிறுவனங்கள் பிராணிகள் நலவாரியத்தில் பதிவு செய்ய வேண்டும்*

செல்லப்பிராணிகள் விற்பனை செய்யும் நிறுவனங்கள் தமிழ்நாடு பிராணிகள் நலவாரியத்தில் செப்.30ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

பேனாமுள் Karthick(1): 
✍️ *விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பு*

அரசுத் துறைகளில் விளையாட்டு வீரர்களுக்கு 3% இடஒதுக்கீட்டின் கீழ், வேலைவாய்ப்புக்கு செப்டம்பர் 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

விண்ணப்பங்களை www.sdat.tn.gov.in எனும் இணையதள முகவரியில் காலை 10 மணி முதல் வரும் செப்டம்பர் 24ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் .

பேனாமுள் Karthick(1):
 ✍️ *6 தொழில் பிரிவுகளுடன் புதிய அரசு தொழில் பயிற்சி நிலையம் தொடக்கம்*

 திருவள்ளூர் அருகே புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை பயன்பாட்டிற்கு 
ஆட்சியர் மு.பிரதாப் சட்டப்பேரவை உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.மற்றும் மாணவர்களுக்கான சேர்க்கை ஆணைகளையும் வழங்கினர்.

பேனாமுள் Karthick(1): 
✍️ *சென்னையில் 1500 விநாயகர் சிலைகளுக்கு அனுமதி*

 சென்னையில் வழிபாட்டுக்காக 1500  விநாயகர் சிலைகளை வைக்க போலீசார் அனுமதி வழங்கினர்.16ஆம் போலீஸ் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

பேனாமுள் Karthick(1):
 ✍️ *திருவள்ளூரில் டேட்டா சென்டர் பார்க்*

 வங்கிகள் காப்பீட்டு நிறுவனங்கள் பொழுதுபோக்கு துறையை சேர்ந்த நிறுவனங்கள் மருத்துவமனைகள் உள்ளிட்டவைகளின் தகவல் தொகுப்புகளை டேட்டா சென்ற நிறுவனங்கள் வாயிலாக பாதுகாக்கப்படுகின்றன.
இத்தகைய தரவு மையத்தை திருவள்ளூர் மாவட்டத்தில் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

பேனாமுள் Karthick(1): 
✍️ *ஆவடியில் ரவுடிகள் வேட்டை 6 நாட்களில் 153 பேர் கைது*

 ஆவடி போலீஸ் கமிஷனகரத்தில் கடந்த 18ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை குற்றத் தடுப்பு நடவடிக்கையாக ரவுடிகள் வேட்டை நடந்தது. இதில் 153 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
விசாரணைக்கு பின் 112 நபர்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். 

 ஆவடி ஆணையகர பகுதியில் ரவுடிகளுக்கு எதிரான கைது நடவடிக்கைகள் தொடரும் என காவல் ஆணையர் 
கி.சங்கர் அவர்கள் தெரிவித்தார்.

செய்தி
*பாடி பா.கார்த்திக்*
ஆசிரியர்- பேனாமுள் இதழ்
Comments