தேதி
28/8/2025
🌷 *பேனாமுள் பத்திரிகை செய்திகள்* 🌷
*குறள்* : *454*
மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்
கினத்துள தாகும் அறிவு.
ஒருவனுக்கு சிறப்பறிவு மனத்தில் உள்ளது போலக் காட்டி (உண்மையாக நோக்கும் போது) அவன் சேர்ந்த இனத்தில் உள்ளதாகும்.
பேனாமுள் Karthick(1):
✍️ *ஆகஸ்ட் 28*
*பெட்ரோல்விலை*-100.80
*டீசல் விலை*-92.39
*சி.என்.ஜி* - 91.50
பேனாமுள் Karthick(1):
✍️ *தங்கம் விலை*
22 Kதங்கம்/ g. : ₹ 9390
24 Kதங்கம்/ g. : ₹ 10240
வெள்ளி /g : ₹ 130.00
பேனாமுள் Karthick(1):
✍️ *தமிழகத்தில் 6 கடற்கரைக்கு நீலக்கொடி சான்றிதழ்*
திருவான்மியூர், பாலவாக்கம், உத்தண்டி, குலசேகரப்பட்டினம், கீழ்புதுப்பட்டு மற்றும் சாமியார் பேட்டை ஆகிய 6 கடற்கரைக்கு நீலக்கொடி சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.
பேனாமுள் Karthick(1):
✍️ *மதுரை தவெக மாநாட்டில் தூக்கி வீசியதாக தொண்டர் புகார்*
மதுரை தவெக மாநாட்டில் தன்னை தூக்கி வீசியதாக தொண்டர் அளித்த புகாரின்பேரில் அக்கட்சியின் தலைவர் விஜய் மற்றும் பாதுகாப்பு குண்டர்கள் 10 பேர் மீதும் 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
பேனாமுள் Karthick(1):
✍️ *மாணவர்களின் தொழில் திறனை மேம்படுத்தும் புதிய முயற்சி*
அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் தன்னாட்சி இணைப்புக் கல்லூரிகளில் இளங்கலைப் பட்டப்படிப்பிற்கான புதிய பாடத்திட்டங்கள் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
பேனாமுள் Karthick(1):
✍️ *செப்டம்பர் 4ம் தேதி வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்*
வேளாங்கண்ணிக்கு காட்பாடி, திருவண்ணாமலை வழியாக செப்டம்பர் 4ம் தேதி முதல் இருவழியிலும் ஒரு சேவையை வழங்க தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
பேனாமுள் Karthick(1):
✍️ *14 உயர்நீதிமன்ற நீதிபதிகள் இடமாற்றம்*
நாடு முழுவதும் பல்வேறு உயர் நீதிமன்றங்களைச் சேர்ந்த 14 நீதிபதிகளை ஒரே நேரத்தில் இடமாற்றம் செய்து உச்ச நீதிமன்ற கொலீஜியம் அதிரடியாக பரிந்துரை செய்துள்ளது.
பேனாமுள் Karthick(1):
✍️ '*கீ' கொடுத்தால் ஆடும் பொம்மையாக தேர்தல் கமிஷன்*
தேர்தல் கமிஷனை 'கீ' கொடுத்தால் ஆடும் பொம்மையாக மாற்றி விட்டனர். மொத்தமாக 65 லட்சம் பேரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியது ஜனநாயகப் படுகொலை என பீகாரில் ராகுல் நடைபயணத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
பேனாமுள் Karthick(1):
✍️ *மாணவர்களிடம் எதிர்மறையாக பேச ஆசிரியர்களுக்கு தடை*
மாணவர்களிடம் எதிர்மறையாக பேசக்கூடாது என ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
பேனாமுள் Karthick(1):
✍️ *திருவேற்காடு அடுத்த வேலப்பன்சாவடி கையலான் கடையில் தீ விபத்து*
திருவேற்காடு அடுத்த வேலப்பன்சாவடி பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு கையலான் கடையில் நேற்று காலை கடை அருகே கொட்டப்பட்டு இருந்த குப்பை கழிவுகள் திடீரென தீப்பிடித்து எரிந்தன. சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி காயலான் கடையில் தீ விபத்து ஏற்பட்டது.
இதனால் நெடுஞ்சாலை முழுதும் கரும்புகை சூழ்ந்து வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
பேனாமுள் Karthick(1):
✍️ '*ஹார்மோன்' சிகிச்சை*
திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் உயரம் குறைவான 50 குழந்தைகளுக்கு ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான 'குரோத் ஹார்மோன்' சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பேனாமுள் Karthick(1):
✍️ *சென்னையில் சர்வதேச தமிழ் பொறியாளர்கள் மன்ற மாநாடு*
செப்டம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் உலகலாவிய தமிழ் பொறியாளர்கள் மாநாடு சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் நடத்தப்படுகிறது. மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள்.
பேனாமுள் Karthick(1):
✍️ *தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக வெங்கட்ராமன் நியமனம்*
தமிழ்நாடு காவல்துறை டிஜிபியாக உள்ள சங்கர் ஜிவால் வரும் 31ம் தேதி ஓய்வு பெறும் நிலையில், புதிய டிஜிபியாக வெங்கட்ராமன் நியமனம் செய்யப்பட உள்ளார். அதற்கான அறிவிப்பு நாளை வெளியாகும் என தெரிகிறது.
பேனாமுள் Karthick(1):
✍️ *உச்சநீதிமன்றத்துக்கு மேலும் 2 புதிய நீதிபதிகள் நியமனம்*
மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அலோக் அராதே, பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விபூல் மனுபாய் பஞ்சோலி ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
பேனாமுள் Karthick(1):
✍️ *லிப்ட் வசதியுடன் பிரசார வேன்*
விஜய் பிரசாரம் செய்வதற்காக நவீன வசதிகளுடன் கூடிய பிரசார வேன் பஞ்சாப் மாநிலத்தில் தயார் செய்யப்பட்டுள்ளது. ஓய்வெடுக்கும் வசதி நிர்வாகிகளுடன் கலந்துரையாடும் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் வேனில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வேனுக்குள் லிப்ட் வசதியும் உள்ளது.
பிரசாரத்தின் போது மக்கள் மத்தியில் பேசவும் பொது மக்களை சந்திக்கவும் இந்த லிப்ட் வழியாக வேனின் மேல் பகுதிக்கு வரும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
பேனாமுள் Karthick(1):
✍️ *செப். 9ல் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 17 சீரிஸ் அறிமுகம்*
செப்டம்பர் 9-ம் தேதி ஆப்பிள் நிறுவனத்தின் பிரத்யேக நிகழ்வு நடைபெறும் என அந்நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நிகழ்வில் ஐபோன் 17 சீரிஸ் போன்கள் உட்பட பல்வேறு டிஜிட்டல் தொழில்நுட்ப சாதனங்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பேனாமுள் Karthick(1):
✍️ *செப்டம்பர் 1 முதல் ரூ.10க்கு பாதாம் மிகஸ்*
தமிழகம் முழுவதும் செப்டம்பர் 1 முதல் 14 கிராம் எடையுள்ள ஆவின் பாதாம் மிக்ஸ் பவுடர் விற்பனைக்கு வர உள்ளது என ஆவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பேனாமுள் Karthick(1):
✍️ *கிண்டியில் நாளை வேலை வாய்ப்பு முகாம்*
கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை தனியார் துறை சார்ந்த வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. பங்கேற்க விரும்புவோர் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்து பங்கேற்கலாம்.
பேனாமுள் Karthick(1):
✍️ *M T C தொழிற்பயிற்சி சிறப்பு முகாம்*
மாநகர போக்குவரத்து கழகத்தில் எலக்ட்ரீசியன் ஃபிட்டர், வெல்டர் ஆகிய பிரிவுகளில்
ஓராண்டு I T I தொழில் பழகுநர் பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் சேர்வதற்கான முகாம் குரோம்பேட்டையில் உள்ள மாநகரப் போக்குவரத்து கழக பயிற்சி பள்ளியில் வரும் 10 ஆம் தேதி காலை 10 மணி அளவில் நடக்கிறது.
பேனாமுள் Karthick(1):
✍️ *ஆவடி போலிஸ் கமிஷனகரத்தில் 88 போலிஸார் இடமாற்றம்*
ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில் ஒரே காவல் நிலையத்தில் மூன்று ஆண்டுகளாக பணியாற்றி வந்த சிறப்பு உதவி ஆய்வாளர்கள் முதல் நிலை காவலர் இரண்டாம் நிலை காவலர் என 88 போலீசாரை பணி இடமாற்றம் செய்து கூடுதல் கமிஷனர் பவானீஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.
இதில் திருமுல்லைவாயல் போலிஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த 17 போலீசார் புதிதாக துவக்கப்பட்ட அயப்பாக்கம் காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
செய்தி