தேதி
29/8/2025
🌷 *பேனாமுள் பத்திரிகை செய்திகள்* 🌷
*குறள்* : *455*
மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்.
மனத்தின் தூய்மை செய்யும் செயலின் தூய்மை ஆகிய இவ்விரண்டும் சேர்ந்த இனத்தின் தூய்மையைப் பொறுத்தே ஏற்ப்படும்.
பேனாமுள் Karthick(1):
✍️ *ஆகஸ்ட் 29*
*பெட்ரோல்விலை*-100.80
*டீசல் விலை*-92.39
*சி.என்.ஜி* - 91.50
பேனாமுள் Karthick(1):
✍️ *பங்கு சந்தை நிலவரம்*
*நிப்டி* : 24500.90
*பேங்க் நிப்டி* : 53820.35
*சென்செக்ஸ்*: 80080.57
பேனாமுள் Karthick(1):
✍️ *தங்கம் விலை*
22 Kதங்கம்/ g. : ₹ 9405
24 Kதங்கம்/ g. : ₹ 10257
வெள்ளி /g : ₹ 130.00
பேனாமுள் Karthick(1):
✍️ *சென்னை ஐ.ஐ.டி.யில் படிக்க 28 அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு*
சென்னை ஐ.ஐ. டி.,யில் 'பி.எஸ். டேட்டா சயின்ஸ் படிப்பில் சேர 28 மாணவ மாணவியர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பேனாமுள் Karthick(1):
✍️ *பிசியோதரபி படித்தவரின் கிளினிக்கிற்க்கு சீல் வைப்பு*
ஆவடி, பட்டாபிராமில் பிசியோதெரபி படித்துவிட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாக அலோபதி மருத்துவம் பார்த்து வந்த ஞானம்பாள் என்பவரின் கிளினிக்கிற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
பேனாமுள் Karthick(1):
✍️ *போலி ஆவணங்கள் தயாரித்து அரசு நிலத்தை விற்றவர் கைது*
ஆவடி, காட்டுப்பாக்கத்தில் அரசுக்கு சொந்தமான நிலத்தை போலியான ஆவணங்கள் வாயிலாக விற்று ஏமாற்றிய முதியவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
பேனாமுள் Karthick(1):
✍️ *479 கி.மீ. சாலைகள் மாநகராட்சி பகுதியில் சீரமைப்பு*
சென்னை மாநகராட்சியில் 2,995 சாலைகளில் 479.41 கி.மீ., நீள சாலை சீரமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
பேனாமுள் Karthick(1):
✍️ *அரசு மருத்துவரின் கார் மோதி மொப்பட்டில் சென்ற தம்பதி பலி*
ஆவடியில் அரசு மருத்துவர் ஓட்டி சென்ற கார் மோதியதில் மொப்பட்டில் சென்ற தம்பதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஆவடி வசந்தம் நகர் அருகே சென்றபோது பின்னால் வேகமாக வந்த மாருதி சுசூகி பலேனோ கார் மொப்பட்டில் மோதியதில் அறிவரசன் சரண்யா தம்பதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் நின்றிருந்த சரக்கு வாகனத்தில் மோதி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தம்பதிக்கு 5 வயதில் இரட்டை குழந்தைகள் உள்ளனர்.
விசாரணையில் காரை ஓட்டி வந்தது ஆவடி பல்லவன் நகரைச் சேர்ந்த அரசு மருத்துவர் பாரி மார்க்ஸ்
பூந்தமல்லி அடுத்த சோராஞ்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் இவர் ஆவடி நோக்கி கார் ஓட்டி சென்றபோது திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்தில் சிக்கியது தெரிய வந்தது.
பேனாமுள் Karthick(1):
✍️ *சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி தடத்தில் 2 மின் ரயில்கள் ரத்து*
பொன்னேரி - கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளன. இதனால் சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி இடையே இயக்கப்படும் இரவு 11:20 சேவை கும்மிடிப்பூண்டி - சென்ட்ரல் இடையே இயக்கப்படும் இரவு 9:25 மணி ரயில் சேவை இன்று முதல் 31ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
பேனாமுள் Karthick(1):
✍️ *கருக்கலைப்பால் மாணவி பலி நர்ஸ் உட்பட இருவர் கைது*
திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது நர்சிங் கல்லுாரி மாணவியின் ஐந்து மாத கர்ப்பத்தை கட்டாயமாக கலைத்ததால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக நர்ஸ் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.
பேனாமுள் Karthick(1):
✍️ *திருவள்ளூரில் தெரு நாய் கடித்து 6 வயது சிறுவன் பலத்த காயம்*
திருவள்ளூரில் கடைக்கு சென்ற 6 வயது சிறுவனை தெரு நாய் கடித்ததில் பலத்த காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பேனாமுள் Karthick(1):
✍️ *ஜப்பான் பயணம் பிரதமர் மோடி*
2 நாட்கள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி நேற்று இரவு ஜப்பான் புறப்பட்டு சென்றார்.
15வது இந்தியா - ஜப்பான் வருடாந்த உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார்.
ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி 31ம் தேதி சீனா செல்கிறார்.
அங்கு ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
பேனாமுள் Karthick(1):
✍️ *இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டம் விண்ணப்பிக்க அழைப்பு*
சென்னையில் வசிக்கும் ஓட்டுநர் உரிமம் பெற்ற 20 முதல் 45 வயதிற்கு உட்பட்ட பெண்கள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சென்னை மாவட்ட சமூக நல அலுவலர் 8 வது தளம் சிங்காரவேலர் மாளிகை சென்னை 60001 என்ற முகவரிக்கு வரும் 15-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
பேனாமுள் Karthick(1):
✍️ *போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் இன்று ஓய்வு பெறுகிறார்*
தமிழகச் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பணியாற்றும் சங்கர் ஜிவால் அவர்கள் தமிழக போலீஸ் வீட்டு வசதி துறை டிஜிபி சைலேஷ்குமார் யாதவ் இருவரும் இன்று வெள்ளிக்கிழமை பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார்கள்.அவர்கள் இருவருக்கும் இன்று மாலை 4 மணியளவில் எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் வழியனுப்பு விழா நடைபெற உள்ளது.
பேனாமுள் Karthick(1):
✍️ *24 மணி நேரமும் கடைகள் திறந்திருக்க அனுமதி : அரசாணை குறித்து போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவு*
கடைகள் வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை குறித்து அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றும் கடைகள் வணிக நிறுவனங்கள் வாரத்தில் 7 நாட்களும் 24 மணி நேரமும் இயங்க அனுமதி அளித்து கடந்த 2019 ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
பேனாமுள் Karthick(1):
✍️ *பெண்ணின் முகத்தில் மிளகாய் பொடி தூவி சங்கிலி பறிக்க முயற்சி*
சென்னை முகப்பேர் டிரினிட்டி சர்ச் தெருவில் சிவானி என்பவர் வீட்டில் கருப்பு நிற முக கவசம் அணிந்த நிலையில் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வீட்டு வேலை ஏதாவது இருக்குமா எனக் கேட்டுக் கொண்டே தான் மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடியை சிவானி முகத்தில் தூவி அவரது கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பெண் பறிக்க முயன்றார். அதில் சிவானி கூச்சலிட்டதில் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பெண்ணை மடக்கி பிடித்து J J நகர் போலீசில் ஒப்படைத்தனர்.
பேனாமுள் Karthick(1):
✍️ *விஷால் சாய் தன்ஷிகா திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் இன்று நடக்கிறது*
சென்னை அண்ணா நகரில் உள்ள விஷால் இல்லத்தில் விஷால் சாய் தன்ஷிகா திருமண நிச்சயதார்த்தம் இன்று வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
பேனாமுள் Karthick(1):
✍️ *7 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் தமிழக அரசு உத்தரவு*
தமிழகத்தில் 7 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பேனாமுள் Karthick(1):
✍️ *கங்காதீஸ்வரர் கோவில் அன்னதான கூடம் அடிக்கல் நாட்டினார் அமைச்சர்*
சென்னை புரசைவாக்கம் கங்காதேஸ்வரர் கோவிலில் ரூ.93 லட்சம் மதிப்பில் கட்டப்படவுள்ள புதிய அன்னதான கூடத்தின் கட்டுமான பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு நேற்று தொடங்கி வைத்தார்.
பேனாமுள் Karthick(1):
✍️ *டாக்டர் அகர்வால் ஹெல்த் கேர் மற்றும் கண் மருத்துவமனை ஒன்றிணைப்பு*
டாக்டர் அகர்வால் ஹெல்த்கேர் மற்றும் டாக்டர். அகர்வால் கண் மருத்துவமனை ஒன்றிணைக்கப் பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆதில் அகர்வால் தெரிவித்துள்ளார்.
பேனாமுள் Karthick(1):
✍️ *காலி பணியிடங்களை நிரப்ப ரயில்வே அமைச்சகம் நடவடிக்கை*
நாடு முழுவதும் ரயில் நிலைய மேலாளர் உட்பட ஐந்து பிரிவுகளில் 30,307 காலியிடங்களுக்கு நாளை முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்தப் பணியிடங்களுக்கு இரண்டு நிலைகளில் தேர்வு நடத்தப்படுகிறது.
முதல் நிலை கணினி வழி தேர்வில் தகுதி பெற்றவர்கள்,இரண்டாம் நிலை தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.
இரண்டாம் நிலை தேர்வு வாயிலாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இதற்கான முழு தகவல்களை https://www.rrbchennai.gov.in என்ற இணையதளத்தில் காணலாம்.
பேனாமுள் Karthick(1):
✍️ *ஆவடியில் செப்டம்பர் 10ல் பி எல் ஐ முகவர் நேர்முகத் தேர்வு*
அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டங்களை (பி எல் ஐ) விற்பனை செய்யும் முகவர்கள் நியமனத்திற்கான நேர்முகத் தேர்வு ஆவடி பாசறையில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்தில் வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி காலை 11 மணிக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும். 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற 18 வயதுக்கு மேற்பட்டோர் கலந்து கொள்ளலாம்.
விருப்பமுள்ளவர்கள் தங்கள் வயது மற்றும் கல்வித் தகுதிக்கான சான்றிதழ் உடன் நேர்முகத் தேர்வுக்கு வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி