தேதி
30/8/2025
🌷 *பேனாமுள் பத்திரிகை செய்திகள்* 🌷
*குறள்* : *456*
மனந்தூயார்க் கெச்சநன் றாகும் இனந்தூயார்க்
கில்லைநன் றாகா வினை.
மனம் தூய்மையாகப் பெற்றவர்க்கு , அவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழ் முதலியவை நன்மையாகும், இனம் தூய்மையாக உள்ளவர்க்கு நன்மையாகாத செயல் இல்லை.
பேனாமுள் Karthick(1):
✍️ *ஆகஸ்ட் 30*
*பெட்ரோல் விலை*-100.80
*டீசல் விலை*-92.39
*சி.என்.ஜி* - 91.50
பேனாமுள் Karthick(1):
✍️ *பங்கு சந்தை நிலவரம்*
*நிப்டி* : 24426.85
*பேங்க் நிப்டி* : 53655.65
*சென்செக்ஸ்*: 79809.65
பேனாமுள் Karthick(1):
✍️ *தங்கம் விலை*
22 Kதங்கம்/ g. : ₹ 9470
24 Kதங்கம்/ g. : ₹ 10327
வெள்ளி /g : ₹ 131.00
பேனாமுள் Karthick(1):
✍️ *அயப்பாக்கம் புதிய காவல் நிலையம் தொடக்கம்*
அயப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதியில் புதிய காவல் நிலையத்தை அமைச்சர் சா.மு நாசர் நேற்று திறந்து வைத்தார். இதில் ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர்,மாவட்ட கலெக்டர் பிரதாப்,காரப்பாக்கம் கணபதி எம்எல்ஏ மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பேனாமுள் Karthick(1):
✍️ *ஐபிஎஸ் அதிகாரிகள் 9 பேர் இடமாற்றம்*
தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் 9 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
பேனாமுள் Karthick(1):
✍️ *சென்னை பெசன்ட் நகர் மாதா கோயில் திருவிழா*
சென்னை பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தின் 53-வது ஆண்டு திருவிழா நேற்று மாலை 5.45 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சென்னை மயிலை உயர்மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி கொடியேற்றினார்.75 அடி உயர வெண்கல கொடி மரத்தில் 12 அடி நீளம் கொண்ட மாதா உருவம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது.
நேற்று தொடங்கிய திருவிழா அடுத்த மாதம்
8-ந்தேதி வரை 11 நாட்கள் நடக்க இருக்கிறது.
பேனாமுள் Karthick(1):
✍️ *தீயணைப்பு ஆணையத் தலைவராக சங்கர் ஜிவால் நியமனம்*
தீயணைப்பு ஆணையத் தலைவராக சங்கர் ஜிவால் அவர்களை நியமனம் செய்து தமிழகஅரசு உத்தரவிட்டுள்ளது.
பேனாமுள் Karthick(1):
✍️ *பெசன்ட் நகரில் போக்குவரத்து மாற்றம் போலீசார் அறிவிப்பு*
அன்னை வேளாங்கன்னி தேவாலய பொன்விழாவில் கூட்ட நெரிசலை பொறுத்து 31, செப் 1,7,8 ஆகிய தேதிகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
பேனாமுள் Karthick(1):
✍️ *நல்லகண்ணு உடல்நலம் விசாரித்தார் : முதல்வர்*
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவனையில் சிகிச்சைப் பெற்று வரும் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் ஆர். நல்லகண்ணுவின் உடல்நலம் குறித்து நேற்று முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று கேட்டறிந்தார்.
பேனாமுள் Karthick(1):
✍️ *நெல்லுக்கான விலை உயர்வு*
தமிழகத்தில் நெல்லுக்கான ஆதார விலையை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2500 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
பேனாமுள் Karthick(1):
✍️ *ஜப்பான் தொழில்நுட்பம் இந்திய திறமை இணைந்தால் தொழில்நுட்ப புரட்சி : பிரதமர்*
ஜப்பானின் தொழில்நுட்பமும் இந்தியாவின் திறமையும் இணைந்து இந்த நூற்றாண்டின் தொழில்நுட்பப் புரட்சியை வழிநடத்த முடியும் என்று ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி கூறினார்.
பேனாமுள் Karthick(1):
✍️ *மாநில முதல்வர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்*
கூட்டாட்சியை வலுப்படுத்துவோம் என்று மாநில முதல்வர்கள், பல்வேறு கட்சித் தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
பேனாமுள் Karthick(1):
✍️ *பந்தன் வங்கிக்கு அபராதம் : ரிசர்வ் வங்கி*
சட்டரீதியான மற்றும் ஒழுங்குமுறை இணக்கக் குறைபாடுகளுக்காக ரிசர்வ் வங்கி பந்தன் வங்கிக்கு ரூ.44.7 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
பேனாமுள் Karthick(1):
✍️ *செப்டம்பர் 2ல் திமுக கூட்டணி கட்சிகள் கண்டன போராட்டம்*
மத்திய பாஜக அரசைக் கண்டித்தும் - உடனடி நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தியும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வருகிற 02-09-2025 செவ்வாய்க் கிழமை அன்று காலை 10.00 மணியளவில் திருப்பூர் ரயிலடி அருகில் நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பேனாமுள் Karthick(1):
✍️ *ரஷ்யா ட்ரோன் தாக்குதல்*
உக்ரைனின் மிகப்பெரிய போர்க்கப்பல் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தி உள்ளது.
பேனாமுள் Karthick(1):
✍️ *விநாயகர் சிலை கரைப்பதற்கு சென்னையில் 4 இடங்களில் ஏற்பாடு*
நாளை 31ம் தேதி, பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், திருவான்மியூர் பல்கலை நகர், மீன்பிடி துறைமுகம் புதுவண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர் பாப்புலர் எடை மேடை ஆகிய நான்கு இடங்களில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பேனாமுள் Karthick(1):
✍️ *கைத்தறி கண்காட்சி துவக்கம்*
இயற்கை சாய கைத்தறி கைவினைத் திருவிழாவை ஆழ்வார்பேட்டையில் உள்ள சி.பி.ஆர்ட். மையத்தில் நடக்கிறது.
மூன்று நாள் திருவிழாவை நடிகை ரேவதி துவக்கி வைத்தார்.
பேனாமுள் Karthick(1):
✍️ *போலி ஆவணங்கள் தயாரித்து நில மோசடி செய்தவர் கைது*
ஆவடி, போலி ஆவணங்கள் தயாரித்து, 2 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்தவர் கைது செய்யப்பட்டார்.
பேனாமுள் Karthick(1):
✍️ *விக்கிரவாண்டி டோல்பிளாசாவில் 1ம் தேதி முதல் புதிய கட்டணம்*
விக்கிரவாண்டி டோல்பிளாசாவில் வரும், செப்.1ம் தேதி முதல் பழைய சுங்க வரியில் சிறு சிறு மாற்றங்களுடன் புதிய சுங்க கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பேனாமுள் Karthick(1):
✍️ *7 நாள் பயணமாக இன்று வெளிநாடு செல்கிறார் முதல்வர்*
வெளிநாட்டு தொழில் முதலீடுகளை திரட்டுவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
பேனாமுள் Karthick(1):
✍️ *இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்*
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று (சனிக்கிழமை) அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது.
பேனாமுள் Karthick(1):
✍️ *செப்டம்பர் 17-ந்தேதி முதல் மக்கள் சந்திப்பை நடத்த விஜய் திட்டம்*
த.வெ.க.வின் கொள்கை தலைவரான தந்தை பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17-ந்தேதி, ஈரோட்டில் இருந்து முதல் மக்கள் சந்திப்பை நடத்த விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பேனாமுள் Karthick(1):
✍️ *வரவேற்பு நிகழ்ச்சியின்போது நடனமாடும்படி வற்புறுத்தியதால் திருமணத்தை நிறுத்திய இளம்பெண்*
கிருஷ்ணகிரி : மணமகனின் நண்பர்கள் சிலர் மது போதையில் மண்டபத்தில் குத்தாட்டம் போட்டனர்.
போதை உற்சாகத்தில் மேடையில் ஏறிய நண்பர்கள் மாப்பிள்ளையையும் ஆடச்சொல்லி வற்புறுத்தினர். சிறிது நேரத்தில் மணப்பெண்ணையும் நடனமாடுமாறு கட்டாயப்படுத்தினர். இதை கண்ட உறவினர்கள் அவர்களை கண்டித்தனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டு பெண் வீட்டாரை மணமகனுடன் வந்த நண்பர்கள் சிலர் தாக்கினர். இதனால் அதிர்ச்சியடைந்த மணப்பெண் திருமணத்திற்கு முன்பே இப்படி நடந்து கொள்கிறார்களே இவரை திருமணம் செய்து கொண்டால் எனது வாழ்க்கை என்ன ஆகும்? என்ற அவர் அந்த மணமகனை திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டார். இதனால் வரவேற்புடன் திருமணம் பாதியில் நின்றது.
பேனாமுள் Karthick(1):
✍️ *கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் 4 புதிய குளங்கள்*
கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள 4 குளங்களின் கொள்ளளவை 2 மடங்காக அதிகரிக்கும் வகையில் 27,647 ச.மீ. பரப்பளவில் புதிதாக 4 குளங்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பேனாமுள் Karthick(1):
✍️ *திருவள்ளூரில் விநாயகர் சிலைகள் காக்களூர் ஏரியில் கரைப்பு*
திருவள்ளூரில் விநாயகர் சதுர்த்தியையொட்டி நகரின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு காக்களூர் ஏரியில் கரைக்கப்பட்டது.
பேனாமுள் Karthick(1):
✍️ *எட்டயபுரம் அருகே பட்டாசு ஆலையில் தீ உரிமையாளர் கருகி பலி*
எட்டயபுரம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உரிமையாளர் கருகி பலியானார்.
பேனாமுள் Karthick(1):
✍️ *உலர், ஈர மாவு அரைக்கும் இயந்திரம் வாங்க மானிய தொகைக்கு விண்ணப்பிக்கலாம்*
பயன்பெற விரும்பும் தகுதியுள்ள மகளிர் தமிழ்நாட்டில் பூர்வீகமாக வசிப்பவராக இருக்க வேண்டும். வயது 25 வயதிற்கு மேல் இருத்தல் வேண்டும். பிறந்த தேதிக்கான சான்று மற்றும் திட்டத்தில் முன்னுரிமை பெற வேண்டுமானால் கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள் அல்லது கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் என்பதற்கான சான்று (வட்டாட்சியரிடம் பெறுதல் வேண்டும்) போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும். ஆண்டு வருமான வரம்பு ரூ.1.20 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
சென்னை மாவட்ட ஆட்சியரகம், சிங்கார வேலனார் மாளிகை, 8வது தளத்தில் செயல்படும் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வருகிற 1ம் தேதிக்குள் (நாளை மறுநாள்) விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
பேனாமுள் Karthick(1):
✍️ *எம்.டி யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்*
அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான எம்.டி. (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) பட்டமேற்படிப்பு சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் தகுதியுள்ளவர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. தகவல் தொகுப்பேட்டினை www.tnhealth.tn.gov.in., www.tnayushselection.org என்ற வலைதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். படிப்பிற்கான காலம் 3 ஆண்டுகள்
அரசு சிறப்பு ஒதுக்கீட்டின்கீழ் விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் மட்டும், இணையவழியில் விண்ணப்பித்த பிறகு அந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை ஆணையர் அலுவலகம், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை-600 106 என்ற முகவரிக்கு நாளை முதல் வரும் 12ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பித்தல் வந்து சேர வேண்டும்
பேனாமுள் Karthick(1):
✍️ *சென்னை ரயில்வே காவல்துறை அறிவிப்பு*
ரயில்வே காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சட்ட ஆலோசகர் ஒப்பந்த பணிக்கு வரும் 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று சென்னை ரயில்வே காவல்துறை தெரிவித்துள்ளது.
காவல்துறை இணையதளத்தில் (www.tnpolice.gov.in) விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் 15ம் தேதிக்கு முன் நேரடியாகவோ அல்லது பதிவு அஞ்சல் மூலமாகவோ சமர்பிக்கப்பட வேண்டும். விண்ணப்ப உறையின் மீது சட்ட ஆலோசகர் பணிக்கான விண்ணப்பம் என்று தெளிவாக குறிப்பிட வேண்டும். பதிவு அஞ்சல் மூலமாக அனுப்பப்படும் விண்ணப்பங்கள், காவல் கண்காணிப்பாளர், இருப்புப்பாதை சென்னை எழும்பூர் சென்னை -600 008 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
செய்தி