31/8/2025 பேனாமுள் பத்திரிகை செய்திகள்
தேதி
31/8/2025

🌷 *பேனாமுள் பத்திரிகை செய்திகள்* 🌷

*குறள்* : *457*
மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழுந் தரும்.

மனதின் நன்மை உயிர்க்கு ஆக்கமாகும், இனத்தின் தன்மை (அவ்வளவோடு நிற்காமல்) எல்லாப் புகழையும் கொடுக்கும்.

பேனாமுள் Karthick(1): 
✍️  *ஆகஸ்ட் 31*
*பெட்ரோல் விலை*-100.80
  *டீசல் விலை*-92.39
   *சி.என்.ஜி* - 91.50

பேனாமுள் Karthick(1): 
✍️ *தங்கம் விலை*
22 Kதங்கம்/ g. : ₹ 9620
24 Kதங்கம்/ g. : ₹ 10491
 வெள்ளி    /g   : ₹ 134.00

பேனாமுள் Karthick(1): 
✍️ *சென்னையில் மேகவெடிப்பு*

சென்னையில் இந்தாண்டில் முதல்முறையாக மேகவெடிப்பு ஏற்பட்டதாக சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது எக்ஸ் வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

பேனாமுள் Karthick(1):
 ✍️ *சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்*

விநாயகர் சிலைகள் ஊர்வலத்தையொட்டி சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றத்தை போலீசார் அறிவித்துள்ளனர்.

பேனாமுள் Karthick(1): 
✍️ *கான்கிரீட் கட்டிங் பிளேடுகள் போலியாக தயாரித்தவர் கைது*

சவுகார்பேட்டையில் உள்ள தனியார் கிடங்கில் திடீர் ஆய்வு மேற்கொண்டபோது போலியாக பிளேடுகள் தயார் செய்யப்பட்டு தனியார் நிறுவனத்தின் ஸ்டிக்கர் ஒட்டி சந்தையில் விற்பனை செய்தது உறுதிப்படுத்தப்பட்டது.

கிடங்கில் இருந்த ஏழு லட்சம் ரூபாய் மதிப்பிலான 7,000 போலி பிளேடுகளை அறிவுசார் அமலாக்கப் பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

வடமாநிலத்தைச் சேர்ந்த நரேஷ்குமார் என்பவரை கைது செய்தனர்.

பேனாமுள் Karthick(1):
 ✍️ *ஆவடியில் 3 குடிசை தீக்கிரை*

ஆவடி காந்திநகர், எம்.ஜி.ஆர். தெருவில் சரோஜா என்பவரின் சொந்தமான மூன்று குடிசைகள் மின்கசிவால் எரிந்து சாம்பலானது.

பேனாமுள் Karthick(1): 
✍️ *அம்பத்துாரில் பைக் ரேஸ்*

அம்பத்துார் - செங்குன்றம் சாலையில் தொடர்ந்து பைக் சாகசத்தில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

பேனாமுள் Karthick(1):
 ✍️ *சென்னை காவல்துறை எச்சரிக்கை*

'ஆன்லைன்' முதலீடு தொடர்பாக வரும் போலியான விளம்பரங்களில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி சென்னை காவல் துறை அறிவுறுத்தி உள்ளது.

பேனாமுள் Karthick(1): 
✍️ *திருவள்ளூரில் ரூ.12.97 கோடி பணிகள் ரத்து*

15வது நிதிக்குழு மானியத்தில் வழங்கப்பட்ட பணிகளை துவக்காமல் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கிடப்பில் போட்டுள்ளனர். இதனால் மாவட்ட கலெக்டர் 12.97 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டப் பணிகளை அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

பேனாமுள் Karthick(1):
 ✍️ *திருத்தணி கோவிலுக்கு வாகனம் செல்ல தடை*

திருத்தணி:முருகன் மலைக்கோவிலுக்கு நாளை முதல் இரு நாட்களுக்கு வாகனங்கள் செல்வதற்கு கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.

மலைப்பாதை சேதமடைந்து உள்ளதால் சீரமைக்கும் பணி நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்கிறது.

இதனால் நாளை கோவில் பேருந்து மட்டும் இயக்கப்படும்.

பேனாமுள் Karthick(1):
 ✍️ *சென்னை - கும்மிடிப்பூண்டி ரயில் இன்று ரத்து*

பராமரிப்பு பணியால் இன்று இரவு 11.20 மணிக்கு சென்னை-கும்மிடிப்பூண்டி ரயில் ரத்து செய்யப்பட்டது. இன்று இரவு 9.25 மணிக்கு கும்மிடிப்பூண்டி- சென்னை செல்லும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்பட்டது. இன்றும் நாளையும் பொன்னேரி, கவரைப்பேட்டை இடையே பராமரிப்பு பணி நடக்கிறது.

பேனாமுள் Karthick(1):
 ✍️ *வாகனங்களுக்கான பேன்சி எண்கள் வாங்க ஏலம் எடுக்கும் முறை அறிமுகம்*

தமிழ்நாட்டில் வாகனங்களுக்கான சிறப்பு எண்களை வாங்குவதற்கு ஏல முறைக்கு மாற்றப்பட்டுள்ளது. அதிக தேவை உள்ள நம்பர்களுக்கு (எ.கா: 0001, 9999, 7777) இ-பெட்டிங் முறையில் ஏலம் விடப்படும். இதனால், அரசுக்கு கூடுதல் வருமானம் கிடைக்க பெறுவதோடு, முறைகேடுகளையும் தடுக்க முடியும். அந்தவகையில் புதிய நடைமுறையின்படி, பேன்சி நம்பர் வாங்குவதற்கு நுழைவு கட்டணமாக ரூ.1000 இருந்ததை ரூ.2000 உயர்த்தியுள்ளார்கள்.ஏலத்தில் வெற்றி பெறுவோர் 48 மணி நேரத்திற்குள் பணத்தை கட்ட வேண்டும். அவ்வாறு சிறப்பு எண்கள் தேவைப்படுவோர் போக்குவரத்து துறையின் அதிகாரப்பூர்வ இணைய பக்கமான www.parivahan.gov.in - என்ற தளத்தில் பயனர் குறியீடு, கடவுச்சொல்லை பயன்படுத்தி உள்நுழைய வேண்டும். அதில், தங்கள் ஆர்.டி.ஓ.வை தேர்ந்தெடுத்து 3 விதமான நம்பர்களில் ஒன்றை தேர்வு செய்யலாம்.

பேனாமுள் Karthick(1): 
✍️ *ஓய்வுபெறும் நாளில் அரசு ஊழியர்களை சஸ்பெண்ட் செய்ய தடை*

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யப்படுவதை தவிர்க்க, விதிகளை திருத்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

பேனாமுள் Karthick(1): 
✍️ *எடப்பாடி பிரசாரத்தின்போது எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும்: 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்*

ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சாலைகள் அமைந்துள்ள பகுதியில் பிரசார கூட்டம் நடத்த அனுமதி வழங்கக் கூடாது. மதுரை மாவட்டத்தில் செப்.1 முதல் செப்.4 வரை எடபாடியார் பிரசாரத்தில் ஈடுபடுவதால் அப்பகுதியில் மக்கள் சேவையில் ஈடுபட்டுள்ள 108 ஆம்புலன்சிற்கும் அதில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் தேவையான போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். என எஸ்.பி யிடம் மனு அளித்துள்ளனர்.

பேனாமுள் Karthick(1): 
✍️ *இன்று நள்ளிரவு முதல் அமல் 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு*

இன்று நள்ளிரவு முதல், தமிழ்நாட்டில் 25 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் 5 முதல் 7 சதவீதம் உயர்கிறது. இந்த கட்டண உயர்வுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது. சுங்கக்கட்டண உயர்வை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

பேனாமுள் Karthick(1): 
✍️  *ஓட்டேரி நல்லா கால்வாய் தூர்வாரும் பணிகளை தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்*

ரூ.65 கோடியில் ஓட்டேரி நல்லா கால்வாய் தூர்வாரும் பணிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

பேனாமுள் Karthick(1): 
✍️ *திருத்தணி திருவள்ளூர் வேட்பாளர்களை சீமான் அறிமுகம் செய்தார்*

 திருத்தணியில் நடைபெற்ற மரங்களின் மாநாட்டில் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான திருவள்ளூர் மற்றும் திருத்தணி தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று அறிமுகம் செய்தார்.

பேனாமுள் Karthick(1): 
✍️ *காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் நாளை முதல் அமல்*

 டாஸ்மாக் கடைகளின் காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் செப்டம்பர் 1 திங்கட்கிழமை முதல் டாஸ்மாக் நிர்வாகம் அமல்படுத்த உள்ளது.

பேனாமுள் Karthick(1): 
✍️ *செப்.2ல் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்*

 சென்னை மயிலாப்பூர் தண்டையார்பேட்டை அம்பத்தூர் மற்றும் 
கே.கே நகர் கோட்டங்களில் செவ்வாய்க்கிழமை செப்டம்பர் 2ல் காலை 11 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர்க்க கூட்டங்கள் நடைபெற உள்ளன.

செய்தி
*பேனாமுள் இதழ்*
Comments