தேதி
10/9/2025
🌷 *பேனாமுள் பத்திரிகை செய்திகள்* 🌷
*குறள்* : *467*
எண்ணித் துணிக கருமந் துணிந்தபின்
எண்ணுவ மென்ப திழுக்கு.
(செய்யத் தகுந்த) செயலையும் வழிகளை எண்ணிய பிறகே துணிந்து தொடங்க வேண்டும், துணிந்த பின் எண்ணிப் பார்க்கலாம் என்பது குற்றமாகும்.
பேனாமுள் Karthick
✍️ *செப். 10*
*பெட்ரோல் விலை*-100.80
*டீசல் விலை*-92.39
*சி.என்.ஜி* - 91.50
பேனாமுள் Karthick
✍️ *பங்கு சந்தை நிலவரம்*
*நிப்டி* : 24868.60
*பேங்க் நிப்டி* : 54216.10
*சென்செக்ஸ்*: 81101.32
பேனாமுள் Karthick
✍️ *தங்கம் விலை*
22 Kதங்கம்/ g. : ₹ 10110
24 Kதங்கம்/ g. : ₹ 11025
வெள்ளி /g : ₹ 140.00
பேனாமுள் Karthick
✍️ *துணை ஜனாதிபதி தேர்தல்: சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி*
துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் 452 வாக்குகளை பெற்று அபார வெற்றிபெற்றார்.
பேனாமுள் Karthick
✍️ *சனிக்கிழமைகளில் மட்டுமே பிரசாரம்; விஜய்*
செப்.13ம் தேதி தமது பிரசாரத்தை அவர் தொடங்கி டிச.20ல் முடிக்கிறார். இந்த 4 மாதங்களில் அவர் சனிக்கிழமைகளில் மட்டுமே பிரசாரம் செய்கிறார். அக்டோபர் 5ம் தேதி ஒரேயொரு ஞாயிற்றுக்கிழமை மட்டுமே பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
பேனாமுள் Karthick
✍️ *இளையராஜாவுக்கு செப்.13ல் பாராட்டு விழா*
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு செப்.13ல் தமிழ்நாடு அரசு பாராட்டு விழா நடத்துகிறது.
பேனாமுள் Karthick
✍️ *மருத்துவமனையின் கல்வெட்டில் பொறிக்கபடும்*
மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகளை தானம் செய்வோரின் பெயர் சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் கல்வெட்டில் பொறிக்க Wall of Honor ஏற்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். வரும் 30ம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இதனை தொடக்கிவைக்க உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
பேனாமுள் Karthick
✍️ *பிரதமர் மோடியுடன் விரைவில் பேச உள்ளேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்*
இருநாடுகளுக்கு இடையேயன வார்த்தக விவகாரம் தொடர்பாக இந்தியாவும் அமெரிக்காவும் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. வரும் வாரங்களில் பிரதமர் பிரதமர் மோடியுடன் பேசுவதை எதிர்நோக்கியுள்ளேன்” என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.
பேனாமுள் Karthick
✍️ *உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல்; 20 பேர் பலி*
உக்ரைனின் டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள யாரோவா கிராமம் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் 20-க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் பலியாகினர்.
பேனாமுள் Karthick
✍️ *இன்ஸ்பெக்டருக்கு கமிஷனர் பாராட்டு*
அடையாறு: சிறுமி பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்று கொடுத்த இன்ஸ்பெக்டர் தர்மாவை அழைத்து போலீஸ் கமிஷனர் அருண் நேற்று வெகுமதி வழங்கி பாராட்டினார்.
பேனாமுள் Karthick
✍️ *காவலர் குறைதீர் முகாமில் கமிஷனரிடம் 146 பேர் மனு*
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், காவலர் குறைதீர் சிறப்பு முகாம் நேற்று நடந்தது. இதில் 146 பேரிடம் குறைகளை கேட்டறிந்து அவர்களிடம் இருந்து போலீஸ் கமிஷனர் அருண் மனுக்களை பெற்றார்.
பேனாமுள் Karthick
✍️ *மின் வாரிய அலுவலகம் இடமாற்றம்*
செங்குன்றம் பிரிவு உதவி செயற்பொறியாளர் அலுவலகம் வரும் 11ம் தேதி முதல் எண். 51 ஸ்ரீவெங்கடேஸ்வரா மருத்துவமனை பின்புறம் பன்னீர்வாக்கம் சாலை நல்லுார் சென்னை - 67ல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *திருவேற்காட்டில் மகளிர் போராட்டம்*
ஆரம்ப சுகாதார நிலையம் இடம் மாற்றம் செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீரராகவபுரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 50க்கும் மேற்பட்ட கர்ப்பிணியர் முதியவர்கள் என பலர் நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேனாமுள் karthick
✍️ *வேப்பேரியில் தங்கும் விடுதியில் இளம்பெண் மர்ம மரணம்*
வேப்பேரியில் தங்கும் விடுதியில் இளம்பெண் துாக்கில் தொங்கியபடி இறந்து கிடந்த நிலையில் அவருடன் தங்கியிருந்த காதலன் வீட்டிற்கு சென்று தற்கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *ஆவடியில் பிரஷ் ஜூஸ் கடைக்கு சீல்*
திருமுல்லைவாயில், சி.டி.எச். சாலையில் எலி கடித்த அழுகிய பழங்களில் ஜூஸ் தயாரித்து விற்பனை செய்த கடைக்கு வீடியோ ஆதாரத்துடன் வாடிக்கையாளர் வெளியிட்ட வீடியோவால் சீல் வைக்கப்பட்டது.
பேனாமுள் Karthick
✍️ *ரயில் மோதி முதியவர் உயிரிழப்பு*
புட்லுார் ரயில் நிலையம் அருகே கடவுப்பாதையை கடக்க முயன்போது சென்னையில் இருந்து அரக்கோணம் சென்ற புறநகர் ரயில் மோதியதில் உயிரிழந்தார்.
பேனாமுள் Karthick
✍️ *காவலர்கள் ரத்ததானம் செய்தனர்*
காவலர் நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னை பெருநகர காவல் துறையில் பணியாற்றும் 200 காவலர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் ரத்ததானம் வழங்கினர்.
பேனாமுள் Karthick
✍️ *கேட் தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 13ம்தேதி கடைசி நாள்*
கேட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் 13ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
பேனாமுள் Karthick
✍️ *மழை வௌ்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட இமாச்சலுக்கு பஞ்சாப்புக்கு நிதி: பிரதமர் மோடி அறிவிப்பு*
கனமழை வௌ்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பஞ்சாப் மாநிலத்துக்கு ரூ.1,600 கோடி, இமாச்சலபிரதேசத்துக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பேனாமுள் Karthick
✍️ *வணிக பயன்பாட்டிற்கான வாகனங்களில் விரைவில் ஜி.பி.எஸ் கருவி கட்டாயம்*
சொந்த பயன்பாட்டிற்கான வாகனங்கள் தவிர மற்ற அனைத்து வகையான வணிகப் பயன்பாட்டிற்கான வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி கட்டாயமாக்கப்பட உள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *நவராத்திரி கொலு பொதுமக்கள் பார்வையிட கவர்னர் மாளிகை அழைப்பு*
தமிழக கவர்னர் மாளிகையில் வரும் 22 ஆம் தேதி முதல் அக்டோபர் 1 வரை நவராத்திரி கொலு கொண்டாடப்பட உள்ளது.
இதை பார்வையிட விருப்பமுள்ளவர்கள் https://tnrajbhavantour.tn.gov.in/navaratri/
என்ற இணையதளத்தில் வரும் 20ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.
பேனாமுள் Karthick
✍️ *ஆவடி காவல் ஆணையரக பகுதிகளில் கைப்பற்றப்பட்ட 780 கிலோ கஞ்சா எரித்து அழிப்பு*
ஆவடி போலீஸ் கமிஷனரகத்துகுட்பட்ட பகுதிகளில் கைப்பற்றப்பட்ட 780 கிலோ கஞ்சா பொட்டலங்களை எரித்து அழித்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
செய்தி