தேதி
11/10/2025
🌷 *பேனாமுள் பத்திரிகை செய்திகள்* 🌷
*குறள்* : *468*
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்.
தக்கவழியில் செய்யப்படாத முயற்சி பலர் துணையாக நின்று(அதை முடிக்குமாறு) காத்த போதிலும் குறையாகிவிடும்.
பேனாமுள் Karthick
✍️ *செப். 11*
*பெட்ரோல் விலை*-100.80
*டீசல் விலை*-92.39
*சி.என்.ஜி* - 91.50
பேனாமுள் Karthick
✍️ *பங்கு சந்தை நிலவரம்*
*நிப்டி* : 24973.10
*பேங்க் நிப்டி* : 54536.00
*சென்செக்ஸ்*: 81425.15
பேனாமுள் Karthick
✍️ *தங்கம் விலை*
22 Kதங்கம்/ g. : ₹ 10130
24 Kதங்கம்/ g. : ₹ 11047
வெள்ளி /g : ₹ 140.00
பேனாமுள் Karthick
✍️ *மக்கள் குறைதீர் முகாம்*
இந்த மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் 13.09.2025 அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது.
குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல் நீக்கம் முகவரி மாற்றம் கைபேசி எண் பதிவு மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும் நியாய விலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்பட உள்ளன.
பேனாமுள் Karthick
✍️ *கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் :முதல்வர்*
செப்.11, 12-ல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
பேனாமுள் Karthick
✍️ *நோயாளிக்கு வீல் சேர் தராத 2 ஊழியர்கள் சஸ்பெண்ட்*
கோவை அரசு மருத்துவமனையில் 84 வயது நோயாளிக்கு வீல் சேர் தராத 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
பேனாமுள் Karthick
✍️ *கட்டணமில்லா ராமேஸ்வரம்- காசி ஆன்மிகப் பயணம்*
கட்டணமில்லா ராமேசுவரம் - காசி ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இந்த ஆன்மிகப் பயணத்திற்கான விண்ணப்ப படிவங்களை அந்தந்த மண்டல இணை ஆணையர் அலுவலகங்களில் நேரில் பெற்றோ அல்லது www.hrce.tn.gov.in என்ற இந்து சமய அறநிலையத்துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தோ விண்ணப்பிக்கலாம்.
பேனாமுள் Karthick
✍️ *தங்க நாணயங்கள் வாங்க டெண்டர்: தமிழகஅரசு*
திருமண உதவித் திட்டத்துக்காக ரூ.45 கோடிக்கு 5460 தங்க நாணயங்கள் வாங்க தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. சமூக நலத்துறையால் செயல்படுத்தப்படும் திருமண உதவித் திட்டத்துக்காக தங்கம் கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *இமானுவேல்சேகரன் நினைவுதினம்*
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இன்று தியாகி இமானுவேல் சேகரனின் 68ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளது. தமிழக அரசு சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அதிமுக, மதிமுக, பாஜ, காங்கிரஸ், விடுதலைச்சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பாக பிரமுகர்கள் மரியாதை செலுத்த உள்ளனர்.
பேனாமுள் Karthick
✍️ *கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் அக்.31ம் தேதி வரை நீட்டிப்பு*
கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் வரும் அக்டோபர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
பேனாமுள் Karthick
✍️ *ஆன்லைன் முதுநிலை பட்டய படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடக்கம்*
கால்நடை அறிவியல் பட்டதாரிகளுக்கான 22 ஆன்லைன் முதுநிலை பட்டய படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளது.
தங்கள் விண்ணப்பங்களை www.tanuvasdde.in என்ற இணைய தளத்தில் வருகிற அக்டோபர் 3ம் தேதிவரை சமர்ப்பிக்கலாம்.
பேனாமுள் Karthick
✍️ *பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச ஏஐ படிப்புகள்*
ஸ்வயம் பிளஸ் திட்டத்தின் மூலம் அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் இலவசமாக ஏஐ படிப்புகள் வழங்கப்பட உள்ளதாக சென்னை ஐஐடி அறிவித்துள்ளது.
விரும்புவோர் https://swayam-plus.swayam2.ac.in/ai-for-all-courses என்ற இணையதள இணைப்பை பயன்படுத்தி அக்டோபர் 10ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
பேனாமுள் Karthick
✍️ *5 இடங்களில் சோதனை: அமலாக்கத்துறை*
சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்ததாக சென்னையில் பெண் டாக்டர், தொழிலதிபர் வீடு உள்பட 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
பேனாமுள் Karthick
✍️ *செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் ரூ.22.14 கோடியில் மேம்பாட்டு பணி*
செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் அம்ருத் நிலையத் திட்டத்தின் கீழ் ரூ.22.14 கோடியில் மேம்பாட்டு பணிகள் நடைபெறுகிறது.
பேனாமுள் Karthick
✍️ *13ம் தேதி முதல் தாயுமானவர் திட்டத்தின் கீழ் பொது விநியோக பொருட்கள் விநியோகம்*
சென்னை மாநகராட்சி மண்டலங்களில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் பொது விநியோக பொருட்கள் 13ம் தேதி முதல் விநியோகிக்கப்படுகிறது.
பேனாமுள் Karthick
✍️ *ஆசிய கோப்பை கிரிக்கெட்: வங்காளதேசம் - ஹாங்காங் அணிகள் இன்று பலப்பரீட்சை*
அபுதாபியில் இன்று நடைபெறுகின்ற 3-வது லீக் ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் இடம்பெற்றுள்ள வங்காளதேசம் - ஹாங்காங் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
பேனாமுள் Karthick
✍️ *த.வெ.க., அதிர்ச்சி*
விஜய் மக்கள் சந்திப்பு பிரசாரத்திற்கு போலீசார் அடுக்கடுக்கான நிபந்தனைகளை விதிப்பதால் த.வெ.க.,வினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
பேனாமுள் Karthick
✍️ *திருவள்ளூரில் மாணவர்களுக்கு நிலவேம்பு கஷாயம்*
கலெக்டர் பிரதாப் உத்தரவின்படி, மழைக்காலம் துவங்க உள்ள நிலையில் திருவள்ளூர் நகராட்சி பகுதியில் உள்ள பள்ளிகளில் நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டு வருகிறது.
பேனாமுள் Karthick
✍️ *ஆவடி மாநகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்*
ஆவடி மாநகராட்சி மண்டலம் 3ல் 44 மற்றும் 46வது வார்டு பகுதியில் உள்ள பொதுமக்களுக்காக நேற்று ஆவடி பசுமை பூங்காவில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.
முகாமை அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார்.
இதில் மேயர் உதயகுமார் கமிஷனர் சரண்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பேனாமுள் Karthick
✍️ *உரியவர்களிடம் ஆவடி போலீஸ் கமிஷனர் வழங்கினார்*
கடந்த மாதம் 6ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை ஆன்லைன் மோசடி செய்த நபர்களின் வங்கி கணக்குகளை முடக்கம் செய்து 29 வழக்குகளில் மொத்தம் 63 லட்சத்து 40 ஆயிரத்தை போலீசார் மீட்டனர்.
இதையடுத்து ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்தவர்களுக்கு நேற்று அந்த பணத்திற்கான சான்றிதழை கமிஷனர் சங்கர் நேரில் வழங்கினார்.
பேனாமுள் Karthick
✍️ *திருவள்ளூரில் குடும்ப அட்டையில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்*
குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் நீக்குதல் மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெற உள்ளதாக ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.
முன்னுரிமை குடும்ப அட்டைகள் மற்றும் அந்த்யோதயா அன்னை யோஜனா குடும்ப அட்டை வைத்திருக்கும் குடும்ப அட்டைதாரர்கள் அந்தந்த குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் தங்களது விரல் ரேகையை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதுவரை விரல் ரேகையை பதிவு செய்யாதவர்கள் தங்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகில் உள்ள நியாய விலை கடைகளில் வரும் 25ஆம் தேதிக்குள் தங்கள் விரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும்
செய்தி