தேதி
13/9/2025
🌷 *பேனாமுள் பத்திரிகை செய்திகள்* 🌷
*குறள்* : *469*
நன்றாற்ற லுள்ளுந் தவறுண் டவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை.
அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும்.
பேனாமுள் Karthick
✍️ *செப். 13*
*பெட்ரோல் விலை*-100.80
*டீசல் விலை*-92.39
*சி.என்.ஜி* - 91.50
பேனாமுள் Karthick
✍️ *பங்கு சந்தை நிலவரம்*
*நிப்டி* : 25114.00
*பேங்க் நிப்டி* : 54809.39
*சென்செக்ஸ்*: 81904.70
பேனாமுள் Karthick
✍️ *தங்கம் விலை*
22 Kதங்கம்/ g. : ₹ 10200
24 Kதங்கம்/ g. : ₹ 11124
வெள்ளி /g : ₹ 142.00
பேனாமுள் Karthick
✍️ *சொத்து வரியை செப்.30க்குள் செலுத்த வேண்டும்: சென்னை மாநகராட்சி*
நடப்பு அரையாண்டுக்கான சொத்து வரியை செப்.30க்குள் செலுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
அரசு இ சேவை மையங்கள் இணையதளம் மூலமாக சொத்து வரியை செலுத்தலாம் எனவும் PAYTM நம்ம சென்னை செயலி வாட்ஸ் ஆப் எண் 9445061913 மூலம் சொத்து வரியை செலுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *MAXICAB வேன்களை மினி பேருந்துகளாக மாற்ற தமிழக அரசு முடிவு*
MAXICAB வேன்களை மினி பேருந்துகளாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மலை, கிராம பகுதிகளில் வேன்கள் மினி பேருந்துகளாக மாற்றப்படும்.
பேனாமுள் Karthick
✍️ *ஆசிரியர் தகுதி தேர்வு எழுத அனுமதி தேவையில்லை*
ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுவதற்கு பள்ளிக்கல்வித் துறையின் அனுமதியை பெறத் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *இன்று மணிப்பூர் செல்கிறார் பிரதமர் மோடி*
கலவரத்துக்கு பின் முதல் முறையாக இன்று மணிப்பூர் செல்கிறார் பிரதமர் மோடி
பேனாமுள் Karthick
✍️ *விஜய்யின் பிரசார பயணம் திருச்சியில் இன்று தொடக்கம்*
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் தேர்தல் பிரசார பயணத்தை திருச்சியில் இருந்து விஜய் தொடங்குகிறார்.
பேனாமுள் Karthick
✍️ *சுற்றுலாத்தல பட்டியலில் மூணாறுக்கு 7ஆம் இடம்*
ஆசியாவின் மிகச்சிறந்த கிராமப்புற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக மூணாறு தேர்வு செய்யப்பட்டுள்ளது.இதில் மூணாறு 7வது இடத்தை பிடித்துள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *கிரேன் மோதி 2 பேர் பரிதாப சாவு*
கன்னியாகுமரி : தாறுமாறாக ஓடிய கிரேன் மோதி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பேனாமுள் Karthick
✍️ *இசைஞானி பாராட்டு விழா*
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜா பொன்விழா ஆண்டு பாராட்டு விழா தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை 5.30 மணியளவில் நடைபெறவுள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *தமிழ்நாடு முந்திரி வாரியம் என்ற தனி அமைப்பு*
தமிழ்நாட்டில் முந்திரி தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலன்களை பாதுகாத்திட தமிழ்நாடு முந்திரி வாரியம் என்ற தனி அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
பேனாமுள் Karthick
✍️ *ஆன்லைன் மூலம் பிரேத பரிசோதனை அறிக்கை*
பிரேத பரிசோதனை அறிக்கையை மருத்துவமனை நிர்வாகம் உடனே இணையதளத்தில் பதிவேற்றம் செய்து சம்பந்தப்பட்டவர்கள் பதிவிறக்கம் செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பேனாமுள் Karthick
✍️ *இன்றுடன் நிறைவு*
டெட் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் (செப்டம்பர் 13) நிறைவு பெறுகிறது.
பேனாமுள் Karthick
✍️ *நவராத்திரி மதி விற்பனை கண்காட்சி தொடக்கம்*
மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரித்த பொருட்கள் நவராத்திரி மதி விற்பனை கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் கண்காட்சி நடைபெறுகிறது.அக்.5ம் தேதி வரை நடக்கிறது.
பேனாமுள் Karthick
✍️ *நாட்டின் 15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவி ஏற்றார்*
நாட்டின் 15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பேனாமுள் Karthick
✍️ *திருவேற்காட்டில் வங்கி ஊழியர் வீட்டில் நகை திருட்டு*
திருவேற்காடு அருகே பெருமாளகரம் பெரியார் நகர் பகுதியில் வசித்து வரும் விஜயா என்பவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 22 பவுன் நகை திருடப்பட்டுள்ளது. இது பற்றி திருவேற்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
செய்தி