தேதி
14/9/2025
🌷 *பேனாமுள் பத்திரிகை செய்திகள்* 🌷
*குறள்* : *470*
எள்ளாத எண்ணிச் செயல்வேண்டுந் தம்மொட
கொள்ளாத கொள்ளா துலகு.
தம் நிலையோடு பொருந்தாதவற்றை உலகம் ஏற்றுக்கொள்ளாது, ஆகையால் உலகம் இகழ்ந்து தள்ளாத செயல்களை ஆராய்ந்து செய்ய வேண்டும்.
பேனாமுள் Karthick
✍️ *செப். 14*
*பெட்ரோல் விலை*-100.80
*டீசல் விலை*-92.39
*சி.என்.ஜி* - 91.50
பேனாமுள் Karthick
✍️ *தங்கம் விலை*
22 Kதங்கம்/ g. : ₹ 10190
24 Kதங்கம்/ g. : ₹ 11113
வெள்ளி /g : ₹ 143.00
பேனாமுள் Karthick
✍️ *ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானுடன் இந்திய அணி இன்று மோதல்*
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி ஸ்போர்ட்ஸ் 1, 4, 5 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
பேனாமுள் Karthick
✍️ *பெரம்பலூரில் விஜய் பிரசாரம் ரத்து*
தொண்டர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் நள்ளிரவு 12 மணிக்கு மேல் ஆகியும் பெரம்பலூர் சென்றடைய முடியாத நிலையில், விஜய் தனது பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு சென்னைக்கு திரும்பினார்.
பேனாமுள் Karthick
✍️ *இளையராஜா பாராட்டு விழாவில் முதல்வர் கோரிக்கை*
இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.
பேனாமுள் Karthick
✍️ *ஆவடி தற்காலிக பேருந்து நிலையம்*
ஆவடி பேருந்து நிலையத்தில் புதிய கட்டுமான பணி நடந்து வரும் நிலையில் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து இன்று முதல் மாநகர பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
பேனாமுள் Karthick
✍️ *திருவள்ளூரில் அரசு பேருந்து ஓட்டுநர் நடத்துநர்களுக்கு தினமும் ஆல்கஹால் பரிசோதனை*
திருவள்ளூரில் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் பணிக்கு வரும் போது போதையில் உள்ளனரா என்பதை கண்டறிய தினமும் ஆல்ஹகால் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக மாவட்டத்தில் உள்ள 5 டிப்போக்களில் அதற்கான கருவிகள் அளிக்கப்பட்டுள்ளன.
பேனாமுள் Karthick
✍️ *திருவள்ளூரில் நாளை கல்விக் கடன் வழங்கும் முகாம்*
திருவள்ளூர் மாவட்டத்தில் உயர்கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கு வங்கிகள் மூலம் மாபெரும் கல்வி கடன் வழங்கும் முகாம் திருவேற்காடு வீரராகவபுரம் பகுதியில் அமைந்துள்ள எஸ் ஏ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் கல்வி கடன் தேவைப்படும் மாணவ மாணவிகள் பங்கேற்று பயன்பெறலாம்.
பேனாமுள் Karthick
✍️ *திருவள்ளூரில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்*
திருவள்ளூரில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க விரும்புவோர் இ-சேவை மையம் மூலம் உரிய ஆவணங்களுடன் அக்டோபர் 10க்குள் விண்ணப்பங்களை அனுப்பலாம்.
பேனாமுள் Karthick
✍️ *வழக்குகளில் தொடர்புடைய பறிமுதல் வாகனங்களை மீட்டுக் கொள்ளலாம்*
திருவள்ளூரில் குடிமை பொருள் வழங்கல் குற்றப்பிரிவு காவல் துறையினரால் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்த வாகனங்களை வரும் 19ஆம் தேதிக்குள் அபராத தொகையை செலுத்தி மீட்டுக் கொள்ளலாம்.
பேனாமுள் Karthick
✍️ *ஆவடியில் மனைவியை கத்தியால் குத்தி விட்டு கணவர் தற்கொலை*
ஆவடி அருகே முத்தாபுதுப்பேட்டை யில் தம்பதிகளுக்கு இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் சரண்ராஜ் என்பவர் அவரது மனைவி ஷீலாராணியை பல இடங்களில் கத்தியால் குத்தி விட்டு தனக்குத் தானே மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ஷீலா ராணி மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
செய்தி