15/9/2025 இன்றைய பேனாமுள் பத்திரிகை செய்திகள்
தேதி
15/9/2025

🌷 *பேனாமுள் பத்திரிகை செய்திகள்* 🌷

*குறள்* : *471*
வினைவலியுந் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியுந் தூக்கிச் செயல்.

செயலின் வலிமையும் தன் வலிமையும் பகைவனுடைய வலிமையும் ,இருவருக்கும் துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து செயல்பட வேண்டும்.

பேனாமுள் Karthick
✍️  *செப். 15*
*பெட்ரோல் விலை*-100.80
  *டீசல் விலை*-92.39
   *சி.என்.ஜி* - 91.50

பேனாமுள் Karthick
✍️ *மலிவான அரசியலை வீழ்த்துவோம்-முதல்வர்*

அவதூறுகளால் களங்கம் விளைவித்திட முடியுமா பொய்களால் காரிருளை விளைவித்திட முடியுமா தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் பின்னோக்கி இழுக்க முடியுமா என்றெண்ணும் கூட்டத்தின் மலிவான அரசியலை எப்போதும்போல் 2026-லும் வீழ்த்துவோம்! நம்பர் 1 தமிழ்நாடு எனத் தலைநிமிர்வோம்.என முதல்வர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

பேனாமுள் Karthick
✍️ *ஆசிய கோப்பை: பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி*

இந்திய அணி 15.5 ஓவர்களில் இலக்கை கடந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

பேனாமுள் Karthick
✍️ *எடப்பாடியார் தேர்தல் சுற்றுப்பயணத்தில் மாற்றம்*

17, 18 தேதிகளில் தர்மபுரி மாவட்டத்தில் மேற்கொள்ள இருந்த சுற்றுப்பயணத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டு 28, 29 தேதிகளில் நடைபெறும்.

பேனாமுள் Karthick
✍️ *தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை*

வங்கக் கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில் தமிழகத்தில் செப்டம்பர் 16, 17, 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

பேனாமுள் Karthick
✍️ *அண்ணாவின் 117வது பிறந்தநாள் திருவுருவ சிலைக்கு முதல்வர் மரியாதை*

அண்ணாவின் 117வது பிறந்த நாளையொட்டி இன்று அண்ணா சாலையில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

பேனாமுள் Karthick
✍️ *சுற்றுலா வாகனம் கவிழ்ந்து விபத்து*

கொடைக்கானல் அருகே 100 அடி பள்ளத்தில் சுற்றுலா வாகனம் கவிழ்ந்து விபத்துகுள்ளானது.

பேனாமுள் Karthick
✍️ *எலும்பு முறிவுக்கு உடனே தீர்வு*

உடைந்த எலும்புகளை சரிசெய்ய போன் க்ளூ எனும் புதிய எலும்பு பசையை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது எலும்பு முறிவுகளை மூன்று நிமிடங்களுக்குள் குணப்படுத்த உதவும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

பேனாமுள் Karthick
✍️ *அன்புக்கரங்கள் திட்டம் இன்று துவக்கம்*

பெற்றோர் இருவரையும் இழந்த அல்லது ஒருவரை இழந்து மற்றொருவரால் பராமரிக்க இயலாத குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திட அன்புக்கரங்கள் திட்டம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.

இத்திட்டத்தை சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடக்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.

பேனாமுள் Karthick
✍️ *தவெக கட்சிக்கு கொள்கை கிடையாது: அமைச்சர் நாசர்*

தவெக கட்சிக்கு கொள்கை கிடையாது என அமைச்சர் நாசர் கூறினார். திருவள்ளூர் மத்திய மாவட்டம் ஆவடி ரயில் நிலையம் அருகே உள்ள திமுக அலுவலகத்தில் ஓரணியில் தமிழ்நாடு சார்பில் அமைச்சர் நாசர் செய்தியாளர்களை சந்தித்த போது கூறினார்.

பேனாமுள் Karthick
✍️ *தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன் : மக்களை கவரும் திமுக வாசக பேனர்*

தமிழகம் முழுவதும் திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறிய தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன் வாசகம் அடங்கிய பேனர் வைக்கப்பட்டுள்ளது.

பேனாமுள் Karthick
✍️ *ராயப்பேட்டை பகுதியில் வெறிநாய் கடித்து ஒருவர் உயிரிழப்பு*

ராயப்பேட்டை பகுதியை சேர்ந்த முகமது நஸ்ருதீன் ஆட்டோ டிரைவரான இவர் ரேபிஸ் நோய் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பேனாமுள் Karthick
✍️ *வருமான வரி தாக்களுக்கு இன்று கடைசி நாள்*

 கடந்த நிதியாண்டில் ஈட்டிய வருவாய்க்கு வருமான வரி படிவத்தை தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாள்.

பேனாமுள் Karthick
✍️ *விஜய்யால் தி மு க கூட்டணி பாதிக்காது : வைகோ*

 மதிமுக சார்பில் இன்று நடைபெற உள்ள மாநாட்டுக்காக திருச்சி விமான நிலையத்துக்கு நேற்று வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் செய்தியாளர்களிடம் தவெக தலைவர் விஜயின் அரசியல் பிரவேசம் திமுக கூட்டணியை பாதிக்காது என கூறினார்.

செய்தி
*பேனாமுள் இதழ்*
Comments