16/9/2025 இன்றைய பேனாமுள் பத்திரிகை செய்திகள்
தேதி
16/9/2025

🌷 *பேனாமுள் பத்திரிகை செய்திகள்* 🌷

*குறள்* : *472*
ஒல்வ தறிவ தறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாத தில்.

தனக்குப் பொருந்தும் செயலையும் அதற்காக அறிய வேண்டியதையும் அறிந்து அதனிடம் நிலைத்து முயல்கின்றவர்க்கு முடியாதது ஒன்றும் இல்லை.

பேனாமுள் Karthick
✍️  *செப். 16*
*பெட்ரோல் விலை*-100.80
  *டீசல் விலை*-92.39
   *சி.என்.ஜி* - 91.50

பேனாமுள் Karthick
✍️ *பங்கு சந்தை நிலவரம்*
*நிப்டி* :  25069.20
*பேங்க் நிப்டி* : 54887.85
*சென்செக்ஸ்*: 81785.74

பேனாமுள் Karthick
✍️ *தங்கம் விலை*
22 Kதங்கம்/ g. : ₹ 10180
24 Kதங்கம்/ g. : ₹ 11102
 வெள்ளி    /g   : ₹ 143.00

பேனாமுள் Karthick
✍️ *திருவேற்காடு, பருத்திப்பட்டு - கோலடி சாலையில் ரோடு  மற்றும் தெருவிளக்கு வேண்டி மக்கள் கோரிக்கை*

திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பருத்திப்பட்டு -கோலடி சாலையிலிருந்து ஆவடி,திருவேற்காடு, அயப்பாக்கம், அம்பத்துார், அத்திப்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் இந்த சாலையை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
இந்த பகுதியில் தனியார் பள்ளிகள், கல்லுாரிகள், சிறு, குறு கடைகள் போன்றவை இருந்து வருகிறது 
ஒன்றரை கி.மீ., துாரமுள்ள இந்த சாலையின் இருபுறமும் கருவேல மரங்கள் சூழ்ந்து காணப்படுகிறது.
சாலைகள் குண்டும் குழியுமாக படுமோசமாக உள்ளது இந்த வழியாக ஒரு அவசர நோயாளிகளை அழைத்து செல்லும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள்   நேரத்திற்கு செல்ல முடியவில்லையாம் அப்படியும் சென்றால் சாலையில் உள்ள பள்ளங்களை கடந்து செல்வதற்குள் சில அசம்பாவிதங்கள் நடந்து விடுகிறது
வாகன ஓட்டிகள் சற்று தடுமாறினால் கூட பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது மழை காலத்தில் சாலையில் தண்ணீர் தேங்கி குட்டைகள் போல் காட்சியளிக்கிறது.

இதனால் வாகன ஓட்டிகள் குட்டையை சுற்றி செல்லும் அவலநிலையில் உள்ளது.பெரும்பாலான மின் விளக்குகளும் சேதமடைந்துள்ளன மீதமுள்ள சில தெருவிளக்குகளையும் இலை கொடிகள் சூழ்ந்துள்ளன இதனால் விபத்து ஏற்ப்பட்டு உயிர்பலி ஏற்படுகிற நிலையில் உள்ளது.

சம்பந்தப்பட்ட திருவேற்காடு நகராட்சி அதிகாரிகள் மக்கள் நலனை கருத்தில் வைத்து மழைக்கு முன் சாலையை சீரமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் பணிவான வேண்டுகோளக உள்ளது.

✍️ *விவசாய மின் இணைப்புகளுக்கு தமிழக அரசு ஒப்புதல்*

50,000 விவசாய மின் இணைப்பு வழங்கும் பணிகளை துவக்க மின் வாரியத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

பேனாமுள் Karthick
✍️ *உணவகங்களில்  விலை உயர்வு*

பல உணவகங்களில் இட்லி, தோசை, பொங்கல், சாப்பாடு என உணவு பொருட்கள் விலை உயர்ந்துள்ளது.

பேனாமுள் Karthick
✍️ *விரைவில் நகர நில அளவை பணி*

புதிதாக தரம் உயர்த்தப்பட்ட நகராட்சி, மாநகராட்சிகளில் நகர நில அளவை பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

பேனாமுள் Karthick
✍️ *பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்*

பிரதமர் மோடியின் பிறந்த நாள் முன்னிட்டு 'ஸ்வஸ்த் நாரி சஷக்த் பரிவார் அபியான்' என்ற பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை மத்திய அரசு நாடு முழுவதும் நாளை (செப். 17) முதல் அக். 2 வரை நடத்துகிறது.

அனைத்து துணை, ஆரம்ப நகர்ப்புற சுகாதார நிலையங்களில் நடத்தப்படவுள்ளது.

பேனாமுள் Karthick
✍️ *செப்.18ல் ஆர்ப்பாட்டம்*

ராமநாதபுரம்; தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் 'டெட்' தகுதித்தேர்வில் இருந்து முழு விலக்கு அளிக்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செப். 18 மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

பேனாமுள் Karthick
✍️ *அம்பத்துாரில் சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றம்*

அம்பத்துாரில் சிங்கப்பூர் ஷாப்பிங் வணிக வளாகத்திலிருந்து ஸ்டெட்போர்டு மருத்துவ மனை வரையிலான 1 கி.மீ. துாரத்திற்கு நடைபாதை மற்றும் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்றுநடந்தது.

பேனாமுள் Karthick
✍️ *திருவேற்காட்டில் நகை திருடியவர்கள் கைது*

திருவேற்காடு: கடந்த 12ம் தேதி வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடி அதை அடகு வைத்து சொகுசாக வாழ்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

பேனாமுள் Karthick
✍️ *மக்கள் குறைதீர் கூட்டம் 365 மனுக்கள் ஏற்பு*

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் தலைமையில் நேற்று நடந்தது. குறைதீர் கூட்டத்தில் 365 மனு ஏற்கப்பட்டது.

பேனாமுள் Karthick
✍️ *ராமேஸ்வரம்- ராமநாதபுரம் இடையே மின்சார ரயில் சேவை இன்று முதல் துவக்கம்*

திருச்சி -ராமேஸ்வரம், கோவை - ராமேஸ்வரம், ஓகா - ராமேஸ்வரம் மற்றும் ராமேஸ்வரம் - திருப்பதி ஆகிய நான்கு விரைவு ரயில்கள் இன்று முதல் மின்சார இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது.

பேனாமுள் Karthick
✍️ *பி.எட் மற்றும் எம்.எட் படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கை நீட்டிப்பு*

பி.எட். மற்றும் எம்.எட். படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்ப பதிவு வருகிற 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி துறை தெரிவித்துள்ளது.

பேனாமுள் Karthick
✍️ *சென்னையில் விஜய் பிரசாரம் அனுமதி கோரி மனு*

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சென்னையில் இரண்டு நாட்கள் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்ள அனுமதி கோரி, அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

பேனாமுள் Karthick
✍️ *மாதம் ரூ.2000 அன்புக்கரங்கள் திட்டம் தொடக்கம்*

பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகளை அரவணைக்கும் திட்டமான ‘அன்புக் கரங்கள்’ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் தொaடங்கி வைத்து திட்ட பயனாளிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.

பேனாமுள் Karthick
✍️ *மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.3000 கோடி வங்கி கடன்*

சேலத்தில் இன்று நடைபெறும் விழாவில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கு ரூ.3000 கோடி வங்கி கடன் இணைப்புகள் மற்றும் அடையாள அட்டைகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று வழங்குகிறார்.

பேனாமுள் Karthick
✍️ *செவிலியர்களுக்கு பணி நியமன ஆணை*

வரும் 22ம் தேதி தமிழக முதல்வரால் சென்னை கலைவாணர் அரங்கில் 1,231 கிராம சுகாதார செவிலியர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கபடவுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

பேனாமுள் Karthick
✍️ *திறன் போட்டிக்கு 30ம்தேதிக்குள் பதிவு*

நான் முதல்வன் திட்டத்தின் தமிழ்நாடு திறன் போட்டிகள்-2025க்கு வருகிற 30ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என திறன் மேம்பாட்டுக்கழகம் தெரிவித்துள்ளது.

https://naanmudhalvan.tn.gov.in/tnskills/ எனும் இணையதள பக்கம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

பேனாமுள் Karthick
✍️  *வாகனங்கள், இயந்திரங்கள் தயார்: மாநகராட்சி தகவல்*

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தாழ்வான பகுதிகளில் நீரை அகற்ற வாகனங்கள், இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளதாக மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

பேனாமுள் Karthick
✍️ *கிராண்ட் ஸ்விஸ் செஸ் வைஷாலி சாம்பியன்*

கிராண்ட் ஸ்விஸ் செஸ் மகளிர் பிரிவு போட்டியில் தமிழகத்தை சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டர் வைஷாலி மீண்டும் சாம்பியன் பட்டம் வென்று, கேண்டிடேட்ஸ் 2026 போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

பேனாமுள் Karthick
✍️ *இந்தியா அமெரிக்கா வர்த்தக பேச்சு இன்று மீண்டும் தொடக்கம்*

 இந்தியா அமெரிக்கா இருதரப்பு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை இன்று மீண்டும் தொடங்குகிறது.

பேனாமுள் Karthick
✍️ *ம.தி.மு.க திருச்சி மாநாட்டில் தீர்மானம்*

 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிக்கு மதிமுக பணியாற்றும் என்று மதிமுக மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பேனாமுள் Karthick
✍️ *பதிவுத் துறைக்கு கூட்ட அரங்கம் திறப்பு*

 சென்னை ராஜாஜி சாலையில் 2.16 கோடி ரூபாயில் புதுப்பிக்கப்பட்ட பதிவு துறையின் நவீனக் கூட்ட அரங்கு நேற்று திறக்கப்பட்டது.

பேனாமுள் Karthick
 ✍️ *தியேட்டர்களில் பிரதமர் மோடி திரைப்படம்*

 செப்டம்பர் 18ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை சென்னையில் உள்ள முக்கிய தியேட்டர்களில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசின் சாதனைகள் குறித்து சிறப்பு திரைப்படம் திரையிடப்படும் என தமிழக பா.ஜ செய்தி தொடர்பாளர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

செய்தி
*பேனாமுள் இதழ்*
Comments