தேதி
17/9/2025
🌷 *பேனாமுள் பத்திரிகை செய்திகள்* 🌷
*குறள்* : *473*
உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்.
தன்னுடைய வலிமை இவ்வளவு என அறியாமல் ஊக்கத்தால் முனைந்து தொடங்கி இடையில் அதை முடிக்க வகையில்லாமல் அழிந்தவர் பலர்.
பேனாமுள் Karthick
✍️ *செப். 17*
*பெட்ரோல் விலை*-100.80
*டீசல் விலை*-92.39
*சி.என்.ஜி* - 91.50
பேனாமுள் Karthick
✍️ *பங்கு சந்தை நிலவரம்*
*நிப்டி* : 25239.10
*பேங்க் நிப்டி* : 55147.60
*சென்செக்ஸ்*: 82380.69
பேனாமுள் Karthick
✍️ *தங்கம் விலை*
22 Kதங்கம்/ g. : ₹ 10260
24 Kதங்கம்/ g. : ₹ 11189
வெள்ளி /g : ₹ 144.00
பேனாமுள் Karthick
✍️ *ஆயுதபூஜை, தீபாவளி சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு*
சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்று (புதன்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
பேனாமுள் Karthick
✍️ *அமித்ஷாவுடன் எடப்பாடியார் நேரில் சந்திப்பு*
டெல்லியில் மத்திய மந்திரி அமித்ஷாவை அவருடைய இல்லத்தில் வைத்து எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து பேசினார்.
பேனாமுள் Karthick
✍️ *புதிய பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்தார் துணை முதல்வர்*
சேலத்தில் 17 புதிய பேருந்துகளின் சேவையை துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைத்தார்.
பேனாமுள் Karthick
✍️ *சென்னை மாநகராட்சியில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் தீவிர தூய்மை பணி*
சென்னை மாநகராட்சியில் உள்ள 1,363 பேருந்து நிறுத்தங்களில் நேற்று (16.09.2025) தீவிரத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.
பேனாமுள் Karthick
✍️ *சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்*
திருப்பதி திருக்குடைகள் ஊர்வலத்தை முன்னிட்டு சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *மாமூல் கேட்டு நிறைமாத கர்ப்பிணியை தாக்கிய கும்பல்*
சென்னை பாடி பகுதியில் மாமுல் வேல்முருகன் மற்றும் அவரது மனைவியை கத்தியை கொண்டு ஒரு கும்பல் சரமாரியாக தாக்கியது.
பேனாமுள் Karthick
✍️ *சென்னை வானகரத்தில் கார் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு*
வானகரத்தில் அதிவேகமாக வந்த கார் சாலையில் இருந்த இருசக்கர வாகனங்கள் ஆட்டோக்கள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பேனாமுள் Karthick
✍️ *தமிழ்நாட்டில் வாக்குச்சாவடிகளின் மொத்த எண்ணிக்கை 74,000-ஆக உயர்வு*
தமிழ்நாட்டில் தற்போது 68,000 வாக்குச் சாவடிகள் இருக்கும் நிலையில் புதிதாக 6,000 வாக்குச் சாவடிகள் உருவாக்கப்பட்டு 74,000 ஆக உயர்கிறது.
பேனாமுள் Karthick
✍️ *4 புதிய தொழிற்பேட்டைகளை திறந்து வைத்தார் முதல்வர்*
தமிழகத்தில் 4 புதிய தொழிற்பேட்டைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பேனாமுள் Karthick
✍️ *23ம் தேதி தசரா திருவிழா துவக்கம்*
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் வரும் 23ம் தேதி தசரா திருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அக்.2ம் தேதி மகிஷாசூரசம்ஹாரம் நடக்கிறது.
பேனாமுள் Karthick
✍️ *சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்படும்: திமுக அறிவிப்பு*
பெரியாரின் பிறந்தநாளை ஒட்டி இன்று சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்படும் என திமுக அறிவித்துள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *வருமான வரி பாக்கி உள்ளதாக நோட்டீஸ் வந்ததால் பெண் அதிர்ச்சி*
தூத்துக்குடியில் ரூ.12.86 கோடி வருமான வரி பாக்கி உள்ளதாக நோட்டீஸ் வந்ததால் பெண் அதிர்ச்சி அடைந்தார்.
பேனாமுள் Karthick
✍️ *தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது: சென்னை மாநகராட்சி தகவல்*
சென்னையில் 46,122 தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த டிரம்ப்*
பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசி வாயிலாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பேனாமுள் Karthick
✍️ *நாகையில் விஜய் பிரசாரத்துக்கு நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி*
நாகை புத்தூர் ரவுண்டானாவில் த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரம் செய்ய போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.
பேனாமுள் Karthick
✍️ *திமுக முப்பெரும் விழா: கரூர் மாவட்டத்தில் இன்று போக்குவரத்து மாற்றம்*
சுக்காலியூர் முதல் புலியூர் வரை கனரக வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மாயனூர் டோல் பிளாசாவை அடுத்து 2 கி.மீட்டரில் உப்பிடமங்கலம் பிரிவு வழியாக அரவக்குறிச்சி பைபாஸ் வழியாக செல்லும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
பேனாமுள் Karthick
✍️ *பிரதமர் மோடிக்கு இன்று 75-வது பிறந்த நாள்*
பிரதமர் மோடி இன்று 75வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
பேனாமுள் Karthick
✍️ *6ஜி தொழில்நுட்பம்; ஐ.ஐ.டி.ஆய்வாளர் தகவல்*
'6ஜி' எனப்படும் ஆறாம் தலைமுறை தொழில்நுட்பம் இந்தியாவில் 2030ல் அறிமுகமாகும் என ஐ.ஐ.டி. ஹைதராபாதின் தொலைத்தொடர்பு ஆய்வாளர் கிரண் குச்சி தெரிவித்தார்.
பேனாமுள் Karthick
✍️ *வேலு நாச்சியாருக்கு சென்னையில் சிலை*
சுதந்திர போராட்ட வீராங்கனை வேலு நாச்சியாரின் சிலை சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் செப்.19ம் தேதி திறக்கப்படுகிறது.
பேனாமுள் Karthick
✍️ *இன்று 19 மாவட்டங்களில் கனமழை*
தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட 19 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *ரயில் பாதை 10 ஸ்டேஷன்களுடன் திட்ட அறிக்கை தயார்*
ஆவடி - ஸ்ரீபெரும்புதுார் - கூடுவாஞ்சேரி புதிய ரயில் பாதை திட்டத்தை 3,136 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்திட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *மாற்று திறனாளிகளுக்கு ஒருங்கிணைந்த சேவை மையம் திறப்பு*
மாற்றுத்திறனாளிகளுக்கான அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையிலான விழுதுகள் சேவை மையம் பெருங்குடி நகர்ப்புற சுகாதார மையத்தில் நேற்று அமைச்சர் சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
பேனாமுள் Karthick
✍️ *மங்களூர் ரயில் மீண்டும் இயக்கம்*
மங்களூர் விரைவு ரயில் வரும் 19 முதல் மீண்டும் எழும்பூரில் இருந்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *100 கிமீ வரை பேருந்து கட்டணம் இல்லை*
மகளிர் சுய உதவிக்குழுவினரின் உற்பத்தி பொருட்களை எடுத்துச் செல்ல 100 கிமீ வரை பேருந்து கட்டணம் இல்லை என சேலத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார்.
பேனாமுள் Karthick
✍️ *இஸ்லாமிய மாணவர்களுக்கு உதவித்தொகை: முதல்வர் வழங்கினார்*
தமிழ்நாடு வக்பு வாரியத்தின் சார்பில் பொருளாதார தடையினால் உயர்கல்வியை தொடர இயலாத இஸ்லாமிய மாணவ மாணவிகள் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பை தொடர கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்து கல்வி உதவித்தொகையை வழங்கினார்.
பேனாமுள் Karthick
✍️ *சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய புதிய திட்டம்*
சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், ரூ.14,000 கோடியில் புதிய திட்டம் செயல்படுத்தப்டுவதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பேனாமுள் Karthick
✍️ *திருவள்ளூரில் மகளிர் குழு உறுப்பினர்களுக்கு வங்கி கடன்*
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் 15,757 மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு ரூ.167.50 கோடி வங்கி கடன் உதவிக்கான காசோலை மற்றும் அடையாள அட்டைகள் ஆட்சியர் மு.பிரதாப் மற்றும் வி.ஜி. ராஜேந்திரன் ஆகியோர் வழங்கினர்.
பேனாமுள் Karthick
✍️ *ஆவடி கமிஷனரகம்: குறும்படம் வெளியீடு*
ஆவடி போலீஸ் கமிஷனரகம் சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகள்
குறித்து '*நில் கவனி நேசி*' என்ற விழிப்புணர்வு குறும்படம் நேற்று வெளியிடப்பட்டது.
பேனாமுள் Karthick
✍️ *ஆவடி கமிஷனரகம் சார்பில் விழிப்புணர்வு ரீல்ஸ் போட்டி அறிவிப்பு*
ஆவடி போலீஸ் கமிஷனரகம் சார்பில் சாலை பாதுகாப்பு குறித்து 90 நிமிட விழிப்புணர்வு ரீல்ஸ் போட்டி அறிவிக்கப்பட்டது.
அக்., 5ம் தேதி வரை பெயர், முகவரி, மொபைல் போன் எண் மற்றும் சமூக வலைதள முகவரியை avdactrafficplanning@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் அனுப்ப வேண்டும்.
சிறந்த விழிப்புணர்வு ரீல்ஸ் தேர்வு செய்யப்பட்டு, ரொக்க பரிசு வழங்கப்பட உள்ளது. மேலும் விபரங்களுக்கு 94458 25100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
செய்தி