18/9/2025 இன்றைய பேனாமுள் பத்திரிகை செய்திகள்
தேதி
18/9/2025

🌷 *பேனாமுள் பத்திரிகை செய்திகள்* 🌷

*குறள்* : *474*
அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்.

மற்றவர்களோடு ஒத்து நடக்காமல், தன் வலிமையின் அளவையும் அறியாமல், தன்னை வியந்து மதித்துக் கொண்டிருப்பவன் விரைவில் கெடுவான்.

பேனாமுள் Karthick
✍️  *செப். 18*
*பெட்ரோல் விலை*-100.80
  *டீசல் விலை*-92.39
   *சி.என்.ஜி* - 91.50

பேனாமுள் Karthick
✍️ *பங்கு சந்தை நிலவரம்*
*நிப்டி* :  25330.25
*பேங்க் நிப்டி* : 55493.30
*சென்செக்ஸ்*: 82693.71

பேனாமுள் Karthick
✍️ *தங்கம் விலை*
22 Kதங்கம்/ g. : ₹ 10240
24 Kதங்கம்/ g. : ₹ 11167
 வெள்ளி    /g   : ₹ 142.00

பேனாமுள் Karthick
✍️ *சென்னை,பாடி,88 வது வார்டு,M G ரோடு,குமரன்நகரில் ரோட்டில் மறுபடியும் பள்ளம் ஏற்பட்டிருக்கிறது எந்நேரத்திலும் பள்ளத்தை சுற்றியுள்ள பகுதிகள் உள்வாங்கும் என்பதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் வேண்டுகோள்*

பேனாமுள்karthick
✍️ *இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை*

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பி.இ.,பி.டெக்.,எம்.பி.ஏ., எம்.சி.ஏ.எம்.எஸ்சி. கல்வி தகுதி உள்ளவர்கள் மற்றும் வயது வரம்பு 25 - 35 / 30- 40 குள் இருக்கவேண்டும்.
ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
3.10.2025 கடைசி நாளாகும்
முழு விவரங்களுக்கு: iob.in என்ற இணையதளத்தை பார்க்கவும்

பேனாமுள் Karthick
✍️ *கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் புதிய காவல் நிலையம் பயன்பாட்டுக்கு வந்தது*

நேற்று (17.09.2025) முதல் காவல் நிலையம் பயன்பாட்டிற்கு வந்து முழுமையாக செயல்படத் தொடங்கியுள்ளது.

பேனாமுள் Karthick
✍️ *2 கிலோ கொக்கைன் சென்னையில் பறிமுதல்*

எத்தியோப்பியா நாட்டில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு வந்த விமானத்தில் ரூ.20 கோடி மதிப்புள்ள 2 கிலோ கொக்கைன் போதை பொருளை சாக்லேட் பாக்கெட்டில் கடத்தி வந்த சீன நாட்டை சேர்ந்த பயணிகள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பேனாமுள் Karthick
✍️ *காவல்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் அண்ணாபதக்கம் அறிவிப்பு*

தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 150 காவல் அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் அண்ணாபதக்கம் தமிழகஅரசு அறிவித்துள்ளது.

பேனாமுள் Karthick
✍️ *ரயில் டிக்கெட் பதிவில் மாற்றம்*

பொது முன்பதிவு டிக்கெட்களுக்கு ஆதார் கார்டு இனி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 1ம் தேதி முதல் ஐஆர்சிடிசி இணையத்தளத்தில் அல்லது மொபைல் ஆப்- இல் காலை 10 மணி முதல் 10:15 மணி வரை (முதல் 15 நிமிடம்)பொது முன்பதிவு டிக்கெட் எடுக்க ஆதார் கார்டு ஒடிபி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பேனாமுள் Karthick
✍️ *ம.நீ.ம தேர்தல் ஆலோசனை கூட்டம்*

சென்னை டி.என்.ராஜரத்தினம் கலையரங்கில் இன்று (செப்.18) தொடங்கி 21ம் தேதி வரை 4 நாட்களுக்கு மண்டல வாரியாக நடைபெறவுள்ளது.

பேனாமுள் Karthick
✍️  *21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு*

தமிழ்நாட்டில் இன்று 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

பேனாமுள் Karthick
✍️ *5 புதிய பஸ் நிலையங்கள் திறக்க திட்டம்*

இந்தாண்டு இறுதிக்குள் ஐந்து புதிய பேருந்து முனையங்களை திறக்க திட்டமிடப்பட்டு, அவை பப்ளிக் - பிரைவேட் பார்ட்னர்ஷிப் முறையில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

பேனாமுள் Karthick
✍️ *வேலுநாச்சியார் சிலையை முதல்வர் நாளை திறந்து வைக்கிறார்*

கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள சுதந்திர போராட்ட வீராங்கனை ராணி வேலுநாச்சியார் திருவுருவச் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்.

பேனாமுள் Karthick
✍️ *மாணவர்கள் குறும்படங்கள் எடுக்க வேண்டும்: யுஜிசி உத்தரவு*

பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த குறும்படங்களை எடுக்க மாணவ-மாணவிகளுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

பேனாமுள் Karthick
✍️ *திருச்சியில் இருந்து டெல்லிக்கு நேரடி விமான சேவை துவக்கம்*

நேற்று முதல் திருச்சியில் இருந்து டெல்லிக்கு நேரடி விமான சேவையை இன்டிகோ நிறுவனம் தொடங்கியது. இந்த விமானம் காலை 6 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, காலை 9.15 மணிக்கு டெல்லியை சென்றடைகிறது.

பேனாமுள் Karthick
✍️ *மதுராந்தகத்தில் புதிய சர்வதேச நகரம்*

சென்னை அருகே மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான மாஸ்டர் பிளான் தயாரிக்க தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் டெண்டர் கோரியுள்ளது.

பேனாமுள் Karthick
✍️ *மாநகராட்சி பணியாளர்கள் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு*

பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றனர்.

பேனாமுள் Karthick
✍️ *வருகிற 21 ஆம் தேதி சூரிய கிரகணம்*

 சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் வரும்போது ஏற்படும் நிகழ்வு சூரிய கிரகணம் எனப்படுகிறது.இது இந்த மாதம் 21 ஆம் தேதி நிகழ்கிறது.

பேனாமுள் Karthick
✍️ *தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்*

 தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை வெள்ளிக்கிழமை சென்னையில் நடைபெற உள்ளது.கிண்டி ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை முகாம் நடைபெற உள்ளது.

 கலந்து கொள்பவர்கள் தங்கள் விவரங்களை தமிழ்நாடு தனியார் துறை வேலைவாய்ப்பு இணையதளத்தில் தங்கள் விவரங்களை www.tnprivatejobs.tn.gov.in பதிவேற்றம் செய்ய வேண்டும்.

பேனாமுள் Karthick
✍️ *திருவள்ளூரில் பழைய அரசு வாகனங்கள் பொது ஏலம் விட முடிவு*

 திருவள்ளூர் மாவட்ட வருவாய்த் துறையில் பயன்பாட்டில் இல்லாத 8 வாகனங்கள் பொதுஏலம் விடப்பட உள்ளன. அக்டோபர் 7 தேதி காலை கலெக்டர் அலுவலகத்தில் பொது ஏலம் விடப்படுகிறது. விபரங்களுக்கு கலெக்டர் அலுவலகம் டி பிரிவு தலைமை உதவியாளரை தொடர்பு கொள்ளலாம்.

பேனாமுள் Karthick
✍️ *ஆவடி மாநகராட்சி கமிஷனர் தகவல்*

 வடகிழக்கு பருவமழை காலம் துவங்க உள்ளதால் பொதுமக்களுக்கு தொற்று நோய்கள் பரவாமல் தடுக்கும் விதமாக ஆவடி மாநகராட்சிக்கு உட்பட பகுதிகளில் அமைந்துள்ள காலி மனைகளில் தேங்கி உள்ள முட்புதர்கள் குப்பை கழிவுகள் ஆகியவற்றை காலி மனை உரிமையாளர்கள் சுத்தம் செய்து நீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். மேலும் தங்கள் வீட்டில் உருவாகும் கழிவுநீரை முறையாக நீர்த்தேக்க தொட்டி அமைத்து அதில் விட வேண்டும்.
சாலைகளிலோ அக்கம் பக்கத்தில் உள்ள காலிமனைகளிலோ விடக்கூடாது.
காலிமனைகளில் குப்பை கழிவுகள் அகற்ற தவறினால் காலிமனை உரிமையாளர்கள் மீது தக்க சட்ட நடவடிக்கை மேற்கொள்வதுடன் அபராதமும் விதிக்கப்படும் என ஆவடி மாநகராட்சி ஆணையர் சரண்யா தெரிவித்துள்ளார்.

செய்தி
*பேனாமுள் இதழ்*
Comments