1/9/2025 இன்றைய பேனாமுள் பத்திரிகை செய்திகள்
தேதி
1/9/2025

🌷 *பேனாமுள் பத்திரிகை செய்திகள்* 🌷

*குறள்* : *458*
மனநலம் நன்குடைய ராயினுஞ் சான்றோர்க்
கினநலம் ஏமாப் புடைத்து.

மனதின் நன்மையை உறுதியாக உடையவராயினும் சான்றோர்க்கு இனத்தின் நன்மை மேலும் நல்ல காவலாக அமையும்.

பேனாமுள் Karthick
✍️  *செப். 01*
*பெட்ரோல் விலை*-100.80
  *டீசல் விலை*-92.39
   *சி.என்.ஜி* - 91.50

பேனாமுள் Karthick
✍️ *தமிழ்நாடு காவல்துறையின் சட்டம் - ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக பொறுப்பேற்றார் வெங்கட்ராமன்*

தமிழகத்தின் புதிய டிஜிபியாக (பொறுப்பு) வெங்கட்ராமன் நேற்று மதியம் பதவியேற்றார். அவரிடம் அனைத்து பொறுப்புகளையும் ஓய்வு பெற்ற டிஜிபி சங்கர் ஜிவால் ஒப்படைத்தார்.

பேனாமுள் Karthick
✍️ *இந்தியா-சீனா ஒத்துழைப்பு மனிதகுலத்தின் நலனுக்கு வழி வகுக்கும் : பிரதமர்*

இரு நாடுகளையும் சேர்ந்த 280 கோடி மக்களின் நலன்கள் நமது ஒத்துழைப்புடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்தியா-சீனா ஒத்துழைப்பு மனிதகுலத்தின் நலனுக்கு வழி வகுக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பேனாமுள் Karthick
✍️ *அமெரிக்காவுக்கு தபால் சேவைகள் நிறுத்தம்*

மறு அறிவிப்பு வரும் வரை அமெரிக்காவுக்கான அனைத்து வகை தபால் சேவைகளும் முற்றிலும் நிறுத்தப்படுவதாக இந்திய தபால் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பேனாமுள் Karthick
✍️ *கனமழை வெள்ளம் நிலச்சரிவு ஏற்படும் : வானிலை மையம் கணிப்பு*

செப்டம்பர் மாதம் இந்தியா மழைக்காலத்தை எதிர்கொள்ள உள்ளது. திடீர் வெள்ளம் நிலச்சரிவுகள் ஏற்படும் என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.

பேனாமுள் Karthick
✍️ *டீ, காபி விலையை உயர்த்தி டீ கடை வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு*

3 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் டீ, காபி விலை உயர்த்தப்பட்டுள்ளது. டீ ரூ.15 ஆகவும், காபி ரூ.20 ஆகவும் விற்பனை செய்யப்படும் என்று டீக்கடை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

பேனாமுள் Karthick
✍️ *தெலங்கானாவுக்கு ரூ.50 லட்சம் வெள்ள நிவாரண நிதி: நடிகர் பாலகிருஷ்ணா அறிவிப்பு*

தெலங்கானாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.50 லட்சம் வழங்குவதாக நடிகர் பாலகிருஷ்ணா அறிவித்தார்.

பேனாமுள் Karthick
✍️ *சென்னையில் 1,869 பிள்ளையார் சிலைகள் கரைக்கப்பட்டுள்ளன*

சென்னையில் அனுமதிக்கப்பட்ட 4 இடங்களில் இதுவரை 1,869 பிள்ளையார் சிலைகள் கரைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

பேனாமுள் Karthick
✍️ *வணிக காஸ் சிலிண்டர் விலை ரூ.51.50 குறைந்தது*

வணிக பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டர் விலை ரூ.51.50 குறைந்து, ரூ.1,738க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பேனாமுள் Karthick
✍️ *பர்னிச்சர் கடைக்காரரை வெட்டிய நான்கு பேர் கைது*

கொடுங்கையூர்: பர்னிச்சர் கடைக்காரரை கத்தியால் வெட்டிய, நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

பேனாமுள் Karthick
✍️ *ஆவடியில் மழைநீருடன் கழிவு தேக்கம் பொதுமக்கள் சாலை மறியல்*

மழைநீர் செல்ல வழியின்றி ஆவடி அருகே கன்னடபாளையம் பகுதியில் மழைநீர் தேங்கி பாதிப்பு ஏற்பட்டது. இதை கண்டித்து மங்களம் நகரில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பேனாமுள் Karthick
✍️ *ஆவடி அருகே விஷ பூச்சி கடித்து இளம்பெண் பலி*

ஆவடி அடுத்த கண்ணபாளையம்,பாரதி நகரைச் சேர்ந்தவர் ஷர்மிளா 19 தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த 29ம் தேதி காலை துாங்கி எழுந்தபோது உடலில் ஏதோ பூச்சி கடித்து அரிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் வாயில் நுரை வந்து மயங்கி விழுந்துள்ளார்.

மேல் சிகிச்சைக்காக, சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். ஆவடி போலீசார் விசாரிக்கின்றனர்.

பேனாமுள் Karthick
✍️ *தமிழகத்தின் 38 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது*

விழுப்புரம், திருச்சி, மதுரை, நெல்லை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் குறிப்பாக விக்கிரவாண்டி, சமயபுரம், ஓமலூர் உள்ளிட்ட 38 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் நள்ளிரவு முதல் 5 முதல் 7 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு அமலுக்கு வந்தது.

பேனாமுள் Karthick
✍️ *ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை தமிழகம் வருகை*

ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக நாளை (செவ்வாய்க்கிழமை) தமிழகம் வருகிறார்.

பேனாமுள் Karthick
✍️ *புதினுடன் பிரதமர் மோடி இன்று பேச்சுவார்த்தை*

இன்று பிரதமர் மோடி ரஷிய அதிபர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

பேனாமுள் Karthick
✍️ *நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை இன்று முதல் இயங்கும் என அறிவிப்பு*

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. இன்று முதல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பேனாமுள் Karthick 
✍️ *சசிகாந்த் செந்தில் ராஜிவ்காந்தி மருத்துவமனைக்கு மாற்றம்*

தமிழகத்திற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை வழங்க கோரி உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்த காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் மேல் சிகிச்சைக்காக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பேனாமுள் Karthick
 ✍️ *ஆவடியில் ரயிலுக்கு அடியில் சிக்கி இளம் பெண் உயிரிழப்பு*

 ஆவடி ரயில் நிலையத்தில் உள்ள இரண்டாவது நடைமேடையில் ஓடும் ரயிலில் இருந்து இறங்கிய இளம் பெண் மேரி ரயிலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார் 

 ஆவடி ரயில்வே போலீசார் உடலை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

செய்தி
*பேனாமுள் இதழ்*
Comments