19/9/2025 இன்றைய பேனாமுள் பத்திரிகை செய்திகள்
தேதி
19/9/2025

🌷 *பேனாமுள் பத்திரிகை செய்திகள்* 🌷

*குறள்* : *475*
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.

பேனாமுள் Karthick
✍️  *செப். 19*
*பெட்ரோல் விலை*-100.80
  *டீசல் விலை*-92.39
   *சி.என்.ஜி* - 91.50

பேனாமுள் Karthick
✍️ *பங்கு சந்தை நிலவரம்*
*நிப்டி* :  25423.60
*பேங்க் நிப்டி* : 55727.45
*சென்செக்ஸ்*: 83013.96

பேனாமுள் Karthick
✍️ *தங்கம் விலை*
22 Kதங்கம்/ g. : ₹ 10199
24 Kதங்கம்/ g. : ₹ 11113
 வெள்ளி    /g   : ₹ 141.00

பேனாமுள் Karthick
✍️ *போக்குவரத்து விதிமீறல் என லிங்க் அனுப்பி மோசடி: காவல்துறை எச்சரிக்கை*

போக்குவரத்து விதிமீறல் தொடர்பான லிங்க் அனுப்பி மோசடி நடப்பதாக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. E-challan.apk என்று வரும் லிங்க்-ஐ யாரும் கிளிக் செய்ய வேண்டாம் என்றும் 
நீங்கள் பைக் அல்லது கார் உரிமையாளர் எனில் உங்களுக்கு பரிவாஹன் இ-சலான் என்கிற பெயரில் மெசேஜ் வரும் பெரும்பாலும் இது வாட்ஸ்அப் வழியாகத்தான் வரும் ஆதலால் எச்சரிக்கையாக கவனமாக இருக்க காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

பேனாமுள் Karthick
✍️ *செப்.20, 21ல் திமுக பொதுக்கூட்டங்கள்*

தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என்ற தலைப்பில் செப்.20, 21ல் திமுக பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்று தலைமைகழகம் அறிவித்துள்ளது.

பேனாமுள் Karthick
✍️ *பனை மரத்தை வெட்ட ஆட்சியர் அனுமதி கட்டாயம்*

பனை மரத்தினை வேரோடு வெட்டி விற்கவும் செங்கல் சூளைகளுக்குப் பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

பேனாமுள் Karthick
✍️ *டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு*

ஹால் டிக்கெட்டுகள், www.tnpsc.gov.in, www.tnpscexams.in என்ற தேர்வாணையத்திற்கான இணையதளங்களில் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.

பேனாமுள் Karthick
✍️ *பஸ் ஸ்டாப் தூய்மைப்படுத்தும் பணி*

நேற்று அண்ணாநகர், கோடம்பாக்கம் 8 மற்றும் 10வது மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 2ம் கட்டமாக பேருந்து நிழற்குடைகளை தூய்மை செய்து பழுதுகளை கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்றது.

பேனாமுள் Karthick
✍️ *கோயம்பேட்டில் ஆயுதபூஜை சிறப்பு சந்தை*

 ஆயுத பூஜை சிறப்பு சந்தை கோயம்பேடு மார்க்கெட்டில் அடுத்த வாரம் இறுதியில் நடைபெற இருக்கிறது.இந்த சிறப்பு சந்தை 5 நாட்கள் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

பேனாமுள் Karthick
✍️ *இரண்டாம் நிலை காவலருக்கு விண்ணப்பிக்க செப்.21 கடைசி*

காவல் சிறை மற்றும் தீயணைப்பு துறைகளுக்கு இரண்டாம் நிலை காவலர்களை தேர்வு செய்ய ஆகஸ்ட் 21ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி நாள்.

பேனாமுள் Karthick
✍️ *மொபைல் செயலியில் கிரெடிட் கார்டு வழியாக வாடகை செலுத்த முடியாது*

போன்பே, பேடிஎம், கிரெடிட், அமேசான் பே' உள்ளிட்ட மொபைல் செயலிகளின் வாயிலாக கிரெடிட் கார்டை பயன்படுத்தி வாடகை கொடுக்கும் வழிமுறை நிறுத்தப்பட்டுள்ளது.

யு.பி.ஐ நெப்ட், ஆர்.டி.ஜி.எஸ். ஐ.எம்.பி.எஸ். வழியாகவோ மற்றும் காசோலை வாயிலாகவோ தான் வாடகை செலுத்த முடியும்.

பேனாமுள் Karthick
✍️ *சென்னை ஒன் எனும் செயலி 22ல் துவக்கம்*

ஒரே டிக்கெட்டில் மாநகர பேருந்து, மின்சார ரயில் மெட்ரோ ரயில் ஆகியவற்றில் பயணிப்பதற்கான சென்னை ஒன் எனும் செயலியை வரும் 22ல் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளதாக கும்டா அதிகாரிகள் தெரிவித்தனர்.

பேனாமுள் Karthick
✍️ *அரக்கோணம் ரேனிகுண்டா ஜோலார்பேட்டை தடத்தில் மேம்பாலம் அமைக்க திட்டம்*

அரக்கோணம் - ரேனிகுண்டா, அரக்கோணம் - ஜோலார்பேட்டை தடத்தில் தற்போதுள்ள 13 ரயில்வே கேட்டுகளை நீக்கிவிட்டு மேம்பாலங்களை அமைக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.

பேனாமுள் Karthick
✍️ *திருவள்ளூரில் 58 போலீசார்கள் இடமாற்றம்*

திருவள்ளூர் மாவட்டத்தில்  58 போலீசாரை இடமாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி. விவேகானந்தாசுக்லா உத்தரவிட்டுள்ளார்.

பேனாமுள் Karthick
✍️ *செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து கூடுதலாக குடிநீர்: முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்*

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து ரூ.66.78 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட பிரதான குடிநீர் குழாய்கள் மூலம் கூடுதலாக 265மி.லிட்டர் குடிநீர் விநியோகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.

பேனாமுள் Karthick
✍️ *ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி விரைவில் தொடக்கம்*

முதற்கட்டமாக 1.5 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்துவதற்கு 13 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு விரைவில் பணியை தொடங்க உள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

பேனாமுள் Karthick
✍️ *ஆவடி - கூடுவாஞ்சேரி புதிய ரயில் வழித்தடம்*

ஆவடி முதல் கூடுவாஞ்சேரியை இணைக்க புதிய ரயில் பாதை திட்டம் தயாராகி வருகிறது. ரூ.4,081 கோடியில் இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

பேனாமுள் Karthick
✍️ *டிரம்புக்கு 12 அடியில் தங்க நிறத்தில் சிலை*

அமெரிக்காவில் அதிபர் டொனால்டு டிரம்ப், கையில் பிட்காயின் என்ற கிரிப்டோ கரன்சி எனப்படும் மெய்நிகர் நாணயம் வைத்திருப்பது போன்ற 12 அடி உயர தங்க நிறத்தாலான சிலை நிறுவப்பட்டுள்ளது.

பேனாமுள் Karthick
✍️ *ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இன்று*

ஆசிய கோப்பையில் இன்று ஓமனுடன் இந்திய அணி களமிறங்க உள்ளது.

செய்தி
*பேனாமுள் இதழ்*
Comments