தேதி
21/9/2025
🌷 *பேனாமுள் பத்திரிகை செய்திகள்* 🌷
*குறள்* : *476*
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும்.
ஒரு மரத்தின் நுனிக்கொம்பில் ஏறியவர், அதையும் கடந்து மேலே ஏற முனைந்தால் அவருடைய உயிர்க்கு முடிவாக நேர்ந்துவிடும்
பேனாமுள் Karthick
✍️ *செப். 21*
*பெட்ரோல் விலை*-100.80
*டீசல் விலை*-92.39
*சி.என்.ஜி* - 91.50
பேனாமுள் Karthick
✍️ *தங்கம் விலை*
22 Kதங்கம்/ g. : ₹ 11211
24 Kதங்கம்/ g. : ₹ 10280
வெள்ளி /g : ₹ 145.00
பேனாமுள் Karthick
✍️ *அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஸ்ரீ முருகன் ஏஜென்சி பெட்ரோல் நிலையத்தில் தொடர்ந்து டீசல் பலே திருட்டு*
21/9/2025 நேற்று இரவு ஒரு ஷிப்ட் டிசையர் டூர் காரின் டீசல் திருட்டு
நம்பர் : 10 முதலாவது மெயின் ரோடு, அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், முருகன் ஏஜென்சி என்ற பெட்ரோல் நிலையத்தில் டீசல் நிரப்பப்பட்டது காரில் ஏற்கனவே டீசலும் இருந்திருக்கிறது காரில் டீசல் டேங்க் அளவு 42 லிட்டர் ஆனால் ஸ்ரீ முருகன் ஏஜென்சி இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற பெட்ரோல் பங்கில் 46.07 இந்த அளவு டீசல் போடப்பட்டுள்ளது ரிசவில் வந்தாலும் கூட ஏற்கனவே காரில் குறைந்தபட்சம் 5 லிருந்து 7 லிட்டர் இருந்திருக்கலாம் இவர்கள் போட்டிருக்கிற 46 லிட்டரையும் சேர்த்தால் 53 லிட்டருக்கு மேல் வருகிறது எப்படி ஒரு சிப்ட் டிசையர் காரில் 53 லிட்டர் டீசல் பிடிக்கும் மக்களே உஷார் சம்பந்தப்பட்ட அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டு காவல் நிலைய காவலர்கள் விசாரித்து வருகிறார்கள்.
பேனாமுள்karthick
✍️ *வெளிநாட்டு பயண அனுபவம் பற்றி மனம் திறந்தார் முதல்வர்*
ஐரோப்பிய பயணமும் ஆக்ஸ்போர்டு நினைவுகளும் என்ற தலைப்பில் மக்களுடன் ஸ்டாலின் செயலியில் வந்துள்ள கேள்விகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வீடியோவில் பதில் அளித்தார்.
பேனாமுள் Karthick
✍️ *தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு*
நடிகர் மோகன்லாலுக்கு 2023ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *11.19% பொருளாதார வளர்ச்சியே திராவிட மாடலுக்கு சாட்சி: முதல்வர்*
11.19% பொருளாதார வளர்ச்சியே திராவிட மாடலுக்கு சாட்சி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பேனாமுள் Karthick
✍️ *எச்1-பி' விசா கட்டணம் புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும்*
அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கையை ட்ரம்ப் எடுத்து உள்ளார். அதாவது வெளிநாட்டினருக்கான எச்1-பி விசாக்களுக்கான கட்டணத்தை 1 லட்சம் டாலராக அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.88 லட்சமாக உயர்த்தி உள்ளார்.
பேனாமுள் Karthick
✍️ *ஆசிய கோப்பை: இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்*
இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.
பேனாமுள் Karthick
✍️ *திருப்பதி திருக்குடை ஊர்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்*
திருமலை திருப்பதி திருக்குடை ஊர்வலம் சென்னை கேசவ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் நாளை (திங்கட்கிழமை) காலை 10.30 மணியளவில் தொடங்குகிறது. இதையொட்டி போக்குவரத்து மாற்றங்களை போலீசார் அறிவித்துள்ளனர்.
பேனாமுள் Karthick
✍️ *டிரம்ப் கோல்டு கார்டு விசா : புதிய திட்டம் அறிமுகம்*
அமெரிக்காவில் புதிதாக டிரம்ப் கோல்டு கார்டு என்ற விசா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *மயிலாப்பூரில் நவராத்திரி விழா நாளை தொடக்கம்*
சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் திருமண மண்டபத்தில் மாபெரும் கொலுவுடன் நாளை முதல் வரும் 1ம் தேதி வரை 10 நாட்களுக்கு வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *ஒரே கட்டணத்தில் பொது போக்குவரத்து சேவை*
ஒரே கட்டணத்தில் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் பயணம் செய்யும் வசதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை சென்னையில் தொடங்கி வைக்கிறார்.
பேனாமுள் Karthick
✍️ *பேக்கரி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி*
சென்னையில் 4 நாட்கள் தினை வகைகள் கொண்டு பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சியை வருகிற 23ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மதியம் 5 மணி வரை நடைபெறுகிறது.
கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைதளத்தில் தெரிந்து கொள்ளலாம். கைபேசி எண்கள் 8668102600 8072914694 9943685468
பேனாமுள் Karthick
✍️ *நாளை முதல் புதிய ஜி.எஸ்.டி விதிமுறைகள் அமல்*
நாடு முழுவதும் நாளை முதல் புதிய ஜிஎஸ்டி விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன இதன் மூலம் உள்நாட்டின் நுகர்வு அதிகரிக்கும் விலைவாசி கணிசமாக குறையும்.
பேனாமுள் Karthick
✍️ *சுரங்கப் பாதைகளை மேம்படுத்தும் பணி தீவிரம் மாநகராட்சி தகவல்*
சென்னையில் ரூ.141/2 கோடியில் சுரங்கப்பாதைகளை மேம்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்ற வருவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *திருவள்ளூரில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்*
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் வரும் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. காலை 10 மணி அளவில் நடைபெறுகிறது. எனவே அனைத்து விவசாயிகளும் பங்கேற்று விவசாயம் தொடர்பான குறைகளை தெரிவித்து பயன்பெறலாம்.
செய்தி