*அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஸ்ரீ முருகன் ஏஜென்சி பெட்ரோல் நிலையத்தில் தொடர்ந்து மீட்டரை அதிகமாக ஓடவைத்து பெட்ரோல்,டீசல் பலே திருடி வந்த நிலையில் வசமாக மாட்டிக்கொண்டனர்*
21/9/2025 அன்று இரவு ஒரு ஷிப்ட் டிசையர் டூர் காரின் பெட்ரோல் பங்கில் மீட்டரை பயன்படுத்தி டீசல் திருட்டு
நம்பர் : 10 முதலாவது மெயின் ரோடு, அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள வாவின் அருகில் HDFC BANK எதிரே உள்ள இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், முருகன் ஏஜென்சி என்ற பெட்ரோல் நிலையத்தில் டீசல் நிரப்பப்பட்டது காரில் ஏற்கனவே டீசலும் இருந்திருக்கிறது காரில் டீசல் டேங்க் அளவு 42 லிட்டர் ஆனால் ஸ்ரீ முருகன் ஏஜென்சி இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற பெட்ரோல் பங்கில் 46.07 இந்த அளவு டீசல் போடப்பட்டுள்ளது கார் ரிசவில் வந்தாலும் கூட ஏற்கனவே காரில் குறைந்தபட்சம் 5 லிருந்து 7 லிட்டர் இருந்திருக்கலாம் இவர்கள் போட்டிருக்கிற 46 லிட்டரையும் சேர்த்தால் 53 லிட்டருக்கு மேல் வருகிறது எப்படி ஒரு சிப்ட் டிசையர் காரில் 53 லிட்டர் டீசல் பிடிக்கும் வசமாக மாட்டியவர்கள் மீது காவல்நிலையத்தில் புகார்.
மக்களே உஷார்
பேனாமுள்karthick