தேதி
22/9/2025
🌷 *பேனாமுள் பத்திரிகை செய்திகள்* 🌷
*குறள்* : *477*
ஆற்றின் அளவறிந் தீக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி.
தக்க வழியில் பிறர்க்கு கொடுக்கும் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை இருப்பது போல் தோன்றி இல்லாமல் மறைந்து விடும்.
பேனாமுள் Karthick
✍️ *செப். 22*
*பெட்ரோல் விலை*-100.80
*டீசல் விலை*-92.39
*சி.என்.ஜி* - 91.50
பேனாமுள் Karthick
✍️ *அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஸ்ரீ முருகன் ஏஜென்சி பெட்ரோல் நிலையத்தில் தொடர்ந்து மீட்டரை அதிகமாக ஓடவைத்து பெட்ரோல்,டீசல் பலே திருடி வந்த நிலையில் வசமாக மாட்டிக்கொண்டனர்*
21/9/2025 அன்று இரவு ஒரு ஷிப்ட் டிசையர் டூர் காரின் பெட்ரோல் பங்கில் மீட்டரை பயன்படுத்தி டீசல் திருட்டு
நம்பர் : 10 முதலாவது மெயின் ரோடு, அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள வாவின் அருகில் HDFC BANK எதிரே உள்ள இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், முருகன் ஏஜென்சி என்ற பெட்ரோல் நிலையத்தில் டீசல் நிரப்பப்பட்டது காரில் ஏற்கனவே டீசலும் இருந்திருக்கிறது காரில் டீசல் டேங்க் அளவு 42 லிட்டர் ஆனால் ஸ்ரீ முருகன் ஏஜென்சி இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற பெட்ரோல் பங்கில் 46.07 இந்த அளவு டீசல் போடப்பட்டுள்ளது கார் ரிசவில் வந்தாலும் கூட ஏற்கனவே காரில் குறைந்தபட்சம் 5 லிருந்து 7 லிட்டர் இருந்திருக்கலாம் இவர்கள் போட்டிருக்கிற 46 லிட்டரையும் சேர்த்தால் 53 லிட்டருக்கு மேல் வருகிறது எப்படி ஒரு சிப்ட் டிசையர் காரில் 53 லிட்டர் டீசல் பிடிக்கும் வசமாக மாட்டியவர்கள் மீது காவல்நிலையத்தில் புகார்.
மக்களே உஷார்
பேனாமுள்karthick
✍️ *ஒரே டிக்கெட்டில் பயணம்: சென்னை ஒன்று செல்போன் செயலி - முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்*
அனைத்து பொது போக்குவரத்தையும் இணைக்கும் வகையில் ஐ.ஓ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்டு தளங்களில் செயல்படக்கூடிய ‘சென்னை ஒன்று' செல்போன் செயலியை முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்.
பேனாமுள் Karthick
✍️ *ஜிஎஸ்டி குறைப்பு இன்று முதல் அமல்*
இரண்டு அடுக்கு ஜிஎஸ்டி சீரமைப்பு இன்று அமலாகிறது. இதன் மூலம் சுமார் 375 பொருட்களின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பேனாமுள் Karthick
✍️ *மெரீனா நீலக்கொடி கடற்கரையில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள்*
மெரீனா நீலக்கொடி கடற்கரைப் பகுதியில், தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள நாட்டுப்புறக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றது.
இந்த கலை நிகழ்ச்சிகளை ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்து மகிழ்ந்தனர்.
பேனாமுள் Karthick
✍️ *முதல்வர் பற்றி விஜய் பேசுவது நல்லதல்ல: துரை வைகோ*
பொத்தாம் பொதுவாக அனைவரையும் குற்றச்சாட்டி விஜய் பேசுவது அவரது நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்குகிறது. குறிப்பாக முதல்வர் வெளிநாட்டு பயணம் குறித்து அவர் கூறுவது ஏற்புடையதல்ல.அவருடைய தகுதிக்கு நல்லதல்ல. என துரை வைகோ தெரிவித்துள்ளார்.
பேனாமுள் Karthick
✍️ *எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் திடீர் சந்திப்பு*
சேலத்தில் எடப்பாடி பழனிசாமியை தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று சந்தித்து பேசினார்.
பேனாமுள் Karthick
✍️ *நடிகர் சங்க பொதுக்குழு*
தென்னிந்திய நடிகர் சங்கத்தின், 69வது பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிகழ்வில் பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜத்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
பேனாமுள் Karthick
✍️ *போக்குவரத்து போலீசார் சல்யூட் அடிக்க தேவையில்லை*
சென்னையில் போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் பணி மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களும் தலைமை காவலர்களும் அதிகாரிகள் செல்லும்போது அட்டென்ஷனில் நின்றால் மட்டும் போதும் சல்யூட் அடிக்க தேவையில்லை.
அவர்கள் தங்கள் பணிகளில் கவனம் செலுத்தினால் போதும் என கமிஷ்னர் அருண் தெரிவித்துள்ளார்.
பேனாமுள் Karthick
✍️ *சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்*
திருப்பதி திருக்குடைகள் ஊர்வலத்தை ஒட்டி இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
பேனாமுள் Karthick
✍️ *வடபழனி முருகன் கோயிலில் கொலு இன்று தொடக்கம்*
வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி கொலு இன்று தொடங்குகிறது. விழா 10 நாட்கள் நடை பெறுகிறது.
பேனாமுள் Karthick
✍️ *இன்று முதல் விலை ₹1 குறைப்பு*
ரயில் நிலையங்களில் ரயில்நீர் எனும் பெயரில் உள்ள குடிநீர் பாட்டில்களில்
ரூ.1 விலை இன்று முதல் குறைக்கப்படுவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பேனாமுள் Karthick
✍️ *அஞ்சல் குறை கேட்பு முகாம்*
சென்னையில் வரும் 25ம் தேதி அஞ்சல் சேவை குறைக்கேட்கும் முகாம் நடைபெற உள்ளது.
வாடிக்கையாளர்கள் தங்கள் குறைகளை முதன்மை அஞ்சல் அதிகாரி, அண்ணா சாலை தலைமை அஞ்சல் அலுவலகம் சென்னை 60002 என்ற முகவரிக்கு தபால் மூலம் வரும் 23ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
பேனாமுள் Karthick
✍️ *ஆவடியில் காங்கிரஸ் சார்பில் கையெழுத்து இயக்கம்*
வாக்குத்திருட்டை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ஆவடியில் நேற்று பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் யுவராஜ் தலைமை தாங்கினார். இதில் எம்பி சசிகாந்த் செந்தில் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
பேனாமுள் Karthick
✍️ *போலீஸ் பூத்கள் திறப்பு*
அம்பத்தூர் எஸ்டேட் டிவிஎஸ் காலனி, கொரட்டூர் வாட்டர் கேனல் சாலை,மற்றும் புதூர் புழல் அம்பத்தூர் சாலை என 3 போலீஸ் பூத்களை ஆவடி கமிஷனர் சங்கர் அவர்கள் திறந்து வைத்தார்.
பேனாமுள் Karthick
✍️ *பாகிஸ்தானை மீண்டும் வீழ்த்தியது இந்தியா*
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது.
செய்தி