23/9/2025 இன்றைய பேனாமுள் பத்திரிகை செய்திகள்
தேதி
23/9/2025

🌷 *பேனாமுள் பத்திரிகை செய்திகள்* 🌷

*குறள்* : *478*
ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை
போகா றகலாக் கடை.

பொருள் வரும் வழி சிறிதாக இருந்தாலும், போகும் வழி 
 விரிவுபடாவிட்டால் அதனால் தீங்கு இல்லை

பேனாமுள் Karthick
✍️  *செப். 23*
*பெட்ரோல் விலை*-100.80
  *டீசல் விலை*-92.39
   *சி.என்.ஜி* - 91.50

பேனாமுள் Karthick
✍️ *பங்கு சந்தை நிலவரம்*
*நிப்டி* :  25202.35
*பேங்க் நிப்டி* : 55284.75
*சென்செக்ஸ்*: 82159.97

பேனாமுள் Karthick
✍️ *தங்கம் விலை*
22 Kதங்கம்/ g. : ₹ 11304
24 Kதங்கம்/ g. : ₹ 10365
 வெள்ளி    /g   : ₹ 148.00

பேனாமுள் Karthick
✍️ *ஆவின் பால் பொருட்களின் விலை குறைப்பு*

ஜிஎஸ்டி வரிகுறைப்பால் ஆவின் பால் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பன்னீர், ஐஸ்கிரீம், சுவையூட்டப்பட்ட பால் வகைகள், நெய், வெண்ணெய் உள்ளிட்ட பால் பொருள்கள் மீதான ஜி.எஸ்.டி வரி 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

பேனாமுள் Karthick
✍️ *நீரில் எரியும் கேஸ் அடுப்பு கண்டுபிடிப்பு*

தண்ணீரில் தயாரிக்கப்படும் ஹைட்ரஜன் வாயு மூலம் இயக்கப்படும் கேஸ் அடுப்பை சேலத்தை சேர்ந்த விஞ்ஞானி ராமலிங்கம் கார்த்திக் கண்டுபிடித்துள்ளார்.

பேனாமுள் Karthick
✍️ *வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு; இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு*

வங்கக்கடலில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

பேனாமுள் Karthick
✍️ *நாய்களுக்கு உணவளிப்போரை தாக்கினால் நடவடிக்கை*

நாய்கள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு உணவு அளிப்போர் மீது தாக்குதல் நடந்தால் போலீசார் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பர் என புளுகிராஸ் அமைப்பு நிர்வாகிக்கு பொறுப்பு டி.ஜி.பி., வெங்கட்ராமன் கடிதம் அனுப்பி உள்ளார்.

பேனாமுள் Karthick
✍️ *தாய்லாந்து சுற்றுலா சென்றவர் ஆழ்கடலில் மூச்சுத்திணறி பலி*

ஆதம்பாக்கம்:தாய்லாந்திற்கு சுற்றுலா சென்றவர் ஆழ்கடலில் வண்ண மீன்களை ரசித்தபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

பேனாமுள் Karthick
✍️  *நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்*

வேளச்சேரியில் வளைவில் இரண்டு மாநகரப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் எட்டு பேர் காயமடைந்தனர்.

பேனாமுள் Karthick
✍️ *ஆதி கலைக்கோல் 3 நாள் பயிற்சி பட்டறை துவக்கம்*

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் கலைகளை ஊக்கப்படுத்தும் வகையில் ஆதி கலைக்கோல் என்ற பெயரில் மூன்று நாள் பயிற்சி பட்டறை, சென்னையில் நடக்கிறது.

நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நேற்று துவங்கியது.

பேனாமுள் Karthick
✍️ *திருப்பதி திருக்குடை ஊர்வலம்*

திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் சென்னகேசவ பெருமாள் கோவிலில் நேற்று கோலாகலமாக துவங்கியது.

பேனாமுள் Karthick
✍️ *தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது*

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை 3 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் அம்மன் ஊர்வலம் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 2-ம் தேதி நடைபெறுகிறது.

பேனாமுள் Karthick
✍️ *பெண்களுக்கு இலவச மேமோகிராம் பரிசோதனை*

 மார்பக புற்றுநோயை கண்டறியும் இலவச மேமோகிராம் பரிசோதனை முகாம் சென்னையில் செப்டம்பர் 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

 தி ஹெட் அண்ட் நெக் மருத்துவ மையத்தில் அதிநவீன வசதிகளுடன் கூடிய மார்பக சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

 இதை பயன்படுத்திக் கொள்ள விரும்புவார்கள் 7397768795 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.

பேனாமுள் Karthick
✍️ *எஸ் பி ஐ வங்கி புதிதாக 14 கிளைகளை தமிழகத்தில் திறந்துள்ளது*

 பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ தமிழகத்தில் 14 புதிய கிளைகள் 2 வீட்டு கடன் மையங்கள், 2 நவீன கிராமப்புற சுய தொழில் பயிற்சி மையங்களைத் திறந்து உள்ளது.

பேனாமுள் Karthick
✍️ *தெரு நாய்களுக்கு உணவளிக்க இடம் தேடும் பணி துவக்கம்*

 சென்னையில் தெரு நாய்களுக்கு உணவளிப்பதற்கான இடங்களை தேர்வு செய்யும் பணியை மாநகராட்சி துவக்கி உள்ளது.

பேனாமுள் Karthick
✍️ *சொத்து வரி ரூபாய் 900 கோடி வசூல்*

 சென்னை மாநகராட்சிக்கான சொத்து வரி இதுவரை 900 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.

பேனாமுள் Karthick
✍️ *டிப்ளமோ பாட புத்தகங்கள் பதிவேற்றம்*

 டிப்ளமோ பாட புத்தகங்கள் தொழில்நுட்பக் கல்வி இயக்கத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.

பேனாமுள் Karthick
✍️ *விஜய் பிரச்சாரத்தில் மாற்றம்*

 செப்டம்பர் 27ஆம் தேதி பிரச்சாரம் சேலத்தில் திட்டமிடப்பட்ட நிலையில் இப்போது கரூருக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பேனாமுள் Karthick
✍️ *திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை கோலகலம்*

 திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நேற்று மாலை கோலாகலமாக நடைபெற்றது. அக்.1 வரை திருவிளக்கு பூஜை தினமும் மாலை 6 மணி அளவில் நடைபெறவுள்ளது.

செய்தி
*பேனாமுள் இதழ்*
Comments