26/9/2025 இன்றைய பேனாமுள் பத்திரிகை செய்திகள்
தேதி
26/9/2025

🌷 *பேனாமுள் பத்திரிகை செய்திகள்* 🌷

*குறள்* : *480*
உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும்.

தனக்கு பொருள் உள்ள அளவை ஆராயாமல் மேற்கொள்ளும் ஒப்புரவினால், ஒருவனுடைய செல்வத்தின் அளவு விரைவில் கெடும்.

பேனாமுள் Karthick
✍️  *செப். 26*
*பெட்ரோல் விலை*-100.80
  *டீசல் விலை*-92.39
   *சி.என்.ஜி* - 91.50

பேனாமுள் Karthick
✍️ *பங்கு சந்தை நிலவரம்*
*நிப்டி* :  24890.85
*பேங்க் நிப்டி* : 54976.20
*சென்செக்ஸ்*: 81159.68

பேனாமுள் Karthick
✍️ *தங்கம் விலை*
22 Kதங்கம்/ g. : ₹ 11449
24 Kதங்கம்/ g. : ₹ 10490
 வெள்ளி    /g   : ₹ 150.00

பேனாமுள் Karthick
✍️ *புதுமை பெண், தமிழ் புதல்வன் திட்டங்கள் தொடக்கம்*

2025-26ம் ஆண்டு புதுமை பெண், தமிழ் புதல்வன் திட்டங்களை தெலுங்கானா முதல்வர் ரேவந்த்ரெட்டி மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்கள்.

பேனாமுள் Karthick
✍️ *வேளாண் வணிகத் திருவிழா*

சென்னை நந்தம்பாக்கத்தில் வேளாண் வணிகத் திருவிழாவை நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்து விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்குகிறார். சென்னையில் செப்.27, 28 தேதிகளில் வேளாண் வணிகத் திருவிழா நடைபெறுகிறது.

பேனாமுள் Karthick
✍️ *மெரினா கடற்கரையில்  நிழல் மேற்கூரை அமைக்க டெண்டர்*

மெரினா கடற்கரையில் ரூ.41.61 லட்சத்தில் நிழல் மேற்கூரை அமைக்க தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது.

பேனாமுள் Karthick
✍️ *தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி*

சென்னையில் 53,000 தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

பேனாமுள் Karthick
✍️ *ரெயிலில் இருந்து ஏவப்பட்ட அக்னி பிரைம் ஏவுகணை பரிசோதனை வெற்றி*

நாட்டிலேயே முதன்முறையாக ரெயிலில் இருந்து அக்னி பிரைம் ஏவுகணையை ஏவி பரிசோதனை செய்யப்பட்டது. 2 ஆயிரம் கி.மீ. தொலைவை சென்று தாக்கும் திறன் படைத்த இந்த நடுத்தர ரக ஏவுகணை பரிசோதனை வெற்றியடைந்துள்ளது.

பேனாமுள் Karthick
✍️ *கவுரவ விரிவுரையாளர்கள் பணி*
 
கவுரவ விரிவுரையாளர்கள் பணிக்கு அடுத்த மாதம் 8-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு விவரங்கள் www.tngasa.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.

பேனாமுள் Karthick
✍️ *T. நகர் உயர்மட்ட சாலை தயார்*

சென்னை தியாகராயர் நகரின் உஸ்மான் சாலை - சி.ஐ.டி. நகரை இணைக்கும் 1.2 கி.மீ உயர்மட்ட சாலை வரும் 28ம் தேதி மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட உள்ளது.

பேனாமுள் Karthick
✍️ *ஆசிய கோப்பை கிரிக்கெட்: வங்காளதேசத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பாகிஸ்தான்*

11 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

28-ந்தேதி நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன.

பேனாமுள் Karthick
✍️ *3டி பிரின்டர் விரைவில் இந்தியா கொண்டு வர திட்டம்*

ரஷ்யாவின் எலக்ட்ரான் பீம் 3டி பிரின்டர் விரைவில் இந்தியா வர உள்ளது.இதில் பணத்தைத் தவிர மற்ற அனைத்தையும் அச்சிட முடியும் என கூறப்படுகிறது.

பேனாமுள் Karthick
✍️ *ஏ.ஐ., கட்டுப்பாட்டு அறை திருப்பதியில் திறப்பு*

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வசதியுடன் கூடிய பக்தர்களுக்கான கட்டுப்பாட்டு மையத்தை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று திறந்து வைத்தார்.

பேனாமுள் Karthick
✍️ *கடற்பசு காப்பகத்துக்கு சர்வதேச அங்கீகாரம்*

நாட்டிலேயே முதல்முறையாக அறிவிக்கப்பட்டுள்ள கடற்பசு காப்பகத்துக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது.

பேனாமுள் Karthick
✍️ *அரசு அலுவலகங்களில் மேற்கூரை சூரியசக்தி மின் நிலையங்கள்*

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்களில், இட வசதியை பொறுத்து, 100 கிலோ வாட் 500 கிலோ வாட் என ஒட்டுமொத்தமாக 40 மெகா வாட் அளவுக்கு மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைக்கும் பணியில் பசுமை எரிசக்தி கழகம் ஈடுபட்டுள்ளது.

பேனாமுள் Karthick
✍️ *சாலையோர வசதி மையம்*

சாலையோர வசதி மையத்தில் டிரைவர்களுக்கு ஓய்வறை, எரி பொருள் மற்றும் காற்று நிரப்பும் மையங்கள்,சார்ஜிங் மையங்கள், உணவகம், கழிவறை, சிறுவர்கள் விளையாடும் பகுதி, வாகனங்களுக்கான அவசரகால மெக்கானிக் சேவை, முதலுதவி சிகிச்சை மையம், தேநீர் கடை போன்றவை ஏற்படுத்தப்பட உளளன.

இதற்காக முதல் கட்டமாக ஏழு மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. சாலையோர வசதி மையங்களை தனியார் பங்களிப்புடன் மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்க உள்ளது.

பேனாமுள் Karthick
✍️ *அக்.3 அரசு விடுமுறை அரசு ஊழியர்கள் வலியுறுத்தல்*

அக்., 1 ஆயுதபூஜை, 2ம்தேதி விஜயதசமி அரசு விடுமுறை உள்ளது. இந்த விடுமுறை புதன் மற்றும் வியாழக்கிழமை வருகிறது. ஆனால் 3ம் தேதி வெள்ளிக்கிழமை அரசு வேலை நாளாக உள்ளது. அடுத்து 4ம்தேதி சனிக்கிழமை 5ம் தேதி ஞாயிறு அரசு விடுமுறை நாட்களாக உள்ளன.

எனவே 3ம் தேதி விடுமுறை நாளாக அரசு அறிவித்தால் ஐந்து நாட்களுக்கு தொடர் விடுமுறை கிடைக்கும். பண்டிகையை கொண்டாடும் வகையில் அக். 3ம் தேதியை விடுமுறை நாளாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு ஊழியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

பேனாமுள் Karthick
✍️ *ஒற்றை பெண் குழந்தைகள் உதவித்தொகை திட்டம்*

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் 10ம் வகுப்பு முடித்து தற்போது பிளஸ் 1 படித்து வரும் மாணவியர் அக்.23ம் தேதிக்குள் https://cbse.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தகுதி பெறும் மாணவியருக்கு மாதம் 1,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும்.

பேனாமுள் Karthick
✍️ *ஏ.வி.எம்., தியேட்டர் இடிப்பு*

வடபழனி ஆற்காடு சாலையில் உள்ள ஏ.வி.எம்., ராஜேஸ்வரி திரையரங்கம் இடிக்கும் பணி துவங்கியுள்ளது.திரையரங்க பகுதி அடுக்குமாடி குடியிருப்பாக மாற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பேனாமுள் Karthick
✍️ *ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறையையொட்டி சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்*

ஆயுதபூஜை, விஜயதசமி மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு 3,380 சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட உள்ளன.

பேனாமுள் Karthick
✍️ *டீசல் பேருந்துகள் சிஎன்ஜியாக மாற்றம்*

தமிழகத்தில் 850 டீசல் பேருந்துகள் ரூ.66 கோடி மதிப்பில் சி.என்.ஜி பேருந்துகளாக மாற்றப்படுகிறது. இதற்கான ஒப்பந்த ஆணையை தனியார் நிறுவனத்திற்கு தமிழக அரசு வழங்கி உள்ளது.

பேனாமுள் Karthick
✍️ *அயலக தமிழர் தின ஆய்வு கூட்டம்*

சென்னை தலைமை செயலகத்தில் உள்ள கூட்டரங்கில் தமிழக அரசின் சார்பில் ஜனவரி 11, 12ம் தேதி ஆகிய 2 நாட்கள் அயலகத் தமிழர் தினம்-2026 சிறப்பாக நடத்துவது தொடர்பாக ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் தலைமை வகித்தார். அப்போது, தமிழக அரசின் சார்பில் அயலகத் தமிழர் தினம்-2026 சிறப்பாக நடத்துவது குறித்து பல்வேறு ஆலோசனைகளை தெரிவித்தார்.

பேனாமுள் Karthick
✍️ *செங்கல்பட்டு தடத்தில் 12 மின்சார ரயில்கள் இன்று ரத்து*

சென்னை, ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று, 12 மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

பேனாமுள் Karthick
✍️ *கோயம்பேடு மார்க்கெட்டில் ஆயுத பூஜை சிறப்பு சந்தை தொடங்கியது* 

 ஆயுத பூஜை பண்டிகை வருகிற 1 ஆம் தேதி புதன்கிழமை கொண்டாடப்படுகிறது.
பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஒரே இடத்தில் பூஜை பொருட்கள் அனைத்தையும் வாங்கி செல்ல வசதியாக கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் சிறப்பு சந்தை நேற்று தொடங்கியது.

பேனாமுள் Karthick
✍️ *மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்*

 ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்புகளுக்கு செப். 30க்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

பேனாமுள் Karthick
✍️ *ரூ.2500 க்கு மேல் ஆடை வாங்கினால் ஜி.எஸ்.டி விளக்கம்*

 ஒரு ஆடையின் விலை மட்டும் ரூ.2500 மேல் இருந்தால் ஜி.எஸ்.டி வரி 18 சதவீதம் உண்டு. 
மற்றபடி அதற்கு கீழ் உள்ள தொகையில் மொத்தமாக எவ்வளவு மதிப்புக்கு ஆடை வாங்கினாலும் அதற்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி வரி கிடையாது என அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

செய்தி
*பேனாமுள் இதழ்*
Comments