27/9/2025 இன்றைய பேனாமுள் பத்திரிகை செய்திகள்
தேதி
27/9/2025

🌷 *பேனாமுள் பத்திரிகை செய்திகள்* 🌷

*குறள்* : *481*
பகல்வெல்லுங் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.

காக்கை தன்னைவிட வலிய கோட்டானைப் பகலில் வென்றுவிடும், அதுபோல் பகையை வெல்லக்கருதும் அரசர்க்கும் அதற்கு ஏற்ற காலம் வேண்டும்.

பேனாமுள் Karthick
✍️  *செப். 27*
*பெட்ரோல் விலை*-100.80
  *டீசல் விலை*-92.39
   *சி.என்.ஜி* - 91.50

பேனாமுள் Karthick
✍️ *பங்கு சந்தை நிலவரம்*
*நிப்டி* :  24654.70
*பேங்க் நிப்டி* : 54389.35
*சென்செக்ஸ்*: 80426.46

பேனாமுள் Karthick
✍️ *நுங்கம்பாக்கத்தில் ஜெய்சங்கர் சாலை : பெயர் பலகை திறப்பு*

திரைப்பட நடிகர் ஜெய்சங்கர் வசித்து வந்த நுங்கம்பாக்கம் கல்லூரி பாதைக்கு  ஜெய்சங்கர் சாலை என்றும் நாடக நடிகர் தமிழ்நாட்டின் முதல் தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர் எஸ்.வி.வெங்கடராமன் வசித்து வந்த மந்தைவெளிப்பாக்கம் 5-வது குறுக்கு தெருவிற்கு எஸ்.வி.வெங்கடராமன் தெரு என்றும் சாலைகளின் பெயர் பலகைகளை காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் நேற்று திறந்து வைத்தார்.

பேனாமுள் Karthick
✍️ *மாணவிக்கு இலவச வீடு; முதல்வர் ஸ்டாலின் உத்தரவு*

கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் பேசிய மாணவிக்கு கருணாநிதி கனவு இல்லம் திட்டத்தின்கீழ் புதிய வீடு கட்டிக் கொடுப்பதற்கான ஆணையை முதல்வர் வழங்கி உள்ளார்.

பேனாமுள் Karthick
✍️ *நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவை*

பிஎஸ்என்எல் 4ஜி சேவையை நாடு முழுவதும் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்க இருப்பதாக மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.

பேனாமுள் Karthick
✍️ *சூரிய சக்தி நிறுவல் குறித்த பயிற்சி*

சென்னையில் 3 நாட்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் மூலம் சூரிய சக்தி நிறுவல் பயிற்சி வரும் 8.10.2025 முதல் 10.10.2025 தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது.

கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், கிண்டி சிட்கோ தொழிற்பேட்டை, இடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல், சென்னை-600 032. 8668102600 / 8072914694 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்

பேனாமுள் Karthick
✍️ *திருமண புகைப்படம் மற்றும் வீடியோ எடிட்டிங் பயிற்சி*

சென்னையில் 5 நாட்கள் திருமண புகைப்படம் மற்றும் வீடியோ எடிட்டிங் பயிற்சி வரும் 13.10.2025 முதல் 17.10.2025 தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது.

விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

மேலும்  விவரங்களுக்கு 
8668102600/8072914694 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

பேனாமுள் Karthick
✍️  *தந்தை சி.பா. ஆதித்தனார் 121வது பிறந்த நாள்*

தமிழ்நாடு அரசின் சார்பில், தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் அவர்களின் 121-வது பிறந்த நாளை முன்னிட்டு, மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், 27.9.2025 இன்று காலை 9.30 மணியளவில் சென்னை எழும்பூரில் அமைந்துள்ள திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்கள்.

பேனாமுள் Karthick
✍️ *தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது*

காலாண்டு விடுமுறையில் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

பள்ளிகளுக்கு செப்.27 முதல் அக்.5 வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காலாண்டு விடுமுறை முடிந்து அக். 6ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

பேனாமுள் Karthick
✍️ *மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி : டிரம்ப்*

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்து பொருட்களுக்கு 100 சதவீதம் வரி விதிப்பதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அதே சமயம் மருந்து நிறுவனங்கள் அமெரிக்காவில் தொழிற்சாலைகள் அமைத்திருந்தால் அந்த நிறுவனங்களுக்கு இந்த வரி பொருந்தாது என்றும் அவர் கூறியுள்ளார்.

பேனாமுள் Karthick
✍️ *சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு*

பணியாளர்கள் தேவையின்போது அதற்கான முன் அறிவிப்பு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் அதிகாரப் பூர்வ இணையதளமான http://chennaimetrorail.org/careers என்ற இணையதள முகவரியில் வெளியிடப்படும்.

இணையதளத்தில் வெளியாகும் பொய்யான செய்திகளை / விளம்பரங்களை நம்பி, அதிகார பூர்வமற்ற தனியாரிடம் வேலை தேடி இழப்புகள் ஏற்பட்டால் சென்னை மெட்ரோ ரெயில் எந்த வகையிலும் பொறுப்பேற்காது. என தெரிவிக்கப்பட்டுள்ளது .

பேனாமுள் Karthick
✍️ *சுய தொழில் செய்வதற்காக பெண்களுக்கு நிதியுதவி : பிரதமர்*

பீகாரில் சுய தொழில் செய்வதற்காக 75 லட்சம் பெண்களுக்கு ரூ.10,000 வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் நேற்று தொடங்கி வைத்தார்.

பேனாமுள் Karthick
✍️ *விதிகளை மாற்றியமைத்தது உச்சநீதிமன்றம்*

காசோலை மோசடி வழக்குகளை முடித்து வைப்பதற்கான விதிகளை உச்சநீதிமன்றம் மாற்றி அமைத்துள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மன்மோகன் மற்றும் என்.வி. அஞ்சாரியா அமர்வு உத்தரவு பிறப்பித்தது.

பேனாமுள் Karthick
✍️ *நாமக்கல், கரூரில் இன்று தவெக தலைவர் விஜய் பிரசாரம்*

கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் இன்று (சனிக்கிழமை) பிரசாரம் மேற்கொள்ள 11 நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.

பேனாமுள் Karthick
✍️ *குரூப்-2, 2ஏ முதல்நிலைத் தேர்வு - நாளை நடக்கிறது*

முதல்நிலைத் தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாடு முழுவதும் 1905 தேர்வு மையங்களில் நடைபெற இருக்கிறது.

பேனாமுள் Karthick
✍️ *விஜய் உப்புமா கிண்டுகிறார்: சீமான்*

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தி.மு.க.,வில் இரண்டு இட்லியையும், அ.தி.மு.க., வில் இரண்டு தோசையையும் எடுத்துக் கொண்டு உப்புமா கிண்டுகிறார்.

இரண்டு சனியன்களிடம் இருந்து சட்டை தைத்து போட்டுக்கொண்டு, சனிக்கிழமை தோறும் கிளம்பி மாற்றத்தை ஏற்படுத்துவதாக புறப்பட்டுள்ளார். இதில், என்ன மாற்றம்? இவ்வாறு சீமான் கூறினார்.

பேனாமுள் Karthick
✍️ *காங்., - எம்.பி.,க்களை இன்று முதல்வர் ஸ்டாலின் சந்திக்கிறார்*

தமிழக காங்கிரஸ் எம்.பி.,க்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

பேனாமுள் Karthick
✍️ *திருவள்ளூரில் இன்று சைக்கிள் பந்தயம்*

திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் இன்று அண்ணாதுரை பிறந்தநாளை முன்னிட்டு சைக்கிள் போட்டி நடக்கிறது.

நாளை காலை மாரத்தான் போட்டி நடக்கிறது.

பேனாமுள் Karthick
✍️ *20 டிஎம்சி தண்ணீரை தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும்: கர்நாடகாவுக்கு காவிரி ஆணையம் உத்தரவு*

தமிழ்நாட்டிற்கு அக்டோபர் மாதத்திற்கு வழங்க வேண்டிய 20.22 டிஎம்சி நீரினை திறந்து விடுமாறு கர்நாடகா அரசுக்கு உத்தரவிடபட்டது.

பேனாமுள் Karthick
✍️ *தமிழ்நாடு இன்னும் பல சாதனைகளை படைக்கும்: திருமாவளவன் பேட்டி*

திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மூலம் தமிழ்நாடு இன்னும் பல சாதனைகளை படைக்கும் என்று திருமாவளவன் கூறினார்.

பேனாமுள் Karthick
✍️ *ஹலோ எஃப்எம் சார்பில் லேடிஸ் டே கொண்டாட்டம்*

 சென்னையில் ஹலோ எஃப்எம் சார்பில் லேடிஸ் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

பேனாமுள் Karthick
✍️ *துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் தமிழகம் வருகிறார்*

 துணை ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு சிபி ராதாகிருஷ்ணன் வருகிற 4 ஆம் தேதி தமிழகம் வருகிறார்.

பேனாமுள் Karthick
✍️ *தி.நகர் புதிய மேம்பாலத்துக்கு ஜெ. அன்பழகன் பெயர் நாளை முதல்வர் திறந்து வைக்கிறார்* 

 ரங்கநாதன் தெரு பகுதியில் இருந்து தி.நகர் பஸ் நிலையத்தை தாண்டி மேம்பாலம் செல்லும் வகையில் இணைப்பு மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்துக்கு மறைந்த முன்னாள் எம்எல்ஏ ஜெ.அன்பழகன் பெயர் சூட்டப்பட்டுள்ளது. நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி அளவில் மேம்பாலம் திறப்பு விழா நடைபெறுகிறது முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று தி.நகர் மேம்பாலத்தை திறந்து வைக்கிறார்.அப்போது மேம்பாலத்தின் மேல் ரோடு ஷோ நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பேனாமுள் Karthick
✍️ *திருவேற்காட்டில் ரியல் எஸ்டேட் தரகர் கொலை வழக்கில் மனைவியும் கைது* 

 திருவேற்காட்டில் டிடிஎஸ் நகர் பகுதியை சேர்ந்த சிவக்குமார் கொலை தொடர்பாக அவரது மனைவி விஜயகுமாரிடம் போலீசார் விசாரித்து வந்தனர் அப்போது கணவர் கொலையில் அவருக்கும் தொடர்பு இருப்பது உறுதியானதையடுத்து 
2 மாதங்களுக்குப் பிறகு தற்போது விஜயகுமாரியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

செய்தி
*பேனாமுள் இதழ்*
Comments