தேதி
28/9/2025
🌷 *பேனாமுள் பத்திரிகை செய்திகள்* 🌷
*குறள்* : *482*
பருவத்தோ டொட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு.
காலத்தோடுப் பொருந்துமாறு ஆராய்ந்து நடத்தல் ( நில்லாத இயல்பு உடைய) செல்வத்தை நீங்காமல் நிற்குமாறு கட்டும் கயிறாகும்.
பேனாமுள் Karthick
✍️ *செப். 28*
*பெட்ரோல் விலை*-100.80
*டீசல் விலை*-92.39
*சி.என்.ஜி* - 91.50
பேனாமுள் Karthick
✍️ *கரூர் துயரம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்வு*
கரூரில் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்துள்ளனர்
பேனாமுள் Karthick
✍️ *பலியானோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு*
கரூர் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பேனாமுள் Karthick
✍️ *விஜய் கைது செய்யப்படுவாரா? முதல்வர் பதில்*
உயர்நீதிமன்றத்தினுடைய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்படிருக்கிறது. அந்த ஆணையம் விசாரித்து முழுமையாக சொல்லும்.ஆணையத்தின் மூலம் உண்மை வெளிவரும். உண்மை வெளி வரும்போது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் தெரிவித்தார்.
பேனாமுள் Karthick
✍️ *இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன் - விஜய்*
தாங்க முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
பேனாமுள் Karthick
✍️ *சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி*
பிரதமர் மோடி ரூ.37 ஆயிரம் கோடி செலவில் ‘சுதேசி’ தொழில்நுட்பத்தில் கட்டப்பட்ட 97 ஆயிரத்து 500 செல்போன் 4ஜி கோபுரங்களையும் தொடங்கி வைத்தார்.
பேனாமுள் Karthick
✍️ *எண்ணும் எழுத்தும் பயிற்சி அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்க அறிவுறுத்தல்*
1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் அது தொடர்பாக அக்.7ம் தேதி முதல் நடைபெறவுள்ள பயிற்சி முகாமில் ஆசிரியர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *எம்பிபிஎஸ், பிடிஎஸ் 3ம் சுற்று கலந்தாய்வு: அக்.6ம் தேதி தொடக்கம்*
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான 3ம் சுற்று கலந்தாய்வு வரும் 6ம் தேதி தொடங்குகிறது.
பேனாமுள் Karthick
✍️ *டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ பணிக்கான தேர்வு இன்று நடக்கிறது*
குரூப் 2, குரூப் 2 ஏ பணிக்கான முதல்நிலை தேர்வு இன்று நடக்கிறது.
பேனாமுள் Karthick
✍️ *உள்நாடு, சர்வதேச பயணிகளுக்கு தீபாவளி சிறப்பு கட்டண சலுகை*
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனங்களின் விமானங்களில் பயணம் செய்ய விரும்பும் பயணிகள் செப்டம்பர் 27 (நேற்று) முதல் வரும் 1ம் தேதி வரை 5 நாட்களில் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு இந்த சலுகை தள்ளுபடி கட்டண டிக்கெட் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக பயணிகள் airindiaexpress.com செல்போன் ஆப்புகள் மற்றும் இணையதளங்கள் மூலமாக, டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
பேனாமுள் Karthick
✍️ *இந்தியா-பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை*
ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி துபாயில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
பேனாமுள் Karthick
✍️ *அக்., 1 முதல் விரைவு தபால் மட்டுமே*
தபால் துறையில் செயல்பட்டு வந்த பதிவு தபால் சேவை நிறுத்தப்பட்டு விரைவு தபாலுடன் இணைக்கப்பட்டு அக்டோபர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
பேனாமுள் Karthick
✍️ *போரூரில் ஐ.டி., பூங்கா*
சென்னையில் மவுன்ட் பூந்தமல்லி சாலையில் 1,800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தனியார் நிறுவனம் சார்பில் புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா கட்டப்பட உள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *தெரு நாய் கடி 5வயது சிறுவன் பாதிப்பு*
சைதாப்பேட்டை பொன்னியம்மன் கோவில் தெருவில் பிரணவ் விதிஷ் என்ற 5 வயது சிறுவன் வீட்டின் அருகே தெருவில் விளையாடி கொண்டடிருந்த போது திடீரென ஓடி வந்து சிறுவனின் காலில் தெரு நாய் ஒன்று கடித்துள்ளது. நாயை துரத்தி சிறுவனை மீட்ட பெற்றோர், சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பேனாமுள் Karthick
✍️ *திருவள்ளூரில் விவசாயிகள் பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு*
பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில் 1711 விவசாயிகள் 5478 ஏக்கர் பரப்பளவில் காப்பீடு செய்துள்ளனர்.
பேனாமுள் Karthick
✍️ *திருவள்ளூரில் பறிமுதல் வாகனங்கள் 7ஆம் தேதி ஏலம்*
ரேஷன் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவலர்களால் பறிமுதல் செய்யப்பட்ட 51 வாகனங்களுக்கு வாகன உரிமையாளர்கள் மீட்டுக் கொள்ளவில்லை இந்த வாகனங்களுக்கு இதுவரை யாரும் உரிமை கோரவில்லை ஆதலால் ஏலத்தில் விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
விரும்புவோர் அக்.7 ஆம் தேதி காவல் ஆய்வாளர் ரேஷன் பொருள் குற்றப்புலனாய்வுத் துறை அலுவலகத்தில் ஏலம் விடப்பட உள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *39 பேரின் உடல்கள் உடற்கூராய்வுக்குப் பிறகு ஒப்படைப்பு*
விஜய் பரப்புரையில் உயிரிழந்த 39 பேரின் உடல்களும் அடையாளம் கண்டறியப்பட்டு, உடற்கூராய்வுக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.
பேனாமுள் Karthick
✍️ *தெரு நாய்கடி பிரச்சனை '1913'ல் தெரிவிக்கவும்: மாநகராட்சி*
நாய் தொந்தரவு, நாய்க்கடியால் பாதிக்கப்பட்டோர் உடனடியாக பொதுமக்கள் '1913' மற்றும் மாநகராட்சி சமூக வலைதளங்களில் தெரியப்படுத்துமாறு மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
செய்தி