2/9/2025 இன்றைய பேனாமுள் பத்திரிகை செய்திகள்
தேதி
2/9/2025

🌷 *பேனாமுள் பத்திரிகை செய்திகள்* 🌷

*குறள்* : *459*
மனநலத்தி னாகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தி னேமாப் புடைத்து.

மனத்தின் நன்மையால் மறுமை இன்பம் உண்டாகும், அதுவும் இனத்தின் நன்மையால் மேலும் சிறப்புடையதாகும்.

பேனாமுள் Karthick
✍️  *செப். 02*
*பெட்ரோல் விலை*-100.80
  *டீசல் விலை*-92.39
   *சி.என்.ஜி* - 91.50

பேனாமுள் Karthick
✍️ *பங்கு சந்தை நிலவரம்*
*நிப்டி* :  24625.05
*பேங்க் நிப்டி* : 54002.45
*சென்செக்ஸ்*: 80364.49

பேனாமுள் Karthick
✍️ *தங்கம் விலை*
22 Kதங்கம்/ g. : ₹ 9705
24 Kதங்கம்/ g. : ₹ 10584
 வெள்ளி    /g   : ₹ 136.00

பேனாமுள் Karthick
✍️ *திருவள்ளூர் குறைதீர் கூட்டத்தில் மனுக்கள் பெறப்பட்டன*

 திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக கூட்டரங்கத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது.
ஆட்சியர் மு.பிரதாப் தலைமை வகித்தார். பொதுமக்களிடமிருந்து 398 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

பேனாமுள் Karthick
✍️ *திருவள்ளூர் அருகே வெடிகுண்டு வீசி இளைஞர் கொலை 7 பேர் கைது*

 திருவள்ளூர் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி கத்தியால் வெட்டப்பட்டு இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய சிறுவன் உள்பட 7 பேரை நேற்று கடம்பத்தூர் போலீசார் செய்தனர்.

பேனாமுள் Karthick
✍️ *உண்ணாவிரதத்தை கைவிட்டார் சசிகாந்த் செந்தில்*

 சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருந்தபடியே உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வந்த திருவள்ளூர் 
எம்.பி.சசிகாந்த் செந்தில் தனது உண்ணாவிரதத்தை தற்காலிகமாக கைவிடுவதாக நேற்று தெரிவித்தார்.

பேனாமுள் Karthick
✍️ *அம்பத்துார் சாலையில் பள்ளம்*

அம்பத்துார் - கருக்கு பிரதான சாலையில் நேற்று மீண்டும் பள்ளம் ஏற்பட்டுள்ளது.

பேனாமுள் Karthick
✍️ *முதல்வர் படைப்பகம் கட்டுமான பணி துவக்கம்*

மடிப்பாக்கத்தில் முதல்வர் படைப்பகம் அமைப்பதற்கான கட்டுமானப் பணி நேற்று பூஜையுடன் துவங்கப்பட்டது.

பேனாமுள் Karthick
✍️ *நம்மாழ்வார் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு*

திருவள்ளூர் : விவசாயிகளுக்கான நம்மாழ்வார் விருது பெற விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.

விருது பெற விரும்பும் விவசாயிகள் அக்ரிஸ்நெட் இணையதளத்தில் வரும் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தொடர்பான தகவலுக்கு அருகில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொள்ளலாம்.

பேனாமுள் Karthick
✍️ *ரூ.3,201 கோடி முதலீடு, 6,250 நபர்களுக்கு வேலை வாய்ப்பு*

டசெல்டோர்ப் நகரில் Knorr Bremse, Nordex குழுமம், ebm-papst ஆகிய நிறுவனங்களுடன் ரூ.3,201 கோடி முதலீட்டில் சுமார் 6,250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

பேனாமுள் Karthick
✍️ *தமிழக மீனவர்கள் 10 பேருக்கு தலா ரூ.1.5 கோடி அபராதம்*

இலங்கை கடற்படையால் சிறைப்பிடித்த தமிழக மீனவர்கள் 10 பேருக்கு தலா ரூ.1.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பேனாமுள் Karthick
✍️ *நாடு திரும்பினார் பிரதமர் மோடி*

தனது சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி, தனி விமானம் மூலம்
நேற்று இரவு 7.45 மணியளவில் திரும்பினார்.

பேனாமுள் Karthick
✍️ *கொடைக்கானல் சுற்றுலாத்தலங்களுக்கு ஒரே இடத்தில் நுழைவுக்கட்டணம்*

தூண் பாறை, குணா குகை, பைன்மர காடுகள், மோயர் பாயின்ட் ஆகிய 4 இடங்களுக்கும் பொதுமக்கள் செல்ல வனத்துறையால் அந்தந்த பகுதிகளில் தலா ரூ.10 வீதம் நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.

இந்த 4 இடங்களுக்கும் செல்ல தனித்தனியாக நுழைவு கட்டணம் வசூலிப்பதை கைவிட்டு, ஒரே நுழைவு கட்டணம் வசூலிக்கும் நடவடிக்கைகளை வனத்துறை எடுத்துள்ளது.

இதன்படி நேற்று முதல் தூண் பாறை அருகே நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

பேனாமுள் Karthick
✍️ *வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி*

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி வருவதன் காரணமாகவும், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாகவும் தமிழகத்தில் 6ம் தேதி வரை மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பேனாமுள் Karthick
✍️ *ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகை*

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து இந்திய விமானப்படையின் தனி விமானத்தில் இன்று காலை 10.30 மணியளவில் புறப்பட்டு காலை 11.40 மணியளவில் சென்னை பழைய விமான நிலையம் வருகிறார்.

பேனாமுள் Karthick
✍️ *தொழில்நுட்ப பணிகள் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு*

ஹால் டிக்கெட் www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.inல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.

பேனாமுள் Karthick
✍️ *உக்ரைன் போர் முடிவுக்கு வரவேண்டும்: புதினிடம் மோடி வலியுறுத்தல்*

உக்ரைனுக்கு எதிரான போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என இருதரப்பு பேச்சின்போது ரஷ்ய அதிபர் புதினை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

பேனாமுள் Karthick
✍️ *ரூ.141 கோடிக்கு விற்பனை வரி கட்ட சொல்லி நோட்டீஸ்*

உத்தர பிரதேசத்தில் 141 கோடி ரூபாய்க்கு வணிகம் செய்ததாக சிறிய மளிகைக் கடைக்காரருக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால் அந்த சிறு வணிகர் அதிர்ச்சியில் உள்ளார்.

பேனாமுள் Karthick
✍️ *கட்டாயமாகிறது ஆசிரியர் தகுதி தேர்வு*

ஆசிரியர்கள் பணியில் தொடர்வதற்கும் பதவி உயர்வு பெறுவதற்கும் ஆசிரியர் தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு எழுத விருப்பம் இல்லாதவர்கள் உடனடியாக வேலையை ராஜினாமா செய்யலாம். அவர்கள் ஓய்வு பெறும் போது கிடைக்கும் சலுகைகளை இப்போதே பெற்றுக்கொண்டு கட்டாய ஓய்வுக்கு எழுதிக் கொடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

பேனாமுள் Karthick
✍️ *எல்லையில் ஊடுருவல்: ராணுவம் முறியடிப்பு*

ஜம்மு - காஷ்மீரில், எல்லை கட்டுப்பாட்டு கோடு வழியாக ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளை நம் ராணுவத்தினர் விரட்டி அடித்தனர்.

பேனாமுள் Karthick
✍️ *சின்னத்திரையில் நடிகர் பார்த்திபன்*

நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்துள்ளார். தற்போது டி.வி. தொடர் ஒன்றை தொகுத்து வழங்க இருக்கிறார். தென்னிந்தியாவின் தலைசிறந்த கண்டுபிடிப்புகளைக் கண்டறியும் ‘பிட்ச் இட் ஆன் நீங்களும் ஆகலாம் கலாம்' என்ற நிகழ்ச்சியை செப்டம்பர்,நவம்பர் மாதங்களில் அவர் தொகுத்து வழங்க இருக்கிறார்.

பேனாமுள் Karthick
✍️ *திருப்பதியில் வரும் 24ம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவம் தொடக்கம்*

வருடாந்திர பிரம்மோற்சவம் வரும் 24ம்தேதி தொடங்கி அக்டோபர் 2ம்தேதி வரை நடைபெற உள்ளது.

பேனாமுள் Karthick
✍️ *நீச்சல் குளங்களை முறையாக பராமரிக்க வேண்டும்:பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்*

கேரளாவில் மூளையை உண்ணும் அமீபா பரவல் எதிரொலியாக தமிழகத்தில் உள்ள நீச்சல் குளங்கள் முறையாக பராமரிக்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

பேனாமுள் Karthick
✍️ *டிஜிபி வெங்கட்ராமனுடன் சென்னை போலீஸ் அதிகாரிகள் சந்திப்பு*

தமிழ்நாடு காவல்துறையின் பொறுப்பு டிஜிபியாக பதவியேற்றுள்ள வெங்கட்ராமனை நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அருண் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

பேனாமுள் Karthick
✍️ *அம்பத்தூர் தொழிற்பேட்டையில் மதுபாட்டில்கள் எரிந்து நாசம்*

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ரூ.50 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் எரிந்து நாசமாகியது. மதுபாட்டில்கள் ஏற்றி வந்த லாரி மீது மின்கம்பி அறுந்து விழுந்ததில் தீவிபத்து ஏற்பட்டது.

பேனாமுள் Karthick
✍️ *4ம் தேதி சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு*

சுபமுகூர்த்த தினமான வரும் 4ம் தேதி, சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பதிவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

பேனாமுள் Karthick
✍️ *வால்டாக்ஸ் சாலையில் குளிரூட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம்*

வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சிஎம்டிஏ சார்பில் வால்டாக்ஸ் சாலையில் கட்டப்பட உள்ள குளிரூட்டப்பட்ட புதிய பேருந்து நிலைய பணிகளை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

பேனாமுள் Karthick
✍️ *ZAAROZ என்ற புதிய உணவு டெலிவரி செயலி அறிமுகம்*

நாமக்கல், கரூரை தொடர்ந்து கடலூரிலும் ZAAROZ என்ற புதிய உணவு டெலிவரி செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பேனாமுள் Karthick
✍️ *ஆகஸ்டில் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.86 லட்சம் கோடி*

 கடந்த ஆகஸ்டில் ஜிஎஸ்டி ரூ.1.86 லட்சம் கோடி வசூல் ஆனது.
இது கடந்த ஜூலையில் வசூலான ரூ.1.96 லட்சம் கோடியை விட குறைவாகும்.

பேனாமுள் Karthick
✍️ *எலத்தூர் ஏரி தமிழகத்தின் 3வது பல்லுயிர் பாரம்பரிய தலமாக அறிவிப்பு*

 ஈரோடு மாவட்டம் எலத்தூர் ஏரியை மாநிலத்தின் 3வது பல்லுயிர் பாரம்பரிய தலமாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

பேனாமுள் Karthick
✍️ *தனது தயாரிப்பு நிறுவனத்தை மூடுவதாக இயக்குனர் வெற்றிமாறன் திடீர் அறிவிப்பு*

மனுஷி திரைப்படம் நீதிமன்றத்திற்கு சென்றது மற்றும் பேட் கேர்ள் திரைப் படம் 3 முறை சென்சார் சென்ற நிகழ்வுகளை சுட்டிக் காட்டி இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பு நிறுவனத்தை மூடுவதாக அறிவித்துள்ளார்.

செய்தி
பேனாமுள் இதழ்
Comments