3/9/2025 இன்றைய பேனாமுள் பத்திரிகை செய்திகள்
[9/3, 7:38 AM] பேனாமுள் Karthick(1): 🌷 *பேனாமுள் பத்திரிகை செய்திகள்* 🌷
*குறள்* : *460*
நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉ மில்.

நல்ல இனத்தைவிடச் சிறந்ததாகிய துணையும் உலகத்தில் இல்லை, தீய இனத்தைவிடத் துன்பப்படுத்தும் பகையும் இல்லை.
[9/3, 7:39 AM] பேனாமுள் Karthick(1): ✍️  *செப். 03*
*பெட்ரோல் விலை*-100.80
  *டீசல் விலை*-92.39
   *சி.என்.ஜி* - 91.50
[9/3, 7:39 AM] பேனாமுள் Karthick(1): ✍️ *பங்கு சந்தை நிலவரம்*
*நிப்டி* :  24579.60
*பேங்க் நிப்டி* : 53661.00
*சென்செக்ஸ்*: 80157.88
[9/3, 7:39 AM] பேனாமுள் Karthick(1): ✍️ *தங்கம் விலை*
22 Kதங்கம்/ g. : ₹ 9725
24 Kதங்கம்/ g. : ₹ 10606
 வெள்ளி    /g   : ₹ 137.00
[9/3, 7:39 AM] பேனாமுள் Karthick(1): ✍️ *நங்கநல்லுார், வேளச்சேரியில் இலவச யோகா வகுப்புகள்*

சென்னை, சத்யானந்த யோகா மையத்தின் சார்பில் நான்கு வார இலவச யோகா வகுப்புகள் நங்கநல்லுாரில் வரும் 6ம் தேதியும் வேளச்சேரியில் 7ம் தேதியும் கே.கே.நகரில் வரும் 8ம் தேதியும் துவங்குகிறது. இதற்கான முன்பதிவு நடக்கிறது.

தினமும் காலை 5:30 மணி முதல் 7:00 மணி வரை நடத்தப்படுகிறது. விபரங்களுக்கு 
9445051015 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
[9/3, 7:39 AM] பேனாமுள் Karthick(1): ✍️ *இலவச தொழில் பயிற்சி ஆண்கள் பங்கேற்கலாம்*

ஏசி மெக்கானிக் மின்வயரிங் மோட்டார் ரீவைண்டிங், வாகன மெக்கானிக் வாகன ஓட்டுனர் பயிற்சி வெல்டிங் வீட்டு உபயோக பொருட்கள் சேவை மற்றும் பராமரிப்பு சி.என்.சி.இயந்திர இயக்கம் உள்ளிட்ட பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன.

8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த 18 முதல் 40 வயது வரையுடையோர் பங்கேற்கலாம்.

விவரங்களுக்கு 
9280086991 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
[9/3, 7:39 AM] பேனாமுள் Karthick(1): ✍️ *முகப்பேர் பகுதியில் ஸ்கேன் சென்டர் நடத்தி கருவில் இருக்கும் குழந்தை பாலினம் தெரிவிப்பு*

முகப்பேர் கிழக்கு பகுதியில் ஒரு தனியார் ஸ்கேன் சென்டரில் கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று பரிசோதனை செய்து தெரிவத்த டாக்டர் மீது நொளம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
[9/3, 7:39 AM] பேனாமுள் Karthick(1): ✍️ *சூளைமேடு பகுதியில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்த பெண் பலி*

சூளைமேடு பகுதியில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
[9/3, 7:39 AM] பேனாமுள் Karthick(1): ✍️ *குத்தம்பாக்கம் பேருந்து முனையம் நவம்பரில் பயன்பாட்டிற்கு வருகிறது*

குத்தம்பாக்கம் புதிய புறநகர் பேருந்து முனையம் நவம்பர் மாத இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்படும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
[9/3, 7:39 AM] பேனாமுள் Karthick(1): ✍️ *சென்னையில் இன்று ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு*

2,511 பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு சென்னையில் அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் மேல்நிலைப்பள்ளி உள்பட 6 இடங்களில் இன்று (செப்டம்பர் 3) பணி நியமன கலந்தாய்வு நடைபெற உள்ளது.
[9/3, 7:39 AM] பேனாமுள் Karthick(1): ✍️ *ஸ்ரீரங்கம் கோயிலில் ஜனாதிபதி முர்மு இன்று தரிசனம்: பக்தர்களுக்கு தடை*

ஸ்ரீரங்கம் கோயிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று தரிசனம் செய்கிறார். இதனால் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
[9/3, 7:39 AM] பேனாமுள் Karthick(1): ✍️ *2மாடி வரை கட்டடம் கட்ட சுயசான்று முறையில் விண்ணப்பிக்கலாம்*

 சுயசான்று முறையில் 2மாடி வரை கட்டடம் கட்டுவதற்கான அனுமதி பெற ஆன்லைன் முறையில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
[9/3, 7:39 AM] பேனாமுள் Karthick(1): ✍️ *தமிழக அரசு ஆசிரியர்களை கைவிடாது : அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி*

ஒன்றரை ஆண்டுகளில் தேவையான அனைத்து ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பப்படும் தமிழக அரசு எக்காரணம் கொண்டும் ஆசிரியர்களை கைவிடாது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
[9/3, 7:39 AM] பேனாமுள் Karthick(1): ✍️ *இன்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்*

சென்னையில் இன்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் 9 வார்டுகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடக்கிறது.
[9/3, 7:39 AM] பேனாமுள் Karthick(1): ✍️ *ஜி.எஸ்.டி. கவுன்சில் இன்றும், நாளையும் ஆலோசனை*

ஜி.எஸ்.டி.யை 2 அடுக்குகளாக குறைப்பது பற்றி ஜி.எஸ்.டி. கவுன்சில் இன்றும், நாளையும் ஆலோசனை நடத்துகிறது.
[9/3, 7:39 AM] பேனாமுள் Karthick(1): ✍️ *இந்தியா வந்தார் சிங்கப்பூர் பிரதமர் வாங்*

சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங் மூன்று நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே ஐந்து முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
[9/3, 7:39 AM] பேனாமுள் Karthick(1): ✍️ *பறவைகளுக்கு வண்டலூரில் சிறப்பு மையம்* 

 கழுகு,ஆந்தை உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட வேட்டையாடி பறவைகளுக்கான சிறப்பு மையம் வண்டலூரில் துவக்கப்பட்டுள்ளது.
[9/3, 7:39 AM] பேனாமுள் Karthick(1): ✍️ *தமிழ்நாடு திறன் பதிவேடு இணையதளம் துவக்கம்*

 தமிழ்நாடு திறன் பதிவேடு இணையதளத்தை துணை முதல்வர் உதயநிதி நேற்று துவக்கி வைத்தார்.
[9/3, 7:39 AM] பேனாமுள் Karthick(1): ✍️ *29 ஆயிரம் நாய்களுக்கு தடுப்பூசி*

 கடந்த 9ஆம் தேதி முதல் 21 நாட்களில் 29 ஆயிரத்து 748 தெருநாய் மற்றும் வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
[9/3, 7:39 AM] பேனாமுள் Karthick(1): ✍️ *உங்களுடன் ஸ்டாலின் முகாமில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்*

 ஆவடி அருகே மிட்டனமல்லியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் அமைச்சர் சா.மு.நாசர் அவர்கள் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
[9/3, 7:39 AM] பேனாமுள் Karthick(1): ✍️ *சிவ சாய் ஆன்மீக யாத்திரை இந்திய ரயில்வே அறிவிப்பு*

 இந்தியன் ரயில்வே சார்பில் ஜோதிர்லிங்கம்,சீரடி,
மந்திராலயம் உள்ளிட்ட இடங்களுக்கு ஆன்மீக சுற்றுப்பயணம் செல்ல சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

 அக்டோபர் 2 முதல் 12 ஆம் தேதி வரை திட்டமிடப்பட்டுள்ளது.

 ஆன்மிக சுற்றுலா செல்ல விரும்புவோர் www.tourtimes.in என்ற இணையதளம் அல்லது 7305858585 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Comments