4/9/2025 இன்றைய பேனாமுள் பத்திரிகை செய்திகள்
தேதி
4/9/2025

🌷 *பேனாமுள் பத்திரிகை செய்திகள்* 🌷
*குறள்* : *461*
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும
ஊதியமுஞ் சூழ்ந்து செயல்.

(ஒரு செயலைத் தொடங்குமுன்) அதனால் அழிவதையும் அழிந்த பின் ஆவதையும், பின்பு உண்டாகும் ஊதியத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.

பேனாமுள் Karthick
✍️  *செப். 04*
*பெட்ரோல் விலை*-100.80
  *டீசல் விலை*-92.39
   *சி.என்.ஜி* - 91.50

பேனாமுள் Karthick
✍️ *பங்கு சந்தை நிலவரம்*
*நிப்டி* :  24715.05
*பேங்க் நிப்டி* : 54067.55
*சென்செக்ஸ்*: 80567.71

பேனாமுள் Karthick
✍️ *தங்கம் விலை*
22 Kதங்கம்/ g. : ₹ 9805
24 Kதங்கம்/ g. : ₹ 10693
 வெள்ளி    /g   : ₹ 137.00

பேனாமுள் Karthick
✍️ *ஜி.எஸ்.டி 2.0*

நாடு முழுவதும் 5%, 18% ஆகிய இரு விகித சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வரும் 22-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதன் காரணமாக, பெரும்பாலான பொதுப் பயன்பாட்டுப் பொருள்களின் விலை வெகுவாக குறையும்.

*5%-ஆக வரி குறையும் பொருள்கள்*

பால், ரொட்டி, பனீா், நெய், பிஸ்கட்டுகள், சாஸ், பாஸ்தா, உளா்ந்த பழங்கள், பீட்ஸா பிரேட், தீவிர மருந்துகள், பான்டேஜ்கள், சோப், ஷாம்பு, டூத்பேஸ்ட், மெழுகுவா்த்தி, பொம்மைகள், நாற்காலிகள், சூரியமின் சாதனங்கள், காறாளைகள், உயிரி எரிவாயு பொருள்கள், ஜவுளி, டிவி, சிமென்ட்

*காா்கள், பைக்குகள் - 18 %*

சொகுசு காா், எஸ்யூவி - 40 %
(1,200 சிசி பெட்ரோல், 1,500 சிசி டீசல்)

*18%-ஆக குறையும் பொருள்கள்*

ஏசி, டிவி (32 அங்குலம் ), வணிக வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், மோட்டாா் பைக்குகள் (350 சிசிக்கு மேல்).

பேனாமுள் Karthick
✍️ *முதல்வரின் சமூக நீதி 2.0: புதிய வீடியோ வெளியீடு*

திமுக தலைமை அலுவலகம் தனது அதிகாரபூர்வ டிவிட்டர் பதிவில் நேற்று புதிய வீடியோவை வெளியிட்டுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உருவாகியுள்ள சமூக நீதி 2.0 எதிர்காலத்தை கட்டமைக்கும் அரசியல். தமிழ்நாட்டை இந்தியாவின் முன்னோடி மாநிலமாக, முதல் மாநிலமாக, உயர்த்தும் சிந்தனையே முதல்வரின் சமூக நீதி 2.0. என அதில் கூறப்பட்டுள்ளது.

பேனாமுள் Karthick
✍️ *காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் சுய மருத்துவம் செய்ய வேண்டாம்*

தமிழகத்தில் காய்ச்சல் பரவி வரும் நிலையில் பொதுமக்கள் சுய மருத்துவம் செய்ய வேண்டாம் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

பேனாமுள் Karthick
✍️ *விமான நிலையம் - கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ நீட்டிப்புக்கு ரூ.1964 கோடி ஒதுக்கீடு*

விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்திற்கு முதற்கட்ட பணிகளை மேற்கொள்ள ரூ.1964 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

பேனாமுள் Karthick
✍️ *சென்னையில் ஓவிய சந்தை*

சென்னையில் இந்த மாதம் 3 நாட்கள் சென்னை அரசு அருங்காட்சியக வளாகத்தில் ஓவியம் மற்றும் சிற்ப கலை படைப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் ஓவிய சந்தை நடத்த கலை பண்பாட்டு துறையால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டை சேர்ந்த ஓவிய, சிற்ப கலைஞர்கள் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.

புகைப்படங்கள், கலை படைப்புகளின் விற்பனை தொகை ஆகிய விவரங்களுடன் கூடிய விண்ணப்பத்தை, வருகிற 15ம் தேதிக்குள் இயக்குநர், கலை பண்பாட்டுத்துறை, தமிழ் வளர்ச்சி வளாகம், இரண்டாம் தளம், தமிழ்ச் சாலை, எழும்பூர், சென்னை-600 008 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்களை கலை பண்பாட்டு துறையின் இணையதளத்தில் (www.artandculture.tn.gov.in) இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பேனாமுள் Karthick
✍️ *2,550 சிறப்பு பேருந்துகள் இயக்கம்*

மிலாடி நபி மற்றும் வார இறுதி நாட்களையொட்டி 2,550 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

பேனாமுள் Karthick
✍️ *ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்*

ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சியில் சேர வரும் 10ம் தேதி குரோம்பேட்டையில் நடைபெறும் சிறப்பு முகாமில் விண்ணப்பிக்கலாம் என மாநகர் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

பேனாமுள் Karthick
✍️ *மழைநீர் வடிகால் பணிகளை கண்காணிக்க ஆணை*

சென்னை முழுவதும் மழைநீர் வடிகால் பணிகளை கண்காணிக்க மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. சென்னை சூளைமேட்டில் மழைநீர் வடிகளில் விழுந்து பெண் உயிரிழந்ததை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பேனாமுள் Karthick
✍️ *திருவள்ளூர் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை பலி*

கடம்பத்தூரில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

பேனாமுள் Karthick
✍️ *ரூ.2.44 லட்சம் பேருந்து டிக்கெட் மாயம்: போலீசார் விசாரணை*

சென்னை மாதவரம் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தில் ரூ.2.44 லட்சம் டிக்கெட் பண்டல் திருடப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் இருந்து வந்த பேருந்தில் நடத்துனர் வைத்த டிக்கெட் பண்டல் திருட்டு எனப் புகார் தெரிவிக்கப்பட்டது.

பேனாமுள் Karthick
✍️ *புதுச்சேரி ஜிப்மரில் பி.எஸ்சி. நர்சிங் படிப்புக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்*

புதுச்சேரி ஜிப்மரில் பி.எஸ்சி. நர்சிங் படிப்புக்கு மாணவர்கள் செப்.22 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பேனாமுள் Karthick
✍️ *ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று பூச்சாண்டி சேவை*

சிகர நிகழ்ச்சிகளில் ஒன்றான பூச்சாண்டிசேவை எனப்படும் அங்கோபாங்க சேவை இன்று (வியாழக்கிழமை) மதியம் நடக்கிறது. மதியம் 2 மணிமுதல் மாலை 6 மணிவரை இந்த பூச்சாண்டி சேவையை பக்தர்கள் தரிசிக்கலாம்.

பேனாமுள் Karthick
✍️ *சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி தடத்தில் 2 ரயில்கள் ரத்து*

ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி தடத்தில் நாளையும், 7ம் தேதியிலும் இரண்டு மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

பேனாமுள் Karthick(1)
✍️ *31,500 தெருநாய்களுக்கு தடுப்பூசி*

இதுவரை 31,500 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. மணலி, ஆலந்துார், மாதவரம் ஆகிய மண்டலங்களில் உள்ள தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளன. தற்போது, தண்டையார்பேட்டை மற்றும் அடையாறு ஆகிய மண்டலங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

பேனாமுள் Karthick(1)
✍️ *திருவேற்காட்டில் டிப்பர் லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து*

நேற்று திருவேற்காடு கோலடி ஏரி ஒட்டி சுந்தர சோழபுரம் ஏரிக்கரை சாலையில் திருவள்ளூரில் இருந்து கோலடி பகுதிக்கு 4 யூனிட் எம் சாண்ட் ஏற்றிக் கொண்டு வந்த டிப்பர் லாரி இடது புறமாக 10 அடி பள்ளத்தில் தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

பேனாமுள் Karthick(1)
✍️ *போலீசார் மீது தாக்குதல் நடத்திய 29 வடமாநில தொழிலாளர்கள் கைது*

காட்டுப்பள்ளியில், போலீசார் மீது கற்கள் வீசி தாக்கி வன்முறையில் ஈடுபட்ட, 29 வடமாநில தொழிலாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

பேனாமுள் Karthick(1)
✍️ *கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டி உற்சாக துவக்கம்*

உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட் நகரில் ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டிகளின் துவக்க விழா நேற்று உற்சாகமாக நடந்தது.

கிராண்ட் ஸ்விஸ் ஓபன் பிரிவில் இந்தியாவை சேர்ந்த உலக சாம்பியன் குகேஷ், இந்திய வீரர்கள் அர்ஜுன் எரிகேசி, பிரக்ஞானந்தா, விதித் குஜராத்தி, நெதர்லாந்து வீரர் அனிஷ் கிரி, அமெரிக்க வீரர் லெவோன் ஆரோனியன், ஜெர்மனி வீரர் வின்சென்ட் கீமர் உள்பட 116 வீரர்கள் பங்கேற்கின்றனர்.

செய்தி
பேனாமுள் இதழ்
Comments