5/9/2025 இன்றைய பேனாமுள் பத்திரிகை செய்திகள்
தேதி
5/9/2025

🌷 *பேனாமுள் பத்திரிகை செய்திகள்* 🌷
*குறள்* : *462*
தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்
கரும்பொருள் யாதொன்று மில்.

ஆராய்ந்து சேர்ந்த இனத்துடன் (செயலைப்பற்றி) நன்றாகத் தேர்ந்து, தாமும் 
 எண்ணிப்பார்த்துச் செய்கின்றவர்க்கு அறிய பொருள் ஒன்றும் இல்லை.

பேனாமுள் Karthick
✍️  *செப். 05*
*பெட்ரோல் விலை*-100.80
  *டீசல் விலை*-92.39
   *சி.என்.ஜி* - 91.50

பேனாமுள் Karthick
✍️ *பங்கு சந்தை நிலவரம்*
*நிப்டி* :  24734.30
*பேங்க் நிப்டி* : 54075.45
*சென்செக்ஸ்*: 80718.01

பேனாமுள் Karthick
✍️ *தங்கம் விலை*
22 Kதங்கம்/ g. : ₹ 9795
24 Kதங்கம்/ g. : ₹ 10682
 வெள்ளி    /g   : ₹ 137.00

பேனாமுள் Karthick
✍️ *ஜி.எஸ்.டி. வரி குறைப்பு நவராத்திரி முதல் நாளில் இருந்து தொடங்கும்: பிரதமர்*

ஜி.எஸ்.டி. வரி குறைப்பு நவராத்திரி முதல் நாளில் இருந்து தொடங்கும் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

பேனாமுள் Karthick
✍️ *பேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக ஊடக தளங்களை தடை செய்தது நேபாளம்*

நேபாளத்தில் 26 சமூக வலைதளங்களுக்கு அந்நாட்டு அரசுதடை விதித்து உத்தரவிட்டது. இதன்படி பேஸ்புக், இன்ஸ்டா மற்றும் எக்ஸ் (டுவிட்டர்) தளங்களுக்கு நேற்று முதல் தடை அமலுக்கு வந்தது.

பேனாமுள் Karthick
✍️ *மின் வாரியத்தில் கள உதவியாளர் பணியிடங்கள்: அக்.2 வரை விண்ணப்பிக்க கால அவகாசம்*

எழுத்து தேர்வு நவம்பர் 16ம் தேதி நடக்கிறது.
வரும் அக்டோபர் 2ம் தேதி பிற்பகல் 11.59 மணி வரை இணையவழியாக( www.tnpscexams.in) விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களில் திருத்தங்களை அக்டோபர் 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை மேற்கொள்ளலாம்.

பேனாமுள் Karthick
✍️ *அரூர் பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்வு*

அரூர் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

பேனாமுள் Karthick
✍️ *முதற்கட்ட பணிக்கு ரூ.2,126 கோடி ஒதுக்கீடு*

பூவிருந்தமல்லி முதல் சுங்குவார்ச்சத்திரம் வரையிலான மெட்ரோ ரயில் அமைப்பதற்கான முதற்கட்ட பணிக்கு ரூ.2,126 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

பேனாமுள் Karthick
✍️ *மிலாதுன் நபி தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை*

மிலாதுன் நபி தினத்தை முன்னிட்டு இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விதி மீறி மதுபானம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பேனாமுள் Karthick
✍️ *ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான இலவச ஜெர்மன் மொழி பயிற்சி*

21 முதல் 35 வயதுக்குள்
குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

பி.எஸ்.சி நர்சிங் B.Sc Nursing
பொது நர்சிங் மற்றும் செவிலியர் டிப்ளமோGNM Diploma
பி.இ மெக்கானிக்கல் இன்ஜினியரி BE Mechanical Engineering
பி.இப்யோமெடிக்கல் இன்ஜினியரிங்B.F Biomedical Engineering
பி.இ மின் மற்றும் மின்னணு பொறியியல்)BE EEE
பி.டெக் தகவல் தொழில்நுட்பம் (B.Tech IT
படித்தவர்களுக்கு 
பயிற்சி நிறுவனத்தின் மூலமாக பணியிடங்கள் ஏற்பாடு செய்யப்படும். விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம் WWW.tahdco.com

பேனாமுள் Karthick
✍️ *வளர்ப்பு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்துவது கட்டாயம் : அடுத்த மாதம் முதல் அமல்*

சென்னையில் வளர்ப்பு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்துவது கட்டாயம் என்ற உத்தரவு அடுத்த மாதம் அமலுக்கு வருகிறது.

பேனாமுள் Karthick
✍️ *மே தின பூங்காவில் திரண்ட துாய்மை பணியாளர்கள் கைது*

துாய்மை பணியை தனியார் மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து துாய்மை பணியாளர் 300க்கும் மேற்பட்டோர் நேற்று சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் ஒன்றுகூடி மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கலைந்து செல்ல மறுத்ததால் துாய்மை பணியாளர்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்து அப்புறப்படுத்தினர்.

பேனாமுள் Karthick
✍️ *மாநகர பஸ் - கல்லுாரி பஸ் மோதல்*

எண்ணுார் :மாநகர பேருந்து - தனியார் கல்லுாரி பேருந்து நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஓட்டுநர் உட்பட 10 பேர் காயமடைந்தனர்.

பேனாமுள் Karthick
✍️ *அண்ணனை கொன்ற தம்பி கைது*

அயனாவரம் குடிக்க பணம் கேட்டு தகராறு செய்த அண்ணனை கத்தியால் குத்தி கொலை செய்து உடலை வீட்டிற்குள் வைத்து பூட்டிய தம்பியை போலீசார் கைது செய்தனர்.

பேனாமுள் Karthick
✍️ *டி.எஸ்.பி.,யான இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு*

சென்னை மாநகர போலீசில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து கொண்டே டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்று டி.எஸ்.பி. ஆக தேர்வான ராமலிங்கம் அவர்களை கமிஷனர் அருண் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

பேனாமுள் Karthick
✍️ *துாய்மை பணியாளர் நேர்மைக்கு பாராட்டு*

சென்னை துாய்மை பணியாளரின் நேர்மையை பாராட்டி வெகுமதி மற்றும் புத்தாடையை துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்.

பேனாமுள் Karthick
✍️ *இன்று செங்கோட்டையன் மனம் திறக்கிறார்*

கட்சியில் அதிருப்தியில் உள்ள ஈரோடு மாவட்டம் கோபி அ.தி.மு.க. எம்.எல்.ஏ., செங்கோட்டையன் இன்று மனம் திறந்து பேசவுள்ளதாக அறிவித்துள்ளார்.

பேனாமுள் Karthick
✍️ *5 விரைவு ரயில் இயக்கம்*

எழும்பூர் ரயில் நிலையத்தில் நடந்து வரும் மேம்பாட்டு பணி காரணமாக ஆறு விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது. இதில் ஐந்து ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட உள்ளன.

பேனாமுள் Karthick
✍️ *பிரிட்டன் அமைச்சருடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு*

லண்டனில் பிரிட்டன் அமைச்சர் கேத்தரினை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். அப்போது இருவரும் பொருளாதார உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர்.

பேனாமுள் Karthick
✍️ *திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் நல்லாசிரியர் விருது*

திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நல்லாசிரியர் விருது இன்று வழங்கப்படுகிறது.

பேனாமுள் Karthick
✍️ *திருவள்ளூரில் முன்னாள் படைவீரர்களுக்கு சட்ட உதவி மையம் துவக்கம்*

முன்னாள் படைவீரர்களின் பிரச்னைகளுக்கு சட்டப்பூர்வ ஆலோசனை வழங்கிட மாவட்ட சட்டப் பணிகள் உதவி மையம் திருவள்ளூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் துவக்கப்பட்டுள்ளது.

வாரந்தோறும் புதன் கிழமை காலை 10:00 மணி முதல் பகல் 1:30 மணி வரை இவ்வலுவலகம் செயல்பட்டு வரும். திருவள்ளூர் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் சட்டப்பூர்வ ஆலோசனை பெற அலுவலகத்தை அணுகலாம்.

பேனாமுள் Karthick
✍️ *திருவள்ளூரில் சுற்றுலா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்*

சுற்றுலா தொழிலில் ஈடுபட்டுள்ள தொழில்முனைவோர்களுக்கு, 17 வகை பிரிவுகளின் கீழ், 48 விருதுகள் வழங்கப்பட உள்ளன. சுற்றுலா விருது பெற, தகுதிவாய்ந்தோர், www.tntourismawards.com என்ற இணையதளத்தில் வரும் 15ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

பேனாமுள் Karthick
✍️ *தெரு நாய்களை கையாள்வதில் வெளிநாடுகளை பின்பற்றலாம்*

வெளிநாடுகளில் தெரு நாய்கள் பிரச்னை எவ்வாறு கையாளப்படுகிறது என்ன தீர்வு காணப்பட்டு உள்ளது என்பதை தெரிந்து அதை நம் நாட்டில் பின்பற்ற நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

பேனாமுள் karthick

✍️ *பிரசாரம் 13ம் தேதி துவக்குகிறார் விஜய்*

தேர்தல் பிரசாரத்தை 13ம்தேதி திருச்சியில் துவக்க த.வெ.க. தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார்.

பேனாமுள் Karthick
✍️ *ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் உருவப்படம் திறப்பு*

இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் உருவப்படத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்து பேசினார்.

பேனாமுள் Karthick
✍️ *ரூ.1.61 கோடி மின் கட்டணம்: நெல்லை அருகே அதிர்ச்சி*

நெல்லை அருகே நான்கு பேர் மட்டுமே வசிக்கும் அங்கன்வாடி பணியாளரின் வீட்டுக்கு, மின் கட்டணமாக ஒரு கோடியே 61 லட்சத்து 31 ஆயிரத்து 281 ரூபாய் அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பேனாமுள் Karthick
✍️ *அர்மானி மரணம்*

உலகப் புகழ்பெற்ற இத்தாலிய ஆடை வடிவமைப்பாளர் ஜியோர்ஜியோ அர்மானி (91) காலமானார். தனது வீட்டில் நேற்று காலமாகியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பேனாமுள் Karthick
✍️ *கோவையில் ஒரு டீ ரூ.20 காபி ரூ.26: பொதுமக்கள் அதிர்ச்சி*

சென்னையில் டீ ரூ.15க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், கோவையில் டீயின் விலை ரூ.20 ஆக உள்ளது. திடீரென டீ மற்றும் காபியின் விலை உயர்த்தப்பட்டு இருப்பது, பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பேனாமுள் Karthick
✍️ *புதிய நடைமுறையை வகுத்தது தமிழ்நாடு அரசு*

மாநில அரசு விழாக்களுக்கு வருகை தரும் குடியரசுத்தலைவர் பிரதமர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மாநில ஆளுநர் முதல்வர் என 7 பேருக்கு மட்டும் காவல்துறை அணிவகுப்பு மரியாதை வழங்கும் வகையில் புதிய நடைமுறை வகுத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

பேனாமுள் Karthick
✍️ *செப்-7ல் சந்திர கிரகணம்*

செப்டம்பர் 7ம் தேதி இரவு வானில் முழு சந்திரக் கிரகணம் நிகழவிருக்கிறது. அன்று இரவு 8.58 மணிக்கு சந்திரன் பூமியின் புறநிழலில் நுழைகிறது. இரவு 9.57 மணிக்கு சந்திரன் பூமியின் கருநிழலில் நுழைந்து, பகுதி சந்திரக் கிரகணம் தொடங்குகிறது. இது அன்று அதிகாலை 1.26 மணி அளவில் கிரகணம் முடிந்து சந்திரன் கருநிழலை விட்டு வெளியேறுகிறது. இந்த கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம்.

பேனாமுள் Karthick
✍️ *ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் உருவப்படம் திறப்பு*

இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் உருவப்படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்து பேசினார்.

பேனாமுள் Karthick
✍️ *கோயம்பேடு விருகம்பாக்கம் இடையே மெட்ரோ ரயில் மேம்பாலம் பணி துவக்கம்*

 கோயம்பேடு சந்தை விருகம்பாக்கம் இடையே மெட்ரோ ரயில் பாதை அமைப்பதற்கான மேம்பால பணிகள் துவக்கப்பட்டுள்ளன.

பேனாமுள் Karthick
✍️ *அம்பத்துாரில் மனைவி தாக்கியதில் ரத்தம் சொட்ட சொட்ட கணவர் புகார்*

 குடும்ப தகராறில் மனைவி கட்டையால் தாக்கியதில் ரத்தம் சொட்ட சொட்ட வந்த கணவர் அம்பத்துார் மகளிர் போலீசாரிடம் புகார் அளித்தார்.

பேனாமுள் Karthick
✍️ *தண்ணீர் பிரச்சனையை விசாரித்த போலீஸ்காரர் மீது தாக்குதல்* 

 முகப்பேர் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் தண்ணீர் பிரச்சனையை விசாரிக்கச் சென்ற போலீஸ்காரரை தாக்கிய வழக்கறிஞர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.

பேனாமுள் Karthick
✍️ *தண்ணீர் வாளியில் தவறி விழுந்து எட்டு மாத பெண் குழந்தை உயிர் இழப்பு*

 ஆவடி அடுத்த ராஜீவ் காந்தி நகரில் 8 மாத பெண் குழந்தை தண்ணீர் வாளியில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது.

பேனாமுள் Karthick
✍️ *தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்க கருத்து கேட்பு*

 பணி முடிந்து செல்லும்போது உணவு வழங்கலாமா என தூய்மை பணியாளர்களிடம் மாநகராட்சி கருத்து கேட்டுள்ளது.

செய்தி
*பேனாமுள் இதழ்*
Comments