6/9/2025 இன்றைய பேனாமுள் பத்திரிகை செய்திகள்
தேதி
6/9/2025

🌷 *பேனாமுள் பத்திரிகை செய்திகள்* 🌷
*குறள்* : *463*
ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை
ஊக்கா ரறிவுடை யார்.

பின் விளையும் ஊதியத்தைக் கருதி இப்போது கையில் உள்ள முதலை இழந்து விடக் காரணமாச் செயலை அறிவுடையோர் மேற்க்கொள்ள மாட்டார்.

பேனாமுள் Karthick
✍️  *செப். 06*
*பெட்ரோல் விலை*-100.80
  *டீசல் விலை*-92.39
   *சி.என்.ஜி* - 91.50

பேனாமுள் Karthick
✍️ *பங்கு சந்தை நிலவரம்*
*நிப்டி* :  24741.00
*பேங்க் நிப்டி* : 54114.55
*சென்செக்ஸ்*: 80710.76

பேனாமுள் Karthick
✍️ *தங்கம் விலை*
22 Kதங்கம்/ g. : ₹ 9865
24 Kதங்கம்/ g. : ₹ 10758
 வெள்ளி    /g   : ₹ 136.00

பேனாமுள் Karthick
✍️ *தொழில்நுட்ப பணிகளுக்கு நாளை தேர்வு*

திருவள்ளூர் : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான கணினி வழி தேர்வு நாளை மற்றும் 11, 18, 22, 27ம் தேதிகளில் பொன்னேரி கும்மிடிப்பூண்டி மற்றும் ஊத்துக்கோட்டை ஆகிய வட்டங்களில் நடக்கிறது.

பேனாமுள் Karthick
✍️ *திருவள்ளூர் மாவட்டத்தில் ராதாகிருஷ்ணன் சிலை அமைக்கப்படும்*

திருவள்ளூர் மாவட்டத்தில் ராதாகிருஷ்ணன் சிலை அமைக்கப்படுமென துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பேனாமுள் Karthick
✍️ *இ-சலான் என்ற பெயரில் புதிய வகை மோசடிகள்: சைபர் க்ரைம் எச்சரிக்கை*

இ-சலான் என்ற பெயர்களில் மோசடிகள் நடந்து வருவதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று மாநில சைபர் க்ரைம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பேனாமுள் Karthick
✍️ *தமிழ்நாட்டில் 46 காவல் நிலையங்கள் சிறந்த காவல் நிலையங்களாக தேர்வு*

தமிழகத்தில் 46 காவல் நிலையங்கள் சிறந்த காவல் நிலையங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஐஸ்அவுஸ்,முத்தையால்பேட்டை, மதுரவாயில், மடிப்பாக்கம் காவல் நிலையங்கள் இடம்பிடித்துள்ளது. 

 தேர்வு செய்யப்பட்ட சிறந்த காவல்நிலையங்களுக்கு இன்று தமிழ்நாடு காவல்துறை பொறுப்பு டிஜிபி வெங்கடராமன் முதலமைச்சர் கோப்பை வழங்குகிறார்.

பேனாமுள் Karthick
✍️ *தமிழ்நாட்டுக்கு மொத்தம் ரூ.13,016 கோடி முதலீடுகள் ஈர்ப்பு*

இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி பயணத்தில் தமிழ்நாட்டிற்கு மொத்தம் ரூ. 13,016 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பேனாமுள் Karthick
✍️ *ஓமியோபதி படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு*

நேற்று கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் தகுதியானவர்களின் தரவரிசை பட்டியல்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.

தரவரிசை பட்டியல்கள் https://tnhealth.tn.gov.in/ என்ற சுகாதாரத்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

பேனாமுள் Karthick
✍️ *ரூ.7.12 கோடியில் விண்கல கட்டுப்பாட்டு மையம்: டெண்டர் கோரியது இஸ்ரோ*

நெல்லை, பாளையங்கோட்டையில் ரூ.7 கோடியே 12 லட்சத்து 40 ஆயிரத்தில் விண்கல கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான கட்டுமானம் மற்றும் மின்சார பணிகளுக்கு இஸ்ரோ டெண்டர் கோரியுள்ளது.

டெண்டர் சமர்ப்பிக்க வருகிற 26ம் தேதி கடைசி நாளாகும்.

பேனாமுள் Karthick
✍️ *ஆவடி அருகே துணை நடிகை தூக்கிட்டு தற்கொலை*

ஆவடி அடுத்த கோவில்பதாகை கலைஞர்நகர் 1வது குறுக்குத்தெருவில் துணை நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பேனாமுள் Karthick
✍️ *இந்தியா ரஷியாவிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கும்*

ரஷியாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பேனாமுள் Karthick
✍️ *ஒருங்கிணைந்த அதிமுக செங்கோட்டையன் வலியுறுத்தல்*

 ஒருங்கிணைந்த அதிமுகவால் தான் தேர்தல்களத்தில் வெற்றி பெற முடியும் எனவே கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்தியுள்ளார்.

பேனாமுள் Karthick
✍️ *ஆசிரியர் தகுதி தேர்வுக்கு ஒரு நாள் இலவச பயிற்சி*

 ஆசிரியர் தகுதி தேர்வுக்கு ஒரு நாள் இலவச பயிற்சி சென்னை பச்சையப்பன் கல்லூரி அருகில் உள்ள அறிஞர் அண்ணா அரங்கத்தில் செப்டம்பர் 7ஆம் தேதி (நாளை) நடைபெற உள்ளது.

கலந்து கொள்ள விரும்புவர்கள் TNTET ONE DAY FREE COACHING-2025 என்று டைப் செய்து தங்களது பெயர் மற்றும் முகவரியுடன் 917605514 என்ற whatsapp எண்ணுக்கு அனுப்பி முன்பதிவு செய்ய வேண்டும்.மேலும் விவரங்களுக்கு 9176055578,
9176055542 
9176055576 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

பேனாமுள் Karthick
✍️ *சீமான் அடுத்த கட்டமாக மலைகளுடன் பேசுகிறார்*

 அடுத்த கட்டமாக சீமான் மலைகள் தண்ணீர் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளார். இந்த மாநாடு விரைவில் நடைபெறும் என்று நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
அதற்கான இடம் தேர்வு நடைபெற்று வருகிறது.
மலைகளும் நீர்நிலைகளும் ஆக்கிரமிக்கப்பட்டு அழுக்கப்பட்டு வருவதாகவும் அதனை காப்பாற்ற வேண்டியது கடமை என்பதை உணர்த்தும் வகையில் இந்த மாநாடு நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேனாமுள் Karthick
✍️ *திருமங்கலம் அடுக்குமாடி குடியிருப்பில் 12ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை*

 இன்ஸ்டாகிராமில் உருக்கமான வீடியோவை பதிவு செய்துவிட்டு 4வது மாடியில் இருந்து குதித்து 12ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்டது பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பேனாமுள் Karthick
✍️ *கால்வாயில் குப்பை கொட்டுவதை தடுக்க ரூ.28 கோடியில் கம்பி வலை*

 மழைநீர் செல்லும் கால்வாய்களில் மக்கள் குப்பை கொட்டுவதை தடுக்க 15 கி.மீ தொலைவிற்கு ரூ.28 கோடியில் கம்பிவலைகள் அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பேனாமுள் Karthick
✍️ *அம்பேத்கர் விருது அக்டோபர் 15க்குள் விண்ணப்பிக்கலாம்*

 அம்பேத்கர் விருதுக்கு தகுதியுடைய நபர்கள் அக்டோபர் 15க்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியாளர் ரஷ்மி சித்தார்த் ஜெகடே தெரிவித்துள்ளார்.
விருதை பெற விரும்புவோர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் 2வது தளத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலகத்தில் அதற்கான விண்ணப்பத்தை பெற்று தங்கள் முழு விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

பேனாமுள் Karthick
✍️ *மோரிஷஸ் பிரதமர் செப்.9ல் இந்தியா வருகை*

 மோரிஸ் பிரதமர் நவீன்சந்திரா ராம்கூலம் 8 நாள் அரசு முறை பயணமாக செப்.9ம் தேதி இந்தியா வருகிறார்.

பேனாமுள் Karthick
✍️ *அரசுக்கு வருவாய் ஈட்டி பதிவுத்துறை சாதனை*

 சுப முகூர்த்த நாளான நேற்று முன்தினம் ஒரே நாளில் 274 கோடி வருவாயை பதிவுத்துறை ஈட்டி உள்ளது. இந்த நிதி ஆண்டில் ஒரே நாளில் ஈட்டப்பட்ட அதிக வருவாய் இதுவாகும்.

பேனாமுள் Karthick
✍️ *மருத்துவ கல்வி இயக்குனராக சுகந்தி ராஜகுமாரி நியமனம்*

 தமிழக மருத்துவகல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனராக டாக்டர் சுகந்தி ராஜகுமாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

பேனாமுள் Karthick
✍️ *திருவள்ளூரில் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் பணிக்கு தேர்வு*

 திருவள்ளூர் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஓட்டுநர் மருத்துவ உதவியாளர் பணிக்கு இன்று சனிக்கிழமை மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாட்கள் தேர்வு நடைபெற உள்ளதாக மேலாளர் தெரிவித்துள்ளார்.

இன்று திருத்தணி அரசு மருத்துவமனையிலும் நாளை திருவள்ளூர் ஈக்காடு வட்டார வளர்ச்சி அலுவலகம் செங்குன்றம் சாலையிலும் காலை 10 முதல் 2 மணி வரை நடைபெறுகிறது.

பேனாமுள் Karthick
✍️ *ஆவடி அருகே மோரையில் செல்லப்பனின் உடலுக்கு மரியாதை*

 ஆவடி அருகே மோரை புதிய கன்னியம்மன் நகரை சேர்ந்த செல்லப்பன் என்பவர் மூளைச்சாவு அடைந்த நிலையில் அவர் உடல் உறுப்பு தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன்வந்தனர்.
இந்த நிலையில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த செல்லப்பன் உடலுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சா.முநாசர் 
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் ஆகியோர் நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

செய்தி
*பேனாமுள் இதழ்*
Comments