7/9/2025 பேனாமுள் பத்திரிகை செய்திகள்
[9/7, 7:43 AM] பேனாமுள் Karthick(1): 🌷 *பேனாமுள் பத்திரிகை செய்திகள்* 🌷
*குறள்* : *464*
தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
ஏதப்பா டஞ்சு பவர்.

இழிவு தருவதாகியக் குற்றத்திற்கு அஞ்சுகின்றவர் (இன்ன ஊதியம் பயிக்கும் என்னும்) தெளிவு இல்லாத செயலைத் தொடங்கமாட்டார்.
[9/7, 7:43 AM] பேனாமுள் Karthick(1): ✍️  *செப். 07*
*பெட்ரோல் விலை*-100.80
  *டீசல் விலை*-92.39
   *சி.என்.ஜி* - 91.50
[9/7, 7:43 AM] பேனாமுள் Karthick(1): ✍️ *அதிமுக கட்சி பொறுப்பில் இருந்து செங்கோட்டையன் அதிரடி நீக்கம்*

அதிமுக கட்சி பொறுப்பில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
[9/7, 7:43 AM] பேனாமுள் Karthick(1): ✍️ *அதிமுக பதவிகளில் இருந்து நீக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது : செங்கோட்டையன்*

அதிமுக பதவிகளில் இருந்து நீக்கப்பட்டிருப்பது வேதனை அளிக்கவில்லை மகிழ்ச்சி அளிக்கிறது என்று செங்கோட்டையன் கூறியுள்ளார்.
[9/7, 7:43 AM] பேனாமுள் Karthick(1): ✍️ *பேருந்தில் தங்க நகைகளை திருடிய ஊராட்சி மன்ற தலைவர் கைது*

திருப்பத்தூர் மாவட்டம் நரியம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் பாரதியை போலீசார் கைது செய்தனர். பேருந்தில் பயணி ஒருவர் பையில் வைத்திருந்த நகையை திருடிய புகாரில் பாரதி கைது.
[9/7, 7:43 AM] பேனாமுள் Karthick(1): ✍️ *கூகுள் மேப்பை பயன்படுத்தி சென்ற லாரி விபத்தில் சிக்கியது*

கொடைக்கானலில் கூகுள் மேப்பை பயன்படுத்தி சென்ற லாரி விபத்தில் சிக்கியது. சின்னப்பள்ளம் பகுதிக்கு செல்வதற்கு பதிலாக பாக்கியபுரம் குடியிருப்புப் பகுதிக்கு லாரி சென்றதால் விபத்து ஏற்பட்டது.
[9/7, 7:43 AM] பேனாமுள் Karthick(1): ✍️ *திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 12 மணி நேரம் நடை அடைப்பு*

சந்திர கிரகணத்தை ஒட்டி திருப்பதி கோயிலில் இன்று பிற்பகல் 3.30 மணி முதல் நாளை மறுதினம் அதிகாலை 3 மணி வரை நடை அடைக்கப்படுகிறது.
[9/7, 7:43 AM] பேனாமுள் Karthick(1): ✍️ *ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்ப்பு*

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஜெர்மனி பிரிட்டன் பயணங்கள் மூலம் தமிழ்நாட்டுக்கு ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக 17,613 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளன.
[9/7, 7:43 AM] பேனாமுள் Karthick(1): ✍️ *சென்னை மெட்ரோ அறிவிப்பு*

தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக மெட்ரோ இரயில் சேவை இயக்கப்படும் இடைவெளியில் செப். 9 முதல் செப். 19 வரை மாற்றம் செய்யப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் தெரிவித்துள்ளது.

பராமரிப்புக் காலக்கட்டத்தில் காலை 5 மணிமுதல் 6.30 மணிவரையில் ரயில் இயக்கப்படும் நேரங்கள் 7 நிமிட இடைவெளியிலிருந்து 14 நிமிடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், 6.30 மணிக்குமேல் வழக்கம்போல எவ்வித மாற்றமுமின்றி ரயில்கள் இயக்கப்படும்.
[9/7, 7:43 AM] பேனாமுள் Karthick(1): ✍️ *சென்னை கும்மிடிபூண்டி இடையே ரயில்கள் ரத்து*

பொன்னேரி பணிமனையில் பராமரிப்புப் பணி காரணமாக இன்று (செப். 7) இரவு சென்னை - கும்மிடிப்பூண்டி இடையே 11 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
[9/7, 7:43 AM] பேனாமுள் Karthick(1): ✍️ *கேரளாவில் அமீபா தொற்றால் மேலும் ஒருவர் பலி*

கேரளாவில் மூளையைத் தின்னும் அமீபா தொற்றால் மேலும் ஒருவர் பலியாகி உள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டுமே கேரளாவில் அமீபா மூளை காச்சலுக்கு 3 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
[9/7, 7:43 AM] பேனாமுள் Karthick(1): ✍️ *தெற்கு ரெயில்வே அறிவிப்பு*

ரெயில்வே துறையில் பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கல்வி தகுதி 10 மற்றும்12ம் வகுப்பு ஐ.டி.ஐ படித்தவர்களாக இருக்க வேண்டும்.

வயது 25-8-2025 அன்றைய தேதிப்படி குறைந்தபட்ச வயது 15 ஆகவும் அதிகபட்ச வயது 24 ஆகவும் இருத்தல் வேண்டும்.அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு.

விண்ணப்பிக்க கடைசி தேதி 25-9-2025 ஆகும்.

இணையதள முகவரி: https://sronline.etrpindia.com/rrc_sr_apprenticev1/recruitmentIndex
[9/7, 7:43 AM] பேனாமுள் Karthick(1): ✍️ *கள்ள நோட்டு அச்சடித்த ஓட்டல் ஊழியர் கைது*

தென்காசி:ஜெராக்ஸ் மெஷின் மூலம் வீட்டில் கள்ள நோட்டை தயாரித்து புழக்கத்தில் விட்ட ஓட்டல் ஊழியர் கைது செய்யப்பட்டார்.
[9/7, 7:43 AM] பேனாமுள் Karthick(1): ✍️ *காவலர் தினம் போலீசார் உறுதிமொழி ஏற்பு*

ஆவடி போலீஸ் கமிஷனரகம் சார்பில் திருமுல்லைவாயலில் உள்ள போலீஸ் கன்வென்சன் சென்டரில் காவலர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட போலீசார் காவலர் தின உறுதிமொழி ஏற்றனர்.
[9/7, 7:43 AM] பேனாமுள் Karthick(1): ✍️ *இன்று சந்திர கிரகணம்*

இன்று நிகழ உள்ள சந்திர கிரகணம் 85 நிமிடங்கள் நீடிக்கும். இரவு 8.58 மணிக்கு சந்திரன் முதலில் மங்கலான புறநிழல் பகுதிக்குள் நுழையும். பின்னர் 9.57க்கு பகுதி கிரகணமாக துவங்கும்.

அந்த கிரகணத்தை எளிதாக பார்க்க முடியும். இரவு 11.01 முதல் நள்ளிரவு 12.33 மணி வரை சந்திரன் முழுமையாக மறையும். அதிகாலை 1.26 மணிக்கு சந்திரன் கருநிழல் பகுதியில் இருந்து முழுமையாக வெளியேறும். அதிகாலை 2.25க்கு புறநிழல் பகுதியை விட்டு வெளியேறும்.
[9/7, 7:43 AM] பேனாமுள் Karthick(1): ✍️ *தூத்துக்குடி வின்பாஸ்ட் நிறுவனத்தில் கார்கள் விற்பனை*

விஎப் 6 மற்றும் விஎப் 7 ஆகிய இரு மாடல்களில் பேட்டரி கார்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இந்த கார்கள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன.

விஎப் 6 மாடல் கார் ரூ.16.49 லட்சம் எனவும், விஎப் 7 மாடல் வகை கார் விலை ரூ.20.89 லட்சம் என்றும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக அந்நிறுவனத்தின் அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளது.
[9/7, 7:43 AM] பேனாமுள் Karthick(1): ✍️ *வீட்டு மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்ய புதிய நடைமுறை*

வீட்டு மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்ய புதிய நடைமுறையை மின்வாரியம் அறிவித்துள்ளது.

முந்தைய உரிமையாளரின் ஒப்புதல் பெறும் படிவம் 2ஐ, நுகர்வோரிடம் இருந்து பெற வேண்டியதில்லை என அறிவுறுத்தப்படுகிறது.
[9/7, 7:43 AM] பேனாமுள் Karthick(1): ✍️ *திருவள்ளூரில் திருக்குறள் பயிற்சி வகுப்புகள்*

 திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற உள்ள திருக்குறள் பயிற்சி வகுப்பில் இளைஞர்கள் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்க ஆட்சியர் மு,பிரதாப் அழைப்பு விடுத்துள்ளார்.

 திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும் திருத்தணி அத்தி மாஞ்சரி பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் கும்மிடிப்பூண்டி எளாவூர் அரசு மேல்நிலைப் பள்ளிகளும் இப்பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. கலந்து கொள்ள விரும்புவோர் adtdtrl@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 04429595450 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
[9/7, 7:43 AM] பேனாமுள் Karthick(1): ✍️ *திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரியில் சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்*

அனஸ்தீஷியா, ஆப்பரேஷன் தியேட்டர், டயாலிஸ், ஆர்த்தோபீடிக் டெக்னீஷியன் மற்றும் பன்முக மருத்துவ பணி ஆகிய பிரிவுகளில் 64 இடங்கள் காலியாக உள்ளன. இவற்றில் சேர விரும்புவோர் மருத்துவக் கல்லுாரியில் வரும் 8 - 12ம் தேதி வரை இலவசமாக விண்ணப்பத்தை பெற்று கொள்ளலாம்.

10 ஆம் வகுப்பு மற்றும் மேல்நிலை தேர்ச்சி பெற்ற 17 வயதிற்கு மேற்பட்டோர் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வரும் 17ம் தேதிக்குள் கல்லுாரி முதல்வர் மற்றும் துணை முதல்வர் அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு, gmcthiruvallur@gmail.com என்ற இ - மெயில் மற்றும் 044 - 2766 5029 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
[9/7, 7:43 AM] பேனாமுள் Karthick(1): ✍️ *திருவள்ளூரில் ஊரக வாழ்வாதார இயக்க விற்பனை கண்காட்சி*

 குத்தம்பாக்கம் ஊராட்சி அடுக்குமாடி குடியிருப்புகளில் நடைபெற்ற கண்காட்சியை ஆட்சயர் மு.பிரதாப் நேற்று தொடங்கி வைத்து மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயார் செய்த பொருட்களை பார்வையிட்டார்.
[9/7, 7:43 AM] பேனாமுள் Karthick(1): ✍️ *ஆவடியில் நாய்களுக்கான தடுப்பூசி முகாம்*

 ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செல்லப்பிராணிகளுக்கான இலவச தடுப்பூசி முகாம் திருமுல்லைவாயிலில் உள்ள மண்டல அலுவலகத்தில் சனிக்கிழமை நேற்று ஞாயிற்றுக்கிழமை இன்று என 2 நாட்கள் நடைபெறுகிறது.இந்த முகாமை 
மாநகராட்சி 
மேயர் கு.உதயகுமார் தொடங்கி வைத்தார்.

 2வது நாளான இன்று 1000 நாய்களுக்கு தடுப்பூசி போடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
[9/7, 7:43 AM] பேனாமுள் Karthick(1): ✍️ *திருவேற்காட்டில் வளர்ச்சிப் பணிகளை அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார்*

 திருவேற்காட்டில் ரூபாய் 94.50 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகளை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சா.மு நாசர் அவர்கள் நேற்று தொடங்கி வைத்தார்.

திருவேற்காடு நகராட்சி 9வது வார்டான பல்லவன் நகர் 2வது பிரதான சாலை,6வது வார்டான வேலம்மாள் பள்ளிசாலை 8வது வார்டான விஜிஎன் மகாலட்சுமி நகர், பாஸ்கரன் 1வது மற்றும் 2வது தெரு சுப்பிரமணி தெரு இடங்களில் தார் சாலை அமைக்க ரூ.70 லட்சம் ஒதுக்கீடு முன்னறே செய்யப்பட்டது.

இந்நிலையில் அமைச்சர் நேற்று பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.
Comments