தேதி
8/9/2025
🌷 *பேனாமுள் பத்திரிகை செய்திகள்* 🌷
*குறள்* : *465*
வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோ ராறு.
செயலின் வகைகளை எல்லாம் முற்ற எண்ணாமல் செய்யத்தொடங்குதல், பகைவரை வளரும் பாத்தியில் நிலைபெறச் செய்வதொரு வழியாகும்.
பேனாமுள் Karthick
✍️ *செப். 08*
*பெட்ரோல் விலை*-100.80
*டீசல் விலை*-92.39
*சி.என்.ஜி* - 91.50
பேனாமுள் Karthick
✍️ *பெருங்குடல் புற்றுநோய்க்கு மருந்து: ரஷ்யா*
பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி பயன்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளதாக ரஷ்யாவின் மத்திய மருந்து மற்றும் பயோலஜிக்கல் ஏஜென்சி அமைப்பு தெரிவித்துள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *உக்ரைன் மீது ரஷ்யா 800 டிரோன் ஏவி தாக்குதல்*
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா, நேற்று ஒரே நாளில் 800 டிரோன்களை கொண்டு தாக்குதல் நடத்தியது. இதுவரை நடத்தப்பட்ட தாக்குதலில் இதுவே மிகப்பெரிய தாக்குதலாகும்.
பேனாமுள் Karthick
✍️ *எடப்பாடியார் அடுத்த கட்ட பிரசாரம் செப்.17ல் துவக்கம்*
அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் அடுத்த கட்ட பிரசாரத்தை செப். 17ம் தேதி தொடங்குகிறார்.
பேனாமுள் Karthick
✍️ *அன்னம்தரும் அமுதக்கரங்கள் 200வது நிகழ்ச்சி*
சென்னை கொளத்தூர் சீனிவாசன் நகரில் அன்னம் தரும் அமுதக் கரங்கள் 200வது நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமை வகித்தார். இதில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்று பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
பேனாமுள் Karthick
✍️ *ரஜினியுடன் இணைந்து நடிக்கிறேன் : கமல்ஹாசன்*
நேற்று விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கமல்ஹாசன் ரஜினியுடன் இணைந்து நடிப்பதாக உறுதி செய்துள்ளார்.
பேனாமுள் Karthick
✍️ *வானில் தோன்றிய முழு சந்திர கிரகணம்: பொதுமக்கள் கண்டு களித்தனர்*
முழு சந்திர கிரகணம் நேற்று இரவு நிகழ்ந்தது. இந்த நிகழ்வை பொது மக்கள் கண்டு களித்தனர்.
பேனாமுள் Karthick
✍️ *ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று இறுதி நாள்*
தேர்வுக்கு விண்ணப்பிக்கும் இறுதி நாள் செப்டம்பர் 8ம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றுடன் விண்ணப்பிக்கும் காலம் முடிவடைகிறது. இன்று மாலை 5 மணிக்குள் இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரிகள் ஆன்லைன் மூலம் தங்கள் விண்ணப்பங்களை பதிவேற்றலாம்.
பேனாமுள் Karthick
✍️ *ஒரே விதமான ரியல் எஸ்டேட் விதிமுறைகள்*
நாடு முழுவதற்கும் ஒரே மாதிரியான ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை விதிகளை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *15 ஆண்டுகளாக திருடி வருகிறேன்*
பணம் புகழ் வசதிகள் வந்த போதிலும் திருடும் போது கிடைக்கும் மகிழ்ச்சிக்காக 15 ஆண்டுகளாக திருட்டு தொழிலில் ஈடுபட்டு வருகிறேன் என செயின் பறிப்பு வழக்கில் கைதான ஊராட்சி தலைவி வாக்குமூலம் அளித்துள்ளார்.
பேனாமுள் Karthick
✍️ *நாளை துணை ஜனாதிபதி தேர்தல்*
துணை ஜனாதிபதி தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் அதில் எவ்வாறு வாக்களிப்பது என்பது தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கான மாதிரி வாக்குப்பதிவு இன்று நடைபெற உள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *பிரதமர் 9ஆம் தேதி பஞ்சாப் செல்கிறார்*
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி நாளை 9 ஆம் தேதி பஞ்சாப் செல்கிறார்.
பேனாமுள் Karthick
✍️ *ஆசிய கோப்பை ஆக்கி: இந்தியா சாம்பியன்*
ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டியில் தென் கொரியாவை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி நான்காவது முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது . அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கு தகுதி பெற்றது.
செய்தி