8/9/2025 மலை போல் காட்சியளிக்கும் குப்பைகளை அகற்றவேண்டி
பதிவு
8/9/2025

*மலை போல் தேங்கி நிற்கும் குப்பைகளையும் குளம் போல் தேங்கி நிற்கும் தண்ணீரையும் உடனடியாக அகற்ற வேண்டி அப்பகுதி மக்களின் வேண்டுகோள்*

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணநகர் மேற்கு- விரிவு ,89 வது வார்ட், 
58 வது தெரு இளங்கோ நகர் பார்க் பின்புரம் தனியார் தண்ணீர் பிடிக்கும் கம்பெனி அருகில் குப்பை வண்டிகள் வராமல் அப்பகுதியில் குப்பை எடுக்காமலும் இருந்து வருவதால் மலை போல் குப்பைகள் தேங்கி காட்சியளிக்கிறது 
அதேபோல் அருகில் இருக்கும் தண்ணீர் வினியோகம் செய்யும் கம்பெனியில் இருந்து தண்ணீர் ரோட்டில் தேங்கி நிர்ப்பதாலும் குப்பைகளினால் துர்நாற்றம் வீசி விசக்காய்சல் மற்றும் பல நோய்கள் வரும் அவல நிலையில் உள்ளது சம்பந்தப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம்- 7க்கு உட்பட்ட 89வது வார்டு உயர் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் பணிவான வேண்டுகோள்.

செய்தி
*பேனாமுள் இதழ்*
Comments