9/9/2025 இன்றைய பேனாமுள் பத்திரிகை செய்திகள்
தேதி
9/9/2025

🌷 *பேனாமுள் பத்திரிகை செய்திகள்* 🌷

*குறள்* : *466*
செய்தக்க அல்ல செயக்கெடுஞ் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்.

ஒருவன் செய்யத்தகாத செயல்களைச் செய்வதனால் கெடுவான், செய்யத்தக்க செயல்களை செய்யாமல் விடுவதனாலும் கெடுவான்.

பேனாமுள் Karthick
✍️  *செப். 09*
*பெட்ரோல் விலை*-100.80
  *டீசல் விலை*-92.39
   *சி.என்.ஜி* - 91.50

பேனாமுள் Karthick
✍️ *பங்கு சந்தை நிலவரம்*
*நிப்டி* :  24773.15
*பேங்க் நிப்டி* : 54186.90
*சென்செக்ஸ்*: 80787.30

பேனாமுள் Karthick
✍️ *தங்கம் விலை*
22 Kதங்கம்/ g. : ₹ 9985
24 Kதங்கம்/ g. : ₹ 10889
 வெள்ளி    /g   : ₹ 140.00

பேனாமுள் Karthick
✍️ *மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நீக்கம்*

மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நீக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ளார்.

பேனாமுள் Karthick
✍️ *துரை வைகோ தகவல்*

திருச்சியில் 15ஆம் தேதி நடைபெறும் ம.தி.மு.க மாநாடு பணிகளை கவனிக்க 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக துரை வைகோ எம்.பி தெரிவித்துள்ளார்.

பேனாமுள் Karthick
✍️ *இன்று திமுக மா.செ.க்கள் கூட்டம்*

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று (செப்.9) திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

பேனாமுள் Karthick
✍️ *டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு*

செப். 10ம் தேதி மாலை வரை விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

பேனாமுள் Karthick
✍️ *ராமநாதபுரத்தில் இன்று காலை முதல் 144 தடை உத்தரவு அமல்*

இமானுவேல் சேகரன் நினைவு தின நிகழ்ச்சியை ஒட்டி ராமநாதபுரம் ஆட்சியர் 144 தடை உத்தரவை பிறப்பித்தார். இன்று காலை முதல் செப்.15ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேனாமுள் Karthick
✍️ *ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் செப்.10, 11ல் டாஸ்மாக் அடைப்பு*

ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் செப். 10, 11-ல் டாஸ்மாக் மதுக்கடைகள் அடைக்கப்படும் என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

பேனாமுள் Karthick
✍️ *2 ஆண்டுகளில் 6 ஆசிரியர் டெட் தேர்வுகள் நடத்தப்படும் - தமிழ்நாடு அரசு*

ஆண்டுக்கு 3 என 2 ஆண்டுகளில் 6 ஆசிரியர் தகுதி தேர்வுகள் நடத்தப்படும் என்று ஏற்கெனவே பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு டெட் தேர்வு நடத்தவும் தமிழ்நாடு அரசு திட்டம் வகுத்துள்ளது.

பேனாமுள் Karthick
✍️ *பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்யவுள்ளார் பிரதமர் மோடி*

ஹிமாச்சலப் பிரதேசம் பஞ்சாபில் கனமழை வெள்ளதால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி இன்று ஹெலிகாப்டர் மூலம் சென்று ஆய்வு செய்யவுள்ளார்.

பேனாமுள் Karthick
✍️ *சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் கட்டடம் திறப்பு*

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 28.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை கட்டடத்தை திறந்து வைத்தார்.

பேனாமுள் Karthick
✍️ *துாய்மை பணியாளர்கள் 200 பேர் கைது*

பணி நிரந்தரம் கோரி கொருக்குப்பேட்டையில் தங்களின் வீடுகளின் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட துாய்மை பணியாளர்கள் அவர்களுக்கு ஆதரவாக திரண்டவர்கள் என 200க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

பேனாமுள் Karthick
✍️ *திருவள்ளூரில் மக்கள் குறைதீர் கூட்டம் 383 மனுக்கள் ஏற்பு*

திருவள்ளூரில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் 383 மனுக்கள் பெறப்பட்டன.

பேனாமுள் Karthick
✍️ *தீக்கிரையான கார்*

பூந்தமல்லியில் நெடுஞ்சாலையில் சென்ற கார் தீப்பற்றி எரிந்து நாசமானது.

பேனாமுள் Karthick
✍️ *அல் குவைதா பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்ப்பு*

அல் குவைதா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆள் சேர்ப்பு மற்றும் நிதி திரட்டும் பணியில் ஈடுபடுவோரை கைது செய்ய தமிழகம் கர்நாடகா மஹாராஷ்டிரா உள்ளிட்ட ஐந்து மாநிலங்கள் மற்றும் ஜம்மு - காஷ்மீரில் 22 இடங்களில் நேற்று, என்.ஐ.ஏ. என்ற தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

பேனாமுள் Karthick
✍️ *இன்று துணை ஜனாதிபதி தேர்தல்*

துணை ஜனாதிபதி தேர்தல் இன்று நடக்கிறது. இதற்கான விரிவான ஏற்பாடுகளை ராஜ்யசபா செயலக அதிகாரிகள் செய்துள்ளனர்.

பேனாமுள் Karthick
✍️ *ஓமியோபதி டிப்ளமோ மருத்துவ படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்*

www.tnhealth.tn.gov.in., www.tnayushselection.org. என்கின்ற வலைதளங்களில் பதிவிறக்கம் செய்து இணையவழியில் மட்டுமே விண்ணப்ப படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

பேனாமுள் Karthick
✍️ *ஓசூரில் விரைவில் முதலீட்டாளர்கள் மாநாடு*

தமிழ்நாட்டில் முதலீடு செய்ய 10 புதிய நிறுவனங்கள் விருப்பமுள்ளதாகவும் ஓசூரில் விரைவில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் எனவும் சென்னை திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பேனாமுள் Karthick
✍️ *மேம்பாட்டுப் பணிகளைத் தொடங்கி வைத்தார் துணை முதல்வர்*

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று(8.9.2025) சென்னை அரும்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விருகம்பாக்கம் கால்வாயில் 30.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தூர் வாருதல் தடுப்புச் சுவரினை உயர்த்திக் கட்டுதல் சங்கிலி வேலி அமைத்தல் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.

பேனாமுள் Karthick
✍️ *வெலிங்டன் ஏரியை புனரமைக்க ரூ. 130 கோடி ஒதிக்கீடு*

கால்வாய்யின் கறைகளை சீரமைக்க ரூ.74 கோடிக்கு முதன்மை கால்வாயை சீரமைக்க 20 கோடி உபரி நீர் செல்லும் கால்வாய்களை சீரமைக்க 36 கோடி என்று 130 கோடி ஒதிக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

பேனாமுள் Karthick
✍️ *சாலை தடுப்பு சுவரில் மாநகர பேருந்து மோதல்*

தாழ்த்தள மின் பேருந்து நேற்று கொளத்தூர் பேப்பர் மில்ஸ் ரோடு மூகாம்பிகை சிக்னல் அருகே சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் கட்டுப்பாட்டை இழந்து மோதியது

பேனாமுள் Karthick
✍️ *சிறந்த தமிழ் உச்சரிப்பாளர் விருது: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்*

சிறந்த தமிழ் உச்சரிப்பாளர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 4 பேருக்கு தலா ரூ.25 ஆயிரத்துக்கான காசோலையை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.

பேனாமுள் Karthick
✍️ *ஊக்கத் தொகையுடன் அர்ச்சகர் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்*

 சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் ஊக்கத்தொகையுடன் அர்ச்சகர் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க படிவத்தை parthasarathy.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
பயிற்சி பள்ளியில் சேரும் ஒவ்வொரு மாணவருக்கும் மாதம் தோறும் முழு நேர பயிற்சிக்கு ரூ.10000 ஊக்க தொகை வழங்கப்படும் விண்ணப்பங்களை துணை ஆணையர் செயல் அலுவலர் அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில் திருவல்லிக்கேணி சென்னை 60005 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

பேனாமுள் Karthick
✍️ *ரயில் பயணிகளுக்கு அறிவுறுத்தல்*

 சென்னை சென்ட்ரல் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் கவனத்தை திசை திருப்பி ஈடுபடும் கும்பல்களின் நடமாட்டம் இருப்பதால் கவனத்துடன் இருக்குமாறு பயணிகளை ரயில்வே பாதுகாப்பு பிரிவு அறிவுறுத்தி உள்ளது.

பேனாமுள் Karthick
✍️ *இணையவழி மோசடி நபர்களுக்கு வங்கி கணக்கு விற்பனை 5 இளைஞர்கள் கைது*

 இணையவழி மோசடி நபருக்கு வங்கிக் கணக்கு விற்பனை செய்த வழக்கில் 5 இளைஞர்களை ஆவடி இணைய வழி குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.

பேனாமுள் Karthick
✍️ *செப்.15ல் அண்ணா சிலைக்கு எடப்பாடி பழனிச்சாமி மரியாதை*

 அண்ணா பிறந்த நாளை ஒட்டி வருகிற 15ஆம் தேதி சென்னையில் அவரது சிலைக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

பேனாமுள் Karthick
 *திருவேற்காட்டில் கல்லூரியில் ஆர்ப்பாட்டம்*

 திருவேற்காடு வீரராகவபுரத்தில் உள்ள எஸ்.ஏ பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் கல்லூரி வாசல் முன் அமர்ந்து நேற்று திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பேனாமுள் Karthick
✍️ *திருவள்ளூரில் கால்நடைகளுக்கு தோல் கழலை நோய் தடுப்பூசி*

 திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கால்நடைகளுக்கு தோல் கழலை நோய் தடுப்பு திட்டத்திற்கான பூஸ்டர் தடுப்பூசி பணி வரும் 30ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

 கால்நடை வளர்ப்போர் பசு எருமை எருது மற்றும் நான்கு மாதத்திற்கு மேற்பட்ட இளங்கன்று ஆகியவற்றிற்க்கு அருகில் உள்ள கால்நடை மருந்தகங்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

செய்தி
*பேனாமுள் இதழ்*
Comments