பதிவு
2/9/2025
*சென்னை,பாடி,87 வது வார்ட்,மெட்ரோ வாட்டர் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம்-7 அதிகாரிகள் பார்வைக்கு*
சென்னை,பாடி, 87வது வார்ட்,ஜெகதாம்பிகை நகர்,நம்மாழ்வார் தெருவில் கழிவுநீர் நிரம்பி நீண்ட நாட்களாக சாலையில் தேங்குவதாக அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.
சம்பந்தப்பட்ட
மெட்ரோ வாட்டர் அதிகாரியிடம் தகவல் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறுகிறார்கள். பாதாள கால்வாயில் இருந்து கழிவுநீர் வருவதும் அதில் இருந்து கழிவுகள் வெளியே வருவதுமாக அந்த பகுதி உள்ளது.இதனால் மலேரியா, டைபாய்டு போன்ற விஷக் காய்ச்சல்கள் பரவும்
அவல நிலையில் உள்ளது. அதேபோல் அந்த வழியாக செல்லும் மக்கள் அந்த கழிவுநீரை தான் மிதித்து செல்கிறார்கள். புகழ்பெற்ற பாடி திருவலிதாயம் சிவன் கோயிலுக்கு வரும் பக்தர்களும் அவ்வழியாக தான் செல்ல வேண்டும் உடனடியாக சம்பந்தப்பட்ட சென்னை மாநகராட்சி மண்டலம்-7 அதிகாரிகளும், மெட்ரோ வாட்டர் அதிகாரிகளும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்கள் மற்றும் பக்தர்களின் பணிவான வேண்டுகோள்.