15/10/2025 இன்றைய பேனாமுள் பத்திரிகை செய்திகள்
தேதி
15/10/2025

🌷 *பேனாமுள் பத்திரிகை செய்திகள்* 🌷

*குறள்* : *491*
தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்னல் லது.

முற்றுகை செய்வதற்கு ஏற்ற இடத்தைக் கண்டபின் அல்லாமல் எச் செயலையும் தொடங்கக்கூடாது, பகைவரை இகழவும் கூடாது.

 பேனாமுள் Karthick
✍️ *பங்கு சந்தை நிலவரம்*
*நிப்டி : 25145.50*
*பேங்க் நிப்டி : 56496.45*
*சென்செக்ஸ் : 82029.98*

 பேனாமுள் Karthick
✍️  *அக்-15*
*பெட்ரோல் விலை*-100.80
  *டீசல் விலை*-92.39
   *சி.என்.ஜி* - 91.50

 பேனாமுள் Karthick
✍️ *தங்கம் விலை*
*24 Kதங்கம்/ g. : ₹ 12830*
*22 Kதங்கம்/ g. : ₹ 11765*
 *வெள்ளி    /g   : ₹ 206.00*

 பேனாமுள் Karthick
✍️ *பொதுமக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்*

தீபாவளி பண்டிகையன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் சுற்றுச் சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் வெடித்து இந்த தீபாவளியை மாசற்ற தீபாவளியாக மாற்ற தமிழக அரசு மற்றும் தமிழக மாசு கட்டுப்பாடு வாரியத்தால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

 பேனாமுள் Karthick
✍️ *முதலமைச்சர் கோப்பை – 2025 நிறைவு*

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2025 நிறைவு விழாவில் முதல் மூன்று இடங்களை பெற்ற விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோப்பைகளை வழங்கி வாழ்த்தினார்.

 பேனாமுள் Karthick
✍️ *சிறப்பு டெட் தேர்வு தேதி அறிவிப்பு*

2026 சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 24 அல்லது 25 ஆம் தேதி சிறப்பு ஆசரியர் தகுதி தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் தெரிவித்துள்ளார்.

 பேனாமுள் Karthick
✍️ *மாணவர்களுக்கு தானியங்கி குடிநீர் இயந்திரம்*

சென்னை பள்ளிகளில்  மாணவர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில் தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரத்தினை மாநகராட்சி மேயர் பிரியா நேற்று தொடங்கி வைத்தார்.

 பேனாமுள் Karthick
✍️ *மாம்பழ ஏற்றுமதியை மேம்படுத்த நடவடிக்கை தேவை: முதல்வர்*

மாம்பழ விவசாயிகள் நலன் கருதி மாம்பழ ஏற்றுமதி, மதிப்புக்கூட்டு பொருட்களின் உற்பத்தியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

 பேனாமுள் Karthick
✍️ *அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு மரியாதை*

ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்களின் 95வது பிறந்த நாளான 15.10.2025 காலை 08.45 மணியளவில் தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர் பெருமக்கள் கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்துகிறார்கள்.

 பேனாமுள் Karthick
✍️ *எல்.பி.ஜி கேஸ் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தத்துக்கு தடை*

எல்.பி.ஜி கேஸ் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தத்துக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 பேனாமுள் Karthick
✍️ *திருச்சி - தாம்பரம் சிறப்பு ரெயிலுக்கு இன்று முதல் கூடுதல் நிறுத்தம்*

திருச்சி - தாம்பரம் சிறப்பு ரெயில் செவ்வாய், புதன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 5 நாட்கள் இயக்கப்படுகிறது.

இந்த ரெயில் திருவெறும்பூர் ரெயில் நிலையத்தில் இன்று முதல் நின்று செல்லும்

 பேனாமுள் Karthick
✍️ *இன்று முதல் அமெரிக்காவுக்கு மீண்டும் தபால் பார்சல் சேவை*

இந்திய தபால் துறை இன்று (புதன்கிழமை) முதல் அமெரிக்காவுக்கான அனைத்து வகை சர்வதேச தபால் சேவைகளை மீண்டும் தொடங்குகிறது.

 பேனாமுள் Karthick
✍️ *சேலம் - சென்னை விமான நேரம் 26-ந்தேதி முதல் மாற்றம்*

விமான நேரம் வருகிற 26-ந்தேதி முதல் மதியம் 2.40 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு 3.20 மணிக்கு சேலம் வந்தடையும். மீண்டும் 3.40 மணிக்கு சேலத்தில் இருந்து புறப்பட்டு 4.55 மணிக்கு சென்னை  சென்றடையும்.

 பேனாமுள் Karthick
✍️ *கூகுள் மேப்'பில் தமிழக கலாசார இடங்கள்*

தகவலாற்றுப்படை எனும் தலைப்பில்  தமிழகத்தில் உள்ள வழிபாட்டு தலங்கள், தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், திருவிழாக்கள், கலாசார விழாக்கள் நடக்கும் இடங்களை, கூகுள் 'மேப்'பில் அடையாளப்படுத்தும் பணி நடக்கிறது.

இதை பயன்படுத்தி பொதுமக்கள் எளிதாக அவ்விடத்திற்கு செல்லலாம்.

 பேனாமுள் Karthick
✍️ *உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை*

கோல்ட்ரிப், ரெஸ்பி பிரஷ் டிஆர் மற்றும் ரீ லைப் ஆகிய மூன்று தரமற்ற 3 இருமல் மருந்துகளை தவிர்க்கவும் என உலக சுகாதார நிறுவனம் தேசிய ஒழுங்குமுறை அமைப்பு அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

 பேனாமுள் Karthick
✍️ *ரேஷனில் அதிகமாக பச்சரிசி வினியோகம்*

கார்டுதாரர்களின் தேவைக்கு ஏற்ப பச்சரிசி வினியோகம் செய்யுமாறு கடை ஊழியர்களுக்கு உணவு துறை உத்தரவிட்டு உள்ளது.

 பேனாமுள் Karthick
✍️ *ராயப்பேட்டை - ஆர்.கே., சாலை மெட்ரோ சுரங்க பணி நிறைவு*

சென்னை ராயப்பேட்டை - ஆர்.கே.சாலை இடையே மெட்ரோ ரயில் சுரங்கம் தோண்டும் பணி நேற்று வெற்றிகரமாக நிறைவு பெற்றது.

 பேனாமுள் Karthick
✍️ *காலநிலை மாற்றத்தை அறிய ஆய்வு மையம் திறப்பு*

செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா நிகர்நிலை பல்கலையில் காலநிலையை ஆய்வு செய்யும் ஜியோக்ரோனோஸ், ஓஷீனா, இனோவரியா உள்ளிட்ட ஆய்வகங்கள் திறக்கப்பட்டுள்ளன. 

இதன் மூலம் மேகவெடிப்பு, கடலில் ஏற்படும் மாற்றங்கள் மழைப்பொழிவால் ஏற்படும் மாற்றங்களையும் அறிய முடியும்.

 பேனாமுள் Karthick
✍️ *தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை தொடங்குகிறது*

வடகிழக்கு பருவமழை நாளை (வியாழக்கிழமை) முதல் பெய்யத்தொடங்கும் என சென்னையில் உள்ள தென்மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 பேனாமுள் Karthick
✍️ *ராஜஸ்தானில் பேருந்து தீப்பிடித்ததில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு*

தையாத் பகுதியில் உள்ள ராணுவ நிலையம் அருகே தனியார் சொகுசு பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது. 

இதில் இருந்த 3 பெண்கள், 3 குழந்தைகள் உள்பட 20 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர்.

 பேனாமுள் Karthick
✍️ *ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம்  புகார் அளிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு*

சென்னை, போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம் 1800 425 6151

வடக்கு இணைப்போக்குவரத்து ஆணையரகம் 97893 69634

தெற்கு இணைப்போக்குவரத்து ஆணையரகம் 93613 41926

 பேனாமுள் Karthick
✍️ *விடைத்தாள் இணையதளத்தில் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி தகவல்*

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுக்கான விடைத்தாள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவு எண் வாயிலாக விடைத்தாளினை உரிய கட்டணம் செலுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அடுத்த மாதம் 11ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

 பேனாமுள் Karthick
✍️ *கோயம்பேடு மார்க்கெட் 21ம் தேதி செயல்படாது*

தீபாவளிக்கு அடுத்த நாளான 21ம் தேதி கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டிற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 பேனாமுள் Karthick
✍️ *வருகிற 17-ந்தேதி அ.தி.மு.க. 54-வது ஆண்டு தொடக்க விழா*

17 ந்தேதி வெள்ளிக்கிழமையன்று சென்னை ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமை அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரது உருவச் சிலைகளுக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். மேலும் அவர் கட்சிக்கொடியினை ஏற்றுகிறார்.

 பேனாமுள் Karthick
✍️ *ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் விளம்பர பேனர்கள் அகற்றம்*

 ஆவடி மாநகராட்சி கமிஷனர் சரண்யா அவர்களின் உத்தரவின் பேரில் மாநகராட்சி ஊழியர்கள் நேற்று ஆவடி, திருமுல்லைவாயில், சிடிஎஸ் சாலை ஆகிய இடங்களில் அனுமதியின்றி விதி மீறி வைக்கப்பட்ட பேனர்களை அகற்றினர்.

செய்தி
*பேனாமுள் இதழ்*
Comments