18/10/2025 இன்றைய பேனாமுள் பத்திரிகை செய்திகள்
தேதி
18/10/2025

🌷 *பேனாமுள் பத்திரிகை செய்திகள்* 🌷

*குறள்* : *494*
எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்

தக்க இடத்தை அறிந்து பொருந்தியவராய்ச் செயலைச் செய்வாராயின், அவரை வெல்ல எண்ணியிருந்த பகைவர் தம் எண்ணத்தை இழந்துவிடுவார்.

பேனாமுள் Karthick
✍️  *அக்-18*
*பெட்ரோல் விலை*-100.80
  *டீசல் விலை*-92.39
   *சி.என்.ஜி* - 91.50

 பேனாமுள் Karthick
✍️ *பங்கு சந்தை நிலவரம்*
*நிப்டி : 25709.85*
*பேங்க் நிப்டி : 57713.35*
*சென்செக்ஸ் : 83952.19*

பேனாமுள் Karthick
✍️ *தங்கம் விலை*
*24 Kதங்கம்/ g. : ₹ 13272*
*22 Kதங்கம்/ g. : ₹ 12170*
 *வெள்ளி    /g   : ₹ 203.00*

 பேனாமுள் Karthick
✍️ *தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு*

21-ந்தேதி விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 25-ந்தேதி பணி நாளாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

 பேனாமுள் Karthick
✍️ *தீபாவளி பண்டிகை: ஞாயிறு அட்டவணைப்படி சென்னை புறநகர் ரயில்கள் இயக்கம்*

சென்னையில் 20ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 பேனாமுள் Karthick
✍️ *தமிழக வெற்றிக் கழகம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி அல்ல - தேர்தல் ஆணையம்*

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல என இந்திய தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

 பேனாமுள் Karthick
✍️ *மத்திய மந்திரி அமித்ஷா 25-ந்தேதி கோவை வருகை*

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, விமானம் மூலம் வருகிற 25-ந்தேதி இரவு 7 மணிக்கு கோவை வருகிறார்.

கோவை பீளமேட்டில் கட்டப்பட்டுள்ள பா.ஜனதா கட்சி அலுவலகத்தை 26-ந்தேதி காலை 10.30 மணிக்கு அமித்ஷா திறந்து வைக்கிறார்.

 பேனாமுள் Karthick
✍️ *அயோத்தியில் மெழுகு அருங்காட்சியகம்*

அயோத்தி ராமர் கோவில் அருகே ராமாயண இதிகாசத்தை மையமாக வைத்து மெழுகு சிலை அருங்காட்சியகம் நாளை திறக்கப்பட உள்ளது.

 பேனாமுள் Karthick
✍️ *16 மசோதாக்கள் நிறைவேற்றம்*

சட்டசபை கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று 16 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

 பேனாமுள் Karthick
✍️ *துாய்மை பணியாளர்கள் சென்னை தலைமை செயலகம் முன் போராட்டம்*

பணி நிரந்தரம் கோரி தலைமை செயலகம் முன் 100க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 பேனாமுள் Karthick
✍️ *மழை புகார்களுக்கு உடனடி தீர்வு: மேயர் பிரியா*

வடகிழக்கு பருவமழையால் பொதுமக்கள் அளிக்கும் புகார்களுக்கு உடனடி தீர்வு ஏற்படுத்தப்படும் என மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

 பேனாமுள் Karthick
✍️ *22ல் கந்த சஷ்டி துவக்கம்*

திருத்தணி முருகன் கோவிலில் வரும் 22ம் தேதி கந்த சஷ்டி விழா துவங்கி 6 நாட்கள் நடக்கிறது.

பேனாமுள் Karthick
✍️ *திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி*

அரசு உதவிபெறும் தனியார் மற்றும் மத்திய அரசு பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்கள் பங்கேற்கலாம்.

பங்கேற்க விரும்புவோர், https://tamilvalarchithurai.org/tkm என்ற இணையதளத்தில், நவ., 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

கூடுதல் விபரங்களுக்கு 044 - 2959 5450, 80560 10146, 98944 89428 ஆகிய மொபைல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

பேனாமுள் Karthick
✍️ *ஜன் சுரக்‌ஷா, பீமா லட்சுமி 2 புதிய காப்பீட்டு திட்டம் அறிமுகம்*

எல்ஐசி நிறுவனம் ஜன் சுரக்ஷா, பீமா லட்சுமி என்ற 2 புதிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.

 பேனாமுள் Karthick
✍️ *கரூரில் சிபிஐ விசாரணை துவக்கம்*

விஜய் பிரசாரத்தில் 41 பேர் பலியானது தொடர்பாக அமைக்கப்பட்ட சிபிஐ குழுவினர் நேற்றுமுன்தினம் இரவு கரூர் வந்து விசாரணையை துவங்கினர். அவர்களிடம் வழக்கு ஆவணங்களை சிறப்பு குழுவினர் ஒப்படைத்தனர்.

பேனாமுள் Karthick
✍️ *சென்னை முழுவதும் 18,000 போலீசார் பாதுகாப்பு*

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் 18000 போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பேனாமுள் Karthick
✍️ *9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்*

நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதேநிலை 21ம் தேதி வரை நீடிக்கும்.

 பேனாமுள் Karthick
✍️ *முதல்வர் தலைமையில் 22ம் தேதி ஆலோசனை*

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 22ம் தேதி ஆலோசனை நடைபெற உள்ளது.

 பேனாமுள் Karthick
✍️ *கூட்டுறவு தயாரிப்புகளான கேழ்வரகு, கோதுமை மாவு ‘BLINKIT’ விரைவு வணிக தளத்தில் கிடைக்கும்*

நேற்று முதற்கட்டமாக காஞ்சிபுரம் நுகர்வோர் கூட்டுறவு தயாரிப்புகளான காஞ்சி கேழ்வரகு மாவு மற்றும் காஞ்சி கோதுமை மாவு ஆகியவற்றின் விற்பனையை பிளிங்கிட்விரைவு வணிக தளத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.

 பேனாமுள் Karthick
✍️ *ஆவடி அருகே ரயிலில் அடிபட்டு ஓய்வுபெற்ற எஸ்.ஐ., பலி*

ஆவடி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்கும்போது அரக்கோணத்தில் இருந்து சென்னை கடற்கரை சென்ற மின்சார ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். சடலத்தை மீட்டு ஆவடி ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

 பேனாமுள் Karthick
 *67 பேர் மட்டுமே வளர்ப்பு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தம்*

 சென்னையில் இதுவரை 67 பேர் மட்டுமே தங்களின் வளர்ப்பு நாய்களுக்கு மைக்ரோசிப் பொருத்தியுள்ளனர். இது வேதனை அளிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 பேனாமுள் Karthick
✍️ *பாதுகாப்பு பணியில் 2000 காவலர்கள் : ஆவடி காவல் ஆணையர் கி.சங்கர்* 

 தீபாவளி பண்டிகை காரணமாக 2000க்கும்  மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் சுழற்சி முறையில்  ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஆவடி காவல் ஆணையர் கி.சங்கர் தெரிவித்துள்ளார்.

செய்தி
*பேனாமுள் இதழ்*
Comments