19/10/2025 இன்றைய பேனாமுள் பத்திரிகை செய்திகள்
தேதி
19/10/2025

🌷 *பேனாமுள் பத்திரிகை செய்திகள்* 🌷

*குறள்* : *495*
நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற.

ஆழமுள்ள நீரில் முதலை மற்ற உயிர்களை வெல்லும், ஆனால் நீரிலிருந்து விலகிவந்தால் அந்த முதலையையும் மற்ற உயிர்கள் வென்றுவிடும்

 பேனாமுள் Karthick
✍️  *அக்-19*
*பெட்ரோல் விலை*-100.80
  *டீசல் விலை*-92.39
   *சி.என்.ஜி* - 91.50

 பேனாமுள் Karthick
✍️ *தங்கம் விலை*
*24 Kதங்கம்/ g. : ₹ 13474*
*22 Kதங்கம்/ g. : ₹ 12354*
 *வெள்ளி    /g   : ₹ 190.00*

 பேனாமுள் Karthick
✍️ *கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் அனுப்பியுள்ளோம் - விஜய்*

கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கடிதம் எழுதியுள்ள விஜய் அவர்களது வங்கிக்கணக்குக்கு ரூ.20 லட்சம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நேரில் சந்திப்பதற்கு சட்டரீதியான அனுமதி முன்னெடுப்புகளை எடுத்து வருவதாகவும் அனுமதி கிடைத்ததும் சந்திப்போம் என்றும் விஜய் தெரிவித்துள்ளார்.

 பேனாமுள் Karthick
✍️ *மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்*

தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் இடைவெளியில் 20-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

காலை 5 மணி முதல் 6:30 மணி வரை 14 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பேனாமுள் Karthick
✍️ *மாநிலம் முழுவதும் 1,353 ஆம்புலன்ஸ்கள் தயார்*

தீபாவளி பண்டிகையை ஒட்டி மாநிலம் முழுவதும் 1,353 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன. அனைத்து 108 ஆம்புலன்ஸ்களிலும் தீக்காயத்துக்கான சிறப்பு சிகிச்சை பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

 பேனாமுள் Karthick
✍️ *வங்கக்கடலில் அக்.21-ல் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது*

தென் கிழக்கு வங்கக்கடலில் அக்.21-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் நாளை முதல் 24-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

 பேனாமுள் Karthick
✍️ *காவல்துறை எச்சரிக்கை*

தீபாவளி நெருங்கும் நிலையில் பரிசுக் கூப்பன் விழுந்திருக்கிறது பரிசு கிடைத்திருக்கிறது என்ற பெயரில் அதிகளவில் சைபர் மோசடி புகார்கள் பெறப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது

 பேனாமுள் Karthick
✍️ *மாநிலம் முழுவதும் தடையில்லா மின்சாரம்*

வடகிழக்கு பருவ மழை தொடக்கத்தினால் மாநிலம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பொதுமக்கள் மின்தடை புகார்களை  94987 94987 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.

 பேனாமுள் Karthick
✍️ *முதல் ஒருநாள் போட்டி: இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்*

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான முதல் ஒரு நாள் போட்டி பெர்த்தில் இன்று நடக்கிறது.

இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு  ஆட்டம் தொடங்குகிறது.

 பேனாமுள் Karthick
✍️ *சபரிமலை மேல்சாந்தியாக பிரசாத் தேர்வு*

சபரிமலை அய்யப்பன் கோவில் புதிய மேல் சாந்தியாக திருச்சூரை சேர்ந்த பிரசாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 பேனாமுள் Karthick
✍️ *3 நாட்களில் 14 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்*

தீபாவளி பண்டிகையொட்டி, சென்னையில் இருந்து மூன்று நாட்களில் அரசு பஸ்கள் மற்றும் ரயில்களில் 14 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம் செய்துள்ளனர்.

 பேனாமுள் Karthick
✍️ *மாதாந்திர அட்டை வாங்க 24 தேதி வரை அவகாசம் நீட்டிப்பு*

மாநகர போக்குவரத்து கழகத்தில் வழங்கப்படும் மாதாந்திர பயண அட்டையை 
தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையால் 17ல் இருந்து 22ம் தேதி வரை விற்கப்படும் பயணியரின் மாதாந்திர பயண அட்டையை 23, 24ம் தேதி வரை வாங்கி கொள்ளலாம்.

 பேனாமுள் Karthick
✍️ *சித்தா, யுனானி பட்டமேற்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்*

தகவல் தொகுப்பேட்டினை, www.tnhealth.tn.gov.in., www.tnayushselection.org. என்ற வலைதளங்களில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

அரசு சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் செயலாளர்  தேர்வுக்குழு இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆணையர் அலுவலகம் அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம் அரும்பாக்கம் 
சென்னை-600 106 என்ற முகவரிக்கு வருகிற 23ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

 பேனாமுள் Karthick
✍️ *மல்லை சத்யா புதிய கட்சியை அடுத்த மாதம் தொடங்குகிறார்*

 மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா புதிய கட்சி தொடங்குகிறார். புதிய கட்சி தொடங்குவது தொடர்பாக கட்சி பெயரை முடிவு செய்ய 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. கட்சியின் தொடக்க விழா அடுத்த மாதம் நவம்பர் 20ஆம் தேதி அடையாறில் நடக்கிறது.

 பேனாமுள் Karthick
✍️ *ஆவடியில் ஏசி பழுதுபார்க்கும் கடையில் தீ விபத்து*

 ஆவடி வசந்தம் நகர் கணபதி தெருவில் ஏசி பழுதுபார்க்கும் கடையில் நேற்று காலை தீ விபத்து ஏற்பட்டது.

இது தொடர்பாக ஆவடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

செய்தி
*பேனாமுள் இதழ்*
Comments