23/101/2025 இன்றைய பேனாமுள் பத்திரிகை செய்திகள்
தேதி
23/10/2025

🌷 *பேனாமுள் பத்திரிகை செய்திகள்* 🌷

*குறள்* : *497*
அஞ்சாமை யல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி யிடத்தாற் செயின்.

குறைவில்லாமல் எண்ணித் தக்க இடத்தில் பொருந்திச் செய்தால், அஞ்சாமை அல்லாமல் வேறு துணை வேண்டியதில்லை.

 பேனாமுள் Karthick
✍️  *அக்-23*
*பெட்ரோல் விலை*-100.80
  *டீசல் விலை*-92.39
   *சி.என்.ஜி* - 91.50

 பேனாமுள் Karthick
✍️ *தங்கம் விலை*
*24 Kதங்கம்/ g. : ₹ 12963*
*22 Kதங்கம்/ g. : ₹ 11886*
 *வெள்ளி    /g   : ₹ 180.00*

 பேனாமுள் Karthick
✍️ *வங்கக்கடலில் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி*

சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று (வியாழக்கிழமை) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

 பேனாமுள் Karthick
✍️ *தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 4வது ரெயில்பாதை திட்டம்*

தாம்பரம் - செங்கல்பட்டு இடையே ரூ.757.18 கோடி மதிப்பீட்டில் 4வது தண்டவாளம் அமைக்க ரெயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

 பேனாமுள் Karthick
✍️ *தொடர் மழை: பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் உபரிநீர் திறப்பு அதிகரிப்பு*

தொடர் மழையால் நீர்வரத்து உயர்ந்து வருவதால் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

பேனாமுள் Karthick
✍️ *சிவகங்கையில் இன்றும், நாளையும் மதுக்கடைகள் மூடல்*

சிவகங்கை, திருப்பத்தூரில் நாளை (வெள்ளிக்கிழமை) மருது சகோதரர்களின் 224-வது நினைவு தினம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு இன்று (வியாழக்கிழமை) மதியம் முதல் மூடப்படும். என கலெக்டர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.

 பேனாமுள் Karthick
✍️ *மின் வாரியத்துக்கு ரூ.850 கோடி கடன்*

புதிய துணைமின் நிலையங்கள் அமைக்க, மின் வாரியத்துக்கு 850 கோடி ரூபாய் கடன் வழங்க ஆர்.இ.சி., நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது.

 பேனாமுள் Karthick
✍️ *சபரிமலையில் ஜனாதிபதி முர்மு தரிசனம்*

சபரிமலை அய்யப்பன் கோவிலில் இருமுடி சுமந்து சென்று ஜனாதிபதி திரவுபதி முர்மு சுவாமி தரிசனம் செய்தார்.

 பேனாமுள் Karthick
✍️ *தக்காளி விலை உயர்வு*

மழை மற்றும் வரத்து குறைந்ததால் கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை உயர்ந்துள்ளது.

 பேனாமுள் Karthick
✍️ *இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.பணியிடமாற்றம்*

ஆவடி அடுத்த பட்டாபிராமில் கடந்த 18ம் தேதி வீட்டில் பதுக்கி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடி வெடித்து நான்கு பேர் உயிரிழந்த விவகாரத்தில் பட்டாபிராம் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., உட்பட மூவர், பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

 பேனாமுள் Karthick
✍️ *கரூர் சம்பவத்தில் அழுதது குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி*

உணர்ச்சிகள் அதிகமாகி அறிவு குன்றி இருந்தால் விலங்குக்கு சமம். அறிவு அதிகமாகி உணர்ச்சிகள் குன்றி இருந்தால் மரத்திற்கு சமம் என வள்ளுவர் கூறியுள்ளார், அந்த குறளை மேற்கோள்காட்டியே பார்க்கிறேன். முதலில் நான் மனிதன். ஒரு கல்லை கடவுளாக மாற்றத் தெரிந்தவன், ஒரு மனிதனாக மாற மறந்து விட்டான் என்று அமைச்சர் தெரிவித்தார்.

 பேனாமுள் Karthick
✍️ *திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா துவங்கியது*

திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா நேற்று காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. வரும் 27ம் தேதி சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடக்கிறது.

 பேனாமுள் Karthick
✍️ *திருச்சி எஸ்ஆர்எம் ஓட்டலை கையகப்படுத்தியது தமிழக அரசு*

ரூ.38.85 கோடி குத்தகை நிலுவைத்தொகை செலுத்தாததால் திருச்சி எஸ்.ஆர்.எம். ஓட்டலை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் நேற்று கையகப்படுத்தி உள்ளது.

 பேனாமுள் Karthick
✍️ *முதல்வர் அக்.29ல் தென்காசி பயணம்*

வரும் 29ம் தேதி முதல்வர் தென்காசி செல்கிறார்.

அன்று அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

 பேனாமுள் Karthick
✍️ *புது பைக்குக்கு பூஜை போட்டு திரும்பிய போது சோகம்*

தாராபுரம்: புதிதாக வாங்கிய பைக்கில் இருந்து தவறி விழுந்த தனியார் நிறுவன ஊழியர் பலியானார். அதிர்ச்சியில் உடன் பயணித்த அவரது நண்பர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பேனாமுள் Karthick
✍️ *கலிபோர்னியாவை சேர்ந்த தேன்மொழி சவுந்தரராஜனுக்கு வைக்கம் விருது*

2025ம் ஆண்டிற்கான வைக்கம் விருது கலிபோர்னியாவைச் சேர்ந்த தேன்மொழி சவுந்தரராஜனுக்கு வழங்கப்படும் என்று தமிழகஅரசு அறிவித்துள்ளது.

 பேனாமுள் Karthick
✍️ *பட்டினப்பாக்கம் கடற்கரையில் நுரை :மாசு கட்டுபாட்டு அதிகாரிகள் ஆய்வு*

பட்டினப்பாக்கம் முதல் சீனிவாசபுரம் கடற்கரை வரை 1 கி.மீ தூரத்திற்கு வெண் நுரை ஒதுங்கியது.

 பேனாமுள் Karthick
✍️ *துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் 4 நாள் பயணமாக தமிழகம் வருகை*

துணை ஜனாதிபதியாக பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக சி.பி.ராதாகிருஷ்ணன் 4 நாள் பயணமாக வருகிற 27ம் தேதி தமிழகம் வருகிறார்.

 பேனாமுள் Karthick
✍️ *பிரதமர் மோடியுடன் டிரம்ப் தொலைபேசியில் பேச்சு*

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் மோடிக்கு தொலைபேசியில் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 பேனாமுள் Karthick
✍️ *பெயர் மாற்றம்*

பொது கட்டட விதிகளில் நில வகைப்பாடு மாற்றம் என்ற தலைப்பை நில உபயோக மாற்றம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 பேனாமுள் Karthick
✍️ *பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்*

 நாளையும் 27ஆம் தேதியும் பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன் வழங்கப்படும் என பதிவுத்துறை ஐஜி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

 பேனாமுள் Karthick
✍️ *அணைகள் ஏரிகளுக்கு செல்ல வேண்டாம் : நீர்வளத்துறை*

 அணைகள் திறப்பையும் நீர் நிலைகளில் தண்ணீர் நிரம்பியுள்ளதையும் பார்ப்பதற்காக பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் செல்ல வேண்டாம் என பாதுகாப்பு கருதி நீர்வளத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

 பேனாமுள் Karthick
✍️ *கிண்டி மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேரலாம்*

 சென்னை கிண்டி மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர அக்டோபர் 31-ஆம் தேதி வரை மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.
 விபரங்களுக்கு 044-22510001,
94990 55651 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

 பேனாமுள் Karthick
✍️ *சென்னை மாநகராட்சி பகுதிகளில் 215 நிவாரண முகாம்கள்*

 வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் சென்னை மாநகராட்சி பகுதிகளில் 215 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

 பேனாமுள் Karthick
✍️ *சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் போராட்டம்*

 சென்னை மணலி புதுநகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு 270 வது பிளாக்கில் 90வது தெருவில் உள்ள சாலை முழுவதும் மழை நீர் வடியாமல் தேங்கி சேரும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இந்தச் சாலையை சீரமைத்து தரக் கோரி அந்தப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மழைநீர் தேங்கிய சாலையில் பிளாஸ்டிக் நாற்காலிகளில் போட்டு அமர்ந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 பேனாமுள் Karthick
✍️ *காவல் கரங்கள் அமைப்பினர் நடவடிக்கை*

 கடந்த செப்டம்பர் மாதம் வீடுகளில் இருந்து வெளியேறி காணாமல் போனவர்களாக 30 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்றும் உற்றார் உறவினர்கள் யாரும் இல்லாத அனாதைகள் 154 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்றும் காவல் கரங்கள் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

 பேனாமுள் Karthick
✍️ *2-வது ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலியா-இந்தியா*

இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 9 மணிக்கு அடிலெய்டில் நடைபெறுகிறது.

 பேனாமுள் Karthick
✍️ *வாட்சப் பேஸ்புக்'கில் புதிய அம்சங்கள்*

 சமூக வலைதளங்களை பயன்படுத்தி மக்களிடம் இருந்து பணம் பறிக்கப்படுவதை தடுக்க மெட்டா நிறுவனம் தங்களின் வாட்சப் பேஸ்புக் தளங்களில் புதிய மோசடி தடுப்புக்கான பாதுகாப்பு அம்சங்களையும் விழிப்புணர்வு முயற்சிகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது

செய்தி
*பேனாமுள் இதழ்*
Comments