பதிவு 26/10/2025 பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம்-7க்கு உட்பட்ட 87வது வார்டு சுகாதார அதிகாரிகள் பார்வைக்கு
பதிவு
26/10/2025

*மண்டலம்-7 க்கு உட்பட்ட 87 வது வார்டில் மழைநீர் கால்வாயில் தண்ணீர் செல்லாததால் அடைப்பு ஏற்பட்டு கொசுகள் உருவாகி டெங்கு,மலேரியா, டைபாய்டு போன்ற விசக்காய்சல் பரவும் நிலையில் உள்ளது அதேபோல் மழை நீர் தேங்கி வீட்டுக்குள் செல்லும் அவலநிலை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதி மக்கள் கோரிக்கை*

பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம்-7 க்கு உட்பட்ட 87 வது வார்டு, பாடி,சந்தியாவதி நகர்,முதல் தெருவில் இருக்கும் மழை நீர் கால்வாயில் தண்ணீர் செல்ல முடியாமல் தேங்கி துர்நாற்றம் வீசி வருவதாகவும் தண்ணீரில் கொசு உருவாகி டெங்கு, மலேரியா, டைபாய்ட் போன்ற விஷக் காய்ச்சல் பரவும் அவல நிலையில் உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள் சம்பந்தப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம்-7  87 வது வார்ட் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த கால்வாய் நீர் செல்வதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது
அதேபோல் பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம்-7 க்கு உட்பட்ட 87 வது வார்டு அதிகாரிகளிடம் பல மாதங்களாக தகவல் தெரிவித்தும் இதுவரை நிரந்தர தீர்வே இல்லை என்று கூறுகிறார்கள் அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள் 
ஏதாவது விஷக்காய்ச்சல் ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்பட்டால் தான் உடனடியாக இதற்கு தீர்வு கிடைக்குமா என்றும் அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள் இதன்பின்பாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் வேண்டுகோள்.

செய்தி
*பேனாமுள் இதழ்*
Comments