தேதி
26/10/2025
🌷 *பேனாமுள் பத்திரிகை செய்திகள்* 🌷
*குறள்* : *500*
காலாழ் களரின் நரியடுங் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு.
வேல் ஏந்திய வீரரைக் கோர்த்தெடுத்த கொம்பு உடைய யானையையும், கால் ஆழும் சேற்று நில்த்தில் அகப்பட்ட போது நரிகள் கொன்றுவிடும்.
பேனாமுள் Karthick
✍️ *அக்-26*
*பெட்ரோல் விலை*-100.80
*டீசல் விலை*-92.39
*சி.என்.ஜி* - 91.50
பேனாமுள் Karthick
✍️ *தங்கம் விலை*
*24 Kதங்கம்/ g. : ₹ 12558*
*22 Kதங்கம்/ g. : ₹ 11515*
*வெள்ளி /g : ₹ 170.00*
பேனாமுள் Karthick
✍️ *வடக்கு நோக்கி நகர்கிறது வங்கக்கடல் புயல்*
வங்கக்கடலில் உருவாகும் மோந்தா புயல் தீவிர புயலாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மறுதினம் ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பேனாமுள் Karthick
*தென்காசியில் விஷம் வைத்து 50 மயில்கள் சாகடிப்பு*
பயிர்களை சுற்றி நிலத்தில் எலி மருந்து (விஷம்) தடவிய மக்காச்சோளங்களை தூவியதில் அந்த நிலத்தில் தூவிய எலி மருந்து கலந்த பயிர்களை மயில்கள் தின்றன. இதையடுத்து சிறிது நேரத்தில் அடுத்தடுத்து மயில்கள் மயங்கி விழுந்து உயிரிழந்தன.
பேனாமுள் Karthick
✍️ *கடலுார், புதுச்சேரியில் 1ம் எண் புயல் கூண்டு*
கடலுார், புதுச்சேரி துறைமுகங்களில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *வைகை அணையிலிருந்து நாளை தண்ணீர் திறப்பு*
பாசனத்திற்காக வைகை அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *பா.ம.க., செயல் தலைவராக ஸ்ரீ காந்தி நியமனம்*
பா.ம.க.செயல் தலைவராக தன் மூத்த மகள் ஸ்ரீ காந்தியை அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நியமித்துள்ளார்.
பேனாமுள் Karthick
✍️ *சுற்றுச்சூழல் விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்*
விண்ணப்பதாரர்கள் < http://awards.tn.gov.in > என்ற இணையதளம் மூலம் அடுத்த மாதம் 14ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த விருதுகள் குறித்த மேலும் விவரங்களுக்கு தொலைபேசி 044 -24336421, மின்னஞ்சல் முகவரி -tndoe@nic.in , http://environment.tn.gov.in என்ற வலைதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்
பேனாமுள் Karthick
✍️ *சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு ரூ.1 லட்சம் பெற விண்ணப்பிக்கலாம்*
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின எழுத்தாளர்களின் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு ரூ.1 லட்சம் பெற விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை tn.gov.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 28.11.2025.
விண்ணப்பதாரர்கள் தங்களது படைப்பினை இரு நகல்களிலும் டிஜிட்டல் முறையிலும், உரிய படிவத்தில் தவறாமல் கைபேசி எண்ணிணை குறிப்பிட்டு உரிய காலத்திற்குள் ஆணையர், ஆதிதிராவிடர் நலத்துறை, சென்னை-05 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
பேனாமுள் Karthick
✍️ *புராதன கூடுதல் நீதிமன்ற கட்டிடம் : இன்று திறப்பு*
சென்னை டாக்டர் அம்பேத்கர் பெயரில் கடந்த 133 ஆண்டுகள் பழமையான சட்டக் கல்லூரியை பழமை மாறாமல் தொடர்ந்து பயன்படுத்துவதற்கு 23 கோடி ரூபாய் செலவில் புனரமைப்பு செய்யப்பட்டது. புனரமைப்பு பணிகள் அனைத்தும் நிறைவு பெற்று உயர் நீதிமன்றத்திற்காக இங்கு புதிதாக 6 நீதிமன்ற அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்கவிழா இன்று நடக்கிறது. நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் புராதன கூடுதல் நீதிமன்ற கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.
பேனாமுள் Karthick
✍️ *சென்னையில் மழை பாதிப்புகளை சரிசெய்ய 22000 கள பணியாளர்கள்: மாநகராட்சி தகவல்*
சென்னையில் பருவமழை பாதிப்புகளை சரிசெய்ய மாநகராட்சி அலுவலர்கள், பொறியாளர்கள், பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் உள்பட 22,000 பேர் களத்தில் உள்ளனர்.
பேனாமுள் Karthick
✍️ *அம்பத்தூரில் தெருநாய் கடித்து குதறி 2 சிறுவர்கள் படுகாயம்*
அம்பத்தூர் ஒரகடம் கோவிந்தராஜ் தெருவைச் சேர்ந்த சிறுமி தண்மதி மற்றும் சிறுவன் கவிஷ் ஆகியோர் நேற்று முன்தினம் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, சாலையில் சுற்றித்திரிந்த தெருநாய் ஒன்று திடீரென தண்மதி மற்றும் கவிஷ் ஆகியோரை விரட்டி சென்று கடித்துக் குதறியது.
கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
பேனாமுள் Karthick
✍️ *தெருநாய்கள் விவகாரம்: நாளை விசாரணை*
தெருநாய்கள் பிரச்னை தொடா்பாக தாமாக முன்வந்து விசாரித்து வரும் உச்சநீதிமன்றம், அந்த வழக்கை திங்கள்கிழமை நாளை (அக்.27) மீண்டும் விசாரிக்க உள்ளது
பேனாமுள் Karthick
✍️ *இன்று தாம்பரம் திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்*
கந்த சஷ்டி விழாவையொட்டி தாம்பரம்-திருநெல்வேலி இடையே ஞாயிற்றுக்கிழமை (அக். 26) இரவு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
பேனாமுள் Karthick
✍️ *ஏற்காடு செல்ல அனுமதி*
மூன்று நாள்களுக்கு பிறகு ஏற்காடு செல்ல சுற்றுலா வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
பேனாமுள் Karthick
✍️ *41 பேர் குடும்பத்துடன் விஜய் நாளை சந்திப்பு*
கரூர் கூட்ட நெரிசலில் பலியான 41 பேரின் குடும்பத்தினரை மாமல்லபுரத்தில் உள்ள பார் பாயின்ட்ஸ் ஹோட்டலில் நாளை காலை 9 மணிக்கு விஜய் சந்தித்து பேசுகிறார். காயம் அடைந்தவர்களுக்கும் விஜய் நிவாரணம் வழங்குகிறார்.
பேனாமுள் Karthick
✍️ *திருவள்ளூரில் நவம்பா் 1 ஆம் தேதி கிராம சபைக் கூட்டம்*
நவம்பா் 1 ஆம் தேதி 526 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியா் பிரதாப் தெரிவித்துள்ளாா்.
பேனாமுள் Karthick
✍️ *திருவள்ளூரில் நாளை முதல் நகர சபை சிறப்பு கூட்டம்*
திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு 29 ஆம் தேதி வரை மாநகர நகர மற்றும் பேரூராட்சி வார்டுகளில் சிறப்பு கூட்டம் நடைபெற உள்ளது
செய்தி