27/10/2025
🌷 *பேனாமுள் பத்திரிகை செய்திகள்* 🌷
*குறள்* : *501*
அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும்.
அறம், பொருள், இன்பம், உயிர்காக அஞ்சும் அச்சம் ஆகிய நான்கு வகையாலும் ஆராயப்பட்ட பிறகே ஒருவன் (ஒரு தொழிலுக்கு உரியவனாகத்) தெளியப்படுவான்.
பேனாமுள் Karthick
✍️ *அக்-27*
*பெட்ரோல் விலை*-100.80
*டீசல் விலை*-92.39
*சி.என்.ஜி* - 91.50
பேனாமுள் Karthick
✍️ *கால்வாய் மண்சரிந்து அடைப்பு ஏற்பட்டு மழை நீர் வீட்டுக்குள் செல்லும் அவலநிலை*
பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம்-7 க்கு உட்பட்ட 88 வது வார்டு, பாடி, தேவர் நகர், காந்தி தெருவில், எண் 203 என்ற விலாசத்தில் வாசலில் இருக்கும் மழை நீர் கால்வாயில் மழை வரும்போது தண்ணீர் செல்ல முடியாமல் அடைப்பு இருப்பதால் அருகில் இருக்கும் வீட்டிற்குள் மழை நீர் சென்று தண்ணீர் தேங்கி நிற்கிறது என்று அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள் சம்பந்தப்பட்ட 88 வது வார்டு அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என்றும் கூறுகிறார்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பகுதி மக்களின் பணிவான வேண்டுகோள்.
பேனாமுள் Karthick
✍️ 25/10/2025
*சென்னை,முகப்பேர்,ஜெ ஜெ நகர் மின்வாரியத்திற்கு உட்பட்ட உயர் அதிகாரிகள் பார்வைக்கு*
சென்னை முகப்பேர் ஜெ ஜெ நகர் மின்வாரியத்திற்கு உட்பட்ட பாடி தேவர்நகர், காந்தி தெரு, திருவல்லீஸ்வரர் காலனி பகுதியில் கடந்த 4 நாட்களாக ஒரு நாளைக்கு பலமுறை மின்சாரம் துண்டிக்கப்பட்டு, துண்டிக்கப்பட்டு வருகிறது இதனால் இந்த பகுதியில் உள்ள முதியவர்கள், குழந்தைகள்,பெண்கள் மிகவும் சிரமப்பட்டு, அவதிப்பட்டு வருகிறார்கள் தொடர்ந்து மின்தடை ஏற்பட்டு வருவதால் மின்வாரிய உயர் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் பணிவான வேண்டுகோள் இரவு நேரங்களில் மின்சாரம் துண்டித்து,துண்டித்து வருவதால் இந்த பகுதியில் பல அசம்பாவித செயல்களும் நடப்பதாக அப்பகுதி மக்கள் வேதனைகளோடு தெரிவிக்கிறார்கள்.
பேனாமுள் Karthick
✍️ *பாடி குமரன் நகர் பகுதியில் சாலையில் திடீர் பள்ளம்*
பாடி குமரன் நகர் மகாத்மா காந்தி சாலையில் நேற்று திடீரென பள்ளம் ஏற்பட்டது. அப்போது அந்த இடத்தில் வாகனங்கள் செல்லாததால் அதிர்ஷ்டவசமாக விபத்து தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்த அம்பத்தூர் மண்டல பணியாளர்கள் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் தற்காலிகமாக பள்ளத்தை மூடி சாலையை சரி செய்திருக்கிறார்கள்.
பேனாமுள் Karthick
✍️ *வங்கக்கடலில் உருவானது ‘மோந்தா' புயல்: சென்னை, திருவள்ளூரில் கனமழைக்கு வாய்ப்பு*
மசூலிப்பட்டினம்- கலிங்கப்பட்டினம் இடையே காக்கிநாடாவுக்கு அருகில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை அல்லது இரவு நேரத்தில் கரையை கடக்க இருப்பதாக வானிலை ஆய்வு
மையம் தெரிவித்துள்ளது.
மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் வட கிழக்கு திசையில் மோந்தா புயல் நகர்ந்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னைக்கு 600கி.மீ. தொலைவில் மோந்தா புயல் மையம் நிலை கொண்டுள்ளது.
] பேனாமுள் Karthick
✍️ *கரூர் கூட்ட நெரிசல்: பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை இன்று சந்தித்து பேசுகிறார் விஜய்*
கரூர் நெரிசலில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் 5 பஸ்களில் நேற்று இரவு மாமல்லபுரம் வந்தனர்.
சந்திப்பு இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு மாமல்லபுரத்தில் உள்ள பார் பாயிண்ட்ஸ் ஓட்டலில் நடைபெற உள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *பெசன்ட்நகர் அஷ்டலட்சுமி கோவிலில் வரும் 31ல் கும்பாபிஷேகம்*
திருப்பணிகள் முடிந்த நிலையில் வரும் 31ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.
பேனாமுள் Karthick
✍️ *சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று தமிழகம் வருகை*
துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்றபிறகு சி.பி.ராதாகிருஷ்ணன் 4 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார். கோவை, திருப்பூர் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர் 30ம் தேதி பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்.
பேனாமுள் Karthick
✍️ *சிறுமிகளுக்கு இலவச புற்றுநோய் தடுப்பூசி*
இந்தியாவில் முதல்முறையாக தமிழ்நாட்டில் 1 முதல் 14 வயதுடைய சிறுமிகளுக்கு இலவச புற்றுநோய் தடுப்பூசி போடும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
பேனாமுள் Karthick
✍️ *முத்துராமலிங்க தேவர் பிறந்தநாள் அதிமுக அறிக்கை*
முத்துராமலிங்கத் தேவர் பிறந்த நாள் மற்றும் குருபூஜை விழாவை முன்னிட்டு 30ம் தேதி காலை 10 மணியளவில் சென்னை, நந்தனம் அண்ணாசாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அதிமுக சார்பில் சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்கள்.
பேனாமுள் Karthick
✍️ *கபடி போட்டியில் தங்கப்பதக்கம் தமிழக வீரர்களுக்கு முதல்வர் வாழ்த்து*
ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த கபடி வீரர்கள் அபினேஷ் மோகன்தாஸ், கார்த்திகா ரமேஷை பாராட்டி, ஊக்கத்தொகையாக தலா 25 லட்சத்துக்கான காசோலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கி வாழ்த்தினார்.
பேனாமுள் Karthick
✍️ *சென்னை பெருநகர காவல்துறை எச்சரிக்கை*
ஆன்லைன் விளம்பரங்கள் பார்த்து பொதுமக்கள் யாரும் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்ய வேண்டாம் என்று சென்னை பெருநகர காவல்துறை விழிப்புணர்வு வீடியோ மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *மருத்துவமனையில் அதிமுக எம்.பி. தம்பிதுரை அனுமதி*
அதிமுக எம்.பி தம்பிதுரை உடல் நலக்குறைவால் சென்னை ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்*
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று மாலை சூரசம்ஹாரம் நடக்கிறது. கோவிலில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
பேனாமுள் Karthick
✍️ *சென்னையில் கொசு ஒழிப்பு பணி : மாநகராட்சி தகவல்*
மழைக்கால நோய் பரவலை தடுக்கும் விதமாக மாநகராட்சி சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கும் பணிகளும் புகைப்பரப்பும் பணிகளும் தேவையான இடங்களில் ப்ளீச்சிங் பவுடர் தெளிக்கும் பணிகளும் நடந்து வருவதாகவும் மொத்தம் 3566 பணியாளர்கள் கொசு ஒழிப்பு நடவடிக்கையில் தீவிரமாக இறங்கி உள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *இந்திய கடல்சார் மாநாடு: இன்று தொடங்கி வைக்கிறார் அமித் ஷா*
இந்திய கடல்சார் வாரம் என்ற சர்வதேச மாநாட்டை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தொடங்கி வைக்கிறார்.
பேனாமுள் Karthick
✍️ *இந்தியா - சீனா இடையிலான விமான சேவை*
கொல்கட்டாவில் இருந்து சீனாவின் குவாங்ஷோ நகருக்கு விமானம் ஒன்று நேற்று புறப்பட்டதை அடுத்து, ஐந்து ஆண்டுகளாக தடைப்பட்டிருந்த இந்தியா - சீனா இடையிலான விமான சேவை மீண்டும் துவங்கியது.
பேனாமுள் Karthick
✍️ *பாடி குமரன் நகர் பகுதியில் சாலையில் திடீர் பள்ளம்*
பாடி குமரன் நகர் மகாத்மா காந்தி சாலையில் நேற்று திடீரென பள்ளம் ஏற்பட்டது. அப்போது அந்த இடத்தில் வாகனங்கள் செல்லாததால் அதிர்ஷ்டவசமாக விபத்து தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்த அம்பத்தூர் மண்டல பணியாளர்கள் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் சிமெண்ட் கலவையை கொட்டி சாலையை சீரமைத்தனர்.
பேனாமுள் Karthick
✍️ *அண்ணனூர் ரயில்வே சுரங்கப்பாதை மூடப்பட்டது*
அண்ணனூர் ரயில் நிலையம் அருகே ரயில் நிலைய சுற்று வட்டாரப் பகுதிகளில் தேங்கும் மழை நீர் வடிய நீர்வழி சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது.
அந்தப்பாதை ஜோதி நகர், பொன்னியம்மன் கோவில் சாலைகளை இணைப்பதால் பொதுமக்கள் சுரங்கப் பாதை போல் அதை பயன்படுத்தி வந்தனர்.
இப்போது பெய்து வரும் கனமழையால் சுரங்கப்பாதை முழுவதும் மழைநீர் தேங்கி வெள்ளகாடாக மாறியதால் ரயில்வே நிர்வாகம் சுரங்கப்பாதைக்குச் செல்லும் வழியை இப்போது அடைத்துள்ளது.
மேலும் அறிவிப்பு பலகை ஒன்றை வைத்துள்ளது.
செய்தி