தேதி
28/10/2025
🌷 *பேனாமுள் பத்திரிகை செய்திகள்* 🌷
*குறள்* : *502*
குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் கட்டே தெளிவு.
நல்லகுடியில் பிறந்து குற்றங்களிலிருந்து நீங்கிப் பழியாச் செயல்களைச் செய்ய அஞ்சுகின்ற நாணம் உடையவனையே நம்பித் தெளிய வேண்டும்.
பேனாமுள் Karthick
✍️ *அக்-28*
*பெட்ரோல் விலை*-100.80
*டீசல் விலை*-92.39
*சி.என்.ஜி* - 91.50
பேனாமுள் Karthick
✍️ *பங்கு சந்தை நிலவரம்*
*நிப்டி : 25966.05*
*பேங்க் நிப்டி : 58114.25*
*சென்செக்ஸ் : 84778.84*
பேனாமுள் Karthick
✍️ *தங்கம் விலை*
*24 Kதங்கம்/ g. : ₹ 12323*
*22 Kதங்கம்/ g. : ₹ 11300*
*வெள்ளி /g : ₹ 170.00*
பேனாமுள் Karthick
✍️ *என்னை மன்னித்து விடுங்கள் குடும்பத்தில் ஒருவனாக உங்களுடன் நான் இருப்பேன்: விஜய் உறுதி*
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் தவெக தலைவர் விஜய் கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்டுள்ளார்.
வாழ்நாள் வரை நான் உங்களுடன் இருப்பேன். குடும்பத்தில் ஒருவனாக உங்களுடன் நான் இருப்பேன். உங்களுக்கு தேவையான உதவிகளை நான் செய்து தருவேன். வேலைவாய்ப்பு,திருமணம், கல்வி என அனைத்தையும் நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று விஜய் உறுதி அளித்துள்ளார்.
பேனாமுள் Karthick
✍️ *நவம்பர் 2ல் விண்ணில் பாய்கிறது சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள்*
LVM3-M5 ராக்கெட் மூலம் விண்ணிற்கு 4,400 கிலோ எடை கொண்ட சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் நவம்பர் 2ம் தேதி இஸ்ரோ அனுப்புகிறது.
பேனாமுள் Karthick
✍️ *புதிதாக 8 மணல் குவாரிகள்*
புதுக்கோட்டையில் 3 கடலுாரில் 2 தஞ்சாவூர், நாமக்கல், ராணிப்பேட்டை மாவட்டங்களில் தலா ஒன்று என மொத்தம் 8 இடங்களில் மணல் குவாரிகள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நவ., 1 முதல் மணல் விற்பனை துவங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பேனாமுள் Karthick
✍️ *தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை*
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி இன்று துவக்கம்*
தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி இன்று முதல் துவங்க உள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *நவ., 2ல் அனைத்து கட்சிகள் கூட்டம்*
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடர்பாக ஆலோசிக்க நவம்பர், 2ல், அனைத்து கட்சிகள் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெற உள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *டெங்கு காய்ச்சலால் 9 பேர் பலி*
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
பேனாமுள் Karthick
✍️ *டாஸ்மாக் மதுக்கடைகளை ஒரு மணி நேரம் முன்னதாக மூட பரிசீலனை*
மழைக்காலம் முடியும் வரை டாஸ்மாக் மதுக் கடைகளை இரவு 10:00 மணிக்கு பதில் ஒரு மணி நேரம் முன்னதாக மூட, தமிழக அரசு பரிசீலித்து வருகிறது.
பேனாமுள் Karthick
✍️ *மெட்ரோ ரயில் கதவில் புதிய தொழில்நுட்பம்*
மெட்ரோ ரயில் கதவுகளில் துணிகள் அல்லது பைகள் சிக்கிக் கொள்வதால் விபத்துகள் ஏற்படுகின்றன. இதை தடுக்க 52 மெட்ரோ ரயில்களின் கதவுகளில் ஆண்டி டிராக் ப்யூச்சர் எனும் புதிய தொழில்நுட்பம் கொண்ட அமைப்பை நிறுவ சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *அயனாவரம் வீட்டு வசதி வாரியத்தில் வீடு விற்பனை*
சென்னை அயனாவரத்தில் வீட்டு வசதி வாரியம் 13 குடியிருப்புகளில் 203 வீடுகள் கட்டியுள்ளது.
இந்த வீடுகளுக்கான விலை 89 லட்சம் முதல் 97 லட்சம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இதற்கான விண்ணப்பங்களையும், கூடுதல் விபரங்களையும், https://tnhb.tn.gov.in இணையதளத்தில் பெறலாம்.
இதில் வீடு வாங்க விரும்புவோர், நவ., 22க்குள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம் என வீட்டுவசதி வாரியம் அறிவித்துள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *மழையை எதிர்கொள்ள் ஆவடி மாநகராட்சி தயார்*
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள ஆவடி மாநகராட்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, அண்ணனுார் ஜோதி நகர், பலேரிப்பட்டு, பருத்திப்பட்டு சுற்றுவட்டாரப் பகுதிகள் என 9 இடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படும் என கண்டறியப்பட்டுள்ளது.
10 இடங்களில் தற்காலிக நிவாரண மீட்பு முகாம்கள் தயார் நிலையில் உள்ளன.
மேலும் 1000 மேற்பட்டோர் முகாம்களில் பணிபுரிய தயார் நிலையில் உள்ளனர்.
பேனாமுள் Karthick
✍️ *பெண்ணிடம் சீண்டல் ரேபிடோ ஓட்டுநர் கைது*
ரேபிடோ பைக் டாக்சியில் பயணித்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ரேபிடோ பைக் டாக்சி ஓட்டுநரான அடையாறைச் சேர்ந்த சிவகுமார், 22 என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
பேனாமுள் Karthick
✍️ *திருவேற்காட்டில் மனைவியின் கள்ளக்காதலனை வெட்டி கொன்ற கணவர் கைது*
திருவேற்காடில் மனைவியின் கள்ளக் காதலனை கணவர் வெட்டி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.
பேனாமுள் Karthick
✍️ *திருவள்ளூரில் புனித பயணத்திற்கு நிதியுதவி விண்ணப்பிக்கலாம்*
புனித பயணம் மேற்கொள்ளும் புத்த, சமண மற்றும் சீக்கிய மதத்தினர், நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்.
www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்தை நவ.30ம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் ஆணையர் சிறுபான்மையினர் நலத்துறை கலச மஹால் பாரம்பரிய கட்டடம் சேப்பாக்கம் சென்னை - 600005 என்ற முகவரியில் வழங்க வேண்டும்.
பேனாமுள் Karthick
✍️ *திருவள்ளூரில் 1.50 லட்சம் பனை விதை நட திட்டம்*
திருவள்ளுர் மாவட்டத்தில் 1.50 லட்சம் பனை விதைகளை புதிதாக வெட்டிய குளம், துார்வாரிய வாய்க்கால் மற்றும் கரையோரங்களில் நட திட்டமிடப்பட்டுள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *திருவள்ளூர் மக்கள் குறைதீர் கூட்டம் 492 மனுக்கள் ஏற்பு*
திருவள்ளூரில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் 492 மனுக்கள் ஏற்கப்பட்டன.
பேனாமுள் Karthick
✍️ *திருவேற்காட்டில் மது பாட்டிலால் நண்பர் குத்தி கொலை*
திருவேற்காட்டில் மதுபாட்டிலை உடைத்து நண்பரை குத்திக் கொன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
செய்தி